Anuthamizhsuya Profile - அனுசுயா சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  அனுசுயா
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  18-Sep-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jun-2015
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  35

என் படைப்புகள்
Anuthamizhsuya செய்திகள்
Anuthamizhsuya - Kutty659 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2017 6:08 pm

தமிழா தமிழா..!!

தனியதோர் மழைத்துளி
விழுகின்றதென்று
குடை பிடிக்க நினைத்தாயோ..
தாயகம் காத்திட
மணித்துளி நேரத்தில்
கடலென பொங்கி எழுந்த
எம் தமிழ் இளைஞர்களை பார்.. விண்ணை முட்டும் கோஷத்துடன்
விதியை மாற்றும்
எம் இளஞ்சிங்கங்களை பார்..
சுனாமி வெள்ளத்தை போல்
தமிழ் இளைஞர்களின் அலைகண்டு
பயந்து ஓடிய குள்ள நரிகள் எங்கே.. திமில் கொண்ட காளையை போல்
தமிழன் என்ற
திமிர் கொண்டு சீரிபாயும்
எம் தமிழ் காளையர்களிடம்
சிக்கி விடாதீர்கள் ..
சிதைத்து விடுவார்கள்..
தமிழா தமிழா..
உன் அன்பிற்கும் ஒற்றுமைக்கும் தலை வணங்குகிறேன்..
பார் போற்றும் தமிழ் ஒற்றுமையை தலை நிமிர்ந்து பார் தமிழா..

மேலும்

தங்கள் கருத்துக்கு அன்பின் நன்றிகள்.. 20-Jan-2017 4:16 pm
excellent தமிழ் மொழியை போல் உங்கள் படைப்பும் அருமையாக இருக்கிறது, நிச்சயம் வெல்வோம் - மு.ரா. 20-Jan-2017 3:20 pm
Anuthamizhsuya - Radja Radjane அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2017 8:15 pm

கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம் 
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம் 

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்

வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ

இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நிலம் இருந்தாலும் தேராதுங்க சொச்சம்

விவசாயி நமெக்கெல்லாம் போட்டால் தான் சோறு
அவன் நிலைகாக்க நாம் என்ன செய்தோம் கைமாறு

அலங்கை பாரு மெரினா பாரு எட்டுத்திக்கும் பாரு
இனி இளைஞர் தாம் இளைஞர் தாம் ஊரு சொல்லும் பாரு

அதிருது பார் அதிருது பார் அதிருது ஊர் மொத்தம்
தமிழர் தாம் தமிழர் தாம் புகழ் வான் உலகு எட்டும்

#JusticeForJallikattu  

மேலும்

நன்று, வெளி நாட்டு குளிர் பானங்களை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு நம் நாட்டு தயாரிப்பிற்கு ஆதரவு தர வேண்டுகிறேன் - மு.ரா. 20-Jan-2017 10:28 pm
Anuthamizhsuya - AUDITOR SELVAMANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2017 8:35 pm

பலரும் அறியாத 400 ஆண்டு 'காதல் கதை' ஜல்லிக்கட்டிலும் உண்டு

மதுரை: ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதையும் உண்டு. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும்.

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன்.
நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன்.
ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி.

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று ப

மேலும்

Anuthamizhsuya - Razeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2017 11:31 pm

தமிழா உனதடையாளம் ஜல்லிக்கட்டு
போராடி மீட்டிடதைத் துள்ளிக்கிட்டு
அகிலமே அதிரும்படி மல்லுக்கட்டு
எதிரமைப்பை உனதெதிர்ப்பால் வெளுத்துக்கட்டு!

ஏறுதழுவுதல் எங்கள் வீரவிளையாட்டென
மாறுதட்டி தமிழா சூழுரைத்திடு!
வேறுநாட்டிலிருந்து வந்தெங்கள் பெருமையைத்
தடுக்க நீயாரடா எனமுறைத்திடு!

பீட்டாவிற்கு ஆதரவளிக்கும் ஆட்சியிங்கிருப்பின்
நோட்டாவிற்கே எங்களடுத்த வாக்கு!
காட்டவேண்டாம் உன்வீம்பைத் தமிழனிடத்தில்
உடனடியாகத் தடைநீயே நீக்கு!

மேலும்

Anuthamizhsuya - Anusaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2017 12:54 pm

அவள்
=======

அவள்
கண்டுபோன
பலமுகங்களுடைய சாயல்களை
ஒன்றுசேர்த்து
உலகத்திலேயே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை
நேசிக்கிறவளாக இருக்கக்கூடும்
அவள்
ஸ்திரம் வாசிக்கும்
கதைப் புஸ்தகங்களூடே எழில் ஒழுகும்
நாயகன் யாரோவுடைய
ஆராதகியாக இருக்கலாம்
அவள்
காதல் சொல்லிகளிலிடத்தில் நின்று
வயது மறைத்திருக்கலாம்

அவள்
ஓராசை
ஒரு காதல்
ஒரு காமம்
ஒரு சோகம்
ஒரு பிரயாசை
ஒரு விரக்தி
ஒரு தனிமை
ஒரு மௌனம்
இவைகளுடைய
திரைச்சுமைகளாலான
புடைத்த
முலைகளை மறைக்கும்
தாவணி உடுத்தியவளாக இருக்கலாம்

அவள்
நிறங்களவி வார்ப்பிலிடும்
நிலைக்கண்ணாடியினிடையோ
சாளரத்தினிட

மேலும்

ம்ம்ம்ம் நன்றி 17-Jan-2017 8:02 pm
அருமை ... 17-Jan-2017 4:11 pm
Anuthamizhsuya - shenbaga jagtheesan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2017 7:30 am

கிளையில் அமர்ந்தது கிளி,
கீழே விழுந்தது-
கவிதை...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி...! 17-Jan-2017 7:00 pm
தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 17-Jan-2017 7:00 pm
ஆ ! அழகு ! 17-Jan-2017 8:39 am
நயமிக்க அழகியல் சிந்தனைகள் 17-Jan-2017 7:51 am
Anuthamizhsuya - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2017 9:18 pm

வாழும் ஆசை விட்டதோ
பற்றின்றி விழுகிறது
ஒற்றை இலை..

சிறு காற்றுக்கா
பெரும் புயலுக்கா
எதற்கு கோபம் இந்த இலை மேல்?

மண்ணை நோக்கி விழும்போதும்
ஆடிக்கொண்டே விழுவதேன்
ஒற்றை இலை..

காற்றின் தூளி ஆட்டத்தில்
தூங்கியபடியே மண்ணை அடைந்தது
ஒற்றை இலை..

குடும்பமே இதற்காய் கண்ணீர் வடிக்க‌
தன் மரவாழ்வு விட்டு
தவவாழ்வு காண விழுகிறது ஒற்றைஇலை..

மரத்திலிருந்து போது எவர் கண்ணிலும் படவில்லை
கீழே விழுந்தவுடன்
எறும்புகளுக்கு குடையானது ஒற்றை இலை..

தன்னை பெற்ற தாயை
காலடியில் விழுந்து வணங்கியது
ஒற்றை இலை..

மேலும்

அழகான வரிகள் . 17-Jan-2017 7:48 am
Anuthamizhsuya - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 12:01 pm

இங்கே நகரத்தில் நான் நலம் . அங்கே கிராமத்தில் நீ நலமா ? உன் கைகளாலாகிய தூண்கள் நலமா ? உன் குளிர்ச்சி நலமா ? நீ தந்த குளிர்ச்சியை என் மனமும் , உடலும் இன்னும் நினைவு வைத்திருக்கின்றன . நம் தெருக் கடைசியில் உள்ள பிள்ளையார் சிலை நலமா ? பிள்ளையார் சிலை பின்னால் உள்ள வயல் வெளிகள் நலமா ? மார்கழி மாதத்து பட்டங்கள் நலமா ? தட்டான் பூச்சிகள் நலமா ? தட்டான் பூச்சிகளைப் பார்த்தால் நான் கேட்டதாகச் சொல் . என் பெயரைக் கேட்டதும் அவைகள் மூஞ்சை திருப்பிக் கொண்டு பறந்து போகலாம் . அவற்றின் இறக்கைகளில் நூலில் கட்டி இழுத்து கொடுமை படுத்தியதற்காய் அவற்றிடம் மன்னிப்புக் கேட்டதாய் சொல் . எனக்காக இந்த உதவியை

மேலும்

Anuthamizhsuya - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2017 4:09 pm

தமிழில் பாரதியும் , பாரதியின் தமிழும் எப்போதுமே அழகு . எனக்குத் தெரிந்த உலகின் மிக அழகான இரு பெயர்கள் தமிழும் , பாரதியும் தான் . இந்த அழகான பெயர்கள் தான் என் கதையின் இரு குட்டி மனிதர்களுக்கும் .

என் கதையின் இந்த சுட்டிகளை நீங்கள் நன்றாக அறீவீர்கள் . தமிழும் , பாரதியும் உங்களுக்கு மிகவும் பரீட்சயமானவர்கள் தான் . இந்த சிறு மனிதர்கள் யாரென்று ஞாபகம் வருகிறதா ?

ஆம் , ஆம் அவர்கள் .. அவர்களே தான் . அதே... அதே ... அழுக்குச் சட்டைக்கு சொந்தக்காரர்கள் . அந்த செம்பட்டை முடி , கருத்த தேகம் , நலிந்த உடல்வாகு ... இவர்களுக்கே உரியது தான் . 'அக்கா பசிக்குதுக்கா காசு க

மேலும்

Anuthamizhsuya - J K Balaji அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2017 7:22 pm

ஓடும் குழந்தை
தரையில் முத்தமிட்டது
அம்மாவின் நிழல்

-ஜ.கு.பாலாஜி-

மேலும்

மனமார்ந்த நன்றிகள் சகோ...! 13-Jan-2017 5:18 pm
அழகு! 13-Jan-2017 1:03 pm
மனமார்ந்த நன்றிகள் தங்கையே...! 12-Jan-2017 8:33 pm
மனமார்ந்த நன்றிகள் சகோ...! 12-Jan-2017 8:32 pm
Anuthamizhsuya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2016 4:42 pm

டிசம்பர் மாதம் . கடைசி மாதம் என்பதால் மொத்த மாதங்களின் நினைவுகளையும் சேர்த்து டிசம்பர் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்ற மாதங்களை விட சற்று அதிகம் தான் .

என் சிறு வயதில் எனக்கு டிசம்பர் மாதங்கள் விடுமுறைக்காக பிடிக்கும் .பின் டிசம்பருக்கே உரிய கிறிஸ்துமஸ்க்காவும் , வெள்ளை தாடி கிறிஸ்துமஸ் தாத்தாக்காகவும் டிசம்பர் மாதங்கள் பிடிக்கும் . எங்கள் தெருவில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்களுக்கு பின்னால் பல முறை ஓடியிருக்கிறேன் . அவரிடம் சாகலேட் வாங்கி விட்டால், ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல் மகிழ்ந்திருக்கிறேன் . பின் மழைக்காகவும் எனக்கு டிசம்பர் மாதம்

மேலும்

Anuthamizhsuya - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 10:59 pm

காலக் கருவி ஏறி
கடந்த காலம் சென்று
தொலைத்த பால்யங்களை
மீட்டுக் கொண்டு வர ,

ஆத்தில தெரியும்
வானத்து மேகங்களை
தூண்டில் போட்டு
பிடிச்சி கொண்டாந்து
வீட்டில அடைக்க ,

அடைச்சு வைச்ச
மேகங்கள் மேல
ஏறி குதிக்க,

ஒரு நிமிசமாது
ஓரமா நின்னு
வைரமுத்து சார
பார்க்க ,

பரந்துபட்ட
கவிதை உலகில்
இறந்து பட்ட
புல்லாகவேனினும்
கிடக்க,

எங்க ஊர்
உப்பளத்தில் ,
உசிர் உறிஞ்சும்
வெயிலில்
ஒரு நாளாச்சும்
உப்பு மிதிக்க ,

வானம் பார்த்த
பூமியில் ,
ஒருவருசமேனும்
விவசாயியா
வாழ்ந்தோ , செத்தோ
பார்க்க ,

எனக்கு ஆசை !

மேலும்

நன்றி சார் . 15-Jan-2017 12:06 pm
Arumai 15-Jan-2017 10:32 am
கடினம் தான் . ஆனால் கவிஞன் யதார்த்தங்களுக்கு புறம்பால் நிற்கவோ , பயப்படவோ கூடாது . தங்கள் வாசிப்பிற்கும் , கருத்திற்கும் நன்றி சர்பான் 19-Nov-2016 5:51 pm
யதார்த்தங்கள் அறிவது இலகு ஆனால் இந்த யதார்த்தமாக வாழ்வது கடினம் 19-Nov-2016 8:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (54)

selvamuthu

selvamuthu

கோலார் தங்கவயல்
raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
Nivedha S

Nivedha S

கோவை
Anbu Chelian

Anbu Chelian

சிவகங்கை
JAHAN RT

JAHAN RT

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (55)

kitchabharathy

kitchabharathy

சென்னை
sivram

sivram

salem
sekara

sekara

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (56)

sekara

sekara

Pollachi / Denmark
user photo

sudhasaran

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே