C. SHANTHI - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  C. SHANTHI
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  07-Jun-1963
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Oct-2011
பார்த்தவர்கள்:  5832
புள்ளி:  5197

என்னைப் பற்றி...

இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....

என் படைப்புகள்
C. SHANTHI செய்திகள்
C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2017 7:55 am

#ஆட்சியாளருக்கு ஓர் கடிதம்

மாண்புமிகு ஆட்சியர்க்கு வணக்கத்துடன் வாழ்த்து
நல்லாட்சி புரிந்திடணும் நாட்டுமக்களையே காத்து
நீதி நேர்மை நாட்டினிலே நிலவிட வேண்டும்
அந்த நேர்மையிலே நாடுயர்ந்து ஒளிர்ந்திட வேண்டும்..!

ஆரம்ப கல்விக் கூடம் ஆயிரந்தான் இருந்தும்
ஆகவில்லை இன்னுந்தான் ஏழைக்கு கல்வி சொந்தம்
கடைவிரித்து பேரமும்தான் தேர்வு முடிவு நாளில் - கல்வி
கைவிரிக்க கண்ணீர்தான் ஏழைகளின் கண்ணில்..!!

எத்தனையோ இலவசங்கள் தருவதெல்லாம் வீணே
கல்வி இலவசந்தான் ஏழைக்கென்று ஆகட்டுந்தான் உடனே
கல்வி விற்போர் முகவரையே கண்டறிய வேண்டும்
கைவிலங்கு பூட்டியவரை சிறைபிடிக்க வேண்டும்..!

கள்ளுக்கடை

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 10:09 am

கண்ணீரே.. தண்ணீராய்..!

விழி மூடிக்கொண்ட வானத்தில்
துளிர்க்க வில்லை வியர்வையும்
நிர்வாணப்பட்ட நிலத்திற்கு
நிவாரணங்கள் இல்லை..!

வறட்சி ஆடை உருவியதால்
அவமானத்தால் வாய் பிளந்து
உயிரையும் விட்டது
விடம் அருந்தாமலேயே நிலம்..!

மக்கிப்போகாத பூமி
மழை தரும் உயிருக்காய்
மறுபிறவிக்கான காத்திருப்புகளில்..!

ஏரிக்கரையின் ஓரங்களில்
அழகு பார்த்துக்கொண்டிருந்த மரங்கள்
முகம் பார்த்து நாளாகிறது..!

ஆற்றின் குறுக்கே
படகு சவாரி செய்தவர்கள்
பாத சாரியாய் கடக்கிறார்கள்..!

சித்திரை வெயில் தாளாமல்
ஆற்றில் குளியலிடும் விடலைகள்
யாரையும் காணவில்லை
ஆற்றையும் சேர்த்தே...!

தாம

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 9:36 am

உழைப்பே உயர்த்தும் உன்னை..!

விதைக்காது முளைக்காது எதுவும்
உழைக்காது உயராது வாழ்வும்
சோம்பித் திரிதலை விலக்கு - உழைத்து
வியர்வை சிந்த வெளிச்சமே உனக்கு...!!

அடுத்தவன் உயர்வினில் ஏன் பொறாமை
கால விரயந்தான் இதை கவனத்தில் வை
உந்தன் உழைப்பினில் உன் எண்ணம்
என்றும் இருந்தால் உயர்வாய் திண்ணம்..!

இளமையில் உழைப்பினை பழக்கு
அது உன் முதுமைக்கும் ஏற்றிடும் விளக்கு .
எத்தொழில் செயினும் உயர்வுண்டு - உயர்ந்திட
ஊரே வியந்திடும் உனைக் கண்டு..!

செய்யும் தொழிலே தெய்வம் - அந்த
திறமைதான் நமது செல்வம்
இது பட்டுக்கோட்டையின் பாட்டு
நித்தம் பாடுபட்டு இதை பறைசாற்று..!!

வெற்றியின் த

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 9:27 am

#மை..

நங்கை விழி மை சூட
நல்லழகு கெண்டையாடும்
முள்ளேதும் தைக்காமல்
தூண்டிலிடும் காளையரை
வீழ்ந்தவர்கள் எழுவதில்லை
வசியமாம் விழியின் மையும்..!

தெருத் தெருவாய் வருவார்
வாக்குறுதியாய் தருவார்
வாக்குகளை பெற்றுவிட்டால்
மறதி நோய் ஐந்தாண்டு
தொடர்கதையாய் நடைமுறையில்
விடுகதைதான் விரல் மையும்..!

கொள்ளை கொலை புரிவார்
கொடும்பாவம் செய்திடுவார்
பணம் படைத்தோர் ஆனதனால்
விலைபோகும் கொலை யாவும்
தீர்ப்பெழுதும் கோல் வழிய
பொய் நிரப்பும் பொல்லா மையும்..!

ஊரான் பொருள் யாவும்
உவகையுடன் கொள்வார்
பேராசை வந்ததென்றால்
பலியிட சிறிதும் தயங்கார்
பதிந்திடுவார் பத்திரமும் - ப

மேலும்

C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2017 11:15 am

#வாடி வாசல்.. வாடா வாசல்..!

வீரத்தின் அடையாளம் ஏறு தழுவல்
காளைக்கும் காளையர்க்கும் நடக்கும் மோதல்
ஆதிகாலம் தொட்டுவந்த விளையாட்டன்றோ
போதுமென பூட்டி வைப்பார் இனியும் உண்டோ..?

மூக்கணாங் கயிறிட்டார் மூன்றாண்டு காலம்
முடங்கி கிடந்த காளை இனி முரண்டே ஓடும் - தமிழர்
தொடை தட்டி நிற்கின்றார் வீரர் என்று
மடை திறந்த மகிழ்ச்சிதானே மனதில் கொண்டு..!

வரலாறு காணாத புரட்சி கண்டார் - தமிழர்கள்
தீரர்கள் தரணியுமே அறியச் செய்தார்
புரட்சியொன்று வெடிக்க செய்த சல்லிக்கட்டு
பீட்டாவை ஓட்டியதே துரத்திக்கிட்டு...!

வாடி வாசல் வீதியெங்கும் திருநாள் காணும்
வீரம் கொண்ட காளையரின் அழகு கோலம்
தமி

மேலும்

மிக்க நன்றி தோழமையே.! தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 28-Apr-2017 10:39 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள தோழமை கவிஞரே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 3:25 pm
C. SHANTHI அளித்த படைப்பில் (public) gajapathi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2017 5:33 pm

#உண்மையே உன் விலை என்ன..?

முழு பூசணிக்காய் சோற்றுக்குள்
என்றதெல்லாம் சங்க காலம்
முழு பூசணிக்காய்
சோற்று பருக்கைக்குள்
நம்பித்தான் ஆக வேண்டும்
கலிகாலத்தில்....!

உண்மையை குப்பிக்குள் அடைத்துவிட்டு
பொய் காற்றில் ஒத்து ஊதல்
ஏகாந்தமாயிருக்கிறது
சாதகமானவர்களுக்கு
இனிக்கத்தான் செய்கிறது
அரசியல் பந்திகளில்..!

நேரத்திற்கேற்ப பசப்பு மொழிகள்
காரியம் நிறைவேற
உண்மையின் கண் கட்டப்படுகிறது
சில நேரங்களில்..!
புதைக்கப்படுகிறது
பல நேரங்களில்..!

சாட்சியமற்றுப்போவதற்கு
விலை நிர்ணயங்கள்
பலவாறான உண்மைகளுக்கு
பட்டியலிட்டு...!

அரிச்சந்திரர்களுக்கு
உண்மையின் விலை
அறிந

மேலும்

ஆழமான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி 31-Jan-2017 3:12 pm
மிக்க நன்றி சகோ..! நான் நலம். தாங்கள் நலமா..? 10-Jan-2017 5:33 pm
மிக்க நன்றி சகோ..! 10-Jan-2017 5:32 pm
சரியா சொன்னேங்க ....... எப்படி இருக்கீங்க சாந்தி ......நலமா ...... 10-Jan-2017 11:28 am
C. SHANTHI அளித்த படைப்பில் (public) sethuramalingam u மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2016 9:56 pm

நோட்டுக்கு வேட்டு

நாட்டுக்குள்ள வீட்டுக்குள்ள பெட்டிக்குள்ள
காந்தியோட கணக்குலதான் கள்ளப்பணம்
கட்டுக்கட்டா தூங்க வெச்சி அழகு பாத்த
பம்மாத்து காரருக்கு பதமா வேட்டு..!

ஊரையடிச்சி ஒலையிலதான் போட்டு போட்டு
சேர்த்த பணம் அத்தனைக்கும் வந்தது வேட்டு
மாரடிச்சி அழறாங்க மறைவா நின்னு
உழைக்காம சேர்த்த பணம் உதவாதுன்னு..!

காந்தி மட்டும் சிரிச்சாரு நோட்டுக்குள்ளே
நோட்டுந்தானே சிரிக்குதிப்போ நாட்டுக்குள்ளே
பேரிச்சை கொண்டுதான் சேர்த்த பணமும்
பேரிச்சை பழத்தையும் காணல அதுவும்..!

ரோடுன்னும் பாலமின்னும் ஒப்பந்தம் போட்டு
ரொக்கமா "அடிச்சாங்க" காந்தி நோட்டு
அக்கம் பக்கம் அறியாம சேர்த்த சொத்து

மேலும்

மிக்க நன்றி சகோ.. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 06-Jan-2017 4:45 pm
மிக்க நன்றி ப்ரியா. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 06-Jan-2017 4:45 pm
மிக்க நன்றி சகோதரரே. தாமதமான பதிலுக்கு வருத்தங்கள். 06-Jan-2017 4:44 pm
அருமை .........சாந்தி மோடியின் முடிவு சரிதான் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர் .. பண முதலைகள்தான் ஏற்றுக்கொள்ளவில்லை ...... 09-Dec-2016 12:35 pm
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2016 11:03 pm

#வர்தா

நடா புயல் ஜீவனற்று
தடுக்கி விழுந்தது கண்டு
வர்தாவே
நீ நையாண்டி செய்திருக்கக்கூடும்..!

வங்கக்கடலில் பம்பரம் சுழற்றி
அலை கயிற்றால்
கரையோர படகுகளை
சுருட்டிக் கொண்டாயே..!

மீன் பிடிக்க வந்த அப்பாவிகளை
ஏன் பிடித்துக் கொண்டாய்
வலைக்கயிறு போட்டு
உயிரையும்தான்..!

பஞ்ச பூதங்களில் காற்றும் ஒன்றாம்
புரிந்துவிட்டது புயலாய் வரும்போது
நீ மாபெரும் பூதம்தான்..!

கரையேறிய வர்தா
காமவயப்பட்டிருந்ததா..?
கைக்கு அகப்பட்ட மரங்களையெல்லாம்
திமிர திமிர கற்பழித்துவிட்டதே,,?
கற்புள்ள மரங்கள்
கட்டையை சாய்த்து கட்டையாய்..
இனி கரியாகவும் கூடும்..!

உர

மேலும்

மிக்க நன்றி சர்பான். 06-Jan-2017 4:43 pm
யுகத்தில் இன்று கழிகின்ற பொழுதுகள் ஒவ்வொன்றும் இயற்கையின் சீற்றத்தால் ஏதோ ஓர் பெயர் வாங்கிய மறைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2016 11:05 am
C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Mar-2015 3:55 pm

கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....

"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.

நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)

மேலும்

C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) தர்சிகா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Jul-2014 1:01 pm

https://www.youtube.com/watch?v=GV8E90p7xkgபூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )

நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..

பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!

நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)

மேலும்

நிதர்சனம் நன்று, கைகுலுக்குங்கள் உறவுகளோடும் / நண்பர்களோடும் ...... வாழ்க்கை சுகந்தமாய்... - மு.ரா. 06-Mar-2016 9:54 pm
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி. 19-Jul-2014 7:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அபி சார். இதே தலைப்பில் இன்னுமொரு கவிதை எழுதி இருக்கிறேன். இங்கு பதிய நேரமில்லை. நேரம் கிடைத்தால் பதிகிறேன். 19-Jul-2014 7:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுந்தரேசன். 19-Jul-2014 7:11 pm
C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jun-2014 12:31 pm

எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்

உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்

"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!

மேலும்

அழகு.. 03-Jan-2015 10:03 am
அருமை !நீங்கள் சொன்னால் தமிழுக்கு பெருமை ! 29-Sep-2014 12:05 am
அருமையாக சொன்னீர்கள் அக்கா 29-Sep-2014 12:02 am
அருமை !!!! 28-Sep-2014 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (427)

பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
சரண்யா

சரண்யா

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (429)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (432)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே