அன்புடன் மித்திரன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  அன்புடன் மித்திரன்
இடம்:  திருநெல்வேலி, தமிழ்நாடு
பிறந்த தேதி :  03-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2016
பார்த்தவர்கள்:  47015
புள்ளி:  1145

என்னைப் பற்றி...

நற்சிந்தை மற்றும் நல்ல நடத்தையால் நானொரு மனிதன்.
அதைப் பற்றி எழுதுவதால் நானொரு எழுத்தாளன்...

Facebook page:- https://facebook.com/AnbuMiththiran

Twitter Id:-
https://twitter.com/AnbuMiththiran

எனது தொடர்கதைகளைப் படிக்க https://ta.pratilipi.com/user/6fc46vbn3g -க்கு செல்லவும்.

To Read my english poems, click here:- https://poemhunter.com/anbudan-miththiran

என் படைப்புகள்
அன்புடன் மித்திரன் செய்திகள்
அன்புடன் மித்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2024 11:32 pm

பாறை என்னையும் அறியாமலே
உன் புன்னகைத் துளியாலே
நனைத்து, காதலெனும்
ஊற்றெடுக்க
உன்னை நானும் பார்த்திருக்க
இந்த நொடி இப்படியே நீளாதோ?
இந்த பேருந்து பயணமும்
முடிவின்றி தொடராதோ?
நெஞ்சிலே ஏக்கம் பிறக்க
துயரமும் வந்து எனைத்தாக்க
இப்படியே உறக்கம் தொலைக்க
மீண்டும் நாம் சந்திப்பது எப்போது?

மேலும்

அன்புடன் மித்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2023 11:31 am

மேகம் சூழ்ந்த வானம் போல,
சோகம் சூழ்ந்த வாழ்வதும்
எப்போதும் நிலையாதே; மாறும் ஒருநாள்,
அப்போது மகிழ்ந்திட மறவாதே;
பழைய காயங்கள் மறைந்துவிட மலர்களாய்
இளைய நெஞ்சங்களே மாறுங்களே;
வெற்று மனிதராய் வீணில் கழியாமல்,
வெற்றியே இலக்காய் பயணி...

மேலும்

அன்புடன் மித்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2023 7:12 pm

வாசமுள்ள வரைக்கும் மலரானது மதிக்கப்படும்,
வாசமதும் போய்விட்டால் மலரானதும் மிதிக்கப்படும்,
இறைவன் தந்த வாழ்க்கையது இரவலர்களுக்கு புரியவில்லை,
இரந்துண்டு வாழ்வதிலே எள்ளளவும் மேன்மையில்லை,

அழகதும் உள்ளவரை ஆனந்தம் என்னும் பெரும் செருக்கு,
அழகிழக்கும் நாட்களிலே ஞானம் மெருகேறும் வாழ்வதற்கு,
அவசரத்தில் ஆடாதே; அழிவை தேடி நாடாதே,
அனுபவத்தின் வார்த்தைகள் இவை,
ஆராய்ந்து பார்த்து நீயும் எடுத்துக் கொள்.

மேலும்

அன்புடன் மித்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2023 1:50 pm

அருள்வாய் நீ எனக்கு அன்புடனே,
ஆனந்தம் பெருகிடவே
இனிமை நிறைந்திடவே
ஈர்த்த சிவனே,
உண்மையாய் இருப்போனே,
ஊமையாய் சிரிப்பொனே,
எங்கும் நிறைந்தவனே,
ஏகாந்தத் திருவருளே,
ஐந்தெழுத்தில் வீற்றிருப்பவனே,
ஒருமையில் பன்மையாய்,
ஓங்காரத் திருவுள்ளமே,
ஔடதமாய் எமக்கு
எஃகு போலுறுதி தருவாயே...

மேலும்

அன்புடன் மித்திரன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2023 11:05 am

சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்

மேலும்

அருமை தேவார மேற்கோள் இலக்கியம் படிக்க இலக்கண அடையாளம் தேவையில்லை சீர் வழி அலகிட்டும் அலகிடாமலும் துதி நூல்கள் வரும் இதை நிலைமண்டில ஆசிரியப்பா என்று சொல்கிறது அவலோகிதம் இது ஆசிரியப்பாவின் ஒருவகை பொருள் முற்றிலும் புரியவில்லை பழைய நூல்களை உரையின்றி புரிந்து கொள்ளமுடியாது அழகிய இலக்கிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:06 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். அருமையான ஆன்மிகப் பதிவு. அப்பர் சுவாமிகள் தேவாரம் ஒன்று எனது நினைவுக்கு வருகிறது. சீர் ஒழுங்கு இல்லாது இருக்கலாம் நினைவில் உள்ளதை பகிர்வு செய்கிறேன். வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 7:07 pm
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 29-Mar-2023 11:25 am
அருமையான பதிவு; நல்ல கருத்தும் கூட! வாழ்த்துகள். 29-Mar-2023 11:12 am
அன்புடன் மித்திரன் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2023 8:38 am

நான் இந்த வலைதளத்தில் உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் ஆனால் என்னுடைய படைப்புகளை சமர்ப்பிக்க முடியவில்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா இப்படிக்கு புதுக்கவிஞர் க ஜெயராமன்

மேலும்

உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டதா இல்லையா? உங்கள் பெயர் காட்டப்படவில்லை. 28-Mar-2023 2:31 pm
அன்புடன் மித்திரன் - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2022 1:29 am

உழைக்கும் மனிதனுக்கு மரியாதை இல்லை.
அதிகாரத்தோடு மிரட்டும் தொனியில் உழைப்பவனை அழைக்கும் சமூகம்,
இரத்தம் சிந்தி உழைக்கும் வர்க்கம்,
இடையில் நின்று லாபம் சம்பாதிக்கும் புரோக்கர் கூட்டம்.
சாதி பேசும், இனம் பேசும், மதம் பேசும், தேசியம் பேசும்,
தேகம் வருத்தி உழைக்கும் தொழிலாளிக்கு இங்கே மரியாதை இல்லை.

ஜல்ட்ரா அடிக்க லாயக்கில்லை என்றால் இந்த சமூகத்தில் முன்னேற்றம் தடுக்கப்படும்.
எப்படியாவது மேலே வரலாம் என்று நீங்கள் உழைத்து கொண்டே இருந்தால் ஈளிச்சவாயனாக கருதப்படுவீர்.
குனிந்து குனிந்து கூன் விழுந்த உழைக்கும் வர்க்கம் நாளும் ஏமாற்றப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு அறிவு எதற்கு என்றி

மேலும்

தம்பி உங்களின் உணர்வு போல முன்னமே பல நூறுபேர் எழுதியும் ஆயிரக்கணக்கில் பேசியும் கேட்டும் தமிழ் நாட்டின் தலைவிதி இன்னும் மோசமாக அவர்கள் வந்தபின் செய்தார்கள். இன்றைய இளைய சமுதாயம் பள்ளியில் கர்பம் கஞ்சா , போதை பாட்டில் மாத்திரை , சோரம் போதலுக்கு வழிவகுக்கும் சுய உதவி நூறு நாள் வேலை இப்படி சீரழிந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு என்ன வழி. சாதி, இனம் மதம் என்ற கட்டுப்பாட்டை முன்னோர்கள் வைத்ததை எடுக்கச்சொல்லி தூண்டியது விளைவு நாடு சீரழிந்து தமிழனே தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறான் என்று தெடிக்கண்டு பிடிக்கவேண்டி இருக்கிறது. தமிழின் கவிதை இலக்கணத்தை பின்பற்றி கவிதை எழுத்துங்கள் அல்லது கட்டுரை படையுங்கள் இதுதான் எனது வேண்டுகோள். அவ்வளவே. 01-Dec-2022 6:51 am
என் உணர்வை தாங்கள் மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. உங்கள் உணர்வை மதிக்கிறேன். அதே நேரத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 350 ரூபாய் தினக்கூலிக்கு என்னை போல் வேலை செய்தால் உங்களுக்கு என் உணர்வு புரிந்து இருக்கும். நான் அரசியல் வியாதி அல்ல, இங்கு இரக்கத்தை வேண்டி சாதித்துக் கொள்வதற்கு. தாங்கள் கூறுவது போல் தமிழ்நாட்டில் உண்மையாக உழைப்பவர் கிடையாது. ஆனால், கட்டிடங்கள் உயருகிறது. முதலாளியின் பணப்பெட்டி நிறைகிறது. உழைப்பவர்கள் இவ்வளவு இழிவாக உங்களுக்கு தெரிகிறார்கள். இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவீர்கள் போலும். என் உணர்வை இங்கு எழுத எவர் அனுமதியும் எமக்கு தேவையில்லை. கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். 30-Nov-2022 10:14 pm
இலக்கணப் பிரியர் ஐயா பழனி ராஜன் அவர்களுக்கு, என் உணர்வை எழுதுவதற்கும், அதை கவிதை வடிப்பதற்கும் எனக்கு இலக்கணம் தெரிந்து இருக்க வேண்டும் என்று என் தமிழ் அன்னை கோபம் கொள்ளவில்லை. நான் இப்படித்தான் இதைத் தான் எழுத வேண்டும் என்று கூறி எம்மை, எம் உணர்வுகளை இழிவு செய்ய தமக்கு உரிமை இல்லை. உங்கள் உணர்வை மதிக்கிறேன். கருத்தளித்தமைக்கு நன்றிகள். 30-Nov-2022 10:02 pm
எழுத்துத் தளத்தை இலக்கணக் கவிதையை எழுதிப்பழகிட் கண்டார் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னம். யாரும் இன்றுவரை இலக்கணப் பாட்டை கற்று அரங்கேற்றம் செய்தார் இல்லை மாறாக ஏதோ ஞானிகள் போன்று தத்துவம் கதைக்கின்றார் . உழைப்பு சாதி மதம் இனம் என்று. இன்று வுயர் சாதியினரை கீழ்சாதியினர் மிரட்டுவது வெளியில் சென்று விசாரித்தால் தெரியும். மெம் போக்காக பேசுவது எல்லாம் அன்றைய வெத்துவேட்டு பெரியார் அண்ணா தம்பிகள் கம் யூ னிஸ்டுகள் பேசித்தீர்த்து விட்டார்கள். .இலக்கணமாக பாட்டை எழுதுங்கள் உரை நடையை எழுதாதீர். சாதிமத்த்தை லட்சக்கணக்கில் பேசித் தீர்த்துவிட்டார்கள். இங்குத் தேவை இலக்கணப் பாட்டு ___ உரை நடை தத்துவம் காதல் உரையாயாடல் தேவையற்றது 30-Nov-2022 8:19 pm

" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...

" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...

" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...

" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜா

மேலும்

அன்புடன் மித்திரன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2019 9:00 am

உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்

மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்

உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்

உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்

கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்

உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.

மேலும்

திரு. மித்திரன் அவர்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல பல . 11-Jun-2019 8:31 pm
அர்த்தமுள்ள வரிகள், 11-Jun-2019 8:16 pm
திரு சக்கரை கவி அய்யா அவர்களின் பார்வைக்கும் சிறந்து ஊக்கமளிக்கும் கருத்திற்கும் சிறந்த பாராட்டுதலுக்கும் நன்றிகள் பற்பல . 11-Jun-2019 11:48 am
இறுதி இரண்டு பகுதிகள் என்னைக் கவர்ந்தன நன்னாடரே 11-Jun-2019 11:15 am
அன்புடன் மித்திரன் - குமுதா குமாரராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2019 8:22 pm

அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா

மேலும்

அன்புடன் மித்திரன் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2019 3:05 pm

சந்தனக் கட்டைமேல்
****************************************************

சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !

மேலும்

பிரமாதமான உண்மை கருத்துள்ள வரிகள் அருமை அய்யா. 15-Nov-2019 1:06 pm
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 07-Feb-2019 8:07 am
அருமை அய்யா 06-Feb-2019 8:53 pm
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா 27-Jan-2019 6:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

Palani Rajan

Palani Rajan

vellore
Deepan

Deepan

சென்னை
முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (47)

இவரை பின்தொடர்பவர்கள் (46)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே