கவிஜி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கவிஜி
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2013
பார்த்தவர்கள்:  6218
புள்ளி:  5015

என்னைப் பற்றி...

எனக்கு பறவை என்றும் பெயருண்டு

என் படைப்புகள்
கவிஜி செய்திகள்
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2017 3:52 pm

நீயே கடவுள் என்றாய்...
பின்
இல்லையில்லை கல் என்றதும்
அதே ஈர உதடுகள்தான்...
ஒருமுறை
நீ கடவுள் துகள் ஆகவே
கண் கலங்க வைக்கிறாய்
என்றாய்...
நீ வெறும் பாறை
கடவுளென்பது உன் மாயத் தோற்றம்
என்று சொல்லி
என் விரலை நீ வெடுக்கென விட்ட
ஞாபகம் ஒருமுறை...
நெடுந்தூரப் பயணமொன்றில்
கடவுளின் மொத்தமென கிடைத்தாய்
என நீ சொன்னது இக்கவிதையின்
நான் எழுதா முதல் பத்தி...
அதை நீ மீண்டும் யாரிடமோ
சொல்கையில் கடந்து விடத்
தீர்மானித்திருந்தது
என் கல்லின் கடவுள்தனம்...
அதே சமயம் கடக்க முடியாமல்
கல்லாகவே கிடந்தது
உன் கடவுளின் கள்ளத்தனம்...!

கவிஜி

மேலும்

மிகவும் சிறப்பான சிந்தனை விஜி....!! 20-Feb-2017 12:19 pm
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2017 3:04 pm

வெயில் பிடித்தலையும்
உன் வீதி ஞாயிறுகளில்
குறைந்த பட்சம் என்
சனி இரவுகளையாவது
நடக்க விடு....

நீ அனுப்பும் செண்பகப் பூக்களை
தொட்டுத் தடவி சேமிக்கும்
அலைபேசிக்குள்
அழாத பொம்மையாக்கு என்னை...

உன் பேருந்து ஜன்னல்
ஓரங்களைப் பிடித்தலையும்
பேய் கூந்தல்காரிகளாகவாவது
என்னை அனுமதி...

ஒரு முத்தத்துக்கு ஏங்கும்
பூவரசம் பீப்பியை
ஊதிக் கொண்டே திரிகிறேன்
இசையிடு கொஞ்சம் இச்சையிடு.....

நீ பார்த்து அனுப்பும் நிலவுக்கு
உன் பாதி நெற்றி என பிதற்றித் திரிய
பொன்மாலை ஆலாபனைக்கு
என்னை சற்று மாற்று...

வெள்ளிக்கம்பியென ஒரு நீள்
முடி சுருளில் என் இருள்தேசம்
சிவக்க
தா உன்

மேலும்

செண்பகப் பூக்களின் வளைவுகளானவள்.........செம விஜி. அடிபொழி வரிகள்.... 14-Feb-2017 10:25 am
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 4:00 pm

மீண்டும் சில வெண்ணிற இரவுகள் -சிறுகதை- கவிஜி

இந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். "வெண்ணிற இரவுகள்" படிச்சிருந்தீங்கனா இன்னும் சுலபம். கிட்டத்தட்ட அதே கதை தான். சரி அதே கதையை ஏன் திரும்ப எழுதணும்னு கேக்க தோணுதுல்ல. அது அப்டித்தான். சித்தார்த்தன் ஏன் அந்த நேரத்துல வீட்டை விட்டு போனான்னு கேட்டா என்ன சொல்றது. அப்டிதான். சில நியாயங்கள் சில நேரங்களில்.....சில கோபங்கள் சில நேரங்களில்.....சில கதைகள் சில நேரங்களில்.

நெடுந்தொலைவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான் அவன். பெயர் சித்தார்த்தன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். பெயரா முக்கியம். வாழ்வு தானே முக்கியம். அவனுக்கு புரிந்து விட்டது. ஒரு பெரு வெடி

மேலும்

வாவ் செம விஜி..... அப்டியே கதைக்குள் கைபிடித்து எதோ ஒரு புது உலகத்துக்கு அழைத்து போயிட்டிங்க அற்புதம் விஜி...!! 20-Feb-2017 3:01 pm
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 3:59 pm

தவம் கலைந்ததா.... கலைக்கப்பட்டதா....... வாய் திறக்கிறது காலம்......வானம் திறக்கிறது என் கண்கள்.

தின்று செழிக்கும்
கொன்று தின்னும்
உம் அதிகார ஆணவத்தில்
வர்க்க கட்டுகள் திறக்க
மக்களுக்கான அரசியலை
ஆவென பிறக்க செய்யும்
எங்களின்
அன்றொரு பசித்த செந்நாள்....

இது ஒரு தமிழ் வசந்தம்

இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்தே.... காலத் தேவைக்கு தகுந்தாற் போல பல போராட்டங்களையும் புரட்சிகளையும் சந்தித்தே வந்திருக்கிறது. மானுட வர்க்கம்... அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப் படும் போதெல்லாம் கிளர்ந்தெழும் வீரத்தை தானாகவே கொண்டுள்ளது மானுட இயல்பு.

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரே இரு

மேலும்

கவிஜி அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2016 10:27 pm

14.03.2016..இன்று அனிச்ச மலர்க்கு பிறந்த நாள்...அது அவர்களின் திட்டம்தான்... சரியான நேரத்தில்... செயல் படுத்தத் தொடங்கினாள் அனிச்ச மலர்...

"என்ன பொம்பள புள்ளை பயந்ருவான்னு நினைச்சிங்களா....?..... ம்ஹும்.... நா......ன் வே......ற........!... இந்த காட்டை.. இந்த ஒரு கிலோ மீட்டர் சுத்தளவுள்ள காட்டை.... நீங்க மரம் வெட்டி முடிக்கறக்குள்ள சுத்திட்டு வரேன்... சாட்சிக்கு.. இந்தக் காட்டோட கடைசில பூக்கற பொன்னிற பூவை பறிச்சிட்டு வரேன்...... என்ன போட்டிக்கு ரெடியா......?" என்றாள் அனிச்ச மலர்...

அவளின் மனம்....நந்தவனத்தை மிதக்க வைத்துக் கொண்டிருந்தது....

போட்டிக்கு அனைவரும் தயார்... கூட இருந்த தங்க

மேலும்

காலம்.. இதில் உங்கள் எழுத்து வடிவம்.. அனிச்ச மலர் ....// தித்திக்கும் பெயர் ஜி .. 21-Sep-2016 12:04 pm
நன்றி தோழர்... 01-Sep-2016 8:30 pm
நன்றி தம்பி 01-Sep-2016 8:30 pm
நன்றி ரியா... 01-Sep-2016 8:30 pm
கவிஜி அளித்த படைப்பை (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Jun-2016 10:46 am

இதோ இன்னொரு மனிதன்-சிறுகதை-கவிஜி

அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும் அலறலோடு, கிழிந்த உடையுடன் அவள் காற்றோடு கலந்து காற்றை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்....நான்கு மனிதர்கள்... அவளை விரட்டிக் கொண்டிருந்தார்கள்... விரட்ட விரட்ட விரட்டுதல் எளிது என்பது போல....... இரைக்கும் மூச்சை கச்சிதமாக அளந்து கொண்டு ஓடுவதாகத் தெரிந்தது....... காதுக்கெட்டிய தூரம் வரை கண்ணாய் தெரிந்த பூமியில் குதிரையோட்ட தட... தட..... பட...பட...காற்றுப் புரவியோ...? என்று அவளின் வழி -விட்டது அவளை...

விரட்ட விரட்ட...ஒவ்வொரு முறை கிடைக்கையிலு

மேலும்

கவிஜி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 4:45 pm

ROOM- சினிமா ஒரு பார்வை

"மாயத்தோற்றங்களோ...." என்று சந்தேகப் பட வைக்கும்.... கேள்விகளையே..... அந்தக் குழந்தை படம் நெடுக வீசிக் கொண்டே செல்கிறது....7 வருடங்களாக ஒரு பெண்ணை ஒரு செட்டில் போட்டு அடைத்து வைத்து வன்கலவி செய்கிறான்... ஒருவன்.... அதன் விளைவாக ஒரு குழந்தையும் பிறக்கிறது.... அவளும் அந்த வாழ்விற்கு தன்னை ஒரு வழியாக பொருத்திக் கொள்கிறாள்.. .. அந்தக் குழந்தை மட்டுமே அவளின் நம்பிக்கையாகி போகிறது... அந்த குழந்தையோ.. அந்த அறைக்குள் இருக்கும்... ஜடப் பொருள்கள் மட்டுமே... உலகம் என்று நம்புகிறது... நிழலை நிஜம் என்றே உள் வாங்குகிறது......

பிறந்ததில் இருந்தே ஒரே அறைக்குள் இருப்பதால் அந்த

மேலும்

கவிஜி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 4:30 pm

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்....

mirdad bookஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது...... கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது. தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக

மேலும்

Santhosh Kumar1111 அளித்த எண்ணத்தை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2016 12:38 pm

கவிதை தொக்கு- இல்


தோழர் கவிஜியின் புறக்கணித்தலின் நவீனம்.

இரா. சந்தோஷ் குமாரின் நெருப்பு புரவி

ஆகிய கவிதைகள் அணி வகுத்துள்ளன. 

இதற்கு முன் சுவை ஊட்டிய தோழர்களின் கவிதை பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.


கவிதை தொக்கு-இல் பங்கேற்க விருப்பமுள்ள கவிஞர்கள் தோழர் கவிஜியை தனி விடுகையில் தொடர்புக் கொண்டு விபரம் அறியலாம். 

நன்றி !

-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

Punitha Velanganni அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Apr-2016 1:09 pm

பூமி..

எலேய் சின்ராசு
எவ்வளவு அழகா இருந்தேன்டா
பச்சை பசேல்ன்னு கெடந்தேன்டா
மூலிகைத்தாவரம் பல தந்தேன்டா..

செதுக்கிய சிற்பமும்
வரைந்த ஓவியமும்
பொக்கிஷமா வச்சிருந்தேன்டா
எல்லாத்தையும் அழிச்சிட்டீங்களேடா..

வனங்களை அழிச்சி
பல உயிர்களை கொன்னு
அடுக்கு மாடிங்க கட்டுறேன்னு
அஸ்திவாரத்தையே அழிச்சிட்டீங்களேடா..

நான் வறண்டுட்டேன்டா
பூவெல்லாம் கருகிடுச்சுடா
ஜோரா வளர்த்த மரம்
சுக்கு சுக்கா கெடக்குதுடா
பத்து மரம் நட்டாலும்
வெட்டுன ஒத்த மரத்துக்கு ஈடாகுமாடா...

சொர்க்க பூமியா இருந்தேனே
என்னையே அழவச்சிட்டீங்களேடா
நான் அழுது குலுங்கையிலே
கடலம்மா பொங்குறாடா
ஒன் உசுர எடுக்குறாடா...

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 28-Apr-2016 2:12 pm
கருத்தில் மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி தோழமையே... 28-Apr-2016 2:12 pm
இப்புவியில் வாழப் போகும் கடைசி மனிதனாவது உணர்ந்தால் சரி ! அருமை தோழமையே .. 26-Apr-2016 12:22 pm
அருமை, அருமை இயற்கையின் அழிவையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் அழகாக எடுத்து சொன்னீர்கள் மிக மிக நன்றி வாழ்த்துக்கள், புனித வேளாங்கண்ணி 25-Apr-2016 10:55 pm
அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2016 8:17 am

கவிதை தொக்கு - 6 - அ.வேளாங்கண்ணி
=================================

பரந்து விரிஞ்சிருக்கும்
====கடலவிட நீ பெருசு
நீபொய்த்துப் போனியினா
====உசுரிருந்தும் நான் தரிசு
அரசியல்வாதி போல‌
====பலமுகத்த நீ காட்ட‌
வயலுக்கும் வியாதிவரும்
====எம் பொழப்பு மண்ணாகிடும்

மழவரும்னு எதிர்பார்த்தா
====கருமேகம் ஒளிய வைப்ப‌
வெயில்வரும்னு பாக்கையில‌
====பெருமழய பொழிய வைப்ப‌
நீதானே எங்களோட‌
====மானம் காக்கும் கூரையான‌
எம்பொழப்ப நெனைக்கையில‌
====மனசு விட்டுப் போயிடுச்சு

நீபோட்டுருப்ப கோடிநகை
====ரெண்ட பொஞ்சாதிக்கு அனுப்பிவையி
ஒன்ன அலங்கரிக்கும் ஏழுவண்ண‌
====பொடவ கிழிச்சு உதவிசெய்யி
எங்கநகையெ

மேலும்

மிக்க நன்றி ஐயா.. 25-Nov-2016 8:40 pm
தமிழ் அன்னையின் கவிதை மலர்க் கிரீடம் போற்றுதற்குரிய உழவர் மேலாண்மைக் கருத்துக்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய பயணம் 25-Nov-2016 4:10 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே... 25-Apr-2016 8:04 am
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் 24-Apr-2016 4:00 pm
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2016 12:50 pm

இயக்குனர்.
----------------------


இது மாய உலகு
நானொரு மாயன்
உன்னை ஆட்டிப்படைக்கும் மந்திரன்
உன் ஆழத்தில் கிடக்கும் இறைவன்

ஜாதி, மதம்,மொழி , இனமென
எதுவும் எனக்கில்லை.
மாறாக.. உன்னால்
நான் கற்பிக்கப்படுகிறேன்
ஆதலால்
நான் களங்கப்படுகிறேன்.

உன்னை உனக்கே எழுதும்
நானொரு விடுகதையே.
உன்னைச் சுற்றி நிகழும்
யாவும் எனது இயக்கமே.
உனது அறிவியலுக்கும்
உன் உலக உளவியலுக்கும்
விளங்காத நானொரு
புரியாத புதிரான திரைக்கதையே.

யாரென எனை நீ கேட்காதே
உன் பூத உடல்
காற்றில் இயங்கும்.
உன் பூத உடலில்
நான்
காலத்திற்கு இயங்குகிறேன்.

உன் மரணத்திற்கு பின்பு
உனக்கு கல்லறை
எனக்கு விடுதல

மேலும்

செல்வமுத்தமிழ்.. நலமா? வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி பா..! 16-Apr-2016 7:54 pm
ஆழமான புரிதலோடு கருத்தளிக்கும் உனக்காகவே பல படைப்புகள் எழுதலாம் போலிருக்கு, மிக்க நன்றி தம்பி.! 16-Apr-2016 7:53 pm
மிக்க நன்றி தோழரே 16-Apr-2016 7:52 pm
கவிதை மிகவும் அருமை அண்ணா ! இருட்டு சிற்பி சூப்பர்ணா !! 16-Apr-2016 6:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (338)

AnbudanMiththiran

AnbudanMiththiran

திருநெல்வேலி, தமிழ்நாடு
aravind 628

aravind 628

திருமுட்டம்
Nagarani

Nagarani

உடுமலை

இவர் பின்தொடர்பவர்கள் (340)

Geeths

Geeths

கோவை
Siva

Siva

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (340)

sarabass

sarabass

trichy
muralimanoj

muralimanoj

கோவை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே