இரா.தாமரைச்செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா.தாமரைச்செல்வன்
இடம்:  ஓசூர்
பிறந்த தேதி :  26-Jan-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2011
பார்த்தவர்கள்:  403
புள்ளி:  207

என்னைப் பற்றி...

பெயர் : இரா.தாமரைச்செல்வன்
பிறந்தது : சேலம்
கல்வி : முதுநிலை கணினி அறிவியல் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மையியல்
பணி : உதவி பேராசிரியர்
பணி இடம் : எம்.ஜி.ஆர்.கல்லூரி, ஓசூர்

என்னை பற்றி....
நிறைய எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் சொல்லுவதற்கு சில தகவல்கள் இருக்கிறது.
சிறுவயது முதலே இலக்கிய ஈடுபாடு அதிகம் என்றாலும் பணியும் படிப்பும் கணினி தொடர்பு என்பதால் கடினப்பட்டுத்தான் காத்து வருகிறேன் என் சுய இலக்கியத்தை...
கணினி துறையில் முன்னாள் குடியரசு தலைவரிடம் இளம் விஞ்ஞானி பட்டம் பெற்றாலும் இலக்கியமே என் ஈடுபாடு. இருமுறை மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும் என் கவிதைகள் என்னை இன்றுவரை மனம் நிறைக்கவில்லை. தொடர்ந்து எழுதுவது இயலவில்லை எனினும் தொடர்பு விலக்கி வெளியேற விடவில்லை மனது.
இன்னும் இன்னும் நிறைய எழுத ஆசைதான் எனக்கு.... வாழ்நாள் வரை என் கவிதைகள் வந்துகொண்டே இருக்கும் இந்த எழுத்தின் ஊடாக....!

தொடர்புக்கு : thamaraibala@gmail.com
+91 9786016097

என் படைப்புகள்
இரா.தாமரைச்செல்வன் செய்திகள்
இரா.தாமரைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2017 2:39 pm

வறண்ட பூமியிங்க
வாய்க்கா தண்ணி இல்லையிங்க.

திரண்ட மேகமெல்லாம்
தீண்டாம போச்சுதுங்க.

காஞ்சி போன மண்ணு எல்லாம்
பொண்ணு விளைஞ்ச பூமியிங்க.
ஆனா இப்போ
புல்லுக்கும் வழியில்லை
சொல்லி அழ யாருமில்ல.

விக்காத எல்லாத்தையும்
வித்து சேத்த காசுல

ஆழமா போட்டேனுங்க
ஆழ்துளை கிணறு ஒன்னு.

பத்தரமா எடுத்தேன் தண்ணி
பம்பு செட்டு உண்டு பண்ணி.

மணி போல சேகரிச்சு
அணி அணியா நடவு வச்சு
விடிய விடிய காவ வெச்சு
கொண்டுவந்தேன் பச்சை வெளி.

பக்கத்து வயக்காரனெல்லாம்
பார்த்து வயிறெரிய
நாத்து வளந்து வயலாச்சு
மனசு முழுக்க
சந்தோச புயலாச்சு

வீட்டுல இருப்பு கொள்ளாம
வயலுலயே வாழப்போனேன்.

மேலும்

கருத்துகள்

மேலே