முல்லை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முல்லை
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  17-Mar-1949
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2014
பார்த்தவர்கள்:  310
புள்ளி:  43

என்னைப் பற்றி...

நட்பை மதிப்பவன். கருத்துகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்பவன். கதை, கவிதை படைப்பதில் ஆர்வம் உள்ளவன்.

என் படைப்புகள்
முல்லை செய்திகள்
gayathridevi அளித்த படைப்பில் (public) Nicky மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2013 11:48 pm

“கொலைப்பாதகர் கூட்டமது
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 9:14 pm
அருமை 05-Mar-2014 7:16 am
சிறப்பு 05-Mar-2014 7:11 am
ஆகா. . தமிழ் நர்த்தனம் புரிகின்ற படைப்பு. தாமிரபரணி நீரருந்திய மகிமை நும் எழுத்தில் தெரிகிறது - மணியன் 17-Feb-2014 10:51 am
Thenmozhi அளித்த படைப்பில் (public) tmohan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2014 2:47 pm

என் பிள்ளை!
என் பிழைகளை
கண் முன் காட்டும்
கண்ணாடி!

மேலும்

உண்மை தான் 17-Mar-2015 8:47 am
உண்மைதான் தோழமையே 08-Mar-2014 7:02 am
நன்று 05-Mar-2014 7:06 am
அருமையாக சொன்னீர், ஆனாலும் பிழைகள் மட்டுமே காட்டுமா என்ன? முடிந்தால் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ளுங்களேன் Plz 04-Mar-2014 10:59 am
முல்லை - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2014 7:01 am

முன்னை மொழிக்கெல்லாம்
மூத்தவளே;
என்நெஞ்சில்
என்றென்றும் நிற்கும்
இனியவளே ! –
மண்ணுலகில்
மூவேந்தர் வாழ்த்த
முகிழ்த்தவளே; உன்னையென்
நாவேந்த வாராய்
நயந்து !

மேலும்

நற்றமிழ்....நாவிலே 10-Mar-2014 7:57 am
நந்தமிழ்க்கு நல்ல அழைப்பு. உங்கள் மொழிப் பற்றுக்குத் தலை வணங்குகிறேன் 08-Mar-2014 7:09 am
என்னுடைய " கனவிலோர் கவியரங்கம் " எனும் கவிதையையும் படித்துப் பாருங்கள் தோழரே ! உங்கள் கவிதை மிக்க அருமை வாழ்க தமிழ் ! 05-Mar-2014 7:55 pm
அன்னைத் தமிழின் ஆசி என்றும் தங்களிடம் தங்கி , நாவினில் அமர்ந்து ஆட்சி செய்திடவும் , நாடி நரம்பினில் எல்லாம் தஞ்சம் அடைந்து , உங்கள் மூலம் எங்களுக்கு , என்றும் கற்கண்டு சுவைபோல் , கவிதைகள் அளித்திட வேண்டுகிறேன் , வாழ்த்துகள் 05-Mar-2014 6:34 pm
முல்லை - முல்லை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2014 7:26 pm

வானத்தின் மேலே மேலே
பறந்தேன்
ஒரே இருள் !

பாதாளத்தின் கீழே கிழே
விழுந்தேன்
ஒரே இருள் !

பூமியில் மட்டும்தான்
வெளிச்சம் !

வாழ்க்கைக்கு !

மேலும்

என்றும் அந்த வெளிச்சம் பூமியில் உங்களுக்கு நிலைக்கட்டும் . 17-Mar-2014 8:18 am
நல்ல கருத்து ஐயா! 05-Mar-2014 3:57 pm
மனதை ஒளியாக்கு வாழ்க்கை தெளிவாகும் ! இருளும் ஒளிரும் வாழ்க்கை இரகசியம் ! 05-Mar-2014 11:29 am
divya periyasamy அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2014 12:04 am

என்று உதிர்வோம் என்று கூட தெரியாத அந்த பசுமையான இழைகள் எப்பொழுதும் காற்றோடு கலந்து உறவாடுகின்றன....

அவை என்று உதிர்வோமென்றும் நினைப்பதில்லை,
அவை நிகழ் கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன..!!!

நாம் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு....!!!

மேலும்

நன்று 05-Mar-2014 6:53 am
இயற்க்கை ஆசிரியையே வரிகள் அழகு !! 28-Feb-2014 8:03 am
ஆம் .. சரிதான் 28-Feb-2014 12:22 am
முல்லை - msinraj46 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2014 11:31 am

காலம் காலமாய் நம் மண்ணில்
விளைந்த பொன்னை பகிர்ந்தோம்
மகிழ்வித்தோம்!!

இன்று தனி மனிதனுக்கும் இல்லை என்ற நிலை நாளை நிலை என்னவோ ???
எத்தனையோ வியர்வை துளிகளை
நீராய் ஏற்று கொண்டது இந்த மண் ,,

இன்றோ!!!!
வியர்வை துளிக்கே பஞ்சம் ?????
எங்கிருந்து பொழியும் மழை!!!!!

சிந்திப்போம்..... செயல்படுவோம்.......

மேலும்

நன்று... 05-Mar-2014 9:23 am
சிறப்பு 05-Mar-2014 6:50 am
முல்லை - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 7:40 pm

விதை விதைக்காமல்
மரம் வளரும்
என்ற கனவில்
வாழும் மனிதர்களே !

வினை இல்லாமல்
வெற்றி வரும்
என்ற நம்பிக்கையில்
திளைக்கும் மனிதர்களே !

முயற்சி செய்பவர்களுக்குத்தான்
முக்தி என்ற இறைவாக்கை
ஏன் மறந்தீர்கள் ?

மேலும்

நல்லக்கருத்து ஐயா! சோம்பேறிகளையும் தட்டி எழுப்பும் உணர்ச்சி வரிகள். அருமை! 05-Mar-2014 3:56 pm
நன்றி நண்பரே 05-Mar-2014 6:44 am
நன்றி நண்பரே 05-Mar-2014 6:43 am
தங்களின் கவித்துவ வரிகளும் சூப்பர் 05-Mar-2014 6:43 am
முல்லை - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 7:26 pm

வானத்தின் மேலே மேலே
பறந்தேன்
ஒரே இருள் !

பாதாளத்தின் கீழே கிழே
விழுந்தேன்
ஒரே இருள் !

பூமியில் மட்டும்தான்
வெளிச்சம் !

வாழ்க்கைக்கு !

மேலும்

என்றும் அந்த வெளிச்சம் பூமியில் உங்களுக்கு நிலைக்கட்டும் . 17-Mar-2014 8:18 am
நல்ல கருத்து ஐயா! 05-Mar-2014 3:57 pm
மனதை ஒளியாக்கு வாழ்க்கை தெளிவாகும் ! இருளும் ஒளிரும் வாழ்க்கை இரகசியம் ! 05-Mar-2014 11:29 am
முல்லை - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2014 11:31 pm

வலுவான தலைமைக்கும் வருங்கால நலனுக்கும்
நிலைசேர்க்க உங்களது வாக்கா ?
பழுதான கொள்கைக்கும் பண்பற்ற செயலுக்கும்
விழுவதுதான் உங்களது போக்கா?

பாருக்கும் பீருக்கும் பணம்நீட்டு வோருக்கும்
தருவதுதான் உங்களது வாக்கா ?
பேருக்கும் புகழுக்கும் பின்னர்வரும் விருதுக்கும்
தருமத்தை மறப்பது;உம் போக்கா?

உழைக்காமல் பதவியிலே உட்கார நினைப்போர்க்கு
விலையாகும் உங்களது வாக்கா ?
அழைக்காமல் சேவைதன்னை அளிப்போரை மதிக்காமல்
பிழைப்பதுதான் உங்களது போக்கா ?

மேலும்

நல்ல கவிதை 04-Mar-2014 7:09 pm
நன்றி நண்பரே ! ஆதங்கப்படுதலும் ஆச்சரியப்படுதலும் உண்மையைத் தேடி அலைவதிலும் தானே இந்த உலகமே சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. 04-Mar-2014 7:09 pm
கருத்துக்கு நன்றி நண்பரே ! 04-Mar-2014 7:06 pm
நன்றி நண்பரே ! 04-Mar-2014 7:06 pm
முல்லை - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2014 4:22 am

உடலிலுள்ள
ஒவ்வொரு செல்லும்
அவளிடம் காதலை
சொல்ல செல்
என்கிறது.

உன்னை
காதலிக்கிறேன்
உன்னையே
காதலிக்கிறேன்
உனக்குள்ளே
என்னை காதலிக்கிறேன்.

எதை சொல்ல
நான் செல்ல..?
இதை சொல்லி
அவள் மறுக்க
வதைத்துவிடுமோ
என் இதயம்...?

சொல்லாத காதல்
செல்லாது போகும்.
சொல்லும் காதல்
வெளுத்திடுமோ மானம்...?
சொல்லாத காதல்
எவ்வாறு வெல்லும்..?

இருதய சத்தத்தில்
வெடிக்கும் காதலை
இரத்த மையெடுத்து
நரம்பு முனையில்
கொட்டி விடவா ?

அடியே..!
உச்ச மலையில்
மிச்ச உயிரோடு
காத்திருக்கிறேன்.
காதலுடன்....

வருவாயா ?
உனக்காக ...
உனக்காக ..
உச்ச மலையிலிருந்து
இன்னும் சற்று ந

மேலும்

அருமை 02-Mar-2014 11:36 pm
ஆம் தோழா.. ! வருகையிலும் கருத்திலும் மகிழ்ச்சி ; நன்றி 23-Jan-2014 10:12 pm
காதல் கண்களில் மட்டும் மல்ல... காதல் இந்த வரிகளில் கூட.. 23-Jan-2014 10:06 pm
நன்றி திவ்யா !! 23-Jan-2014 8:30 pm
முல்லை - கட்டாரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2014 9:51 pm

நெல்லுச்சோறு
வடிச்சிகிட்டு
நெலவத் தேடிப்போகயிலே
நீ இருக்க...!
நெலவிருக்கு....!!
நீட்டி மடக்கி இருந்து எழும்ப
மணலக் காணோம்
ஆத்துக்குள்ள....!!!
***************************************************

கொளம்பு உரிச்சித்
தலையக்கோதி .. நீ
நடைபழக்கி அதட்டயில...
ரெட்டைத்தாயிச் செருக்கோட
துள்ளியோடுது.......
புதுசாப் பொறந்த
ஆட்டுக்குட்டி....!!!
*****************************************************

அந்த வருச அறுவடைக்கி
அறுத்துப்போட மொத ஆளா
மாம்பழச் சேலையுடுத்தி
மங்களமா நீ எறங்க...!!
மகராசி நல்லாயிருன்னு
உதுந்து வாழ்த்துது
பழுத்த நெல்லு...!!!

மேலும்

வாழ்வியல்.... 10-Mar-2014 6:30 am
அனைத்துப் பத்திகளும், மிக அருமையாக இருக்கிறது தோழரே..! அதுவும் "ரெட்டைதாய் செருக்கோட" சொல்பிரயோகம் மிக நன்று..! 09-Mar-2014 8:30 pm
எனக்கு சில நேரங்கள் ல " பணம் இல்லாதவன் லாம் முட்டாள் கிடையாது " என்று தங்கமீன்கள் படத்துல இயக்குனர் திரு. ராம் சொல்வதுதான் நிலைவில் வரும் ஜி இதுபோன்ற அநீதிகளைப் பார்த்து.. வரவில் மகிழ்வு....!!! 04-Mar-2014 7:47 pm
சரவணா..... மனசுக்குள்ள ஏதோ ஒரு ஓரத்தை கீறி விடுகிறது உங்கள் எழுத்து.......என்ன சொல்ல....ஒரு அழுத்தத்தை நோக்கி மனத்தை தள்ளி விடும் கனம்..... உங்கள் வரிகள்.... அதுவும் அந்த ஆது மணல் காணாம போனதை படிக்கையில் துகள்களாக காணாமல் போனதை உணர்ந்தேன்.... 04-Mar-2014 12:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (84)

ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
msinraj46

msinraj46

தூத்துக்குடி
user photo

Vijayakumar K

ஈரோடு
Yaazhini Kuzhalini

Yaazhini Kuzhalini

சான் பிரான்சிஸ்கோ

இவர் பின்தொடர்பவர்கள் (84)

Muras

Muras

வடவன்பட்டி, தமிழ்நாடு,
ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (84)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே