இளவெண்மணியன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இளவெண்மணியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jul-2017
பார்த்தவர்கள்:  301
புள்ளி:  128

என்னைப் பற்றி...

கவிதைக் காட்டின் மூங்கில் நான் .
கனவுப் பூவின் வாசம் நான் .
மூடிய இமைக்குள் மின்னல் நான் .
முடிவே இல்லா நேசம் நான் .

--இளவெண்மணியன்

என் படைப்புகள்
இளவெண்மணியன் செய்திகள்
இளவெண்மணியன் - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2017 2:06 am

உன் விழிகளை சந்தித்த பின்
என் விழிகள் எனக்கு முன்
தேட தொடங்குகிறது உன்னை

தேரடி திருவிழா யானையாய்
ஊர்வலம் வந்தவன் நான்
உரியடியில் உடைந்த பானையாய்
துண்டுதுண்டாக போனேன்

நேரிடையாக உன்னிடம் பேசாமல்
தள்ளியே ஏனோ நான் நிற்கிறேன்
பேரலையாக எனக்குள் எழும்பும் தயக்கத்தின்
அலைகளை என்ன தான் செய்வேன்

எதிரி போல நீ என்னை பார்க்கும்
ஒற்றை பார்வையில் கரைந்து போகிறேன்
உதிரி பாகங்களாய் நீ கடந்தபின்
இந்த சாலையில் விழுந்து கிடக்கிறேன்

என் மனம் அறியாமல்
உதறி தான் போகிறாய் நீ
உன் மனம் புரியாமல்
சிதறி தான் போகிறேன் நான்

வலி தாங்கிடாமல்
கதறி அழும் குழந்தையாகிறேன்

மேலும்

முதல் பார்வையில் இதயம் காதுகளுக்குள் ஏதோ ஒன்றை சொல்லிய படி உறக்கம் தொலைக்கும் அவளது நிழலில் சருகுகள் உதிர்ந்தால் கூட அவனது தேகத்தில் காய்ச்சலடிக்கும். அவள் சிரித்தாள் அவன் கண்களின் ஓரம் அன்பின் ஈரங்கள் அவள் உறங்கும் வரை அவனது இரவுகள் விழித்திருக்கும் அவள் பேசும் வரை அவனது இதழ்கள் காத்திருக்கும் அவள் சுவாசிக்கும் வரை அவனது ஜீவனும் நிலைத்திருக்கும் இது தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 12:58 am
வாழ்த்துக்கு நன்றி :) வழக்கம்போல உங்கள் எதுகைகள் வரிகளில் அழகாய் விளையாடுகின்றன .. 17-Aug-2017 2:06 pm
காத்திருத்தலில் இருக்கிறது வலியும் சுகமும் கண்விழித்தலில் தெரிகிறது தவிப்பும் தகிப்பும் எதிர்பார்ப்பில் விளைகிறது கனவும் நிஜமும் விதி கையில் விழுகிறது விளைவும் பொறுப்பும் ! தூக்கத்தை தொலைத்துவிட்டு பாடுமொரு பறவை ! ஏக்கங்கள் நிறைவேறி காணட்டும் நிறைவை ! வாழ்த்துகள் ! 17-Aug-2017 9:35 am
இளவெண்மணியன் - சூர்யா மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 10:49 pm

யானையும் பிச்சை எடுத்தது
நானும் பிச்சை எடுத்தேன் கூட
கடவுளும் பிச்சை எடுத்தான்
பக்தனிடம் காணிக்கையாக.

மேலும்

மனிதனின் பிச்சை இயலாமை! யானையின் பிச்சை முயலாமை ! கடவுளுக்குப் பிச்சை என்பது அறியாமை ! 17-Aug-2017 11:00 am
இளவெண்மணியன் - Sridhar5994b442dc962 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 2:41 am

காற்றினிலே அசைந்தாடும் கார்குழலும் ஓர் அழகு!
இசையோடு நடந்து வரும் கொழுசணிந்த கால் அழகு!
மைஇருட்டு வேலையிலும் ஒளியூட்டும் விழி அழகு!
மலர் கூட வியப்படையும் சிவந்த வண்ண இதழ் அழகு!
பிறைநிலவை ஒட்டி வைத்த நெற்றி கொண்ட முகம் அழகு!
குயிலினும் இனியதோர் செவி மயங்கும் குரல் அழகு!
இவையனைத்தும் ஒன்றினைய அசைந்து வரும் நீ அழகு!
உன் அழகை இவ்வுலகில் நான் மட்டும் கண்டிடவே...

மேலும்

மீளாமல் மூழ்கடிக்கும் பெண்ணவளின் பேரழகு ! தாலாட்டும் சந்தத்தில் பாடுகின்ற கவியழகு ! 17-Aug-2017 10:01 am
இளவெண்மணியன் - பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 9:32 am

சொடுக்கு விடும் தருணத்துள்
என்னுள் நுழைந்த உன்னை
வெளியேற்ற யுகங்கள்
பல தேவைப்படும்போலும்...

மேலும்

மரணம் வரை அவள் வாடகையின்றி வாழும் விடு இதயம் தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 12:24 am
நன்றி அன்பரே 17-Aug-2017 9:44 am
அதுதான் அதுதான் காதல் ! யுகமாய் தொடரும் பாடல் ! அழகு ! தொடருங்கள் ! 17-Aug-2017 9:42 am
இளவெண்மணியன் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 2:06 am

உன் விழிகளை சந்தித்த பின்
என் விழிகள் எனக்கு முன்
தேட தொடங்குகிறது உன்னை

தேரடி திருவிழா யானையாய்
ஊர்வலம் வந்தவன் நான்
உரியடியில் உடைந்த பானையாய்
துண்டுதுண்டாக போனேன்

நேரிடையாக உன்னிடம் பேசாமல்
தள்ளியே ஏனோ நான் நிற்கிறேன்
பேரலையாக எனக்குள் எழும்பும் தயக்கத்தின்
அலைகளை என்ன தான் செய்வேன்

எதிரி போல நீ என்னை பார்க்கும்
ஒற்றை பார்வையில் கரைந்து போகிறேன்
உதிரி பாகங்களாய் நீ கடந்தபின்
இந்த சாலையில் விழுந்து கிடக்கிறேன்

என் மனம் அறியாமல்
உதறி தான் போகிறாய் நீ
உன் மனம் புரியாமல்
சிதறி தான் போகிறேன் நான்

வலி தாங்கிடாமல்
கதறி அழும் குழந்தையாகிறேன்

மேலும்

முதல் பார்வையில் இதயம் காதுகளுக்குள் ஏதோ ஒன்றை சொல்லிய படி உறக்கம் தொலைக்கும் அவளது நிழலில் சருகுகள் உதிர்ந்தால் கூட அவனது தேகத்தில் காய்ச்சலடிக்கும். அவள் சிரித்தாள் அவன் கண்களின் ஓரம் அன்பின் ஈரங்கள் அவள் உறங்கும் வரை அவனது இரவுகள் விழித்திருக்கும் அவள் பேசும் வரை அவனது இதழ்கள் காத்திருக்கும் அவள் சுவாசிக்கும் வரை அவனது ஜீவனும் நிலைத்திருக்கும் இது தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 12:58 am
வாழ்த்துக்கு நன்றி :) வழக்கம்போல உங்கள் எதுகைகள் வரிகளில் அழகாய் விளையாடுகின்றன .. 17-Aug-2017 2:06 pm
காத்திருத்தலில் இருக்கிறது வலியும் சுகமும் கண்விழித்தலில் தெரிகிறது தவிப்பும் தகிப்பும் எதிர்பார்ப்பில் விளைகிறது கனவும் நிஜமும் விதி கையில் விழுகிறது விளைவும் பொறுப்பும் ! தூக்கத்தை தொலைத்துவிட்டு பாடுமொரு பறவை ! ஏக்கங்கள் நிறைவேறி காணட்டும் நிறைவை ! வாழ்த்துகள் ! 17-Aug-2017 9:35 am

உன் கண்கள்
கட்டளைகள்
தருகின்றது
என் இதயம்
கட்டுப்பட்டு
நடக்கின்றது

துரத்திப்
போகும்
காற்றில்
புன்னகை
அச்சுக்கள்
பூக்களின்
அரசாட்சி

கட்சிக் காரி
போல் நீயும்
எதிர்பாராத
வேளையில்
கவிதைக்கு
கண்ணீரை
தருகின்றாய்

ஓவியன் கூட
பூக்கள் முகம்
கேட்டால்
அவள் முகம்
காட்டி விட்டு
சாதனைகள்
புரிகின்றான்

மனம் எனும்
சாலையில்
காதல் எனும்
ஒரு பேருந்து
நித்தம் என்
மேல் மோதி
கவிதைகள்
தருகின்றது

கடல் அலை
உன் காலை
முத்தமிட்ட
மயக்கத்தில்
புகழ் பெற்ற
கவிஞனின்
புத்தகத்தை
திருடுகிறது

மேலும்

கடல் அலை என துவங்கும் வரிகள் என்றும் மனதைத் தொட்டுக்கொண்டிருக்கும் 17-Aug-2017 4:27 pm
போற்றுதற்குரிய கவிதை வரிகள் அழகிய வண்ண ஓவியம் கற்பனை நயம் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் காதல் கவிதைகள் 16-Aug-2017 6:31 pm
சிறப்பான வரிகள் தொடரட்டும் கவிகள் ! 16-Aug-2017 6:29 pm
இளவெண்மணியன் - Bali அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2017 9:34 pm

போதி மரம்

மேலும்

அற்புதம் ! நீங்கள் கூட்டத்தில் ஒருவரல்ல குறிப்பிடத்தக்க ஒருவர் ! வாழ்த்துகள் ! 15-Aug-2017 11:01 pm
இளவெண்மணியன் - Bali அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2017 9:37 pm

தோட்டா

மேலும்

வெற்று வார்த்தைகளின்றி செதுக்கிய சிற்பம் நுண்ணிய உனர்வுகளை வெளியிடும் நுட்பம் அருமை ! திறமை ! 15-Aug-2017 10:55 pm
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 12:20 pm

அந்த குதிரை வண்டிக்காரரை பார்த்து கேட்டேன் .

"ஏம்ப்பா ..வண்டி வருமா ?"

"கொழம்பு தீஞ்சி போச்சி .வண்டி வராது ",என்றான் .

எனக்கு ஆச்சரியமாய் போய்விட்டது .உடனிருந்த அவன் மனைவியைக் கேட்டேன் .
"ஏம்மா ...குழம்பு தீய்ஞ்சு போனதுக்கா வண்டி வராதுன்னு சொல்றாரு ?"

"இல்லீங்க .குதிரைக்கு 'குளம்பு தேய்ஞ்சி போச்சி 'ன்றதைத்தான் அப்டி சொல்றாரு .அவர் குடிச்சிருக்காரு ",என்றாளே பார்க்கலாம் !

@இளவெண்மணியன்

மேலும்

நன்றி ! 15-Aug-2017 6:25 pm
நன்றி ! 15-Aug-2017 6:25 pm
அருமை.. 15-Aug-2017 5:54 pm
சிறப்பு அய்யா 😂😂 15-Aug-2017 5:38 pm
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 7:59 am

மழைமேகம் உனது
கருவிழியை நினைவுபடுத்துகிறது
உன் பார்வையைப்போல்
வந்துவிழுகிறது மின்னல்

மெல்லத் தொடங்கி
பூமிக்குப் போர்வையாகிறது
மழை
உன் தழுவலைப்போல

தவளைகளின் சங்கீதத்தில்
களைகட்டும்
வயல் சபைகள் காத்திருக்கிறது
உன் வருகைக்காக

ஏரி நிரம்பியதா என
பார்க்கப் போகையில்
'வான் மிதவை'யாகிறது குடை
உன் நினைவில் பறக்கும்
என் இதயம் போல

மழையும் சுகமானது
உன் நேசம் போல
என்றும் தொடரட்டுமே
அது இன்று போல !
*******************
வான்மிதவை -பாராசூட்
'

@இளவெண்மணியன்

மேலும்

இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 2:18 pm

ஏதோ ஒரு வார்த்தை முள்
எடுக்க முடியாமல்
நெஞ்சுக்குள் வசமாய்
சிக்கிக் கொண்டிருக்கலாம்

ஏதோ ஒரு தீ நாக்கு
எதிர்பாரா தருணத்தில்
சுட்டுவிட்டிருக்கலாம்

மௌனம் அறைந்து
பூட்டிய கதவுக்குள்
ஒரு
காயம் பட்ட இதயம்
ஒளிந்துகொண்டிருக்கலாம்

தவறான புரிதலில்
குழம்பிய மனசுக்கு
ஒர் ஆறுதல் முத்தமோ
இதமான அணைப்போ
தேவையாயிருக்கலாம் !

@இளவெண்மணியன்

மேலும்

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே ! 13-Aug-2017 7:04 pm
புரியாத மாயைகளுக்குள் வாழ்க்கையின் வசந்தங்கள் 13-Aug-2017 6:56 pm
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 12:19 pm

இருமுகம் கொண்ட நறுமுகை நீ -என்
இதயத்தில் விழுந்த முதல்மழை நீ
நிரந்தர அழகின் முகவரி நீ -என்
நிழலெனத் தொடரும் உயிர்த்துளி நீ

கனவுகள் வளர்க்கும் கனிமரம் நீ -என்
கவிதைகள் சிரிக்கும் மலர்வனம் நீ
உறவென இணையும் உயர்வரம் நீ -என்
உணர்வினை மீட்டும் புதுசுரம் நீ !

@இளவெண்மணியன்

மேலும்

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே ! 13-Aug-2017 7:07 pm
அவளுக்காக வாழும் வாழ்க்கையும் உயிரோட்டமான கவிதையை போன்றது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Aug-2017 6:52 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மேலே