அன்புச்செழியன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  அன்புச்செழியன்
இடம்:  சிவகங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2017
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  14

என் படைப்புகள்
அன்புச்செழியன் செய்திகள்
அன்புச்செழியன் - mageshmnc அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 5:04 pm

இதல்லவா வாழ்க்கை!!

சிறு வயதில் நம் பெற்றவர்களிடம் வலிக்கின்ற மாதிரி நடித்தோம் 
இப்பொழுது நம் பெற்றவர்களிடம் வலிக்காத மாதிரி நடிக்கின்றோம்!
 

மேலும்

உண்மை 13-Jul-2017 10:30 pm
ஆம் நண்பா 06-Jul-2017 5:14 pm
முற்றிலும் உண்மை. 06-Jul-2017 5:06 pm
அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2017 9:32 pm

புன்புலச் சீறூர் நெல்விளை யாதாம்
நன்புலச் சீமை தஞ்சையும் நலிந்ததே
வன்குல அரசு வதைப்பது குன்றின்
வளைந்து கொடுத்துநீ வாழ்.

- அன்புச்செழியன்

மேலும்

அன்புச்செழியன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2017 5:09 pm

வளைத்து எழுது -----புதுக் கவிதையில் எழுதவும்

வளைந்து கொடுத்துநீ வாழ் ----என்ற ஈற்றடி அமைய வெண்பா எழுதவும் புதுக் கவிதையிலும் எழுதலாம் .

----கவின் சாரலன்

மேலும்

அய்யா வணக்கம்.. தங்களுடைய ஈற்றடி.. கிரியைக் குவாரியாக் காமல் குடையாய் சிறுவிரலில் சேர்த்தவன்; மாதரோ,மது ராவோ மதுக்கடை யின்றியே ஆண்டவன் யாராம்? மதனகோபா லாநீதா னா ? வண்ணவண்ண சேலை வனிதைக் களித்தும் வண்ணங்கள் மாசாகி வண்டலில் வீழாது நதியமுனை காத்தவன்; வல்லவன்தான் யாராம்? மதனகோபா லாநீதா னா ? அன்புடன், அருணை ஜெயசீலி. 15-May-2017 12:00 pm
பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., ---வளைத்து எழுதுவிற்கு அழகு சேர்க்கும் விழிப்புணர்வு கவிதை . வாழ்த்துக்கள் கவிப்பிரிய ஸை ஃ ப் உல் ஹத்திம் . அன்புடன், கவின் சாரலன் 06-May-2017 10:19 pm
சிறப்பான நேரிசை வெண்பா . அருமை தொடர்ந்து வெண்பா பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் மதனகோபா லாநீதா னா என்பதை ஈற்றடியாய்க் கொண்டு கண்ணன் மீது ஒரு சிந்தியலோ அல்லது அளவடி வெண்பாவோ நேரிசை அல்லது இன்னிசையில் தாருங்கள் அன்புடன்,கவின் சாரலன் 06-May-2017 10:14 pm
வளைத்து எழுது....., உன் எழுத்துக்களை வளைத்து எழுது....., கூன் கொண்ட மனிதங்கள் நிமிர வேண்டும் ....., வலித்து எழுது....., வெறி கொண்ட அதிகாரங்கள் உன் எழுத்தை வளைத்திடாது வலித்து எழுது......, பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., உன் மனதின் நெளிவுகள் நீங்க வளைத்து எழுது...., இதை வலித்திடாமல் எழுது.........., 06-May-2017 7:01 pm
அனுசுயா அளித்த படைப்பில் (public) Anuthamizhsuya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2017 2:16 pm

உன்
அலட்சிய பார்வைக்கே
ஒழுகுகின்றன என்
ஆன்மத் துளிகள்

உன்னில் திமிரா ?
திமிரில் நீயா ?
எதில் யார் அழகு ?

விவாதங்கள் நடத்தி
யாரேனும் விடை கூறுங்கள்

அதுவரையில் ...
நான் உன்னை
ரசித்துக்கொண்டிருக்கிறேன் !

ஒவ்வொரு முறை நீ
முறைத்து பார்க்கும் போதும்
உன்னிடம் முத்தங்கள்
பெற்ற கிறக்கம் எனக்கு !

வேகமான உன்
நடைகளில்,
லேசாய்
மூச்சிரைக்கிறது எனக்கு !


உன் முக
பாவணைகளில்
பயித்தியம் பிடிக்கிறது
எனக்கு !


மௌனமான உன்
கோபங்கள் என்
செவிகளில்
இசையாய் நீள்கின்றன... . !


நீ வார்த்தை
கணைகள் வீசுவாய்
என்றால் என்றும்
உன் எதிரில்
நிற்பேன்
நிராய

மேலும்

தங்கள் வாசிப்பிற்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி சார் 02-Apr-2017 7:42 pm
என்னை புறக்கணித்து போகும் போது ஐயோ .. பாவம் என என் இதய திருவோட்டில் ஒரு புன்னகை பிச்சை இட்டு போ பிழைத்துவிட்டு போகிறேன் ! ஆஹா...அருமையான கவி வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள் தங்கள் இலக்கிய பயணத்தை 02-Apr-2017 10:56 am
மிக்க நன்றி சார் 12-Feb-2017 3:37 pm
வரிகளில் மனதின் ஏக்கங்கள்.. இனிய காதல் இம்சைகள்.. ஹா ஹா! நன்று.. 12-Feb-2017 11:53 am
அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2017 3:55 am

• அடி
நகம் கடித்து
நிலம் தேடிய
தாவணிப் பறவையே !

உன் கண்கள்
விதைத்துச் சென்ற காதல்
என்
நெஞ்சறைக் குழியின்
சுவாசப் பைகளுக்குள்,
மூளையின் மின் வீச்சுக்களின்
ஒவ்வொரு ஒற்றைச்சுவாசத்திலும்
விரவிக்கிடக்கிறது
உயிர் வளியாய்

• காரிதழ் கொண்ட
கருங்குவளை மலரே!
உன் பெயரென்ன
காதலின்
நேர்பெயர்ப்புச்சொல்லோ!

• உன்
மெத்தனக் கடவுகளில்,
மென்சிரிப்பினில்,
அற்புத ஆழ்மனக் காதலின்
பித்தனைக் கொல்கிறாய்
தினமும்

• உன்

மேலும்

அன்புச்செழியன் - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2016 1:43 am

உயிர் உள்ள சொற்கள்
தேடி உயிர் விட்டுக்
கொண்டிருந்ததொரு
கவிதை

மனவெளியில்
எண்ணச்
சருகுகள்
அங்கங்கே
சிதறிக் கிடைக்க

தனிமைக் கதவின்
தாழ்ப்பாள் திறந்து
நினைவெனும்
தாழ்வாரங்களில்
நிலையில்லாது வழியும்
ஞாபக மழையில்
நனைந்து கொள்கிறேன்.

கனவெனும்
தட்டாம் பூச்சி
சிறகு வழி வானம்
வரை உயர்கிறேன்.

வான் தொடும்
விருட்சங்கள் எழுதி
முடிக்கா கவிதைகளில்
படிக்க மறந்த
சொற்களை காற்றிடம்
கடன் வாங்கிக்கொள்கிறேன்

ஈரப் புற்களில்
இழையும் துளியில்
ஓவ்வோர் சொற்களையும்
கோர்த்துக் கொள்கிறேன்

உயிர்த்துக் கொள்கிறது
ஒவ்வோர் வரிகளும்
கவிதையாய்..

எங்கிருந்தோ

மேலும்

அற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள் 18-Jan-2017 3:42 am
அருமை 15-Sep-2016 9:13 am
மிக அருமை வாழ்த்துக்கள் 08-Aug-2016 2:26 pm
அன்புச்செழியன் - அன்புச்செழியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2017 7:47 am

பொங்கலோ பொங்கல் !

நெற்கதிரும், மாவிலையும்
நிலம் விளையும் ஆவாரை
செங்கழனிச் செங்கரும்பு
சிறுபீளைப் பூ சேர

மஞ்சளொடு பனங்கிழங்கு
மண்பானை, மாக்கோலம்
மருக்கொழுந்து, செவ்வரளி
சாமந்தி, சம்பங்கி

என
பூவாசம் மணமணக்கும்
புதுப்பொங்கல் தேனினிக்கும்

நமக்கென்ன?

பயிர்கொண்ட உழவனின்
உயிர்கொன்றோம்

பசிப்பிணி மருத்துவன்
பசி கண்டோம்

பயிர் விதைத்த விவசாயி
பதை பதைத்துப் பதை பதைத்து

உயிர் தொலைத்த துயர்மறந்து
ஊரெங்கும் உரக்கச் சொல்வோம்

பொங்கலோ பொங்கல் !

வித்தெல்லாம் முத்தாக்கி
விளைவித்தான் காய்கனிகள்

நெல்லும், சோளமும்
நிலமெல்லாம் வனப்பாக்க
சாமையும், வரகும்
சமைத்துண்

மேலும்

அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2017 7:47 am

பொங்கலோ பொங்கல் !

நெற்கதிரும், மாவிலையும்
நிலம் விளையும் ஆவாரை
செங்கழனிச் செங்கரும்பு
சிறுபீளைப் பூ சேர

மஞ்சளொடு பனங்கிழங்கு
மண்பானை, மாக்கோலம்
மருக்கொழுந்து, செவ்வரளி
சாமந்தி, சம்பங்கி

என
பூவாசம் மணமணக்கும்
புதுப்பொங்கல் தேனினிக்கும்

நமக்கென்ன?

பயிர்கொண்ட உழவனின்
உயிர்கொன்றோம்

பசிப்பிணி மருத்துவன்
பசி கண்டோம்

பயிர் விதைத்த விவசாயி
பதை பதைத்துப் பதை பதைத்து

உயிர் தொலைத்த துயர்மறந்து
ஊரெங்கும் உரக்கச் சொல்வோம்

பொங்கலோ பொங்கல் !

வித்தெல்லாம் முத்தாக்கி
விளைவித்தான் காய்கனிகள்

நெல்லும், சோளமும்
நிலமெல்லாம் வனப்பாக்க
சாமையும், வரகும்
சமைத்துண்

மேலும்

அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2017 11:59 pm

மலர்தாங்கும் தேன்துளியே! மகரந்தத் தூளே !
அய்யோ காதலியே! அன்பான கவிமகளே !
இதயம் கலங்கியழ இன்னொருவன் பின்வாழ
என்னை மறந்தங்கு எப்படி நீ போனாயோ

மஞ்சல் வண்ணத்து மங்கலநாண் மேலேற
என்னை நினைத்தாயோ என்னதான் நினைத்தாயோ
தேனினிக்கும் என்றெண்ணி தேடி வந்தவனின்
காதில் ஈயத்தை காய்ச்சி வடித்தாயே

நான் வடிக்கும் கண்ணீர் நான்கு சுவரறியும்
நீ வடித்த கண்ணீர் நித்திலமே நானறிவேன்
காதல் வானத்தில் கனக்கும் மழைசுமக்கும்
கருமுகில்கள் காற்றடித்து கலைந்ததுபோல் ஆனதடி

முழுமதியின் அழகெல்லாம் முகமாகக் கொண்டவளே!
குழிநிலவாய் குனிந்தாயே குறைந்தாயே சரிந்தாயே
பெண்ணுக்குப் பொறுமை பெரிதல்ல என்றதாலுன்
கண்ணுக்கு

மேலும்

அன்பும் நன்றியும் சகோதரா 07-Jan-2017 10:58 pm
அழகிய எண்ணம்., பிழைகளை தவிர்த்தால் அழகு கூடும் இன்னும்... வாழ்த்துக்கள் தோழரே! 07-Jan-2017 10:24 pm
தங்களின் மேலான ஆதரவுக்கும், பாராட்டுக்கும் என் நன்றிகள் நண்பரே. உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன். 07-Jan-2017 9:58 pm
ஆதரவுக்கு என் நன்றிகள் சகோதரா 07-Jan-2017 9:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
sarabass

sarabass

trichy
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை-சிங்கப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே