ALAAli Profile - அஷ்றப் அலி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  அஷ்றப் அலி
இடம்:  சம்மாந்துறை , இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2015
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  37

என்னைப் பற்றி...

சிறு வயது முதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். இடையில் சிறிது தேக்கம். மீண்டும் முனைப்போடு எழுதுகின்றேன் இலங்கையில் பிறந்தவன் தற்போது கட்டார் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணி புரிகின்றேன்.

என் படைப்புகள்
ALAAli செய்திகள்
ALAAli - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 10:45 am

பற்கள் இல்லா பாலகன் அழுதேன்
உச்சி முகர்ந்து தாய்ப்பால் தந்தாய்
அன்று போல்தான் இன்றும் உனக்கு
மனதில் மாறா மகனின் பாசம்

மழையில் நனைந்தால் கனைக்கும் தந்தை
சேலைத் தலைப்பால் என்தலை துவட்டி
மழையை வைவாய் என்முக வாட்டம்
கண்டால் எழுவாய் அமுது படைப்பாய்

தன்பசி மறந்து என்பசி தீர்ப்பாய்
மற்றோர் மீது கொண்ட என்கோபம்
உன்னில் தீர்ப்பேன் நெஞ்சு நோவாய்
அழைக்கும் குரலுக்கு அன்பு பொங்க

யாவும் மறந்து என்முகம் நோக்கி
மகனே என்பாயே மனது குளிருமம்மா
அன்பை மட்டுமே அளிக்கும் தெய்வமே
என்பிழை பொறுப்பாய் உன்தாள் பணிந்தேன்


ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

ALAAli - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 8:48 am

மந்தாரம்

மழைத்தழுவலை நினைத்த
நிலமகள் நாணம்
மந்தாரம்

மேலும்

ALAAli - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2017 4:37 pm

நீ நகர்ந்தால்
எமக்கு ஜீவாதாரம்
நீ படர்ந்தால்
அது மூலாதாரம்
உன் சேவை
வாழையடி வாழை
நீ இல்லை என்றால்
நாம் வெறும் பேழை

எமக்கு நிதமும்
நீ ஆசி தருகிறாய்
எம் நாசி வழியில்
நீ தொடரும் பயணங்களால்...

கட்டணம் அறவிடாத கரசேவகன் நீ
உன் கண முடக்கம்
அதில் எம் ஜீவிதமே அடக்கம்

உன் மனம்
கடல் போன்றது
அதனால்தானோ நீ
எங்கும் வியாபித்து இருக்கிறாய்

கோடை நாக்கின் கொள்ளி உரசலில்
அக்கினி ராட்சகன்
ஆக்ரோஷம் நடத்தும் வேளை
இறுக்க அனைத்து இன்பம் தருகிறாய்
குளிர்மை ரசத்தை எங்கும் பிழிகிறாய்

சில வேளை
உன் குறும்புகள்
கடிக்கும் கரும்புகள்
தையல் பெண்ணிடம்
நாம் மையல் கொள்

மேலும்

ALAAli - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 1:20 pm

எண்ணம் சிதைத்தாள்
நெஞ்சம் அமர்ந்தாள்
அவள் அணிந்தால்
அது ஆடை
மணந்தேன்
முல்லை வாடை
பளிங்கால் மின்னுது
அவள் தாடை
செந்நிற அதரம்
மலர்த் தோடை
நகர்ந்தாள்
அவள் மலர்க் கூடை
கண்களால் தந்தாள்
அன்புச் சாடை
அருகே சென்றேன்
நாணினாள் வெட்கினாள்
கண்டு கொண்டேன்
குணத்தால் அவள் சிறுகாடை
வனத்தைச் சிறைப்
பிடித்ததோர் சடை
அளகின் மடை
முல்லையை மிகைத்தது
இவள் இடை
நான் கோடையில்
நனையும் நீரோடை
என்னில் இருப்பாள்
என்றும் இருப்பாள்
நிலம் துயிலும் வரை
எனது பாடை

ஆக்கம்
அஷ்றப் அலி

மேலும்

ALAAli - ALAAli அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2017 12:30 pm

என்னுயிரே !

பூவாய் மலரும் அழகுப் புன்னகை
சிரிப்பின் ஒலியில் செவிக்கும் சலங்கை
விழியில் பதிந்த பளிங்குத் தோற்றம்
தென்றலாய் இனிக்கும் தேகத்தின் நெருக்கம்
வேராய் விழுதாய் மனக் குழியில் நட்ட மரமாய்
யாவும் விலகாது வீற்றிருக்கும் என்னிடம்
நான் செல்லும் வரை என் மண்ணிடம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

அருமை 24-Mar-2017 3:49 pm
நிச்சயமாக சமீபத்தை விட 'வருடல்' தான் பொருத்தமானது நன்றி அன்பரே வாழ்த்துக்கள் 24-Mar-2017 12:41 am
வாழ்வின் எல்லாம் மரணம் கடந்து மண்ணறை வாழ்க்கை நோக்கி மறுமை வாசல் தட்டும் 24-Mar-2017 12:28 am
தென்றலாய் இனிக்கும் தேகத்தின் " வருடல் " என்றிருந்தால் நன்றாக இருக்குமே ! வாழ்க 24-Mar-2017 12:07 am
ALAAli - ALAAli அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2017 1:43 pm

ரோஜா ஒன்று
எழுந்து வந்தது
அருகில் நின்ற
என் ஆரணங்கைச் சொன்னது
ஏய் உன்னைத்தான்
கவிஞர் யாவரும்
அழகு கூற
உவமேயம் கொள்ளவது
என்னைத்தான்
என்னைக்கு கொய்து
உன்னில் சூடிக் கொள்
உன்னில் நான்
மையல் கொண்டேன்
என் எண்ணம்
ஏற்றுக் கொள் என்றது
பின்பு மனுவும் உடனே
தாக்கல்செய்யச் சொன்னது
இனி ரோஜா வர்ணனை
செய்வோர்க்கெல்லாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

பெண்ணழகு வெட்கத்தில் மிளிர்கிறது பூந்தோட்டம் ரோஜாவால் ஒளிர்கிறது 24-Mar-2017 12:56 am
நன்றி அன்பரே கவி ததும்பும் வார்த்தைக்கு நன்றி. அவ்வாறு நிலை உருவானால் செங்காந்தள் மலரைக் கொண்டு வந்து பட்டிமன்றம் நடத்தச் சொல்வோம் மலர்கள் கூட்டத்தில். யார் அழகு என்று அவர்கள் தீர்மானிக்கட்டும். வாழ்த்துக்கள் 24-Mar-2017 12:50 am
ரோஜாவின் அழகும் மனுக்கள் போட்டால் உவமையும் உருவாகும் பகைவர்களாகிவிடுவார்கள் 24-Mar-2017 12:39 am
ALAAli - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 4:34 pm

ஆகாயம்
வீடமைப்பேன்
முகிலினால்
ஓடமைப்பேன்
முகில்வீட்டில்
குழியமைத்து
மழைநீரால்
அதைநிறைப்பேன்
தண்ணீரில்
தலைநனைத்து
விண்மீனில்
குளிர்காய்வேன்
மேகத்தால்
உடை அணிந்து
தென்றலினால்
தலை சீவி
வெண்ணிலாவில்
முகம்பார்ப்பேன்
பகலவனில்
கறிசமைத்து
பறவை உடன்
அதையுண்பேன்
வானமெங்கும்
போய்வருவேன்
பட்ச்சிகளைத்
துணைக்கழைப்பேன்
சந்தோஷச் சாகரத்தில்
முத்தெடுப்பேன்
முகிழ்த்தெழுவேன்
கவலையில்லா
வாழ்வொன்றைக்
காணவேண்டும்
ஆதலினால்
விண்வீடே நீவேண்டும்
மண்வீடே நீவேண்டாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

கவிஞனின் கற்பனைக்கு எல்லை ஏது.எவ்வுலகயிருந்தாலும் நம் கவிக் கொடியை பறக்க விட மாட்டோமா ?நன்றி 24-Mar-2017 12:56 am
வானமே எல்லை என்று பறவை பறந்தாலும் அதனை கடந்தும் ஓர் உலகம் இருக்கிறது என்பதை அவைகள் ஒரு போதும் அறிவதில்லை 24-Mar-2017 12:48 am
ALAAli - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 1:43 pm

ரோஜா ஒன்று
எழுந்து வந்தது
அருகில் நின்ற
என் ஆரணங்கைச் சொன்னது
ஏய் உன்னைத்தான்
கவிஞர் யாவரும்
அழகு கூற
உவமேயம் கொள்ளவது
என்னைத்தான்
என்னைக்கு கொய்து
உன்னில் சூடிக் கொள்
உன்னில் நான்
மையல் கொண்டேன்
என் எண்ணம்
ஏற்றுக் கொள் என்றது
பின்பு மனுவும் உடனே
தாக்கல்செய்யச் சொன்னது
இனி ரோஜா வர்ணனை
செய்வோர்க்கெல்லாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

பெண்ணழகு வெட்கத்தில் மிளிர்கிறது பூந்தோட்டம் ரோஜாவால் ஒளிர்கிறது 24-Mar-2017 12:56 am
நன்றி அன்பரே கவி ததும்பும் வார்த்தைக்கு நன்றி. அவ்வாறு நிலை உருவானால் செங்காந்தள் மலரைக் கொண்டு வந்து பட்டிமன்றம் நடத்தச் சொல்வோம் மலர்கள் கூட்டத்தில். யார் அழகு என்று அவர்கள் தீர்மானிக்கட்டும். வாழ்த்துக்கள் 24-Mar-2017 12:50 am
ரோஜாவின் அழகும் மனுக்கள் போட்டால் உவமையும் உருவாகும் பகைவர்களாகிவிடுவார்கள் 24-Mar-2017 12:39 am
ALAAli - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 12:30 pm

என்னுயிரே !

பூவாய் மலரும் அழகுப் புன்னகை
சிரிப்பின் ஒலியில் செவிக்கும் சலங்கை
விழியில் பதிந்த பளிங்குத் தோற்றம்
தென்றலாய் இனிக்கும் தேகத்தின் நெருக்கம்
வேராய் விழுதாய் மனக் குழியில் நட்ட மரமாய்
யாவும் விலகாது வீற்றிருக்கும் என்னிடம்
நான் செல்லும் வரை என் மண்ணிடம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

அருமை 24-Mar-2017 3:49 pm
நிச்சயமாக சமீபத்தை விட 'வருடல்' தான் பொருத்தமானது நன்றி அன்பரே வாழ்த்துக்கள் 24-Mar-2017 12:41 am
வாழ்வின் எல்லாம் மரணம் கடந்து மண்ணறை வாழ்க்கை நோக்கி மறுமை வாசல் தட்டும் 24-Mar-2017 12:28 am
தென்றலாய் இனிக்கும் தேகத்தின் " வருடல் " என்றிருந்தால் நன்றாக இருக்குமே ! வாழ்க 24-Mar-2017 12:07 am
ALAAli - SivaNathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2016 1:43 am

உயிர் உள்ள சொற்கள்
தேடி உயிர் விட்டுக்
கொண்டிருந்ததொரு
கவிதை

மனவெளியில்
எண்ணச்
சருகுகள்
அங்கங்கே
சிதறிக் கிடைக்க

தனிமைக் கதவின்
தாழ்ப்பாள் திறந்து
நினைவெனும்
தாழ்வாரங்களில்
நிலையில்லாது வழியும்
ஞாபக மழையில்
நனைந்து கொள்கிறேன்.

கனவெனும்
தட்டாம் பூச்சி
சிறகு வழி வானம்
வரை உயர்கிறேன்.

வான் தொடும்
விருட்சங்கள் எழுதி
முடிக்கா கவிதைகளில்
படிக்க மறந்த
சொற்களை காற்றிடம்
கடன் வாங்கிக்கொள்கிறேன்

ஈரப் புற்களில்
இழையும் துளியில்
ஓவ்வோர் சொற்களையும்
கோர்த்துக் கொள்கிறேன்

உயிர்த்துக் கொள்கிறது
ஒவ்வோர் வரிகளும்
கவிதையாய்..

எங்கிருந்தோ

மேலும்

அற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள் 18-Jan-2017 3:42 am
அருமை 15-Sep-2016 9:13 am
நல்ல கவிதை 24-Aug-2016 10:33 am
மிக அருமை வாழ்த்துக்கள் 08-Aug-2016 2:26 pm
ALAAli - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2017 1:22 pm

சிலவேளை
நெஞ்சைப் பிழிகிறாய்
எண்ணம் சிதைக்கிறாய்
கலராய் கனவாய் வந்து ஜாலம் புரிகிறாய்
செவ்விதழ் பருக வாவென அழைத்து மோவாய் திறக்கிறாய்
அழையா வேளை உள்ளிருந்து கண்ணடிக்கிறாய்
அழைத்தால் முடியாதென சண்டித்தனம் புரிகிறாய்
வந்தால் கனியாய் ருசிக்கிறாய்
மலராய் மணக்கிறாய்
வராத வேளை பிரசவ வேதனை தந்து
என்னைக் கொள்கிறாய்

என் கவி மகளே !
மனக்கவலை போக்கும் தாயும் நீயடி
மகிழ்ச்சியாய் கொஞ்சும் சேயும் நீயடி
அணைத்தால் சுகம் தரும் காதலி நீயடி
தளர்ந்தால் உயிர்ப்பூட்டும் ராகமும் நீயடி
என் வாழ்வும் நீயடி மூச்சும் நீயடி
தலை சாய்க்க எனக்கு நிதமும் வேண்டும் உனது மடி

மேலும்

வாழ்த்துக்கும் நன்றி.. தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் நன்றி.உங்கள் தூரிகைத் தாயும் நல் கவிக் குழவிகளை முத்தாய்ப் பிரசவிக்கட்டும் 23-Mar-2017 12:00 pm
அவள் மடியில் இறுதி சுவாசம் வரை வாழ்ந்திட தான் உள்ளங்கள் விதியிடம் யாசகம் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2017 11:41 am
மேலும்...
கருத்துகள்
மேலே