கிருஷ்ணநந்தினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிருஷ்ணநந்தினி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  13-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-May-2014
பார்த்தவர்கள்:  896
புள்ளி:  339

என்னைப் பற்றி...

தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வமும் வேட்கையும் உடையவள்....

என் படைப்புகள்
கிருஷ்ணநந்தினி செய்திகள்
கிருஷ்ணநந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 10:35 pm

முடிவிலா எண்ணம் போல்
முடிவிலியாய் நீளாயோ...
நாளும் கை கோர்த்து
முடிவில் வாசல் சேர்க்கிறாய்..
சாலையே!
வாசல் இல்லா உலகுக்கு
கூட்டிச்செல்வாயா என்னை...
பந்தபாச ஊரை விட்டு
வெகுதூரம் செல்வோமே...

மேலும்

கிருஷ்ணநந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 10:06 pm

நான் பருகிய
தேநீரை விட
அக்குவளையே
அதிகம் இனித்தது!
என்றோ அவன்
சுவைத்திருப்பான்
என்ற நினைவில்!

மேலும்

கிருஷ்ணநந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 9:55 pm

புதைத்து விட்டச்
செல்லாக் காசைத்
தீவிரமாய்த் தேடிக்
கொண்டிருக்கிறேன்!
பன்மடங்கு
மதிப்புயர்ந்தக்
கலைப் பொருளாய்க்
காணும் விழிகளுக்காய்!

மேலும்

கிருஷ்ணநந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 8:59 pm

அவனும் அவளும்
வேறு வேறல்ல
விழிகள் இரண்டாவதால்
பார்வை இரண்டல்ல...

உணர்வுகள் ஒன்றிவிட்டால்
வலிகள் உணரப்பட்டால்
வேறுபாடுகள் மதிக்கப்பட்டால்
தவறுகள் புரிந்துகொள்ளப்பட்டால்
மதிப்பிடும் நீதிபதியாகாமல்
அவளி(னி)ன் பாதியானால்
சார்ந்திராமல் இணைந்திருந்தால்
உறவில் பொய்க்கு இடமில்லை.

பொய் இடம் பெறுமாயின்
ஏமாந்து கொண்டிருப்பது
அவனோ அவளோ அல்ல...
பொய் உரைத்த மனமும்
ஏற்படாத உறவும்...
~கிருஷ்ணநந்தினி

மேலும்

குமரிப்பையன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Feb-2017 4:53 pm

பாலியல் (அ)வன்முறை

==============================
அப்பான்னு நினைச்சேன்...!
அசிங்கமாய் தொட்டான்.....!

சகோதரன்னு பழகினேன்....!
சங்கடமாய் தொட்டான்........!

மாமான்னு பேசினேன்......!
மட்டமாய் நடந்தான்.....!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்...!

ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்....!

நட்புக்கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!

மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைப்பேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...!

கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான

மேலும்

நிஜமானது உங்கள் கருத்து. நன்றிகள் இளங்கவியே! 26-Mar-2017 2:17 am
மனம் நோகும் அவலங்கள் தான் இவ்வுலகில் நாளும் வாடிக்கை 26-Mar-2017 12:23 am
உங்கள் கருத்து நிசம்! 26-Feb-2017 12:20 pm
தறிகெட்டுப்போகும் தமிழகம் 25-Feb-2017 10:29 am
கிருஷ்ணநந்தினி அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Feb-2017 12:22 am

கண்களில் கனவுகள்
கனவினில் சலனங்கள்
சலனங்களில் ஏக்கங்கள்
ஏக்கத்தின் தாக்கங்கள்
தாக்கத்தின் கனங்கள்
கனங்களின் ரணங்கள்
ரணங்களுக்கு ஆறுதல்
ஆறதலுக்கோ தேடல்கள்
தேடலே வாழ்க்கை
வாழ்க்கைக்கோ உறவுகள்
உறவுகளின் உணர்வுகள்
உணர்வுகளில் மோகங்கள்
மோகத்தால் வேடங்கள்
வேடத்தால் வேதனை
வேதனையால் போதனை
போதனையோ துறவு...

~ கிருஷ்ணநந்தினி

மேலும்

நன்றி நட்பே.. 25-Feb-2017 12:20 pm
வாழ்த்துக்கு நன்றி தோழரே... 25-Feb-2017 12:20 pm
நன்றி தோழரே 25-Feb-2017 12:12 pm
வாழ்க்கையை பற்றி அருமையான கவிதை இந்த கவிதை நடை என்னை மிகவும் ஈர்க்கிறது என்னை மெய் மறக்க செய்கிறது 25-Feb-2017 10:14 am
கிருஷ்ணநந்தினி - மோனிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2016 10:30 pm

விரும்பி கேட்ட பாடல்
வரிகள் காதுமடல் கடக்க
விழிகள் விரிய காதல்
கொள்கிறேன்

படித்ததில் பிடித்தது
நினைவில் எட்ட
இதழை எட்டிய நகையில்
காதல் கொள்கிறேன்

தணலில் தவழும் நிலவு
இரவை தழுவி கூடல் கொள்ள
உறக்கத்தோடு ஊடலாய் காதல்
கொள்கிறேன்

நம்பிக்கை உடைந்து விழ
உள்ளம் உதிர்க்கும் உதிரம் அழைக்க
உதவிக்கு வரும் விழிநீரோடு
காதல் கொள்கிறேன்

இடரி விழுந்துவிட்ட தருணம்
அனிச்சையாய் அணைக்கும்
தோழனின் கனிந்த கரங்களோடு
காதல் கொள்கிறேன்

உதிரும் போதும் உதிரா
புன்னகை சூடி கார்குழலில்
கர்வமாய் வீற்றிருக்கும் பூவரசோடு
காதல் கொள்கிறேன்

இரை தேடி இரைப்பை
இரைக்க வளியோடு

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2016 9:49 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2015 10:25 pm

அந்த நாளின்
கடைசி துளி வெளிச்சத்தை
மென்று கொண்டிருந்தது இருள்

சிறு பச்சையில்
உயிர்ப்பித்திருந்தது
மறுநாளில் மரித்திடும்
நரம்புகள் வறண்ட இலை

உடல் மெலிந்த பறவையின்
பிய்ந்த இறகுகள்
காற்றில் தொய்ந்தபடி

ஊற்றினை
தொலைக்கப் போகும்
பெரு நதி

உயிர் குடிக்கும்
மூச்சுக் காற்று

என் பாதச் சுவடுகள்
பதிந்த வெள்ளை பூமி

கருகிய சூரியனுடன்
கந்தகம் சேர்த்து
சுவாசம் கொள்வதற்கு

நாளை என்பது
இல்லாது போகட்டும்!!

மேலும்

மிக்க நன்றி நட்பே.. 10-Jul-2015 12:26 pm
அப்பா என்ன வரிகள் இது வியந்தேன் ............... காலச்சக்கரத்தில் இவைகள் வரும் காலம் வெகு விரைவு 10-Jul-2015 12:18 pm
நிஜம்தான் நட்பே....மிக்க நன்றி நட்பே... 08-Jul-2015 10:05 pm
மிக்க நன்றி தோழமையே.... 08-Jul-2015 10:05 pm
C. SHANTHI அளித்த எண்ணத்தில் (public) C. SHANTHI மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2015 9:12 pm

கடந்த 24-06-2015 அன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தில் இல்லத்தில் அவரைப் பற்றிய கவிதை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அங்கே 20 பேர்களுக்கும் மேற்பட்டோருக்கு "கவியரசு கண்ணதாசன் விருது" வழங்கப்பட்டது. எனக்கும் கிடைக்கப்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து எனக்கு விருதுகள் வழங்கி எழுத என்னை ஊக்கப் படுத்திக் கொண்டிருக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், வாழ்த்துக்களை வழங்கி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் எழுத்து தோழமைகளுக்கும் இங்கே எழுத இடம (...)

மேலும்

ஊழல் பணத்தில் உல்லாச வாழ்வு வாழும் உன்மத்தர்களிடம் விருது வாங்குவது விஷமே 24-Jun-2016 1:29 pm
கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்; கொள்கையை இழந்தவன் மந்திரியாவான். மிக நன்று .இந்த இழி நிலை மாற்றிட முனைப்புடன் செயலாற்றிட இளைய தலைமுறை முன்வர அன்புடன் அழைக்கின்றேன் 24-Jun-2016 1:25 pm
இனிமேல் கூறுங்கள் அம்மா..வாழ்த்துக்கள் 06-Jul-2015 10:30 pm
வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழமையே. 06-Jul-2015 10:05 pm
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2015 10:59 pm

பிறக்காத குழந்தைக்கும்
நம்பெயர் இணைத்து
பெயர்வைத்து மகிழ்ந்தோம்.!

நடக்காத திருமணத்திற்கும்
நாட்கள் எண்ணி கொண்டாடினோம்.!

இன்றோ உன் குழந்தைக்கு
என் பெயரும்.!என் குழந்தைக்கு
உன் பெயரும் ஆனதே.!

அன்று என்கைகள் உனக்கு ரோஜா
மலரை கொடுக்காதிருந்தால்.!
இன்று என் மனம் முள் தைத்ததாய்
துடித்திருக்காது.!

அன்று என் இதயம்
உதிரத்தால் காதல்மடல் எழுத
மறுத்திருந்தால்? இன்று என்
கண்ணீர் காதல்காவியம் எழுத
துணை சென்றிருக்காது.!

உன் புன்னகையை எதிர்கொள்ளும்
துணிவு அன்று என் மனதிற்கு
இருந்திருந்தால்?இன்று உன்
நினைவின் வலியை எதிர்த்து
நின்றிருக்குமோ.!

வயது என்ற பயணத்தில்
ஆணுக்கு

மேலும்

ஒரே கையில் காற்றையும் நீரையும் வைத்து ஒன்றை மட்டும் எடுக்க சொல்வது நியாயமோ.?? //அருமை தோழா, வெற்றி பெற வாழ்த்துக்கள்// 23-Aug-2015 6:20 pm
அருமை...... 20-Aug-2015 6:10 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 16-Aug-2015 9:39 pm
அருமை 16-Aug-2015 9:08 pm
கிருஷ்ணநந்தினி - கிருஷ்ணநந்தினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2014 10:42 pm

உன்னை பிரிந்த வேதனை
பற்றிக் கொண்டு எரிகிறேன்
உன்னை என்னோடு வாரியணைக்க...

என்னை மார்போடு அணைக்கும்
எழில் பொங்கும் கவிக்கடலே!!!!

என் ஏக்கம் உணரா
மனித குலம் தூற்றுகிறது
என்னை, அனலை வாரியிறைப்பதாய்...

மதிகெட்ட மக்களுக்கு புரியவில்லை
நான் பற்றிக்கொண்டு எரிவதெல்லாம்
மனையாள் உன்னைப் பற்றிக்கொள்ளவே....

இப்பகலவனின் பத்தினியே
இரைச்சலிட்டு அழுகிறாயே ஏனடா????

ஓ ஓ ஓ....

உன் மனமறியா மனிதகுலம்
கரைதனை கட்டி தழுவவே
கட்டவிழ்த்து துள்ளி எழுகிறாயென
உன்னை அவதூறு பேசியதாலோ???

அடி பைத்தியமே..... நீீ....

எழுந்து எழுந்து வீழ்வதெல்லாம்
எகிறி என்னை அணைக்கத்தான்
என நானறியேனோ என்ன

மேலும்

நன்றி தோழமையே.... 13-Sep-2014 10:02 pm
அருமையான அழகான் வரிகள் நந்தினி . நல்ல படத்திற்கு நல்ல கவிதை. வாழ்த்துக்கள் 13-Sep-2014 7:46 am
மிக்க நன்றி தோழரே தங்களின் கருத்து என்னை மகிழ செய்கிறது... 01-Jun-2014 11:47 pm
நன்றி தோழரே 01-Jun-2014 11:44 pm
கிருஷ்ணநந்தினி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-May-2014 11:50 pm

முதிர்ந்து கூன் விழுந்த போதிலும்
மோகம் குறையாத ஆற்றங்கரை நாணல்....

இசைமகனின் ரீங்காரத்தில் நாணம் கண்டு
சிவந்து நிற்கும் தாமரை....

பகலவன் கரம் தீண்டி
மடிந்து கொன்டிருக்கும் நிலையிலும்
காதல் தேவதையை தீண்டி மகிழும் நீரலைகள்...

நாசிகளை முட்டி முத்தமிட்டுகொள்ளும்
ஆலமரக் குருவிகள்.....

இனைந்து பாடுகின்ற
இயற்கை மொழி காதல்............

மேலும்

நன்றி தோழரே.. 13-Sep-2014 10:00 pm
கவிதை அருமை தோழி , வாழ்த்துக்கள் 13-Sep-2014 11:47 am
நன்றி தோழரே... 24-May-2014 11:13 pm
நன்றி தோழரே... 24-May-2014 11:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே