Idhayam Vijay Profile - இதயம் விஜய் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  இதயம் விஜய்
இடம்:  ஆம்பலாப்பட்டு
பிறந்த தேதி :  27-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  1466
புள்ளி:  951

என்னைப் பற்றி...

விழிகள் உறங்கினாலும் விதைகள் உறங்காது...
தமிழை விதைத்திடு தமிழோடு வாழ்ந்திடு...

இயந்திரவியல் படித்துள்ளேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். கவிதை, பாட்டு, ஓவியம் தனிமையான நேரங்களில் நான் விரும்பும் சொந்தங்கள்...

என் படைப்புகள்
Idhayam Vijay செய்திகள்
Idhayam Vijay - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2017 3:17 pm

காப்பியக் கலித்துறை :

முந்துத் தமிழே யுகந்தோன்றிட முன்பி றந்தாய்...
இந்தப் புவியில் இளந்தேகமும் பெற்று நின்றாய்...
செந்த மிழாய்நீ செழிப்போடொளி தந்து மீர்த்தாய்...
கந்தன் மனத்தைக் கவியேகொடு வென்றி கொண்டாய்......

மேலும்

Idhayam Vijay - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2017 3:07 pm

ஒரே ஊரில் பிறந்தவர்கள்...
உயிர்க் கொடுக்கும் தோழர்கள்...
ஒன்றாய் உயிர்ப் பிரிந்தார்கள்...
உறக்கம் மட்டும் வேறிடம்...
சாதி பாகுபாடு......

மேலும்

Idhayam Vijay - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2017 2:56 pm

குடை விரித்த பெரியவர்...
பிள்ளைகள் தாங்கும் தூண்கள்...
கனிகள் பறவைக்கு உணவுகள்...
அடுப்பில் சாம்பலாய்க் கிடக்கிறது...
நிலழ் தந்த ஆலமரம்......

மேலும்

Idhayam Vijay - Idhayam Vijay அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 2:42 pm

குளிர்ந்த காற்று தேகம் தழுவ
அலர்ந்தப் பூக்கள் மணம் கமழ
விரிந்த வானம் மழைப் பொழிய
பிறந்த நாளன்றே அன்னையை இழந்தேன்......


நடந்து வந்தால் பாதங்கள் நோகுமென்று
தந்தை பூப்போல் சுமந்து கொண்டும்
தேனும் பாலும் அன்போடு தினமும்
ஊட்டி மகிழ்வார் இரண்டாம் மனைவிக்கு......


பாட்டியின் மடியில் மலராய் தவழ்ந்து
பாசமெனும் அமுதினைப் பருகியே வளர்ந்தேன்
நோயில் படுத்த வயது முதிர்ந்தவளும்
சுவர்க்கம் சென்றிட நிழலிழந்து வாடினேன்......


சிற்றன்னையின் உள்ளம் அனலாய் கொதிக்க
தகப்பன் நேசம் நெருப்பை உமிழ்ந்தது
வீட்டிற்கு பாரமென்று கசக்கி வீசிட
கூட்டிய குப்பையோடு தெருவில் கிடந்தேன்......


கையேந்தும

மேலும்

Idhayam Vijay - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2017 2:42 pm

குளிர்ந்த காற்று தேகம் தழுவ
அலர்ந்தப் பூக்கள் மணம் கமழ
விரிந்த வானம் மழைப் பொழிய
பிறந்த நாளன்றே அன்னையை இழந்தேன்......


நடந்து வந்தால் பாதங்கள் நோகுமென்று
தந்தை பூப்போல் சுமந்து கொண்டும்
தேனும் பாலும் அன்போடு தினமும்
ஊட்டி மகிழ்வார் இரண்டாம் மனைவிக்கு......


பாட்டியின் மடியில் மலராய் தவழ்ந்து
பாசமெனும் அமுதினைப் பருகியே வளர்ந்தேன்
நோயில் படுத்த வயது முதிர்ந்தவளும்
சுவர்க்கம் சென்றிட நிழலிழந்து வாடினேன்......


சிற்றன்னையின் உள்ளம் அனலாய் கொதிக்க
தகப்பன் நேசம் நெருப்பை உமிழ்ந்தது
வீட்டிற்கு பாரமென்று கசக்கி வீசிட
கூட்டிய குப்பையோடு தெருவில் கிடந்தேன்......


கையேந்தும

மேலும்

Idhayam Vijay - Idhayam Vijay அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 2:22 pm

எங்கிருந்தோ வந்தான் எதிரி நாட்டிற்குள்
தங்கியிருந்து உளவு பார்த்துச் சென்றான்
தங்கமாய் மின்னும் பூமி கண்டு
அங்கத்தில் அழிக்கும் எண்ணம் கொண்டான்......

பச்சை வண்ணம் கொஞ்சி விளையாடும்
கழனியில் நெல்மணிகள் காற்றில் அசைந்தாடும்
கவின் துள்ளும் இயற்கை ஓவியமதை
கட்டிடங்கள் கட்டி சிதைக்கத் தொடங்கினான்......

காவிரி வைகை நதிகள் பாய்ந்தோடின
காய்ந்திட வைக்க வஞ்சகன் வந்தான்
தண்ணீரை உறிஞ்சி யெடுத்து விற்றான்
வறட்சியால் விவசாயியின் வயிற்றில் அடித்தான்......

ஏறு தழுவுதல் தமிழன் மரபு
விதியின் வலையில் பிடிக்க நினைக்கிறான்
எவனோ ஒருவன் தடைகள் விதிக்க
எங்ஙனம் மறையும் எங்கள் இயல்பு......

எங்கள்

மேலும்

Idhayam Vijay - Idhayam Vijay அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 2:05 pm

திருமகளின் இணையான உருவம் பெற்று
பருவம் எய்திய பசுந்தளிர் பூங்கொடி
கருமுகில் உண்ட முல்லைப்பூ வதனம்
வருத்தத்தின் விளைவால் வந்திட கண்டாள்......

பூச்சூடும் புதிய உறவினைக் காண
பூச்சூடி நெற்றியில் அழகு பொட்டிட்டு
பஞ்சவர்ண சேலையை பக்குவமாய் தானுடுத்தி
வஞ்சியிவள் தினமொரு கோலம் பூண்டாள்......

பாவையின் அழகினைப் பார்வையால் தின்று
பாவையாகவே பார்த்துச் செல்லும் கண்கள்
தேவை இல்லாத பொருள் கேட்கயில்
சாவை விஞ்சும் துன்பம் கொண்டாள்......

நெஞ்சத்தில் பற்றிய வேதனைத் தீயில்
மஞ்சத்தில் கறுத்து நிழல் சாய்கிறது
விழிகள் ஆழ்ந்த உறக்கம் கொண்டாலும்
விழிக்கும் மனம் எதிர்காலத்தில் மேய்கிறது......

மேலும்

Idhayam Vijay - Idhayam Vijay அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 1:48 pm

கதிர் விழுந்து மலரும் கமலமாய்
மதி பறிக்கும் உந்தன் வதனம்
சுதிகள் சேர்ந்து பாடும் கானமாய்
உதிரும் மொழிகள் மனம் மயக்கும்......

வலிமை கொண்ட தாழை மடல்களில்
மெலிந்த வாழைப்பூ விஞ்சும் விரல்கள்
அலர்ந்தப் பூக்களின் அகத்தினைக் கொய்திடும்
மலர் கணைகள் வீசுமந்தப் பார்வைகள்......

வெள்ளி நிலவாய் ஒளிரும் நேசத்தில்
உள்ளம் அதனை உன்னில் தொலைத்தேன்
துள்ளி குதிக்கும் புள்ளி மானாய்
தள்ளாடி காதல் காட்டில் விழுந்தேன்......

பனித்துளியாய் நீயன்று மறைந்து விட்டதால்
பனிக்கட்டியாய் நெஞ்சம் உறைந்து விட்டேன்
மூச்சுக் காற்றாய் உனையே சுவாசித்து
ஈச்சமர ஓலையென உடல் சிறுத்தேன்......

சன்னல் வரும் தென்றலின

மேலும்

Idhayam Vijay - Idhayam Vijay அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 8:55 am

ஐக்கூ :

1.
உதவி செய்தே இறந்தது...
ஒளிரும் மெழுகிற்காக
தீக்குச்சி...!!!

2.
கருகிப்போன தீக்குச்சி...
பிரகாசமாய் ஒளிர்ந்தது
மெழுகுவர்த்தி...!!!

மேலும்

முயற்சி செய்து வருகிறேன் விரைவில் தேர்ச்சியடைவேன். தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது. அகம் மலர்ந்த நன்றிகள் அய்யா..... 20-Jan-2017 10:45 am
தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது. அகம் மலர்ந்த நன்றிகள் நண்பா..... 20-Jan-2017 10:41 am
வெண்பா இலக்கணம் போல் ஹைக்கூ வடிவம் இருக்கிறது . படிக்கவும் . உங்கள் முதல் குறும் வரிகளின் கருத்து நன்று . இரண்டாம் குறும் வரிகளில் பொருள் முரண் . "மெழுகுபோல தன்னைத் தந்து ஒளியை வீசலாம் "என்று பாடுவார் கண்ணதாசன் . அன்புடன், கவின் சாரலன் 25-Dec-2016 9:45 am
காலத்தின் கசப்பினையும் மெழுகின் வெளிச்சத்தில் உணர்த்தும் வரிகள் 25-Dec-2016 9:29 am
Idhayam Vijay அளித்த படைப்பில் (public) Razeen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Dec-2016 1:01 pm

அத்துவானக் காட்டில் அகல் விளக்காய் அவள்முகம்...
பித்தன் மனதைக் கைது செய்திடும் நேரம்...
மொழிகள் இல்லாது பேசிடும் மன்மத இராகம்...
விழிகளின் ஒளியில் ஏற்றினாள் காதல் தீபம்......


பலவிகற்ப இன்னிசை வெண்பா :


அத்துவானக் காட்டில் அகல்விளக்காய் பொன்முகம்...
பித்தன் மனம்கைது செய்திடும் நேரம்...
மொழிகளின்றிப் பேசிடும் மன்மத ராகம்...
விழிகளேற்றும் காதல்தீ பம்......

மேலும்

தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது. அகம் மலர்ந்த நன்றிகள் நண்பரே..... 20-Jan-2017 10:35 am
தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது. அகம் மலர்ந்த நன்றிகள் நண்பா..... 20-Jan-2017 10:35 am
அருமையான படைப்பு.. படிக்கப்படிக்க இன்பம் தருகிறது.. 13-Dec-2016 10:08 pm
இதமான படைப்பு 13-Dec-2016 6:46 pm
Idhayam Vijay அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2016 9:12 am

எந்தையும் தாயும் மகிழ்ந்து
உலகில் எனதுயிர் சேர்த்தார்கள்...
கந்தலு டைகள் உடுத்தி
எனக்கு கவினுடைத் தந்தார்கள்...
விந்தைகள் கொண்ட கனவின்
வெளிச்சம் விளங்கிடச் செய்தார்கள்...
சிந்தையில் நித்தம் தமிழை
விதைத்து சிறந்திட வைத்தாரே......

பஞ்சணை யில்லா துறங்க
மடியில் படுக்கைவி ரித்தார்கள்...
நெஞ்சுரம் நாளும் கொடுத்து
உறவின் நெறிகளும் ஈந்தார்கள்...
வஞ்சனை யில்லா மகவாய்
வளர்த்து வளர்பிறை கண்டார்கள்...
வஞ்சின மென்றும் தவிர்த்து
கருணை விழியில ணைத்தாரே......

இத்தனை தூரம் தொடர்ந்து
மலர்ந்த இனிமைகள் இவ்வீட்டில்...
இத்தனை மீளா சுகமும்
விளைய இடந்தரு மிந்நாட்டில்...
உத்தம னாய்நான் விளங்க

மேலும்

தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது மிக்க நன்றிகள் நண்பரே... 20-Jan-2017 10:26 am
அருமையான கவி தோழா 10-Jan-2017 4:11 pm
தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது மிக்க நன்றிகள் நண்பா..... 09-Jan-2017 10:57 pm
அருமையான படைப்பு 25-Dec-2016 9:33 am
Idhayam Vijay - Idhayam Vijay அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 9:06 am

வன்சொற்கள் பேசாது வாழ்வினில்
தாயை வணங்கிடுநீ...
வன்மம் தொலைத்து வறியோர்க்கு
வள்ளலாய் வாழ்ந்திடுநீ...
பொன்னில் மயங்கிப் புவிதனில்
சேர்த்த பொருட்களோடு
இன்னுயிர்த் தேகத்தை இம்மண்ணிற்
கென்றும் இரையிடாதே......

மேலும்

தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதை ஓடம் களிப்போடு பயணிக்கிறது மிக்க நன்றிகள் நண்பா..... 09-Jan-2017 10:56 pm
தர்மத்தில் வாழ்க்கையின் முழுமை தங்கியிருக்கிறது 25-Dec-2016 9:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (73)

myakilan

myakilan

காலையடி யாழ்ப்பாணம்
Razeen

Razeen

குளச்சல் (நாகர்கோவில்)
sivram

sivram

salem
prakashraja

prakashraja

நாமக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (73)

sivram

sivram

salem
valarmathiraj

valarmathiraj

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (74)

user photo

podiyan

mathurai
sharmi karthick

sharmi karthick

சுவாமிமலை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே