இரா இராமச்சந்திரன் Profile - இரா இராமச்சந்திரன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா இராமச்சந்திரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Jun-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2014
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  242

என்னைப் பற்றி...

Rtd

என் படைப்புகள்
இரா இராமச்சந்திரன் செய்திகள்

என்ன ஒரு சங்கட்டமான வாழ்க்கை😂

மேலும்

நன்று 21-Apr-2017 7:23 pm
இரா இராமச்சந்திரன் - Prabavathi Veeramuthu அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2016 9:55 pm

இங்க முதல்ல மாற வேண்டியது அரசியல்வாதிங்க இல்ல சூர்யா...


மக்கள் தான்
யாருக்கும் பொருப்பு இல்ல...
யாருக்கும் அக்கறை இல்ல.

வீண் வாதம் (வெட்டி பேச்சு)
உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு.

அன்னியன் படத்துல வர அம்பி தான் ...
நல்லவன்...
ஆனா அவன எல்லாரும் பழம்னு சொல்லுவாங்க...

பாரதியார கூட உயிரோட இருக்கும் போது தூத்தன உலகம் தான இது...


மனிஷன மதிக்களனாலும் பரவாயில்ல மிதிக்காம இருக்கலாமே

நாக்குக்கு நரம்பு இல்ல தான் ஆனா இரத்தமும் சதையும் கூடமா இல்ல...

யாரையும் முதுகுல குத்தாதீங்க...

குத்துபட்டவனுக்கும் அசிங்கம் 
குத்து வாங்கனவனுக்கும் அசிங்கம்

தேடி சோறு நிதம் தின்று 
பாரதியாரா எல்லாரும் மாறிட்டா 
எவ்ளோ நல்லாருக்கும்

மத்தவங்க விஷயத்துல நாகரிகமா நடந்துக்க தெரியாத மெத்த படிச்ச மேதாவிங்க வாழற உலகம்...

தமிழ்ல எழுதனா சிரிக்கறாங்க...
பேசனா சிரிக்கறாங்க...
இது தமிழ்நாடானு சந்தேகம் வருது சூர்யா...

ஏன் சூர்யா யாருக்கும்
அவங்க தாய்மேலயே(தாய்மொழிமேலயே) 
அக்கறை இருக்கமாட்டேங்குது

நெனைக்க நெனைக்க நெஞ்சு வலிக்குது சூர்யா...
தெம்பி தெம்பி அழுவறன் சூர்யா...

ஏன் சூர்யா எல்லாரும் 
இப்படி இருக்காங்க...

மேலும்

காலம் செய்த கோலம்...... கடவுள் செய்த குற்றம்னு புலம்ப வேண்டியது தான்...... 22-Feb-2016 8:19 am
இரா இராமச்சந்திரன் - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2016 11:35 am

ஏன் இங்கு copy paste செய்ய முடியவில்லை ? எனக்கு மட்டுமா > அன்றி எவருக்குமா?

மேலும்

எழுத்து தளம் வெளிநாட்டில் இருந்தும் தொடர்பு கொள்ள சிரமமாயுள்ளது . எப்படியோ இரவிலாவது தொடர்பு கொண்டால் தான் நிம்மதி நன்றி . 23-Feb-2016 1:38 am
வருகிறது. சிறிது சிரமப்பட வேண்டியுள்ளது. 22-Feb-2016 8:15 am
இரா இராமச்சந்திரன் - Thanjai Guna அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2016 10:47 am

படித்ததில் உறைத்தது.


ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதற்கான விளக்கம் சரிதானா என்பதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தவும்...!

நன்றி : மாயகிருஷ்ணன் 

மேலும்

நன்றி........அன்பரே.... 14-Feb-2016 7:44 pm
நன்றி...... 14-Feb-2016 7:43 pm
நன்றி....... இவற்றையெல்லாம் தேடிப்பார்க்க நான் நேரம் ஒதுக்குவதில்லை..... நண்பர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த நல்ல கருத்துக்களையும் முடிந்தவரை பிறரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறவன் இவன்...... அவ்வாறு இதுவும் எனது நண்பர் மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டதை தளத்தில் பகிர்ந்து கொண்டேன்....... ஆகவேதான் நன்றி : மாயகிருஷ்ணன் என்று குறிப்பிட்டுள்ளேன் அன்பரே........ 14-Feb-2016 7:42 pm
விழிப்பு உணர்வு நமக்கு வேண்டும் . நன்றி 13-Feb-2016 11:21 pm
இரா இராமச்சந்திரன் - agan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2016 8:49 am

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?


நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி 

இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

aadhar-online
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

மேலும்

நன்று, நன்றி ஐயா - மு.ரா. 07-Feb-2016 10:18 am
இரா இராமச்சந்திரன் - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2016 7:14 pm

நீர் நிலைகளில் இத்தனை வகையா..? 
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.(

2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.(
4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.(
7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
.(12) கடல் (Sea) - சமுத்திரம்
.(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.(
15) கால் (Channel) - நீரோடும் வழி.(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
.(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
.(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.(
20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
.(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குகொப்பளித்து வரும் ஊற்று.(
23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை
.(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
.(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.(
30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்
.(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை
.(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.(
34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
.(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு
.(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
.(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.(
43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை
.(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
.(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்
.(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.


அடேங்கப்பா ! நீர் நிலைகளில் இத்தனை வகையா? 

பாதுகாப்போம் நீர் நிலைகளை!

நன்றி : முகநூல்

மேலும்

அருமையான பகிர்வுக்கு நன்றி🙏 05-Feb-2016 4:59 am
நன்று, பகிர்வுக்கு நன்றிகள் ஐயா - மு.ரா. 04-Feb-2016 7:42 pm

.

மேலும்

சிறப்பான செய்திப் பகிர்வு . SHARE SPREAD . பகிர் பரப்பு ---அன்புடன், கவின் சாரலன் 05-Dec-2015 9:58 am

சென்னை : 
கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், 
சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. 
இதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம் 
நாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
நன்றி: தினமலர் 

மேலும்


புதுடில்லி: கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
நன்றி: தினமலர் 

மேலும்

இரா இராமச்சந்திரன் - farzanrfk அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2015 6:39 pm

ஒவ்வொருவருக்கும் 

சுய கௌரவமும்
 சுய நலமும் 
தற்பெருமையும் எதிரிகள்...
 சுயகௌரவம் உறவினர்களை தூரமாக்கும் 
சுயநலம் நண்பனை தூரமாக்கும்
 தற்பெருமை இறைவனை தூரமாக்கும்
"தெரியாது" என்பனுக்குத்தான் கல்வியும் கௌரவமும் சொந்தம்....
 "கல்வியும் கௌரவமும் மீன் போன்று "தெரியாது" என்பது தண்ணீர் போன்று "

மேலும்

இரா இராமச்சந்திரன் - Keerthi Yadav அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2015 6:44 pmவரதட்சணையே வாங்காத மணமும்....!!
வல்லுரவே நடக்காத தினமும்.....!!! 
எல்லோரையும் மனையாளாய் நினைக்காத குணமும்......!!!! 
நம்மிடையே  சாத்தியமான அக்கணமே ... ........!!!!!
கொண்டாடுவோம் நமக்கென்று ஒருதினம்.......!!!!!!
உண்மையான ஆடவர் தினம்....!!!!!! 

மேலும்

தங்கள் கருத்தை மனமுவந்து ஏற்கிறேன் அண்ணா..... நன்றி.... 20-Nov-2015 12:14 pm
இப்படியெல்லாம் கண்டிசன் போட்டால், மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் உட்பட எதையுமே கொண்டாட முடியாது, தம்பி! நல்லார்கண் பட்டதே உலகு. ஆகையால் கொண்டாடுவோம்! 20-Nov-2015 12:06 am
இரா இராமச்சந்திரன் - sankaran ayya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2015 2:53 pm

                  -----இன்றைய சிந்தனைக்கு----


ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால் அரசியலும் 
குச்சுப்புடி பாரத நாட்டியம் ஆடும் ! 

ஒரு போட்டியின்னு வந்து விட்டால் 
பாட்டியும் ஓட்டப் பந்தயத்திற்கு தயாராவாள் ! 

ஆட்டிறைச்சியும் மாட்டிறைச்சியும் இங்கே அரசியல் 
ஆட்டுக்குத் தீர்ந்தால் குட்டிக்குத் தீரும் என்று சொல்லுவார்கள் 
மாட்டுக்குத் தீரலாம் 
ஐயோ பாவம் இந்த ஆட்டுக்கு ஒரு நாளும் தீராது ! 

இலையும் குழையும் தின்னும் ஆடு மனிதனுக்கு இரை 
சோறும் பருப்பும் தின்னும் மனிதனுக்கு உணவுப் பற்றாக் குறை ! 

கூரையில் நின்னு விடிய விடியக் கூவிய கோழி 
மதியத்தில் உணவு ----இன்னைக்கு அம்மாவாசி ! 

பாலும் முட்டையும் தினம் தரும் 
ஆட்டையும் கோழியையும் மாட்டையும் அடித்துத் தின்னும் 
மனிதன் மடியில் பூனைக்கும் நாய்க்கும் சிம்மாசனம் 

எலும்புத் துண்டில் வாலாட்டும் நாய்க் குட்டி ! 
மியாவ் மியாவ் என்று கூவும் பூனைக் குட்டி ! 
டார்வின் சொல்லாத வாழ்க்கைத் தத்துவம் ! 

-----கவின் சாரலன்


மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

k VIGNESH

திருப்பூர் மாவட்டம் பல்ல
பெரியண்ணன்

பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
user photo

parthipa mani

parthipa mani

நாமக்கல்/கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

agan

agan

Puthucherry
பெரியண்ணன்

பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
பாட்டாளிபுத்திரன் ருத்ரா

பாட்டாளிபுத்திரன் ருத்ரா

புதுக்கோட்டை மேலைச்சிவபு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

user photo

பாட்டாளிபுத்திரன் ருத்ரா

பாட்டாளிபுத்திரன் ருத்ரா

புதுக்கோட்டை மேலைச்சிவபு
sabiullah

sabiullah

தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே