Asokan Kuppusamy Profile - கே அசோகன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  கே அசோகன்
இடம்:  திருவள்ளுர்(தற்பொழுது மே
பிறந்த தேதி :  13-Dec-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2015
பார்த்தவர்கள்:  561
புள்ளி:  698

என்னைப் பற்றி...

அரசு பணி (ஓய்வு) . கவிதை மற்றும் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. தற்போது, தங்களது எழுத்தில் இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது தற்காலிகமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளயத்தில் குடியமர்ந்துள்ளேன். மேலும், என்னுடைய சிறுகதைகளை ”அம்மா” என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்

என் படைப்புகள்
Asokan Kuppusamy செய்திகள்
Asokan Kuppusamy - Asokan Kuppusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2017 10:04 pm

“கதாகாலேட்சபம் செய்யும் கந்தனடிகள்…...தனக்குள் “தான்தான்” உபன்யாசம் செய்வதில் வல்லவர் என்றும், எல்லோரும் ரசித்து தலையாட்டல் தனக்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்”என புகழ்ந்து கொண்டார்
மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் உபன்யாசம் செய்து ஏகபிசி...ஓய்வே இல்லை.
வல்லவர்தான் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை கொஞ்சம்...சே...சே.. கொஞ்சமில்லை...ரொம்பவே பந்தா பார்ட்டி…. அவ்வளுவுதான்….
பிறந்தது என்னமோ ...ஒரு குக்கிராமம்… பிழைப்புக்காக நகரம் வந்து ...வளர்ந்து இப்பொழுது “கிராமத்தை மறந்த பிரபல உபன்யாசர்
அந்த குக்கிராம பள்ளி நிர்வாகி பராமானந்தம், தனது பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு “பக்தியை”

மேலும்

Asokan Kuppusamy - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2017 10:04 pm

“கதாகாலேட்சபம் செய்யும் கந்தனடிகள்…...தனக்குள் “தான்தான்” உபன்யாசம் செய்வதில் வல்லவர் என்றும், எல்லோரும் ரசித்து தலையாட்டல் தனக்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்”என புகழ்ந்து கொண்டார்
மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் உபன்யாசம் செய்து ஏகபிசி...ஓய்வே இல்லை.
வல்லவர்தான் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை கொஞ்சம்...சே...சே.. கொஞ்சமில்லை...ரொம்பவே பந்தா பார்ட்டி…. அவ்வளுவுதான்….
பிறந்தது என்னமோ ...ஒரு குக்கிராமம்… பிழைப்புக்காக நகரம் வந்து ...வளர்ந்து இப்பொழுது “கிராமத்தை மறந்த பிரபல உபன்யாசர்
அந்த குக்கிராம பள்ளி நிர்வாகி பராமானந்தம், தனது பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு “பக்தியை”

மேலும்

Asokan Kuppusamy - shikuvara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2017 3:59 pm

காந்தீயம் தேவையில்லை
காந்தித்தாள்கள் போதும்...

மனசாட்சி தேவையில்லை
அரசாட்சி போதும்...

கொள்கைபிடிப்புத் தேவையில்லை
குரங்கு குணம் போதும்..

அரவணைப்பு தேவையில்லை
அராஜகம் போதும்...

கொடுத்தவாக்கை காப்பாற்றத் தேவையில்லை
கொடுவாளை எடுத்தால் போதும்...

ஜனநாயகம் பற்றி பேசத்தேவையில்லை
ஜால்ரா போடத் தெரிந்தால் போதும்...

ராஜதந்திரம் தேவையில்லை
குள்ளநரி குணம் போதும்...

நாமும் நாட்டை ஆளலாம்...
நஞ்சை நன்மக்களுக்கும்...
நாளும் கொடுத்து விட்டு...
நல்லறிஞர் என்ற பெயரோடு...
நல்வாழ்க்கை வாழலாம்...
நாடும் நமக்குச் சொந்தம்...
நரிகுணமும் நமக்குச் சொந்தம்...
நாதியில்லா மக

மேலும்

நன்றி சகோ... 27-May-2017 12:54 pm
பலரின் ஏமாற்றத்தில் சிலரின் சொகுசு வாழ்க்கை 27-May-2017 10:23 am
நன்றி சகோ... 24-May-2017 8:40 am
கவியெனும் சாட்டை சுழற்றல்... 23-May-2017 10:10 pm
Sureshraja J அளித்த போட்டியை (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் இந்த உலகம் தூற்றுவதேன்
இந்த தலைப்பை வைத்துக் கொண்டு
கவிதை
கதை
கட்டுரை
எழுதவும்

மேலும்

Asokan Kuppusamy - sankaran ayya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2017 7:06 pm

மேயின் முடிவில்
வெய்யில் விடை பெறும்
ஜூனின் வருகையில்
முகில்கள் வந்து கைகுலுக்கும்
குளிர்ச் சாரல் மழைத் தூறல் ..
அலை நடந்து கரை கடந்து
நடந்து வரும் பருவக் காற்று !

-----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் அன்புடன்,கவின் சாரலன் 20-May-2017 4:25 pm
வானிலை மாற்றத்தில் மேனியில் மாற்றங்கள்... 19-May-2017 2:33 pm
மயிலாடும் சாரலில் மனமாடும் தூரலில் மகிழ்ந்தாடும் நெஞ்சினில் கவி பாடும் தமிழ் ! ----அழகிய கவிதைக்கு வழி வகுத்த இனிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய படைப்பாளி அன்புடன்,கவின் சாரலன் 19-May-2017 8:17 am
மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 19-May-2017 8:12 am
Asokan Kuppusamy - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2017 9:20 pm

” இரமா இங்க கிட்டவந்து காதை கொடேன் என்று “ஒரு வாரமாய் குசுகுசுவென பேசுவதும், தீவிரமாக அலைபேசியில் “என்ன அத்தீம்பேர் நீங்க சொன்ன இடத்துல நல்லா பார்த்துப்பாங்களா? வேளைக்கு நல்ல சாப்பாடு போடுவாங்களா, காய்ச்சல், இருமல் வந்தா மருத்துவ வசதி செய்து கொடுப்பாங்களா ? பணம் எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை“ மீனாட்சிக்கு ஒரு இடைஞ்சலும் வந்துட கூடாது ”சத்தமாக இப்படி இரமாவும், சரவணன் பேசுவது…. மீனாட்சிக்கு எரிச்சலாகவே இருந்தது.
“எரிச்சலான மீனாட்சி ….. அந்த பாழா போனவன் முன்னாடியே போய்டான், நான் கிடந்து அவதிப்பட வேண்டியதாயிருக்கு…… ஒடம்பு ஒத்தநாடியா போய்ட்டுது, ஏதோ ஒரு கவள சோறு இறங்கினா போதும்கிற அளவு

மேலும்

Asokan Kuppusamy - Asokan Kuppusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2017 10:16 pm

உழுதபின்னே வானிலே உச்சிவெயில் உறைக்க
பழங்கஞ்சி வெங்காயம் உண்டு – தொழுதே
நன்றாகவே விவசாய மினிதே செய்பவரே
என்றென்றும் வாழ்க இனிது!


விதைநெல் பதப்படுத்தி வீட்டிலே சேர்த்து
புதையலாய் காத்தே என்றும் – அதையே
மண்ணிலே விதைத்தே மகிழ்வோடு வாழ்பவர்
என்றென்றும் வாழ்க இனிது!

மண்மிதித்தால் ஒட்டுமென மண்ணை மாற்றி
விண்ணின் மழைக்காய் ஏங்கும் – கண்விரித்தே
மண்ணையே ஏக்கத்தோடு மருகிநிற்கும் உழவா
என்றென்றும் வாழ்க இனிது!

ஆடிக்கார் இருக்குமென ஆவேச கூச்சலிடை
நாடிவந்த உழவர்கூட்டம் நலனே – நாடி
என்றுமே குரல்கொடுக்கும் இனிய உழவா!
என்றென்றும் வாழ்க இனிது!

கவிஞர்

மேலும்

மிக்க நன்றி... வெண்பா என்று தலைப்பிட்டு பதிவிட்டால், வெண்பா புலவர்கள் குறைகளென்று குதறி எடுத்து விடுவார்கள். ஆதனால் கவிதை என்று பதிவிட்டுள்ளேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 04-May-2017 12:03 pm
நேரிசை வெண்பா அருமை... வியர்வையில் குளிக்கும் விவசாயிகள் விளைநிலமும் நனைய வேண்டும்... 04-May-2017 11:57 am
Asokan Kuppusamy - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2017 10:16 pm

உழுதபின்னே வானிலே உச்சிவெயில் உறைக்க
பழங்கஞ்சி வெங்காயம் உண்டு – தொழுதே
நன்றாகவே விவசாய மினிதே செய்பவரே
என்றென்றும் வாழ்க இனிது!


விதைநெல் பதப்படுத்தி வீட்டிலே சேர்த்து
புதையலாய் காத்தே என்றும் – அதையே
மண்ணிலே விதைத்தே மகிழ்வோடு வாழ்பவர்
என்றென்றும் வாழ்க இனிது!

மண்மிதித்தால் ஒட்டுமென மண்ணை மாற்றி
விண்ணின் மழைக்காய் ஏங்கும் – கண்விரித்தே
மண்ணையே ஏக்கத்தோடு மருகிநிற்கும் உழவா
என்றென்றும் வாழ்க இனிது!

ஆடிக்கார் இருக்குமென ஆவேச கூச்சலிடை
நாடிவந்த உழவர்கூட்டம் நலனே – நாடி
என்றுமே குரல்கொடுக்கும் இனிய உழவா!
என்றென்றும் வாழ்க இனிது!

கவிஞர்

மேலும்

மிக்க நன்றி... வெண்பா என்று தலைப்பிட்டு பதிவிட்டால், வெண்பா புலவர்கள் குறைகளென்று குதறி எடுத்து விடுவார்கள். ஆதனால் கவிதை என்று பதிவிட்டுள்ளேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 04-May-2017 12:03 pm
நேரிசை வெண்பா அருமை... வியர்வையில் குளிக்கும் விவசாயிகள் விளைநிலமும் நனைய வேண்டும்... 04-May-2017 11:57 am
Asokan Kuppusamy - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2017 10:29 pm

பூச்சிக் கொல்லியில்
முடிகிறது
ஆந்திரத்தில்!
தூக்கு கயிற்றில்
ஊசலாடுகிறது
பஞ்சாபில்!
தற்கொலைகளில்
தள்ளப்படுகிறது
கர்நாடக, கேரளா
விவசாயிகளின்
வாழ்க்கை
முன்னேறுகிறது
டிஜிட்டல் இந்தியா!

ஆசையாய்
வாங்கி வந்த
குல்லாவைப் பார்த்தே
மகிழ்ந்தான்
அடுத்த நொடியே
அதிர்ந்தான்
அரைஞான் கயிற்றின்கீழ்
காணாமற் போயிருந்த்து
கோமணம்
விவசாயின் மகன்!

---கவிஞர் கே. அசோகன்

மேலும்

Mohamed Sarfan அளித்த படைப்பில் (public) RKUMAR மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2017 8:14 am

தூவும் மேகம்
மேவும் நதிகள்
நடுவே பூக்கும்
பூக்கள் விந்தை

வானின் சாயம்
மின்னல் பாயில்
பனியின் புடவை
மலரின் கூந்தல்

மஞ்சள் படிந்த
மனதின் பக்கம்
குருதிக் கடலில்
நீந்தும் கப்பல்

நுங்கின் இளமை
பருவக் கனவில்
புற்றின் பாம்பு
களவின் தேர்வு

மீன்கள் பாயும்
குருட்டு நதியில்
முத்தின் பிறப்பு
வசந்த காலம்

இரவின் கதவில்
பகலின் வாயில்
நிழலில் கானல்
விதியின் மர்மம்

குற்றம் புரிந்த
காற்றின் துயர்
ஆற்றுகின்றது
புல்லாங்குழல்

வேரின் நுனியில்
படரும் பசளை
பசுமை தளிரின்
ரகசிய அஞ்சல்

ஒளியின் கருவில்
நிலவின் விளக்கு
ஆடை மாற்றும்
கிழக்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-May-2017 8:43 am
ஒவ்வொரு இடமும் மனதில் ஒட்டிக் கொள்கிறது. அமுதில் தோய்ந்த தூரிகையில் கசியும் கவித்துளிகள். அருமை... வாழ்த்துக்கள் நண்பா... 30-Apr-2017 10:31 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Apr-2017 10:29 am
அடடா என்ன அழகு ரசனை வரிகள் ,,,, உள்ளம் கரைகிறது சகோ ,,,,, சிறப்பு ,,,,! 28-Apr-2017 4:36 pm
Asokan Kuppusamy - Asokan Kuppusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 1:54 pm

சித்திரையில் கதிரவன் வெம்மை தணிய
சோலைகள் தேடித்தான் ஓடிடு வோம்!
கத்தும்கடல் ஓரமதில் கூட்டமு மாய்
கைகோர்த்தே காலார நடந்தி டுவோம்!
தித்திக்கும் அத்தைமகள் சொல் வியந்தே
தேடித்தான் அவள்வீடு சென்றிடு வோம்!
எத்திக்கும் தமிழனவன் புகழ் பரப்ப
இனிய புத்தாண்டை போற்றிடு வோமே!

கோடையின் தாக்கம் அதிக மானால்
குழந்தைகள் தாங்கா(து) என்றே எண்ணி
கோடை விடுமுறை அறிவித் தால்
கோடை பயிற்சிக்கே அனுப்பு கின்றோம்!
கோடை வெயிலுக்கு பயந்து தானே
குளுகுளு மலைத்தளம் ஓடிடு வோமே!
கூடையில் புங்கஇலை பரப்பி தானே
குளிர்தரும் நுங்குதின்று மகிழ் வோமே!

கடுக்கும் வயிற்றுவலி போக்குதற

மேலும்

புத்தாண்டு வாழ்த்துகளுடன் தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி 12-Apr-2017 7:48 pm
பொன்னான கருத்துக்கு மிக்க நன்றி 12-Apr-2017 7:47 pm
அருமை இனிமை சித்திரைக் கவிதை . சித்திரை வாழ்த்துக்கள் . அன்புடன்,கவின் சாரலன் 12-Apr-2017 7:21 pm
வருங்காலம் நல்லதாய் அமையட்டும் அனைவருக்கும் பிராத்திப்போம் 12-Apr-2017 7:10 pm
Asokan Kuppusamy - Asokan Kuppusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2017 9:53 pm

குரங்குக்கு
கோலும்!
ஆனைக்கு
அங்குசமும்
ஆணுக்கு
பெண்ணும்
அரசியல்வாதிக்கு
வாக்குச்சீட்டும்
அதிரடியாய்
அடக்கும்
ஆயுதங்களே !

கவிஞர் கே. அசோகன்.

மேலும்

ஆம் தங்கள் கருத்து உண்மைதான் மிக்க நன்றி 12-Apr-2017 10:25 pm
நீங்கள் திருத்தி என்ன பயன். சமையல் அறை உபகரணங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்று சில அனுபவசாலிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன் . அன்புடன்,கவின் சாரலன் 12-Apr-2017 10:19 pm
பெண்களே ஆண்களை கட்டுப்படுத்தும் அழகான ஆயுதங்கள் என்ற பொருளில் பதிவிட்டுள்ளேன். குறையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள், திருத்தி கொள்கிறேன் 12-Apr-2017 9:46 pm
ஆஹா அருமையான ஆயுதங்கள் . ஆணுக்கு பெண்ணும் ---என்று எழுதினீர்கள் சரி ஆனால் அவர்கள் அதிரடியாய் அடக்கும் ஆயுதங்கள் எவை என்று சொல்லவில்லை அன்புடன்,கவின் சாரலன் 12-Apr-2017 9:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

Vaasu Sena

Vaasu Sena

புதுக்கோட்டை
raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
gangaimani

gangaimani

மதுரை
RKUMAR

RKUMAR

புதுவை
Kalairavi123

Kalairavi123

திண்டிவனம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

gangaimani

gangaimani

மதுரை
RKUMAR

RKUMAR

புதுவை
Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (19)

Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
Prakash K Murugan

Prakash K Murugan

சேலம், தமிழ்நாடு
dineshdt

dineshdt

ஈரோடு
மேலே