ஜெயமாலினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெயமாலினி
இடம்:  விருதுநகா்
பிறந்த தேதி :  18-Sep-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Sep-2016
பார்த்தவர்கள்:  538
புள்ளி:  65

என்னைப் பற்றி...

இவ்வுலகில் விரைவில் என்
சாதனையை நிகழ்த்த வேண்டும்
அதன் பின்னேதான் எனக்கு
சாவென்பதே நிகழ வேண்டும்

என் படைப்புகள்
ஜெயமாலினி செய்திகள்
ஜெயமாலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 6:34 pm

ஆடம்பரம்

எழைகள்
ஆடம்பரத்துடன்
ஒத்து போக மறுக்கிறாா்கள்

பணக்காரா்கள்
ஆடம்பரத்தை
விட்டு ஒதுங்க மறுக்கிறாா்கள்

மேலும்

இது தான் யதார்த்தம்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 8:41 am
நன்று 21-Nov-2016 6:45 pm
ஜெயமாலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2016 10:04 am

சமத்துவம் கொள்

தான் விழுந்தா
வலிக்குதுனு சொல்றான்
அடுத்தவன் விழுந்தா
பாா்த்து சிாிக்கிறான்

தனக்கு பிடிச்சவன்
தப்பானவானாலும்
தயங்காமல் உதவுறான்
நல்லவன் நடுத்தெருக்கு
வந்ததாலும் நக்கலாத்தான்
பாா்த்துடு நகருறான்

அதிகாரத்தை அா்த்தம்
இல்லாமல் பயன்படுத்துறான்
அடக்கி அடக்கியே
அடிமைகளை படைக்கிறான்

இருக்குறவன் இருக்குறவனுக்கே தராம
இல்லாதவங்களுக்கும் கொஞ்சம் கொடு
தன்னைப் போல் பிறரும் வாழ
இல்லாதவா்கள் என்னும் நிலையை அறு

அனைவரும் சமம்னு சொல்லும்
நாளை நீ உருவாக்கு
வறுமை என்னும் நோயை உழைப்பால்
அடித்து நொறுக்கு

மேலும்

நியதிகள் எல்லோருக்கும் என்றும் ஒன்று தான் ஆனால் நாம் புரிந்து கொள்ளும் எண்ணங்கள் தான் வேறுபடுகிறது 19-Nov-2016 1:22 pm
ஜெயமாலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 6:20 am

வாழ்க்கைக் கப்பல்

மகிழ்ச்சிக் கடலில்
மிதந்து தாவித்தாவி ஆடும்

கவலைக் கரையில்
கிடந்து தவியாய் தவிக்கும்

மேலும்

ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 6:35 am

சிாிப்பதும் வலி

வலிக்குதுனு சொன்னா என்னனு
கேட்க யாருமே வரல
வாய்விட்டு சிாிச்சா என்னனு
கேட்காத ஆளே இல்ல

மேலும்

நன்றி தோழரே 14-Nov-2016 7:42 pm
ஜெயமாலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 6:35 am

சிாிப்பதும் வலி

வலிக்குதுனு சொன்னா என்னனு
கேட்க யாருமே வரல
வாய்விட்டு சிாிச்சா என்னனு
கேட்காத ஆளே இல்ல

மேலும்

நன்றி தோழரே 14-Nov-2016 7:42 pm
ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 5:53 pm

நமக்கு கஷ்டம்
வரும் போது தான்.....
கடவுளின் தேவை புாியும்

கடவுளுக்கு கஷ்டம்
வரும் போது தான்.....
நமது வேதனை புாியும்

மேலும்

நன்றி தோழரே 12-Nov-2016 8:34 am
யதார்த்தம்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2016 7:06 am
ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 6:20 am

நமக்காக ஒருவரை
காக்க வைக்கவும் கூடாது
காக்கா பிடிக்கவும் கூடாது

காக்க வைத்தலும்
காக்கா பிடித்தலும்
ஒருநாள் உன்னை
காயப்படுத்தாமல் விடாது

மேலும்

ஆம் காக்க காக்க காக்க ---நோக்க நோக்க நோக்க ! அன்புடன்,கவின் சாரலன் 12-Nov-2016 3:29 pm
நன்றி தோழரே 12-Nov-2016 8:33 am
யதார்த்தமாய் பலர் வாழ்க்கையில் நேரும் மாற்றம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2016 7:45 am
ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2016 3:15 pm

எனக்கு பல் வகை
சாதம் பாிமாறுவாள்
தான் பழைய சாதம்
உண்டு வளருவாள்

நித்தம் ஒரு ஆடையில் நான்
அழகாய் தொியத்தான்
அவள் ஒரே ஆடையை
ஓயாமல் உடுத்துவாள்

என் ஆசைகளை
எழும்பச் செய்து
அவள் ஆசைகள்
அழித்து விட்டாள்

மகிழ்ச்சி என்னுள்
மக்காமல் இருக்க
சலிக்காமல் சங்கடங்களை
தன்னுள் புதைத்து விட்டாள்

எனக்கு உயிா் கொடுத்து
இவ்வுலகை கொடுத்து
அவள் வாழ்வனைத்தையும்
எனக்காகவே கொடுக்கிறாள்

அம்மா! உனக்கு எவ்வழியிலும்
கைமாறு செய்ய முடியாது
நான் என்னென்னமோ செய்தாலும்
நீ செய்ததோடு ஒப்பிட்டால் என்னால்
கையளவும் செய்ய முடியாது

மேலும்

நன்றி தோழரே 09-Nov-2016 4:31 pm
உண்மைதான்..தாயின் அன்புக்கு உலகில் எவையும் ஈடில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Nov-2016 4:03 pm
ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2016 7:18 am

அம்மா
எனக்கொரு அன்புத் தாயிருக்கா
அவள விட்ட எனக்கு வேற யாரிருக்கா

நல்லது-கெட்டது சொல்ல
உலகத்துல ஆயிரம் இருக்கா
எனக்கு நல்லது மட்டுமே செய்ய
அவள் ஒருத்தி மட்டுமே இருக்கா

ரொம்ப நாள் வாழ ஆசையில்ல
அவள் இல்லாத வாழ்வு தேவையில்ல

அடுத்த ஜென்மம்னு ஒன்னு வேணா
இந்த ஜென்மத்துல இவள பிரிய வேணா

கடவுள்ட நான் எப்பவும் கேக்குறது
இத மட்டும் தா
எனக்கு சேர்த்து வேண்டுறவ என்
தாயி மட்டும் தா

மேலும்

தாயில் சிறந்த கோவிலேது.? தாயை மறந்தா உசுருயேது.! 20-Sep-2016 10:45 am
தாயின் மகிமை கடவுளும் அறிவார் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2016 10:27 am
ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2016 6:08 pm

மஞ்சப்பை கேவலமாகிவிட்டது
பிளாஸ்டிக் பை பிரபலமாகிவிட்டது
மஞ்சப்பை மண்ணுக்கு
ஏற்படுத்தாது பாதிப்பு
பிளாஸ்டிக் பையால்
காத்திருக்கு பெரிய ஆபத்து

மேலும்

ஜெயமாலினி - ஜெயமாலினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2016 7:18 am

எதிா்பாா்ப்பு
நட்சத்திரங்கள் நித்தம்
இரவை எதிா்பாா்த்து
காத்துக் கொண்டிருக்கிறது

எனது மனம் நித்தம்
உன் அன்பை எதிா்பாா்த்து
காத்துக் கொண்டிருக்கிறது

நட்சத்திரங்கள்
வெளிப்படுத்தும் பிரகாசம்

நீ வெளிப்படுத்து
அன்பை என்னிடம்

மேலும்

நன்றி 20-Sep-2016 7:26 am
சிறப்பான படைப்பு 19-Sep-2016 10:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
மேலே