ப.மதியழகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ப.மதியழகன்
இடம்:  மன்னார்குடி
பிறந்த தேதி :  28-Mar-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2011
பார்த்தவர்கள்:  315
புள்ளி:  62

என்னைப் பற்றி...

கவிதையை நேசிப்பவன் சுவாசிப்பவன் கவிதை மழையில் நனைய வருகை தாருங்கள் pamathiyalagan.blogspot.com

என் படைப்புகள்
ப.மதியழகன் செய்திகள்
ப.மதியழகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2022 9:26 pm

நெற்றிப்பொட்டும்
வகிடெடுத்த உச்சிக் குங்குமமும்
கருங்கூந்தலில் மணக்கும்
மல்லிகைச் சரமும்
அடிமீது அடிவைக்கும்போது
ஊஞ்சலென
அசைந்தாடும் கம்மலும்
அழகுக்கு அழகு சேர்க்கும்
வைரக்கல் மூக்குத்தியும்
மண் அளந்த
மென்பஞ்சுப் பாதங்களும்
சமர் புரியும்
இருகண்விழிகளும்
மலர் முகத்தில்
முத்துப் பல்வரிசையும்
நிலவொளியில் மின்னும்
இரு செவ்விதழ்களும்
என்ன தான் ஜரிகை வைத்த
பட்டுப் புடவை
உடுத்திக் கொண்டாலும்
களையிழந்த முகம்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
வயோதிகத்தை
ஒவ்வொரு நடராஜனையும்
உள்ளிருந்து ஆட்டுவிப்பவள்
அந்த சிவகாமி அல்லவா?

மேலும்

ப.மதியழகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 5:39 pm

வாய்ப்பு ஒரு முறை தான்
உன்னை பரீட்சித்து பார்க்கலாம்
வற்புறுத்தி பணிய வைக்கலாம்
நிர்பந்தப்படுத்தி ஏற்கச் செய்யலாம்
நீ அதிகாரத்திற்கு பணியாமல்
எதிர்க்கலாம்
உனது சுதந்திரத்தை
விலை கொடுத்து வாங்கலாம்
உனக்கு வழங்கப்பட்ட விருதை
தட்டிப் பறிக்கலாம்
உனக்கு சாதகமாக வழங்கப்பட்ட
தீர்ப்பை ரத்து செய்யலாம்
அக்கம்பக்கத்தினர் உன்னைத்
தெரியாதது போல் நடிக்கலாம்
எங்கிருந்து அம்பு பாய்கிறது
எனத் தெரியாமல் தவிக்கலாம்
எனக்கு இதில் சம்பந்தமில்லை என
நீதிபதியிடம் கெஞ்சலாம்
காவலர்கள் கவனிப்பால்
உடம்பு முழுவதும்
லத்தியின் தடம் பதியலாம்
பரோலில் வந்து
தப்பியோட முயலலாம்
இதற்கு மேலும்
சாத்தியப்பட

மேலும்

மிக சிறப்பு தோழர்... கவிதை நடையும் கவர்ந்தது... சொல்ல வந்த செய்தியை சொல்லிய விதமும் அசத்துகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 12:31 am
ப.மதியழகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 5:33 pm

என் மகள் பூமியை
புதிதாய்ப் பார்க்கிறாள்
அவள் காணும் பூமியில்
மனிதர்களைத் தவிர
அனைத்தும் பேசுகின்றன
அவள் ஒவ்வொரு காலடி
எடுத்து வைக்கும் போதும்
மோதும் தென்றலை
இதமாய் அனுபவிக்கிறாள்
கண்களை வசீகரிக்கும் எதையும்
அவள் கேட்பதில்லை
அவள் கேட்பதெல்லாம் வானத்து
நட்சத்திரங்களைத்தான்
நிலவைச் சுட்டிக் காட்டி
அவள் ஏதோ
பேச முயற்சித்தாள்
பசிக்கிறது போலிருக்கு என்று
அன்னை எடுத்துவிட்டாள்
அவள் எழுந்து நடக்கத்
தொடங்கிய போது
பொம்மைகளைத் தேடிப்
போனாள்
அவள் இருப்பை
தொந்தரவாகக் கருதிய நாங்கள்
அவளை ப்ளே ஸ்கூலில்
சேர்த்துவிட்டோம்
அன்று நான் பார்த்துவிட்டேன்
பழுதடைந்த செல்ஃபோனில்

மேலும்

மிக அருமை தோழரே... எடுத்து கொண்ட பாடு பொருளே அசாத்தியம்... அதை கையாண்ட விதம் இன்னும் அருமை... அதில் வரும் பிற மொழி சொற்களை திருத்தி விட்டால் இந்த கவிதை இன்னும் உயர்ந்து நிற்கும்... மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 12:24 am
அருமை அருமை...! 15-Nov-2015 6:44 pm
கருத்துகள்

மேலே