Dr.V.K.Kanniappan - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Dr.V.K.Kanniappan
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  17-Oct-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2011
பார்த்தவர்கள்:  5243
புள்ளி:  5615

என்னைப் பற்றி...

நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum

என் படைப்புகள்
Dr.V.K.Kanniappan செய்திகள்
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2017 10:04 pm

நேரிசை வெண்பா

மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால் - ஒருவரால்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று. 164 அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒத்த அன்பினையுடைய மனைவியும் கணவனுமாகிய இருவரும் ஒன்று சேர்ந்து மேற்கொண்டு செலுத்தினாலன்றி அவ்விருவருள் ஒருவரால் இல்வாழ்க்கையாகிய அழகிய உயர்ந்த வண்டி செலுத்தப்படின் செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிடும்.

குறிப்பு: சகடம் - சகடுகளையுடையது: சகடு - சக்கரம்.

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2017 8:50 pm

நேரிசை வெண்பா

அயலூ ரவன்போக அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ஆர எழுதிப் - புயலைம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று. 163 அறநெறிச்சாரம்

பொருளுரை:

கணவன் வேற்றூரை யடைந்த சமயம் பார்த்து அழகினைத் தரும் மஞ்சளைப் பூசிக் குளித்து கெண்டை மீனையொத்த கண்களுக்கு அழகு பெற மையெழுதி கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மயிரிலுள்ள தேனை உண்ணவரும் வண்டுகளை ஓட்டிக்கொண்டு வெளியில் நின்று உலாவுகின்ற வாள் போன்ற பெரிய கண்களையுடையவள் கதாயுதத்தினை ஓங்கிக்கொண்டு அவனறியாவண்ணம் தன்னைக் கொண்டானது பின்சென்று தாக்குகின்ற கூற்றேயாவள்.

குறிப்பு:

ஐம்பால் கூந்தல் – குழல், கொண்டை

மேலும்

அறநெறிச்சாரம்:-- நேரிசை வெண்பா வாழ்வியல் கருவூலங்கள் போற்றுதற்குரிய படைப்பு; தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 26-Jul-2017 3:26 pm
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2017 9:34 am

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என்று சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் தற்சமயம் 527 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கீழேயுள்ள சுமார் 80 வகையான பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1 அரியலூர் 5
2 சென்னை 7
3 கோயம்பத்தூர் 64
4 கடலூர் 6
5 தர்மபுரி 6
6 திண்டுக்கல் 12
7 ஈரோடு 14
8 காஞ்சிபுரம் 76
9 கன்னியாகுமரி 31
10 கரூர் 8
11 கிருஷ்ணகிரி 6
12 மதுரை 12
13 நாகப்பட்டினம் 6
14 நாமக்கல் 30
15 பெரம்பலூர் 8
16 புதுக்கோட்டை 10
17 ராமநாதபுரம் 4
18 சேலம் 21
19 சிவகங்கை 10
20 தஞ்சாவூர் 12
21

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2017 6:51 pm

சீர்காழி கோவிந்தராஜன் திரைப்படத்திற்காக .பொன்வயல் படத்தில் பாடிய முதல் பாடல். இவரே இப்பாடலுக்கு நடித்துள்ளார்
சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

வெறுப்பினை வைத்துள்ளே இனிப்பாகப் பேசியே
வெத்துக்கதையாய் வாழும் பித்தர் கூட்டத்தைக் கண்டால் (சிரிப்புத்தான்)

பல்லையிளித்துக் காட்டும் பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை பரிவின்றித் திட்டுவார்

செல்வம் கொள்ளையடித்தே சிறையிலே பூட்டுவார்
திருடர் மிரட்டினாலே திறவுகோலை நீட்டுவார் (சிரிப்புத்தான்)

நாமே சகலமென்று நாடகம் ஆடுவார்
நாலுதாசரும் பின்னே...யே நாமாவளிப் பாடுவார்
ஏமாளி அலைந்தேய்க்கும் கோமாளி

மேலும்

இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2017 1:51 pm

பன்னிருசீர் விருத்தம் :


கண்கவர் வண்ணக் கவினுடை அணிந்து
***கனகம் ஒளியுமிழ்ந்து
***கழுத்தினில் தவழும் கனவினை நினைத்துக்
***காலம் இழந்திடுவோர்
மண்சுவர் நித்தம் மழையினில் நனைந்து
***மாறும் சிறுதுகளாய்
***வாழ்வினில் துளிர்த்த வசந்தமும் உதிர்ந்த
***மாற்றம் அடைந்திடுவார்
தண்மலர் இதழில் தாவிடும் வண்டாய்ச்
***சற்றும் உழைத்திடாது
***தரணியில் உயர்த்தும் தன்நிலை தாழ்ந்து
***சருகாய் உடைந்திடுவார்
வெண்சுடர் மனத்தால் வியனுல கெங்கும்
***வியர்வைத் துளியினிலே
***வீற்றிருந் திடுவான் விண்ணவன் உணர்ந்தால்
***விடியல் கிடைத்திடுமே......


கற்றதை மறந்து கன்றெனத் துள்ளும்
***கந்தல் மனத்தவரும்
*

மேலும்

தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 13-Jul-2017 11:07 am
விடியலின் ஒளியை மரபு கவிதையில் அழகு படுத்திய விதம் அருமை நட்பே 13-Jul-2017 10:04 am
தங்கள் ஒவ்வொரு பாராட்டிலும் மனம் மகிழ்கிறேன் அய்யா... தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் அய்யா... 13-Jul-2017 8:54 am
தங்கள் வாழ்த்தில் மனம் மகிழ்கிறேன் அய்யா... தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் அய்யா... 13-Jul-2017 8:52 am
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 8:46 pm

1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்த பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மாலைமாற்று மாலை என்ற இந்நூலை, (இன்றைக்கு 128 ஆண்டுகளுக்கு முன்) தனது 19 ஆம் வயதில் (1887) பாடி முடித்தார்.

மாலைமாற்று மாலை என்ற இந்நூலை, 1901 ல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய ஸ்ரீ பாண்டித்துரை தேவர் முன்னிலையில் 1903 ஆம் ஆண்டு அரங்கேற்றினாராம். அக்காலத்தில் புலவர்கள் தங்கள் கல்வியறிவை பலரறியச் செய்ய செய்தற்கரிய சித்திரக் கவிகளாகச் செய்து உரை செய்தலும், உரை மறுத்தல் விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

மாலைமாற்று மாலை – பாடல் 1 – காதை கரப்பு – நான்காரைச் சக்கரம்

முதல் பாடலாகிய வெண்பாவில், ’வாலகன’ என்ற முதற்சீரில் காத

மேலும்

அன்புள்ள அய்யப்பன், தங்கள் கருத்தினைக் கண்டு பதிலளிக்கத் தவறி விட்டேன்; தாமதமானாலும், தங்கள் ஆழ்ந்த கருத்தினைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி. 09-Jul-2017 10:53 am
இடம்வலமாய் வலமிடமாய் வாசித் தாலும் எழுத்துபொருள் மாறாத மாலை மாற்று அட!கவிதை கவிதைக்குள் உள்ள தென்றால் அதுகாதை கரப்பென்று காட்டி விட்டீர் அடடாவோ பொருள்காண நிகண்டு வேண்டும் அதைஇங்கே நீர்கண்டு தந்து விட்டீர் படம்போட்டீர் நான்காரைச் சக்க ரத்தில் பைந்தமிழில் பதித்தீர்கள் எங்கள் நெஞ்சில் மடக்காலே எக்காலும் இடம்பி டித்தீர் மருத்துவர்நம் கன்னியப்பர் நீங்கள் தானே தொடரட்டும் மறு(த்)வமாய் இலக்கி யந்தான் தொடருகிறோம் நும்தமிழின் அடியை யொற்றி எழுத்தெழுத்தாய் பதந்தந்து விளக்கு கின்றீர் எழுத்துதள எழுத்துகளும் மறைந்திருந்த எழுத்துகளை அறியும்படி செய்து விட்டீர் என்மனமா எல்லோரின் மனமும் வாழ்த்தும்… அன்புடன் அய்யப்பன் 19-Jul-2015 5:27 pm
Dr.V.K.Kanniappan - கேசவன் புருசோத்தமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2017 9:29 pm

தரை கண்டுவிட்டது
அள்ளிய ஆறு
சாய்ந்தது தலையில்லா தென்னை.

மேலும்

ஐந்து முறை பதிவாகியிருக்கிறது. என்ன பொருள்? தேவையில்லாத 4 பதிவுகளை நீக்க வேண்டுகிறேன். 22-Jun-2017 9:52 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2017 9:54 pm

அவுரி எனும் குறுஞ்செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்காளத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும். வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு.

அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும் போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.

அவுரியின் இலைகளிலும் காய்களிலும் ‘Sennocide’ மூலப்பொருள் அடங்கியுள்ளது. இது இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விளை நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின் அவுரி பயிரிட்டு, தண்ணீர் வந்து உழும்போது அவுரியையும் சேர்த்த

மேலும்

நன்றி! இதன் விதை எங்கு கிடைக்கும்? இந்த இலையை சாப்பிட்டால் வாய் நீல நிறமாக மாறிடுமா? 20-Jun-2017 9:18 am
அவுரி வண்ணப் படம் பதிவு செய்திருக்கிறேன். கருத்திற்கு நன்றி. 20-Jun-2017 6:48 am
இந்திய மருத்துவ மூலிகை பாடலும் மருத்துவ குணங்கள் போற்றுதற்குரிய தாவர மருந்தியல் படைப்பு பாராட்டுக்கள் அவுரி அல்லது நீலி படமும் வண்ணத்தில் பதிவு செய்யவும் 20-Jun-2017 6:03 am
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2017 10:19 pm

பார்வைக் கணையது பாவனா கண்களில் தென்படுது;
கார்கூந் தலதனைக் கண்டுமே பொங்குதெந் தன்மனமே!
கூர்த்த மதியினள் கொள்கையின் மாட்சிமை காண்கிறது;
சீர்மைச் சிறப்புமே சிற்றிடைப் பெண்ணிடம் சேர்ந்திடுதே!

- வ.க.கன்னியப்பன்

கலித்துறையின் ஒரு வகை கட்டளைக்கலித்துறை. கட்டளை= எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது. காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தது.

மேலும்

Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 9:58 pm

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2

தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3

தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a

மேலும்

Sonnet: For Success In Life Success in life does come not overnight; An ambition and aim begin the try; A sustained labor makes the future bright; At times, despair could make you even cry. Self-confidence is key to success prime; A hasty mind can’t make foray at all; Correct your deficiencies all the time; In others’ court always, you keep the ball. But emulate the good achieved by next; The road you take is not the same always; The problems cropping up can keep you vexed; But you maintain that principled a base. The grace of God dictates the things on earth; God gave each one a purpose in the birth. Copyright by Dr John Celes 20-05-2015 Dr. A.Celestine Raj Manohar M.D., 13-Jun-2017 12:08 pm
எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி ----மூலக் கவிதையை பதிவு செய்யவும் 13-Jun-2017 11:38 am
கருத்திற்கு நன்றி, சேயோன். மூலக் கவிதையையும் வாசித்துப் பாருங்கள். எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி. 23-Sep-2015 11:35 am
சிறந்த வெண்பாக்கள். சிறப்பான மொழிபெயர்ப்பு. 26-May-2015 8:02 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 4:02 pm

அவுத்துவுட்டா எங்க அபேஸ்ஆகு மோன்னு
கவுத்துவுட்டா கூடக் களவு! - செவுத்துவொட்டாப்
போட்டாலும் போயிடுதே கல்யாண வூடுகளில்
ஜோட்டாலும் வேதனைஅச் சோ! 5

கந்தா! கடம்பா! கடன்கேட்டா நோட்டையெண்ணி
இந்தான்னு நீட்ட எவனிருக்கான்? - சொந்தத்தில்
வேதாளம் தானிருக்கா! அல்லா வுதீன்விளக்கும்
தோதா இருக்குதா? சொல்லு! 6

இரு விகற்ப நேரிசை வெண்பா

கந்தா! கடம்பா! உடன்வா வெனகூப்டா
சொந்தமென ஓடிவர உத்தாரம் - பந்தமுடன்
சொல்ல தமன்னா வருவாரா? தங்கமென
வெல்லமெனத் தாங்கிடுவேன் நான்! - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. கல்யாண வீடுகளில் செருப்புகளை கால்களிலிருந்து அவிழ்த்துப் போட்டாலும், திருட்டு போய்விடுமே என்று தனித்தனியாகவும், செருப்புகளை மாற்றி கவிழ்த்துப் போட்டாலும், சுவரோரமாகப் போட்டாலும் திருட்டு போய் விடுகிறது; வேதனைதான் அச்சச்சோ என்று வருத்தப் படுகிறார். சோடு, ஜோடு: a pair, a couple, சோடி; a pair of shoes, செருப்பு; 19-Aug-2015 8:35 am
முதல் வெண்பாவின் பொருள் எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை ! இரண்டும் மூன்றும் ரொம்ப அழகு..தமனாவைப் போலவே சிக்குன்னு! 19-Aug-2015 8:16 am
கருத்திற்கு நன்றி, ஜின்னா. 19-Aug-2015 7:54 am
சிறப்பான வெண்பாக்கள்... அருமை ஐயா... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 19-Aug-2015 12:12 am
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 12:53 pm

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்

நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 19-Sep-2016 7:08 pm
போற்றுதற்குரிய கவிதை (வெண்பாக்கள்) பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 19-Sep-2016 5:19 pm
தங்கள் தெளிவான கருத்திற்கு நன்றி. 15-Sep-2016 2:44 pm
நல்ல கருத்துக்களுடைய வெண்பாக்கள்தான் எழுதியிருக்கிறீர்கள்; பரிசு கிடைத்திருக்கலாம்.. மற்றவர்களுடைய வெண்பாக்களையும் கொடுத்துள்ளதைப் பாராட்டுகின்றேன்.. அவற்றிற்கும் தங்களுடையதற்கு இடையே காணப்படும் ஆற்றொழுக்கு நடையினை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 15-Sep-2016 1:40 pm
மேலும்...
கருத்துகள்
மேலே