தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தாமோதரன்ஸ்ரீ
இடம்:  கோயமுத்தூர் (சின்னியம்பா
பிறந்த தேதி :  07-Aug-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2017
பார்த்தவர்கள்:  4115
புள்ளி:  796

என்னைப் பற்றி...

என்னை பற்றி
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்

1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது

2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.

3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய
மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவல் தேர்ந்தெடுத்துள்ளது
6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்

என் படைப்புகள்
தாமோதரன்ஸ்ரீ செய்திகள்
தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2024 10:23 am

யானையும் மூப்பனும்-
ராணி வார இதழ் பத்தாயிரம் பரிசு கொடுத்தது

மலையை ஒட்டி சமவெளியான மாந்தோப்புக்குள் குடிசைக்குள் நல்ல உறக்கத்தில் இருந்தாலும் மூப்பனின் காதுக்குள், வெளியே “ஹோவென” இரைச்சலிட்ட வண்ணம் பெய்து கொண்டிருந்த மழையிலும் தட்..தட்..எனும் சத்தம் தெளிவாக கேட்டது. சட்டென உறக்கம் போன இடம் தெரியாமல் போய் கண்ணை விழித்தார். முப்பது வருடங்களுக்கு மேல் சுவாசம் உணரும் யானையின் வாசம்.
வயதின் தளர்ச்சியால் உடனடியாக எழ முடியவில்லை. அப்படியே மல்லாந்த வாக்கில் கட்டிலின் மேல் படுத்து கிடந்தார். ஏதோ பாரமான பொருள் ஒன்று அவர் தலைக்கு மேலும் , அதன் பின் அருகருகே நகர்வதை படுத்தாறே உணர முட

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2024 11:08 am

விளக்கின் வெளிச்சம்
இரவில் குடிசை
ஒன்றில்
மாடத்தில் இருக்கும்
சிறு விளக்கின்
திரி நுனியில்
எரியும் தீ

அப்பொழுது உள்
நுழைந்த
காற்றின் கான
இசைக்கு ஏற்றவாறு
நடனமாடுகிறது

எதிர் சுவரில்
அதை இரசித்து
நிழல் உருவங்களும்
நடனமாடுகின்றன

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2024 10:59 am

ஆராய்ச்சி
நூலின் தலைப்பு “அறிவியல் அணுகுமுறையில் ஆராய்ச்சியியல்” எழுதியவர் டாக்டர் .மு.பொன்னுசாமி, பேராசிரியர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
பதிப்பகத்தின் முகவரி : இந்து பதிப்பகம், சின்னதோட்டம், கணியூர் அஞ்சல், கருமத்தம்பட்டி, கோயமுத்தூர்-59, 641659. வெளியான ஆண்டு 2007
ஆய்வு என்பது அறிவை தேடும் ஒரு முயற்சி, புதிய கண்டு பிடிப்புகள், பழைய கோட்பாடுகளின் தற்கால பயன்பாட்டை தீர்மானித்தல் ஆகிய முயற்சிகள் யாவும் ஆய்வு என்ப்படும்.- இது நூலாசிரியரின் முன்னுரையாக ஆரம்பிக்கிறது.
இதற்கு தேவையான அடிப்படை பண்புகள்.
அறிவை விரிவாக்கவோ அல்லது குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2024 3:07 pm

வெயிலும் நிழலும்

சூரியனின் கதிர்
வீச்சு
தலை மீது
விழ
எரிச்சலாய் என்
முன் விழுந்த
நிழலை மிதித்து
நடக்கிறேன்
அதுவோ போக்கு
காட்டியபடி
நகர்ந்து கொண்டே
இருக்கிறது

மேலும்

தாமோதரன்ஸ்ரீ - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2023 12:40 pm

வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை

நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை

புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை

திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை

மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண

மேலும்

அருமை அருமை வாழ்த்துக்கள் 15-Dec-2023 9:09 am
அருமை 14-Dec-2023 8:09 am
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2023 9:48 am

நிலவு ஏனோ இன்னும் வரவில்லை

சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்

இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி

எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு

பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை

கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்

மேலும்

நன்றி ..! 01-Nov-2023 9:27 am
அருமையான கற்பனை! எனது கைதட்டல்கள் நண்பரே! காற்று விரைவில் வரட்டும்! நிலவு பூமிக்கு ஒளியூட்டட்டும்! 31-Oct-2023 7:51 pm
தாமோதரன்ஸ்ரீ - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2023 1:44 pm

Writing - the act of one person giving a piece of their soul to another.

J. Spredemann.

*************

வணக்கம்.

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.

நான் விரும்புவதும் அதுவே.

மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.

மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிற

மேலும்

ஓகே படிக்கிறேன் 12-Aug-2023 7:37 am
இங்கே மெசேஜ் களம் திறக்க நிறைய நேரம் எடுக்கிறது. எனவே உடனடியாக பதில் கொடுக்க தாமதம் ஆகிறது. இன்று அடுத்த பாகம் போட்டேன் 12-Aug-2023 7:00 am
ஆஹா நிச்சயம் படித்து கருத்துச் சொல்கிறேன் வெயில் மிகுந்த மாலையில். திருவனந்தபுரத்திலிருந்து ----பின் பதிந்து விட்டீர்களா ? பார்க்கிறேன் 11-Aug-2023 2:53 pm
நானும் வாசித்து கொண்டிருக்கிறேன் 11-Aug-2023 2:42 pm
தாமோதரன்ஸ்ரீ - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2023 4:43 am

காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்

கேரளாவில் நீங்கள் சாலைவழி பயணம் மேற்கொண்டால் அதில் உள்ள சுகமே தனியானது. பயணம் செய்யும் எல்லா சாலைகளுக்கு பக்கங்களில் பச்சைப்பசேல் என பயிர்களும் மரங்களும் இருக்கும். இயற்கை தன் அழகை விரித்து தலையாட்டும் காட்சி கண்களுக்குக் குளுமையானது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் மாறுவது தெரியாமல் சாலைகள் செல்லும். நாம் எல்லையை கடப்பதை மைல் கல்லுகளால் தான் அறிவோம். மற்றும் ஒரு அடையாளம் அந்த எல்லைக் கல்லின் அடுத்து வரும் டீக் கடையைக் கூறலாம்.ஆம் எந்த நேரமும் தேநீர் கிடைப்பது இந்த நெடுஞ்சாலைகளில் தான். இந்தக் கடைகள் பயணம் செய்ப

மேலும்

தமிழ்நாட்டில் குடிக்கும் டீ க்கும் கேரளாவில் குடிக்கும் டீ க்கும் சுவையில் வித்தியாசம் இருக்கும் . அதே போல் தமிழ்நாட்டில் மலையாளிகள் கடையில் டீ குடிக்கும்போதும் சுவை கொஞ்சம் கூடுதலாய் இருக்கும். இது எனது அனுபவம் . மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள். அங்கு இருக்கும் குளிருக்கும் மழைக்கும் இவர்கள் டீ சுவையாக இருக்கும் . 18-Jul-2023 8:41 am
இது கதையா.... வெறும் அனுபவமா 17-Jul-2023 5:30 pm
தாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2022 10:23 am

எங்கு போனாய் நண்பா !

நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினே

மேலும்

நீண்ட நாட்களாக தங்களின் உரையாடல்களை காணவில்லை , "Fair and Lovely" ல் ஸ்பரிசனோடு உரையாடினீர்கள் , தாங்கள், நன்னாடன் , ஸ்பரிசன், மற்றும் பலரின் உரையாடல்களை இரசித்து படிப்பவன் நான் 27-Jun-2022 1:40 pm
சிறப்பான கதை மனத்தைத் தொட்டது பாராட்டுக்கள் 26-Jun-2022 5:55 pm
தாமோதரன்ஸ்ரீ - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2021 1:14 pm

==================================

அரவணைக்க​ அன்னையில்லை
பிறந்து விட்டோம்
அனாதைகளாய்..

வலிகள் சொல்ல​ வார்த்தையில்லை
அலறுகின்றோம்
ஊமைகளாய்..

சிறகிருந்தும் வழிகளில்லை
சிக்கிக் கொண்டோம்
அகதிகளாய்..

வர்ணங்களால் பூசப்பட்டோம்
வாழ்க்கை மட்டும்
வெறுமைகளாய்..

ஒட்டை விட்டு வெளிப்பட்டும்
மாட்டிக்கொண்டோம்
கைதிகளாய்..
வணிகக் கைதிகளாய்..


உணவுக்காக​ப் பெருக்கப்பட்டோம்
கொடும் அறிவியலால்
வளர்க்கப்பட்டோம்...

இயற்கை முரணில்
வளர்ச்சி காணும்
சுயநலம்தான்
உங்கள் பகுத்தறிவா?

சிந்திப்பீர் மானிடரே!

உடம்பில் வளரும்
புற்று போல்தான்
இயற்கை கெடுத்தே
காணும் வளர்ச்சி..

ஆதலால்..

வேண்டுகின்றோம் உங்களிடம்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

பூ சுப்ரமணியன்

பூ சுப்ரமணியன்

பள்ளிக்கரணை , சென்னை
Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
sugan dhana

sugan dhana

kanchipuram

இவரை பின்தொடர்பவர்கள் (14)

sugan dhana

sugan dhana

kanchipuram
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே