கவியரசன் புது விதி செய்வோம் Profile - கவியரசன் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவியரசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2014
பார்த்தவர்கள்:  2357
புள்ளி:  2969

என் படைப்புகள்
கவியரசன் புது விதி செய்வோம் செய்திகள்

காதல் காமம்
அரசியல் திரைப்படம் என கடந்து
வரிசையாக படித்தபடி
கீழ்நோக்கி சென்ற போது
ஒரு இடத்தில் நகர நகர்த்த மறுத்து
கைகளும் மனதும் நின்று போனது

ஆடைகள் இல்லாத உடல்
அங்கங்கள் எல்லாம் அப்பட்டமாய் தெரிந்தது
நிச்சயம் இருபது முதல்
இருபத்திரண்டு வயதிருக்கும் அவளுக்கு
பல ஆயிரம் விருப்பங்களை
குவித்திருந்தது
எத்தனை கண்களுக்கு விருந்தளித்திருக்குமென
தெரியவில்லை

நிர்வாண மேனியில் நிற்கும்
சங்கடமோ
கூனி குறுகுதலோ
வெட்கமோ ஏதுமில்லை

உதட்டில் ஒரு கவர்ச்சியான சிரிப்பு
(உதட்டில் மட்டுமா என நீங்கள் கேட்பது விழுகிறது)
காந்தங்களையே விழுங்கும் ஈர்க்கும் பா(ர்)வை
மணல் தொட

மேலும்

தொடர் வண்டியின் நீளம் தோற்கும்
ஒரு நீண்ட பயணம்
பெரிதாய் ஒரு ஆசை நிறைவேறியது
ஆம் சன்னலோர இருக்கைதான்
கடப்பது யார்?
எனும் குழப்பத்தில் ஆழ்த்தும் மரங்கள்
தொடர் வண்டியை தொடர்ந்து வரும் நிலவு
இதமாய் இருக்கும் பனிக் காற்று
சன்னலை மூடுச் சொல்லும்
குளிர் தாங்காத இளைஞனின்
போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும்
குறுகுறு பார்வை

நீண்ட பயணம் என உறுதி செய்யும்
நிறைந்த தண்ணீர் குடுவை
காற்றுக்கு வீங்கும் தலையணை
விதவிதமான பூ போட்ட போர்வை
உருவத்தை வைத்து பார்த்தால்
இருவேளைக்காவது தாங்கும்
உணவுப் பொட்டலம்

எதிர் இருக்கைதான்
நிலவுக்காக நான் ஏங்குவதை
எப்படியோ அறிந்தவன்

மேலும்

அகடு முகடுகளில்
கடினமான திருப்பங்களில்
நரக வேதனைகளில்
தனிமை புலம்பல்களில்
ஈரம் தோய்ந்த தலையணைகளில்
சிரிக்க மறந்த தருணங்களில்
எல்லாரும் இருக்கும் யாருமற்ற சமயங்களில்
இன்னும் கீறி வைக்க இடமற்ற தோல்களில்
வற்றிப் போன விழி ஆறுகளில்
வறட்சி நிலவும் வாழ்வின் கோடைகளில்
பேதலித்து போன மூளை செல்களில்
கட்டளைகளை ஏற்கும் உடலின் செயலிகளில்
தூக்கமாத்திரையும் பயனற்று போன நிமிடங்களில்
போதை வஸ்துக்களுக்குள்ளும் வலுக்கும்
நினைவுகளில் எல்லாம்
இல்லாது போன ஒன்று தான் இருக்கிறது

அது ஆற்றுணாத்துயராக
காற்றோடு போன உயிராக
மிகவும் நேசித்த ஒன்றாக
ஒன்றாகவில்லையே எனும் நினைவாக
ஆழி கொண்ட ச

மேலும்

காலை பொழுதை விடுமுறை கொஞ்சம்
களவாட விட்டு விட்டு
ஒன்பது மணிக்கு மேல்
போர்வையுடனான யுத்தத்திற்கு
வெள்ளை கொடி காட்டி
வராத சோம்பலை கொஞ்சம்
வற்புறுத்தி வரவழைத்து
யார் முகத்திலும் விழிக்க அஞ்சி
தன் கையே தனக்குதவி என
அதில் விழித்து

மூடியிருந்த கதவோரம்
காத்திருந்த காலை கதிரை
உள்ளே வர அனுமதித்தால்
தொபுக்கடி என எகிறி குதிக்கிறது
கூசும்படி கண்ணில்

குளியலுக்கும் விடியலுக்கும்
எவன் முடிச்சு போட்டான் என தெரியவில்லை
என்ன செய்ய
நான் பொங்கலுக்கும் தீபாவளிக்கும்
குளிப்பவன் தான்
இன்று பார்த்தா வரவேண்டும் பொங்கல்

சில்லுன்னு தண்ணி இருக்கு
ஆறு மணிக்கெல்லாம் எழுந்து

மேலும்

கவியரசன் புது விதி செய்வோம் அளித்த படைப்பில் (public) AnbudanMiththiran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2017 2:09 pm

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிந்து நில்லடா
தலை நிமிரும் நேரத்தில்
தன் தரமிழப்ப தேனடா

பச்சை வயல் பார்த்தவன்
பட்டினியில் சாவதா
மிச்சம் ஏதும் இன்றியே
பிச்சை கேட்டு வீழ்வதா

பாருக்கெல்லாம் சோறு போட்ட
பச்சை தமிழர் நாமடா
பார்க்க கூட நாதி யற்ற
லட்சணத்தை பாரடா

ஏறு பூட்டி படியளந்த
ஏற்றமிக்க பூமியில்
ஏழ்மை வாட்டி உயிரிழந்த
தோற்றம் மிகுவதேனடா

நீயும் நானும் தின்னும் சோறு
அவனுழைப்பில் வந்தது
நீயும் நானும் வாழும் வாழ்க்கை
அவனுக்கென்ன தந்தது

நூறு மரணம் விழுந்த பின்னும்
கேட்க யாரும் இல்லையே
ஆறு கோடி பேர் இருந்தும்
ஆறுதல் தான் இல்லையே

புலியடித்து துரத்த

மேலும்

Super... 11-Jan-2017 9:47 pm
அருமை சகோ. 11-Jan-2017 8:02 pm
சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள்...! 11-Jan-2017 5:56 pm
நன்றி நண்பரே 11-Jan-2017 5:48 pm

காற்றோடு செல்லும்
வீசியெறிந்த காகிதங்கள்
அகதிகள்

ஆற்றோடு செல்லும்
வாழத்துடித்த மரங்கள்
அகதிகள்

கடல் தாண்டும் காற்றில்
தன்இன மணம் தேடும் பூக்கள்
அகதிகள்

வசிப்பிடம் இழந்து போனதில்
வீதி வந்த நதிகள்
அகதிகள்

சொர்கத்திலிருந்து
கீழே விழுந்த திரிசங்குகள்
அகதிகள்

தாய்மடி இழந்த
பச்சிளம் பிள்ளைகள்
அகதிகள்

தேசமும் பாசமும்
தொலைவாய் போனதின் விளைவாய்
அகதிகள்

துரத்தப்பட்ட
துணைதேடும் பறவைகள்
அகதிகள்

- கி.கவியரசன்

மேலும்

நன்றி நண்பரே 11-Jan-2017 12:51 pm
nice. change will come... 10-Jan-2017 3:18 pm

அடித்துபிடித்து அப்பாடாவென அமர்ந்தேன்
எழுந்து நிற்கிறார்கள்
திரையரங்கில் தேசியகீதம்

- கி . கவியரசன்

மேலும்

வணக்கம் நான் கி.கவியரசன். எவ்வளவு முயன்றும் எனது கவிதைகளை தங்கள் தளத்தில் பதிவிட முடியவில்லை. லாகின் செய்த பிறகும் பதிவிட போனால் லாகின் செய்யவும் என வருகிறது. என்ன செய்வது ? 09-Jan-2017 11:02 am
கவியரசன் புது விதி செய்வோம் - Nivedha S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2017 11:22 am

இதயம் வருடும் இன்னிசை..!
இமை வருடும் தென்றல்..!
இடைவிடாத தூரல்....!!
என் தோள் நனைக்கும் சாரல்..!
தோள் சாயும் தோழி...!!
பூக்கள் பூக்கும் அந்தி மாலை....!
சுமைகள் எல்லாம் சுகமாய் கரைந்து கொண்டிருக்கும்
இந்த பயணம் எப்பொழுதும் தொடருமென்றால்..!!
இறைவனிடம் கேட்பேன்..
இன்னுமொரு ஜென்மம் தரச்சொல்லி..!!!

மேலும்

இன்னுமொரு ஜென்மம் வேண்டுமா .......... !!!!!!! பரவாயில்லையே வாழ்த்துக்கள் 06-Jan-2017 12:15 pm
மிக்க நன்றி தோழா.. 04-Jan-2017 4:01 pm
தங்கள் ஒருநாள் பயணம் வாழ்நாள் பயணமாக வாழ்த்துக்கள் சகோ... 04-Jan-2017 3:55 pm
Geeths அளித்த எண்ணத்தை (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Jul-2016 4:07 pm

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்

செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB  விரலியும் பரிசாக வழங்கப்படும்.

செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும்..... தொடரட்டும் போட்டிகள் 09-Sep-2016 8:52 pm
அழகிய ஓவியங்கள், பாராட்டுக்கள். 03-Sep-2016 9:03 am
நன்றி 21-Aug-2016 10:12 am
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களும்..... கவிதை போட்டி முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது...? 11-Aug-2016 10:03 am

குவளையிலிருந்து நெகிழி
குடுவைக்கு மாறியதில்
கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தது
தண்ணீர்
யாரும் கண்டுகொள்ளவில்லை
மூடி திறப்பும்
குடுக் குடுக் சத்தமும்
அப்போதைய தாகம் தீர்ந்த
திருப்தியில்
மறந்து போனது அந்த
தண்ணீரின் தாகம்

யோசிக்க மறந்து விட்டோம்
சட்டைப்பையில்
இருக்கும் இறுதி ஒற்றைரூபாய்
சற்று தெம்பாக இருக்கலாம்
ஆனால் எத்தனை காலம் ?
அது ஒரு ஒரு பைசாவாய்
கரைந்து கொண்டிருக்கிறது

சொத்து சேர்க்க மறந்த
தந்தை மகனிடம்
வெத்துக் கை காட்டுகையில்
மகன் பார்க்கும் கேவல பார்வை
கூனி குறுக வைக்கும்
ஆனால் இந்த விசயத்தில்
நமக்கிருக்கும் ஒரு நம்பிக்கை
நாம் அன்று இர

மேலும்

1974: நான் அனுபவித்த குற்றால நீர்வீழ்ச்சி இன்று மறைந்து கொண்டே வருகிறது மலைகள் ஆறுகள் குளங்கள் காணாமல் போவது கண்டு நம்மால் இயற்கை அன்னை அளித்த செல்வம் பாதுகாக்க ஆவன செய்வோம் . நீர் மேலாண்மைக் கருத்துக்கள் போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் நன்றி . . 03-Jun-2016 4:31 pm
நன்று, வாழ்த்துக்கள் 18-May-2016 8:41 pm
நன்றி நண்பரே மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில் 02-May-2016 11:44 am
உண்மைதான்..பல நாடுகளின் நீர்கள் இன்றி மனிதனே மனிதனை அடித்தும் சாப்பிடும் நிலை தோன்றி விட்டது இதன் தாக்கம் உலகம் முழுவதும் பரவினால் உலகும் நிச்சயம் கல்லறை தோட்டமாய் மாறிவிடும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 02-May-2016 11:39 am

நான் வேஷமிட்டால்
தான்
மதிக்கிறார்கள்

தினமும் கைவசம்
பல முகமூடிகளை
கொண்டே செல்கிறேன்

நல்ல நடிகன்
தான் இங்கு
தேவைப்படுகிறான்

உத்தமர்களை எல்லாம்
பாடசாலை புத்தகத்தில்
உறங்க வைத்து
இருக்கிறோமே

தப்பி தவறியும்
யார் வழியேனும்
விழித்து விடாமலிருக்க
மயக்க மருந்துகளை
கைவசம் வைத்திருக்கிறோம்

கண்ணாடி காலையிலேயே
அருவருப்பான
உண்மை முகத்தை
காட்டுகிறது
பிடிக்கவில்லை உடனே
அழகு சாதனம்
கொண்டு
போலிக்கு மாறிவிடுகிறேன்

பிறருக்காக முகமூடி
எடுத்தேன் இன்று
எனக்கே தேவைப்படுகிறது
நான் சிறந்த நடிகனாகவே
விரும்பிவிட்டதால்

மேலும்

நன்று, வாழ்த்துக்கள் 22-Apr-2016 9:25 am
நன்றி தோழரே 19-Apr-2016 4:33 pm
வாழ்க்கை மேலாண்மை போற்றுதற்குரிய அருமையான கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கியப் பயணம் நன்றி 17-Apr-2016 10:53 pm
நன்றி தோழரே மிக்க மகிழ்ச்சி 15-Apr-2016 6:41 pm

கவிதைகள் கூன் போட்டு
விழுந்தாலும் நல்ல
கவிஞ்சனின் முதுகுத் தண்டு
வானை மட்டுமே பார்க்கிறது

சர்ப்பம் கூட
அர்ப்பமாகத்தான் தெரியும்
நல்ல கவிஞ்சனின்
கர்வம் படம் எடுக்கையில்

ஆகாயத்தில் கோட்டை
கட்டிவிட்டு
பாதாளத்தில் உருண்டு
கொண்டிருக்கும் பயித்தியக்காரர்கள்
இவர்கள்

இவர்களின் கை விறகுகள்
தீ பிடித்தெரிந்தால்
நல்ல ரசிகனுக்கு அது
குளிர்கால கதகதப்பு

காலடியில் நாய்க்குட்டி
போனாலே போதும்
காதலிக்காக காத்திருக்க
வேண்டியதில்லை
நல்ல கவிஞன் இடம்
கவிதைகள்

இவர்கள் விண்ணிலிருந்து
குதித்தவர்கள் இல்லை
புவியீர்ப்பு விசையை தாண்டி
விண்ணுக்கு குதிப்பவர்கள்

மேலும்

அருமை பாராட்டுக்கள் 24-Dec-2015 8:42 am
நன்றி தோழரே மிகவும் மகிழ்ச்சி 14-Dec-2015 2:06 pm
மிக அருமையாக எழுதி உள்ளீர் இல்லை அனுபவத்தில் செதுக்கி உள்ளீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:22 pm
நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும் வரவிற்கும் 14-Dec-2015 12:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (390)

gnanapragasam

gnanapragasam

சேலம்.
Anbu Chelian

Anbu Chelian

சிவகங்கை
AnbudanMiththiran

AnbudanMiththiran

திருநெல்வேலி, தமிழ்நாடு
Vishanithi R

Vishanithi R

தூத்துக்குடி
Dileepan Pa

Dileepan Pa

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (391)

karthikjeeva

karthikjeeva

chennai
Siva

Siva

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (390)

நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
nisha shagulhameed

nisha shagulhameed

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான விளையாட்டுகள்

மேலே