Aruvi - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Aruvi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Mar-2017
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  175

என் படைப்புகள்
Aruvi செய்திகள்
Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2017 1:19 pm

பெண்பால்
விரும்பாத பால்
கள்ளிப்பால்

மேலும்

Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2017 12:55 pm

மின்மினி பூச்சிகளை
உலவவிட்டது யார்
வானத்தில் நட்சத்திரங்கள்

மேலும்

Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2017 12:51 pm

நிலவின் வெண்ணிற
ஒளியில் பூத்தது
மல்லிகை

மேலும்

Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2017 1:09 pm

கூட்டை விட்டு வெளியே
வரவில்லை குருவி
முழு அடைப்புக்கு ஆதரவு

மேலும்

Aruvi - AnbudanMiththiran அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 12:25 am

தமிழர் வாழ்வுரிமை என்பான்.
திராவிடர் முற்போக்கு கழகமென்பான்..
விடுதலை சிறுத்தைகள் என்பான்...
எதற்கெடுத்தாலும் தடையாய் வரும் தறுதலைக் கூட்டம்....
பெயருக்கு முழக்கமிடும்....
மொழிவெறி காட்டும்....
அதை நம்பியே ஜால்ரா தட்டுது ஒரு கூட்டம்....
கேட்டால் அரசியலாம்....
என்ன ஒரு முட்டாள்தனம்!
தமிழர்களே இன்னும் ஏமாளிகளாய் எத்தனை காலம் இருக்கப் போகிறீர்கள் இந்த அரசியல் ரவுடிகளை நம்பி???

மேலும்

இரண்டு நாள் பட்டினி போட்டுவிட்டு மூன்றாவது நாள் சோறு கொடுக்கிறான் . பட்டினிக்கு காரணமும் அவன் தான் . பட்டினி போட்டு பட்டினி போட்டு சோறு போடுவது தான் இன்றைய அரசியல் . அதிகாரம் பணம் இதற்காக ஒரு கூட்டம் தமிழ் மண்ணை அழிக்க ஒரு கூட்டம் எதற்காக போராட யாரை எதிர்த்து போராட நமக்காக ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்று . வருங்காலம் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும் என்று நம்பிக்கை 01-Apr-2017 12:21 am
நம் உரிமைக்கே நாமே நாயாக காவல் காக்கிறோம் என்பது த்தான் உண்மை. சாதி பெயரை சொல்லி கூடுகிறது கூட்டம். நாய் கூட ஓர் இனமாக கூடுமே, நாம் மனிதராக கூடினால் மட்டுமே நல்ல மாற்றம் பிறகும் கை கட்டி வாய் பொத்தி சொல்வதெல்லாம் செய்ய ஹிட்லர் ஆச்சி இல்லை, கை காட்டி மைதீட்டி நீ சொல்வதெல்லாம் செய்ய மக்களாட்சி இங்குண்டு. 30-Mar-2017 7:05 pm
நண்பர்களே, ஆதங்கத்தை மட்டும் பதிவு செய்து போவதில் என்ன பயன்? அட இந்த ஆளு பரவால்லப்பா னு யாரயாச்சும் சொல்லுங்க .. இவர்கள் மேலுள்ள விமர்சனங்கள் இருக்கட்டும், இதற்கான மாற்றுத் தீர்வு என்ன? 29-Mar-2017 10:35 pm
நல்லது சகோ. முன்னேற்றம் தொடரட்டும்.. 28-Mar-2017 7:23 pm
sankaran ayya அளித்த கேள்வியில் (public) PERUVAI PARTHASARATHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2017 7:15 pm

எதற்காக எழுதுகிறீர்கள் ?

1 . பெயர் புகழ் பெறுவதற்காக

2 .திரையில் பாடலாசிரியர் கதாசிரியர் ஆகலாம் என்பதற்காக

3 . பொழுது போக்கிற்காக அல்லது ஆத்ம திருப்திக்காக

4 . புதுக் கவிதை எல்லோரும் எழுதலாம் என்பதாலா ?

5 . கவிதை கதை கட்டுரை மூலம் சமூகத்தை மாற்றிவிட முடியுமா ?

6 . சொடுக்கிப் பார்த்தல் மட்டும் போதுமா கருத்தைப் பதிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

7 . பொது வாசகர்கள் இல்லாத இணையம் மூலம் இலக்கிய அங்கீகாரம் பெறுவது சாத்தியமா ?

-----கவின் சாரலன்

மேலும்

இனிமையான நோக்கம் . முயற்சியில் வென்றிட வாழ்த்துக்கள் . கருத்திற்கு நன்றி கவிப்பிரிய பாக்கியவதிலக்ஷ்மி அன்புடன்,கவின் சாரலன் 31-Mar-2017 8:18 am
என் திறமையை வளர்க்க.. தமிழை மதியாதோரிடம் இவ்வளவு இனிமை தமிழ் என உணர்த்த சிறு முயற்சி 30-Mar-2017 5:09 pm
"எனது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழித்திட............ எனது மன நிம்மதிக்காக........ " ----அருமை . மன நிம்மதியை கவிதை நிச்சயமாக நல்கும். உணர்வுகளின் வார்த்தை வடிகால் கவிதை . கருத்திற்கு நன்றி கவிப்பிரிய தங்கமணிகண்டன் அன்புடன்,கவின் சாரலன் 28-Mar-2017 6:39 pm
எனக்குள் இருக்கும் தமிழ் புலமையை நானே அறிந்துகொள்ள..... எனது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழித்திட............ எனது மன நிம்மதிக்காக........ இதுவே நான் எழுத காரணம்....... 28-Mar-2017 6:32 pm
Aruvi - Shagira Banu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2017 4:04 pm

தமிழ் சொற்களும் என் மீது காதல் வயப்பட்டது போலும்,

இரவில் என்னை தூங்க விடுவதில்லை,

பகலில் எந்த வேலை செய்யவும் விடுவதில்லை,

எந்நேரமும் கண்முன் ரீங்காரமிட்டு கொடுக்கிறது தொல்லை,

இது எங்கே போய் முடியுமோ தெறியவில்லை

இருப்பினும் அதனை தவிர்க்கும் துணிவு ஒருபோதும் இருந்ததில்லை,

நானும் அவற்றின் மீது காதல் கொண்டேன் போலும்

-என்றும் அன்புடன் ஷாகி

மேலும்

தமிழின் நெருக்கத்தில் கவிதைகளின் கருவறை தாய்மையடைகிறது 19-Mar-2017 11:47 pm
அருமை ஷாகி. தமிழ் மீது கொண்ட காதல் நல்ல கவிஞரை உருவாக்கும். வாழ்க. தொடர்க. வளர்க. 19-Mar-2017 10:56 pm
Aruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2017 4:50 pm

உன் அருகில் இருக்கத்தான் ஆசை!
யாரும் இல்லாத பொழுது...
உன் கையால் பூச்சூட ஆசை!
தெரிந்தவர் வராத பொழுது...
நீ கொடுத்த சேலையை உடுத்த ஆசை!
அம்மா அறியாத பொழுது ...
உன் கையோடு கைசேர்த்து நடக்க ஆசை!
பக்கத்தில் யாரும் இல்லாத பொழுது...
ஊரறிய இவையெல்லாம் நடக்க ஆசை!
உன்னவளாய் நான் மணம் சூடும் பொழுது...

மேலும்

அருமையான வரிகள், வாழ்த்துக்கள் பெருவை ஐயா தங்கள் கவிதை மிக அருமை.. நன்றி, தமிழ் ப்ரியா... 16-Mar-2017 7:19 pm
ஆயுள்முழுதும் இணைந்திருக்க.. ஆசை! எழுத்துச் சேலையுடுக்க.. ஆசை! வார்த்தைப் பூவைச்சூட.. ஆசை! தமிழுனைக் கைகோர்த்து எழுந்துநடக்க.. ஆசை! மணக்கோலமெனும் எண்ணக்கோலம்கொண்டு.. இணைந்துநாம் ஆசிபெற.. ஆசை! ஊரறிய பாடிக்கொண்டு.. எழுத்துதளத்தில்..வலம்வர.. பேராசை! 16-Mar-2017 5:56 pm
Aruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2017 3:50 pm

எழுந்தன காளைகள்!
அதிர்ந்தது அலைகடல்!
இரத்தமின்றி ஒரு புரட்சி!
இளகாதோர்க்கோ மிரட்சி!
மீண்டெழுந்தது தமிழகம்!
மாண்டது அடிமையினம்!
அரியாசனம் சரியாசனமானது!
மலர்ந்தது மக்களாட்சி!
வாயில்லா ஜீவன்களால்
வாய்பூட்டுக்கு கிடைத்தது விடுதலை!
வாடிவாசல் காளையே வா!
வாட்டம் நீக்கி மகிழ்ச்சியைத் தா!

மேலும்

Aruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2017 11:07 pm

சிந்தனை கிழிக்கும் பேனா!

உண்மை மை எடுத்து
நேர்மை மை எழுத்தால்
கடமையை வெளிக்காட்டும் பேனா!
முள்ளிலும் சொட்டும் பேனாவின் இரக்கம்!
எனக்கோ அதன்மீது எந்நாளும் கிறக்கம்!
நீயா நானா என்பவரை
தானாய் விழவைக்கும் பேனா!
உன் நாவால் நான் வாழ்ந்தேன்!
என் நாவால் இதை ஒப்புகிறேன்
பேனா முள்ளால் கிழிந்தவரும் உண்டு!
வீழ்ந்து எழுந்தவரும் உண்டு!
நீயின்றி நானா!
பொய் சொல்லாது என் பேனா!
ஒரு நாளும் உனை நான் மறப்பேனா!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ALAAli

ALAAli

சம்மாந்துறை , இலங்கை
Ssrimathi

Ssrimathi

கோவை
prasanth 7

prasanth 7

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ALAAli

ALAAli

சம்மாந்துறை , இலங்கை
prasanth 7

prasanth 7

வந்தவாசி [தமிழ்நாடு ]
PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78

இவரை பின்தொடர்பவர்கள் (6)

PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78
prasanth 7

prasanth 7

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே