Dheva.S - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  Dheva.S
இடம்:  Dubai
பிறந்த தேதி :  07-Oct-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Nov-2012
பார்த்தவர்கள்:  3472
புள்ளி:  751

என்னைப் பற்றி...

எழுதிப் பழகுபவன்....!

என் படைப்புகள்
Dheva.S செய்திகள்
Dheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2016 5:17 pm

ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்.

கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க

மேலும்

Dheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2016 2:58 pm

நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.

வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

ஒரு மாடு

மேலும்

Dheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2016 12:02 pm

ஊருக்கு நடுவேயிருந்த பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா என்னப்பத்தா...?

நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...?

முன்னால் நடந்து கொண்டிருந்தாள்

மேலும்

முழுவதுமாக படிக்க பொறுமை இல்லை என்றாலும் ஒரு தலைமுறையின் சமூக பொறுப்புள்ள ஏக்கம் தெரிகிறது - மு.ரா. 28-Feb-2016 12:39 pm
Dheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2016 11:03 am

வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...

பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவை

மேலும்

அருமை தேவா..! 24-Feb-2016 1:27 pm
Dheva.S அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 10:53 am

என்னுள் உயிர் துடிக்குமொரு
சொப்பனம் கண்டேன்...
பால் சுரக்கையில் குறுகுறுக்கும்
மார்பெனதாய் இருந்து
தேகம் முழுதும் பூரித்திருந்ததப்போது;
யான் எனதெண்ணிக் கொள்ளும்
மமதை அழிந்து இன்னொரு
உயிர் சுமக்கும் பெருமிதத்தில்
வீங்கிப் பெருத்திருந்ததென் வயிறப்போது...
பசி இரண்டென்றெண்ணி
நிறைய உண்டேன்;
தாகமிரண்டென்றெண்ணி அதிகம் குடித்தேன்....
தனிமையிலிருந்த போது
அதை தவமாய் கருதி
கண்மணி என் உயிரோடு வயிறுதடவி
பேசிச் சொக்கிக் கொண்டிருக்கையில்
பாவியென் சொப்பனம் கலைந்ததென்ன...?
இப்பிறவியிலொரு ஆணாய் என்னை
மீண்டும் நிலைக்கும் படி ஊழ்வினையென்னைச்
சபித்துச் சென்றதென்ன...?
எப்பிறப்பில் இனி நான் பெண்ண

மேலும்

தாயென உணர்ந்தேன்.தங்கள் கவிதையை படித்தபோது.... 22-Jun-2015 10:37 am
நன்றி தோழமை 18-Jun-2015 9:41 am
நீண்ட நாள் கழித்து உங்களை பார்ப்பது மகிழ்ச்சி நன்றி ராஜா 18-Jun-2015 9:41 am
நன்றிகள் ராஜன் 18-Jun-2015 9:40 am
Dheva.S அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2015 9:22 am

வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது

மேலும்

மலரும் நினைவுகளில் மூழ்கி போனேன் .நன்றி.ஆனந்த விகடனில் வந்த தொடர் கதையை எபோது வியாழகிழமை வரும் என்று காத்திருந்து படித்து கல்லூரி சென்றதும் தோழிகளோடு பகிர்ந்து கொண்டது நினைவு வருகிறது.அந்த தொடர்களை சினிமாவாக எடுத்தால் யார் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குள் அடித்து கொண்டதும் உண்டு.மீண்டும் நன்றி. 10-May-2015 6:29 pm
நன்றிகள் ராஜன்!!!!! 20-Jan-2015 6:15 pm
நன்றிகள்!!!! 20-Jan-2015 6:14 pm
ப்ரியத்திற்கும், ரசிப்பிற்கும் நன்றிகள் நண்பா!!!! 20-Jan-2015 6:13 pm
Dheva.S - Dheva.S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2014 12:22 pm

ஏன் இவளின் உணர்வுகள் என்னை இப்படி புரட்டிப் போட வேண்டும் என்பது சமீபத்திய ஆச்சர்யம்...! ஆனால் ஆரம்பம் முதலே எனக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு...மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் ஆச்சர்யமும் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய பயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

என் விடியலில் அவள் முகம் பார்த்துதான் எழுகிறேன்...! என் இரவுகள் அவள் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிகப்பெரிய ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது.

ஒரு நாள் அவளை கவனியாதது போல நான் வேறு வேலையாயிருந்தேன்...என்னருகே வந்து பின்னால் என்னைக் கட்டிக்கொண்டு அந்த இரவின் கு

மேலும்

அருமை .. தேவதை இறுதியில் தான் அறிமுகபடுத்தவேண்டும் என்றில்லை முதலில் அறிமுகம் செய்தாலும் உணர்வுகள் அழகாகவே வெளிப்படும் . நன்று . 11-Nov-2014 11:56 pm
வெறும் கருத்துரையாக தெரியவில்லை ...மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறதுமா ! கண்டிப்பாக என் மகளிடம் சொல்கிறேன். என் அன்பும் வாழ்த்தும் !!!!! 11-Nov-2014 6:29 pm
உங்கள் வீடும் தேவதை வாழும் வீடு !! நன்றி புனிதா 11-Nov-2014 6:26 pm
வார இறுதியில் உறுதியாய் கேட்பாள் .. உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா அப்பா இந்த விடுமுறையில்? என் மகளும் அவள் அப்பாவிடம் கேட்கும் கேள்வி இது. அழகாக அருமையாக எழுதியிருக்கின்றீர்கள் தோழமையே! .. 10-Nov-2014 7:24 pm
Dheva.S அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2014 5:49 pm

எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பிக்கும் என்னுடைய எல்லா ஆக்கங்களும் யாருக்காக ஆரம்பிக்கிறது? அது எங்கே செல்கிறது? யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு முறையும் பார்வையற்ற ஒருவனைப் போல எனக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளயும், வலிகளையும், சந்தோசத்தையும் தடவித் தடவிப் பார்த்து அதன் அர்த்தம் விளங்கி மெல்லமெல்ல இதுதான் இன்னதுதான் வரைகிறோம் என்று தெரியாமல் உருவமற்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் ஓவியனின் தூரிகையிலிருந்து சிதறும் எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த சொற்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

மேலும்

கவிதையாய் ஒரு கட்டுரை ... கனவாய் ஒரு வாழ்க்கை உங்கள் புரவியின் வேகத்தில் என் விழி வாசித்தது.. இமைக்காமல் .. அத்தனை ஈர்ப்பு .. அற்புதம் 29-Jan-2015 3:30 pm
நன்றிகள் புனிதா ! 10-Nov-2014 12:25 pm
ஆழ்ந்த வாசிப்புக்கு மகிழ்கிறேன் தங்கையே ! நன்றி. 10-Nov-2014 12:24 pm
சிறப்பான கட்டுரை தோழமையே.. 07-Nov-2014 12:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (124)

Giri Bharathi

Giri Bharathi

தாராபுரம், திருப்பூர்.
Vishanithi R

Vishanithi R

தூத்துக்குடி
Dileepan Pa

Dileepan Pa

பெங்களூரு
muraiyer69

muraiyer69

விக்கிரவாண்டி
Thirumoorthi

Thirumoorthi

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (125)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Musthak ahamed TR

Musthak ahamed TR

Akkaraipattu - Sri Lanka
Nishan Sundararajah

Nishan Sundararajah

United Kingdom

இவரை பின்தொடர்பவர்கள் (124)

dkmalathi

dkmalathi

மலேசியா
user photo

chandran sekar

தென்காசி (மேலப் பாவூர்) தி
மேலே