கோ.கணபதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கோ.கணபதி
இடம்:  putthakaram(tamil nadu)
பிறந்த தேதி :  10-Apr-1943
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2011
பார்த்தவர்கள்:  238
புள்ளி:  627

என்னைப் பற்றி...

interest to write tamil poems(puthu kkavithai)

என் படைப்புகள்
கோ.கணபதி செய்திகள்
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2017 8:12 pm

எத்தனை உறவிருந்தும்
அதிர்ஷ்டமே உனக்கீடாகுமா!
உன் ஒற்றை தரிசனத்தால்—நான்
உயராமல் போவேனோ!

வளமோடு காட்சி தரும் நீ
அறிவை துணைக்கு அழைப்பதில்லை
ஆனால் அறிவுக்கு
உன் துணை தேவை

உன்னை அடைந்தவன்
பொன்னும் பொருளும் பெற்றிடுவான்
அடையாதவனோ
தன்னம்பிக்கை இழந்திடுவான்

இருட்டில் குருடனும்
கண்ணிழந்தவனும் ஒன்றாவதுபோல்
அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தால்
படித்தவனும் மூடனும் ஒன்றுபோலத்தான்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி 08-Jan-2017 9:10 am
நம்பிக்கையை இழந்தவன்... உயிரோடு இருப்பான்... வாழ்க்கையை அனுபவிக்கமாட்டான். அதிர்ஷ்டம் என்பது இயலாதவனின் சொல்! 05-Jan-2017 8:39 pm
கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 9:08 am

முகத்திலே முறுவல் ஏந்தி
முதுகிலே குத்துகின்ற
நயவஞ்சக மனிதர்போல்

காக்குமென எண்ணி
காலில் அணிந்த செருப்பு
வஞ்சகம் செய்வதுபோல்

நமக்கு தெரியாமலே
பின் பக்க சட்டையை
சேறாக்கி பாழாக்கியதை

பார்த்தறிந்த போது
உள்ளம் கறைபட்டு
ஊமை வலி உண்டானது

மேலும்

கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 9:05 am

இறைவனின் படைப்பில்
உருவான இரண்டும்
உலகின் மாந்தருக்கு
ஒன்றுபோலத் தோன்றும்,
கிடைக்கும் பலன்—இரண்டுக்கும்
சரி சமமாயிருந்தாலும்
செயல்கள் வேறுபட்டிருக்கும்

முதலாவது,
ஊரில் பேரெடுத்திருந்தும்
யாரும் பார்த்ததில்லை—இது
அறிந்தவரை எப்போதும்
அச்சுறுத்தும்
நினைவை விட்டு பாதிப்பு
நீங்காது நீண்ட நாட்கள்

இரண்டாவது,
பேரெடுக்காத போதும்
ஊரே அறிந்திருக்கும்,
நன்றாக அழத்தெரியும்—அதுவும்
நினைத்தபோது அழமுடியும்
அதனால் தானோ அதற்கு
ஆயுளும் நீண்டிருக்கும்

பிறரை பயமுறுத்தி
சாதித்துக்கொள்ளும் பேயும்
எப்போதும் அழுதே
சாதித்துக்கொள்ளும் பெண்ணும்
ஒன்றுபோலத் தோன்றும்,
இறைவனின் படைப்பில்—இது

மேலும்

கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2017 8:15 pm

கடன் பட்டு பயிரிட்டு
துளிர் விட்டு எழும் பயிரை
மழைவெள்ளம் தலை சாய்க்க
பச்சிளம் சிசுபோல
பார்த்து பார்த்து
வளர்த்த பயிர்
கண்ணெதிரே மடிவதை
கண்டு மனம் கலங்கையிலே

ஆறுதல் கூறுவது போல்
வெள்ளநீரு
காவிரியில் ஓடிவந்து
கார்த்திகையில் நீராடி
கடவுளை வழிபட்டால்
கங்கையில் குளித்த
புண்ணியமும்
செல்வமும் பெருகுமாம்.

யாருக்கு? எனக்குமா?

மேலும்

கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2017 8:12 pm

எத்தனை உறவிருந்தும்
அதிர்ஷ்டமே உனக்கீடாகுமா!
உன் ஒற்றை தரிசனத்தால்—நான்
உயராமல் போவேனோ!

வளமோடு காட்சி தரும் நீ
அறிவை துணைக்கு அழைப்பதில்லை
ஆனால் அறிவுக்கு
உன் துணை தேவை

உன்னை அடைந்தவன்
பொன்னும் பொருளும் பெற்றிடுவான்
அடையாதவனோ
தன்னம்பிக்கை இழந்திடுவான்

இருட்டில் குருடனும்
கண்ணிழந்தவனும் ஒன்றாவதுபோல்
அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தால்
படித்தவனும் மூடனும் ஒன்றுபோலத்தான்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி 08-Jan-2017 9:10 am
நம்பிக்கையை இழந்தவன்... உயிரோடு இருப்பான்... வாழ்க்கையை அனுபவிக்கமாட்டான். அதிர்ஷ்டம் என்பது இயலாதவனின் சொல்! 05-Jan-2017 8:39 pm
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 8:12 am

மறக்க இயலாத
மார்கழித் திங்களின்
மூடுபனியும், குளிரும்
ஆடவைக்கும்,
ஆண்டவன்
ஆட்டி படைப்பதுபோல்

போகி நினைவும்
பள்ளி விடுமுறையும்
சொல்லி வைத்ததுபோல்
விடிகாலை எழுப்பிவிட
தையை வரவேற்கும்
குழந்தைகள்

ஏற்றிய தீயில்
எரியும் தனலில்
கருகி, சாம்பலாகி
சம்பிரதாயமாகும்
குளிரும்,
பழையனவும்

ஊரே கொண்டாடி மகிழும்
போகிப் பண்டிகை
உழவர்களின்
வாழ்வையும், கனவையும்
சாம்பலாக்கி போனதும்
வேதனை தான்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 25-Dec-2016 9:42 am
காலத்தின் மாற்றம் வாழ்க்கையில் ரணங்களை விளைவாக கொடுக்கிறது 25-Dec-2016 9:08 am
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 8:25 am

கொட்டிய பெருமழையில்--சென்னையை
எட்டிய தூரம் வரை தேடுகிறேன்
மீண்டும் ஒரு பூம்புகாரைக்
கொண்டு செல்ல ஒத்திகையோ!

ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்—மழை
வெள்ளமா வந்தாலும், வரண்டு போனாலும்
அழிவது மக்கள் உயிரல்லவோ!

கங்கையை சுமந்த சிவனைப்போல்
மழைவெள்ளம் சுமக்கும் சென்னை
கங்கை சிவனுக்குக் கட்டுபட்டாள்
மழை ஆட்டிபடைப்பது மக்களையன்றோ!

தண்ணீர் தட்டுபாட்டால்—நாளும்
தவித்து நிற்கும் தமிழக மக்களை
கொட்டி தீர்த்த மழையால்
கொன்று குவிக்கலாமோ!

ஊரை சுற்றி நீரிருந்தால்
தீவு என்று கூறலாம்
தமிழகத்தை நீருக்குள் ஆழ்த்தினால்
தலைமுழுக எண்ணினாயோ!

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 25-Dec-2016 9:40 am
இறைவன் யுகத்தில் கொடுக்கின்ற மாற்றங்கள் ஒவ்வொன்றும் நாம் வாழ தந்த வாழ்க்கையின் நோக்கத்தை உணர்த்த தான் 25-Dec-2016 9:23 am
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 8:14 am

இன்றையத் தொழில் நுட்பம்
இமயத்தைத் தொட்டது போல்
கொடிகட்டிப் பறந்தாலும்—புயல்
காற்றின் வேகம் போல்
களவாடப்படும்
மின்னஞ்சலின் முகவரியால்
முகம் வாடி
மனம் நிம்மதி இழக்காதோ!

பரந்து கிடக்கும் பூமியில்
விரிந்து பரவி கிடக்கும்
வளைத்தளங்கள் மூலம்
வேற்று மனிதர் ஒருவர்
நமது தகவல்களைத் திரட்டி
வங்கிப் பணத்தை எடுக்க
வழி உண்டு என்றால்—கள்வனைக்
காவலுக்கு வைத்ததுபோலாகாதோ!

அண்ட சராசரத்தையே
அடக்கி ஆள்வதுபோல்
இணையத்தையும், தொலைபேசியையும்
நம்பி கனவோடு வாழும்
நாம் அறியாமல் போனது
ஆடையணியாத மனிதர்போல்
வாழ்கிறோம் என்பதையன்றோ!

திறந்த புத்தகமாகக் கிடக்கும்
தனிமனித வாழ்க்கை,
தென்னைமர தேவாங்க

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 25-Dec-2016 9:37 am
மனிதனின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் பாவிக்கும் மனிதனுக்கே தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது புரிகிறது 25-Dec-2016 9:13 am
கோ.கணபதி - Mansoor Ali அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2016 11:24 am

உன்னை சொல்லி எழுத
சொற்கள் இல்லை..

உன்னை கவிதை எழுத
வார்த்தை இல்லை..

உன்னை சிலை வடிக்க
கற்கள் இல்லை..

உன்னை கரம் பிடிக்க
தைரியம் இல்லை...

உன்னை உண்மையாய்
நேசிக்கிறேன்...

அதை சொல்லவும்
தெரியவில்லை
..
ஓ... இது தான் காதலா???
சொல்லிவிட்டேன் இப்போது..

காதலிக்கிறேன் உன்னை நான்
காதல் செய் என்னை நீ....

மேலும்

நன்று, வாழ்த்துக்கள் 02-Nov-2016 7:32 am
தவிப்புக்கள் நிறைந்தது காதல்.. 01-Nov-2016 7:04 am
நன்றி 31-Oct-2016 3:37 pm
அழகு வரி வாழ்த்துக்கள் 31-Oct-2016 3:35 pm
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2016 11:33 am

மங்கள நாளையெண்ணி
மலர்ந்தும் மலராத பூப்போல
சமஞ்சு நிக்கும் பருவபெண்ணாய்
விளஞ்சு நிக்கும் நெற்பயிர்

தைப்பொங்கல் நந்நாளில்
தைத்தையென குதித்து
பொங்கி மகிழ
பொறுத்திருந்த வேளையிலே

கள்ளிப்பால் கொடுத்து
கதை முடித்த பெண் சிசுபோல்
கருமாரி ஆத்தா
கொட்டி தீர்த்த மழை நீரால்

விளஞ்சு நின்ன நெல்லுமணி
விதி முடிஞ்சு போனதுபோல்
தல சாஞ்சு வீழ்ந்து
தரை தொட்ட நிலைகண்டு

கருவிழி உருமாறி
கருமாரியாய் மாறிவிட
கதறி புலம்புறேனே
கையிலே ஏதுமின்றி.

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 06-Jun-2016 8:53 pm
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 06-Jun-2016 8:52 pm
வாழ்க்கையில் ஏற்படும் காயங்கள் என்றும் விதியின் மடியில் தான் மருந்தினை தேடுகிறது 06-Jun-2016 5:20 pm
அருமை. விளைஞ்சது வீணாய் போனால் தாங்காது விதைச்ச நெஞ்சு. வாழ்த்துக்கள் .... 06-Jun-2016 3:42 pm
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2016 12:59 pm

விளை நிலத்தில்
விழுகின்ற வியர்வைத்துளிகள்
விளக்கேற்றி வைக்காமல்
வேதனை பட வைத்ததும்

வெள்ளத்தில் அழிந்த பயிரால்
உள்ளத்தில் விளைந்த சோகத்தை
இறக்கிவைத்து ஆறுதல் கூறாமல்
விழிகள் கண்ணீர் வடித்ததும்

மேகம் பொழிந்த மழையால்
மண்ணு செழித்தாலும்
மனித வியர்வையும் காரணமென்பதை
மக்கள் நினைக்க மறந்ததும்

பார்த்து வியக்கும் படைப்பெல்லாம்
பூமியில் வாழும் மனிதர்கள்
சிந்திய வியர்வைத்துளிகளால்
சாதித்ததென எண்ணாததும்

பூவாசமும், உணவின் சுவையும்
புரிந்துகொள்கிற நமக்கு
உழைப்பவரின் வியர்வைதரும் வலியை
உணராதது பெரும்பாவம்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 26-Mar-2016 11:17 am
மண்ணு - மண் 25-Mar-2016 3:30 pm
கோ.கணபதி - கவியரசன் புது விதி செய்வோம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2016 9:09 pm

சிறகுகளில்
சிலுவை அறைந்த
பறவை இது

ரசாயன வாடையில் தன்
ரசமிழந்த
காற்று இது

உதிக்கும் சூரியனோடு
சிரிக்கும் மலர்களோடு
இனிக்கும் நிலவோடு
இருக்க நேரமில்லை

அலாரங்களோடு
அலுத்துப் போன
வாழ்வு இது

அன்று
விடியலை எண்ணி
கண் அயர்ந்தேன்
இன்று
விடியாதே என
தவம் கிடக்கிறேன்

ரசனை அழிந்து போனது
ரசிக்க மறந்து
போனது
கவிதை கூட
தொலைவாய் ஓடி
போனது

மனதினுள் குமுறும்
எரிமலையில்
மெல்ல சாகிறது
எனது சுயம்
இனி இதுதான்
நிரந்தரமா
ஏனோ பெரும் பயம்

கடந்து போன
பேருந்தில்
இதுவும் கடந்து போகும்
என வசனம்

மேலும்

எனக்கு சுட தெரியாது தோழரே 14-Apr-2016 6:53 pm
பல இடங்கள்ள சுட்ட மாதிரி இருக்கே..! சபாஷ், சரியான கலவை! 11-Apr-2016 5:55 pm
நன்றி நட்பே 01-Mar-2016 9:31 am
அருமை..! 29-Feb-2016 5:00 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
latif

latif

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
vidhya

vidhya

தமிழ்நாடு
சர்நா

சர்நா

கோவை
மேலே