A.SHYLA HELIN Profile - ஆஷைலா ஹெலின் சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஆஷைலா ஹெலின்
இடம்:  திருவனந்தபுரம் , கேரளா
பிறந்த தேதி :  30-Jun-1968
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Mar-2013
பார்த்தவர்கள்:  348
புள்ளி:  84

என்னைப் பற்றி...

எழுத்தாளர்

என் படைப்புகள்
A.SHYLA HELIN செய்திகள்
A.SHYLA HELIN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2017 7:45 am

பொங்கல் திருநாள்
தமிழர்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களுள் ‘தமிழர் திருநாள்’ என்று பெருமையுடன் கொண்டாடப்படுகின்ற விழா பொங்கல்.
பொங்கல் ஒவ்வோரு ஆண்டிலும் நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திரனைக் குறிக்கும் ‘போகி’ என்பது பொங்கலின் முன்னோடியாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்நாளில் பழையனவற்றைக் களைந்து வீடடைச் சுத்தம் செய்து சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்கப்பட்டு இல்லங்கள் எழிலுடன் காட்சியளிக்கும். பொங்கல் நாளின் முந்தைய நாளான இப்போகிப்பண்டிகை அன்றோ, அதற்கு முன்போ அரிசி, கரும்பு, சர்க்கரை வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கொத்து புதிய பானை போன்வற்றை திருமணமான பெண்களுக்குத

மேலும்

A.SHYLA HELIN - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 10:21 am

மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “கண்ணதாசனின் சிலப்பதிகார கவிதை”
.

மனிதனின் மனதில் உருவாகின்ற நிகழ்வினை உளவியல் அடிப்படையில் சங்க காலத்திலேயே தொல்காப்பியர் அறிந்து வைத்திருக்கிறார். ஆகையால் தான் மனதில் உருவாகின்ற அனைத்தையும் உடல் வழியாக வெளிப்படுத்துகின்ற மெய்ப்பாடுகளாகக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகையான மெய்ப்பாடும் கவிதையின் ஆணிவேராக இருக்கிறது. அவ்வாறாக உருவாகின்ற மெய்ப்பாடுகள் உணர்ச்சிகளாக வெளிப்படுகிறது. மெய்ப்பாடுகள் கவிதைக்கு பெருமளவு முக்கியத்துவம் உரியதாய் அமைகிறது. தொல்காப்பியர் இதனை குறிப்பிடும் போது,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

மேலும்

A.SHYLA HELIN - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 10:13 am

சிலம்பில் இசை

சேர இளவல் இளங்கோவடிகளின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தமிழிலக்கியமான சிலப்பதிகாரத்தில் பல்துறையின் பொருளடக்கம் காணப்படுகின்றன. அவற்றுள் இசைபற்றிய குறிப்புகள் பரந்து காணப்பட்டு இசைக்குரியக் களஞ்சியமாக திகழ்கிறது. உ.வே. சாமிநாதையர் பெரிதும் முயன்று பெற்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார மூலப் பிரதியையும், அரும்பதவுரையையும், அடியார்க்கு நல்லார் உரையையும் இணைத்து ‘இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும்’ என்றும் நூலை 1892-இல் வெளியிட்டார். அவர் வெளியிட்ட காலத்தில் சிலம்பு இசைக் குறிப்புகளைப் பற்றித் தமிழகம் அறியாதிருந்தது. பின்னர

மேலும்

A.SHYLA HELIN - A.SHYLA HELIN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2016 12:08 pm

இணைகோடுகள்

சிக்னல் பச்சையானதும்
முதலெனில் இராஜ கம்பீர போக்கு.....

முந்தி முந்திட போராட்டம்
தோன்றும் போதே தயவு தாட்சண்யம்....

பாய்ந்து பறக்குது பள்ளம் மேடெல்லாம்
ஆம்புலன்சுக்கு முன்கடன்.......

அதிர்ச்சி முதிர்ச்சியானாலும்
தனக்கென்றொரு சீரோட்டம்......

வாழ்க்கைப் பயணமும்
இதனின் இணைகோடே.....

மேலும்

மிக்க நன்றி. 12-Mar-2016 11:32 pm
முயற்சி நன்று! 11-Mar-2016 7:52 pm
A.SHYLA HELIN - krishnamoorthys அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2016 8:43 pm

’இசையாய்’ என்ற அழகிய பெயரில் மிக அழகிய சிறு பெஞ்சில் சாய்ந்து நிற்கும் வயழின் கோட்டு ஓவிய அட்டைப்படம் - அற்புதமான கற்பனை சாதரண பார்வையிலேயே ஈர்க்கிறது..பேராசிரியர் .சந்திரிகா ராஜாராம் தான் ரசித்து உணர்ந்த இசைச் சாகரங்களுக்கு இசையஞ்சலிச் செலுத்துவிதமாக படைத்த இக் கட்டுரைகள் இவை. இசையறிவுப் படைத்தவர்களுக்காக மட்டுமல்ல இந்த பதிவுகள் .எங்காவது நீங்கள் காதில் கேட்கும் சிறு இசைக் கசிவினால், உங்கள் மனம் கரைந்து போயிருந்தால் இந்த வாசிப்பின் மூலம் அதை நமக்கு தந்த ரிசி மூலங்களான இசைச் சாகர மேதைகளுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாக நிச்சயமாக ஒவொருவரும் வாசிக்க வேண்டிய சுகானுபவம் இந்தக் கட்டுரைக் கதம்ப

மேலும்

இசையாய்’ தமிழ் நூல்- பேராசிரியர் .சந்திரிகா ராஜாராம் என்ற புத்தகத்தை எங்கே வாங்க கிடைக்கும். மேலும் விவரம் தருமாறு கேடகிறேன். - ஷைலா 11-Mar-2016 12:17 pm
A.SHYLA HELIN - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2016 12:08 pm

இணைகோடுகள்

சிக்னல் பச்சையானதும்
முதலெனில் இராஜ கம்பீர போக்கு.....

முந்தி முந்திட போராட்டம்
தோன்றும் போதே தயவு தாட்சண்யம்....

பாய்ந்து பறக்குது பள்ளம் மேடெல்லாம்
ஆம்புலன்சுக்கு முன்கடன்.......

அதிர்ச்சி முதிர்ச்சியானாலும்
தனக்கென்றொரு சீரோட்டம்......

வாழ்க்கைப் பயணமும்
இதனின் இணைகோடே.....

மேலும்

மிக்க நன்றி. 12-Mar-2016 11:32 pm
முயற்சி நன்று! 11-Mar-2016 7:52 pm
A.SHYLA HELIN அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 3:53 pm

மௌனமொழி

மனதில் யோசிப்பது
தெரிந்த மொழியிலே…

புலம் பெயர்ந்தால்
பேசும் மொழியில் திணறல்….

அறியாது தன் மொழியானால்
தாழ்வாக தள்ளப்படுதலே….

தங்கத்தில் பதித்த வைரமாயிட
சிலகாலம் மௌனமொழியே……

மேலும்

மிக்க நன்றி நண்பி. 27-Feb-2016 7:29 pm
அருமை..தோழமையே...! 27-Feb-2016 6:56 pm
கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன். நன்றி. 27-Feb-2016 4:00 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2016 12:29 am
A.SHYLA HELIN - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2016 1:56 pm

🍁💐🍁💐🍁💐🍁வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:🍁💐🍁💐🍁💐🍁பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்


1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்1
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்

மேலும்

மிக அருமை. பயன்பாட்டிற்குரிய வார்த்தைகள். 21-Jan-2016 2:32 pm
நன்று, சில வார்த்தைகளை உபயோகபடுத்திக்கொண்டிருக்கிறேன், மேலும் பல வார்த்தைகள் கிடைத்தமைக்கு நன்றி. 21-Jan-2016 2:05 pm
A.SHYLA HELIN - சரவணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2015 6:40 am

அன்றைய நாட்களில்
கட்டிக்கப் போறவளாய்
அறிமுகப்படுத்தப்பட அவளுக்கும்
இவளையா... எனச்
சுழித்து நகர்ந்த எனக்கும்
கட்டிக்கப் போறதின் அர்த்தமென்பது
தெரிந்திருக்கவில்லை.....!

திருக்கொடை மதியப்பந்திகளில்
தண்ணீர் வைத்துப் போக..
கைவளையல்கள் ரசித்திருந்ததைப்
போலவே...
நிலைக்கட்டுப் பின்ஒளிந்து
என் பக்கவாட்டையும்
அவள் ரசித்திருந்திருக்கலாம்....!!

ஈரம் சொட்டிய
பூப்பாவாடைகளோடு
குளக்கரை ஒற்றையடிப் பாதைகளில்
எதிர்க்கடந்து போன
நாளொன்றிற்குப் பிறகு...

இவ்வருடக் கொடையின்போதும்
சுகம் விசாரித்து... அக்காவைக்
கேட்டதாகச் சொல்லியபடி
குரலுடைந்த அவளின்....
வெட்கத்திற்கு.......
காதோரம் கொஞ்ச

மேலும்

அருமை நண்பரே 27-Oct-2015 6:25 am
ஒன்றும் பேச முடியாது நண்பா...... ஹஹ்ஹஹ்ஹ.... இனிய வாசிப்பிற்கும் கனிவான கருத்துக்கும் நன்றி...!! 18-Sep-2015 6:22 am
தங்களை மிஞ்ச ஆள் இல்லை என்று கூறும் படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Sep-2015 12:11 am
நினைவுகள் சுகமானவை...அருமை 17-Sep-2015 2:52 pm
agan அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Apr-2015 10:17 pm

காகங்கள் கூட்டமாய் .

தனிமை வெறுப்பவை அவை
உண்ணும் போதும்
உட்காரும்போதும்

கொத்திவரும் அவற்றின் அலகுகளில்
வடைகள் மட்டுமல்ல
சிலரின் வாழ்க்கையுந்தான்

உள்ளிறக்கும் உணவு துகள்களில்
உழைப்பும் உண்மையும் இல்லையெனில்
உமிழும் அவை எச்சங்கள் என .

மந்திரிமார்கள் மாளிகைகள்
அரசு அலுவலகங்கள்
காவல்துறைமார்கள் கட்டிடங்கள் ....

பல ஆசிரமங்கள்

"ஏவிளா ..., அழுத்தத்தி தொடச்சுப் போடுலே
எச்சம் மணக்குதல்லா .. "
புதுப்புது திரவியங்களாலும் எச்சம் அப்படியே ..

"ஏலே ....நம்ம கடைமடையிலும்
ரோதைகளிலும்
ஏம்லா எச்சமே இல்லே "

ஆனாலும் இப்போதெல்லாம்
கண்ணாடிகளை அலகுகளினால்
கொத்த

மேலும்

"இப்போதெல்லாம் கண்ணாடிகளை அலகுகளினால் கொத்துவதை எல்லோரும் விரட்டுகின்றனர் ....நகரங்களில் ... அமாவாசைக்கு இப்போதெல்லாம் மாடி அடுக்கங்களுக்கு காகங்கள் கூடுவதில்லையாம் ..!!!! " காரணம்..மனிதர்களே கூடுகளில் வசிப்பதால் இருக்குமோ..? கூடினாலும் உணவுக்காய் கரைந்து பாடினாலும் ஓடிவா என்றழைக்க யாருமில்லை..! காகங்களின் மாநாட்டில் குளிர்சாதனப் பெட்டிகளை ஒழித்துவிடப் போட்ட தீர்மானம் இன்னும் ...இன்னும் என்ன..? இனிமேலே அமலுக்கு வாராதாம்..! 21-Apr-2015 10:05 pm
வாழ்க்கைக்கு தேவையான உண்மையை உரைக்கிறது அற்புதமான சிந்தனை ஆழமான வரிகளில்......, 20-Apr-2015 11:41 pm
A.SHYLA HELIN - A.SHYLA HELIN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2015 1:32 pm

சிலம்பின் கானல்வரியில் இசைக்குறிப்புகள் -ஆ. ஷைலா ஹெலின்

கானல்வரி என்பது சிலப்பதிகாரத்தில் ஏழாம் காதையாகும். கானல் வரி என்பது கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப்பாடல்களாகும். இது கலையிழையாகப் பெயர்பெற்றது. இக்கானல் வரியில், கோவலனும், மாதவியும் மாறிமாறிப் பாடிய காதற்சுவை மிக்க வரிப்பாடல்களின் பொருளை இருவரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஐயம் கொண்ட கோவலன் பிரிந்து விடுகிறான். கதை சுருக்கமாக இருப்பினும் இசைக்குறிப்புகள் பெருக்கமானவை. இசை இலக்கண வரலாற்றை காட்டுவன. இக்காதையில் யாழின் மாட்சி, யாழின் உறுப்புகள், இசை ஏழால் எண்வகை, இசைக்காரணம்

மேலும்

A.SHYLA HELIN - A.SHYLA HELIN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2015 11:06 pm

திருக்குறளில் இசைக்குறிப்புகள் - ஆ. ஷைலா ஹெலின்
திருக்குறள் அனைத்து காலத்திற்கும், அனைத்து சமயத்திற்கும், அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும் உண்மைகளைக் கூறுகின்றது. இத்தனை சிறப்புமிக்க திருக்குறள் உலகமொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாகத் திகழ்கின்றது. அற இலக்கியங்களில் சிறந்த ஒன்றான இத்திருக்குறளில் இசைக் குறிப்புகளை காண்போம்.

இசைப்பாடலாகிய பரிபாடலில் வெண்பாக்கள் இடம்பெறுவதால், திருக்குறளும் இசைப்பாடல் அமைப்பினைப் பெற்றுள்ளது எனலாம். கவி.தஞ்சை.இராமையாதாஸ், திருக்குறள் பாடல்களுக்குச் சுரதாளக் குறிப்புகள் அமைத்து, இயற்றியுள்ள ~திருக்குறள் இசைய

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (85)

JAHAN RT

JAHAN RT

மதுரை
gnanapragasam

gnanapragasam

சேலம்.
prasanth 7

prasanth 7

வந்தவாசி [தமிழ்நாடு ]
sirojan Piruntha

sirojan Piruntha

மட்டக்களப்பு, இலங்கை
gangaimani

gangaimani

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (86)

revathy

revathy

வேலூர்
s.r.jeynathen

s.r.jeynathen

மதுரை
Saleem Khan

Saleem Khan

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (86)

thirukumaran2013

thirukumaran2013

paramakudi
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
user photo

மேலே