Jeyarani Sivapathasundaram Profile - சி ஜெயராணி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சி ஜெயராணி
இடம்:  Polikai
பிறந்த தேதி :  08-Mar-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Feb-2017
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  23

என்னைப் பற்றி...

சாவிற்தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

என் படைப்புகள்
Jeyarani Sivapathasundaram செய்திகள்
Jeyarani Sivapathasundaram - Jeyarani Sivapathasundaram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2017 4:38 pm

நிலவின் சொர்ப்பணம்...

வாண் மதி விஞ்சும் மதிமுகம் காண
வானத்து நிலவும் வையகம் வந்தது
வனப்பில் மதியும் மயங்கி
வடித்த கவி என்னவோ?

ஆயிரம் பௌர்ணமி ஒளிசமைத்த
அவள் பூவிழி அழகில் நிலா மிரளும்
சூரிய சுடரிவள் நெற்றிச்சுட்டிக்குள்
சூனியமாய் கரைந்ததோ!
விடிவெள்ளி ஒளியெல்லாம்
அட அவள் திலகமதோ!
வானவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்ட புருவங்களோ!
வால்வெள்ளி உருகியமூக்கில் புதன்கீற்றிலொரு மூக்குத்தி!
பிறைநிலவின் குறைசெதுக்கி
நிறை கண்ட செவ்வாயோ!
விண்பூக்கள் நாவெட்டாய் பற்களில்
மின்தெறித்த புன்னகையோ...
வெண்மேகபஞ்செடுத்து செய்து வைத்த கன்னங்களோ.!
சனிவளையம் பிறையுடைத்த இருவளை
கன்னியவள் காத

மேலும்

நன்றி தோழரே.. 11-Apr-2017 12:03 pm
ஆஹா..என்ன அழகான வர்ணனை.தமிழ் தங்களிடம் விளையாடுகிறது.வாழ்த்துக்கள் தோழி 10-Apr-2017 11:11 pm
gangaimani அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2016 8:38 pm

யாருக்கு யாரழுவார்
யாரறிவார்...அந்நிகழ்வை!
ஊருக்காய்..அழுவோரும் ..
உறவுக்காய்..அழுவோரும் ..
பேருக்காய் அழுவோரே!
உயிர்விட்ட ஒருவனுக்கு
உண்மையிலே யாரழுவார்?!!

மண்ணுக்காய் அழுவோரும்
பொண்ணுக்காய் அழுவோரும்
மடிந்துவிட்ட ஒருவனுக்காய்
மனம் திறந்து அழுவாரோ?!

கடனுக்கு அழுவாரோ
கைகழுவிப்போவாரோ
பொய்நிறைந்த உலகத்தில்
மெய்யாக யாரழுவார்!

ஆரத்தழுவித்தான்-
அகக்கிழத்தி அழுவாரோ?!
மாளாது மாரடித்து
மகள் விழுந்து அழுவாரோ??!

மண்விடுத்து பொன்விடுத்து
மாளிகையும் தான்விடுத்து
மாண்டுபோன தகப்பனென்றே
மகன் கதறி அழுவாரோ?!!
யாரறிவார்..அந்நிகழ்வை.

அறிந்தோரும் தெரிந்தோரும்
அருக

மேலும்

தங்கள் கருத்தால் என் மனம் மகிழ்ந்தது.இனிவரும் படைப்புக்கள் சிறக்க அது உதவுகிறது.என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி. 10-Apr-2017 11:21 pm
வார்த்தையில்லை வாழ்த்துவதற்கு.. சிறந்த படைப்பு 10-Apr-2017 9:14 pm
என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே ! 16-Feb-2017 5:38 pm
ஆகச்சிறந்த படைப்பு நன்று தோழரே தொடருங்கள்............. 16-Feb-2017 2:07 pm
gangaimani அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Oct-2016 1:36 am

முகிலுடைத்த துளி –மழை
மண்ணுடைத்த செடி -மரம்
சொல்லுடைத்த ஒலி-மொழி
முதல் “நா” அசைத்த மொழி –தமிழ்

ஆயிரம் யுகம் கண்ட மொழி
அகம் புறம் கொண்ட மொழி
நீதி நெறி தந்த மொழி
நெற்றிக்கண் திறந்த மொழி–தமிழ்

வீரம் விளைவித்த மொழி
வேந்தர்க்கு அறம் சொன்ன மொழி
அடியார்தம் அகமாண்ட மொழி
ஆன்மீகக்கடல் கொண்ட மொழி-தமிழ்

ஐம்பெரும் காப்பியம் அருளிய மொழி
ஔவை பாட்டுக்குள் அடங்கிய மொழி
ஆத்தி சூடியில் அறம் சொன்ன மொழி
அகரத்தில் தொடங்கும் அழகிய மொழி-தமிழ்

பாரதி கண்டு பிரமித்த மொழி
பாவலர் பாடி புகழ்ந்திட்ட மொழி
பட்டினத்தார் பொழிந்திட்ட மொழி
பாண்டியன் சங்கத்தில் வளர்ந்திட்ட மொழி ,
எங்கள் தம

மேலும்

மிக்க நன்றி தோழி 10-Apr-2017 11:23 pm
தமிழ் எம் உயிர் மூச்சு சிறந்த படைப்பு 10-Apr-2017 9:11 pm
என் அருமை நண்பர் முத்துப்பாண்டி அவர்களே! தங்கள் கருத்தால் நான் மனம் மகிழ்ந்தேன்.என் நெஞ்சார்ந்த நன்றிகள் ! 28-Mar-2017 12:44 pm
தமிழ் ,தமிழ்,தமிழ் அமிழ்து .நீவிர் கம்பன்மணி அய்யா 27-Mar-2017 1:56 pm
gangaimani அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Mar-2017 10:09 am

கருவக்காடு நீரைக்குடிச்சு
வறண்ட பூமியா மாத்திப்புடிச்சு.

விளைஞ்ச வயலு வீணாப்போச்சு
வெளக்காரன் உரத்துல மாஞ்சு.

குளமும் குட்டையும் எங்கடா போச்சு
குடியிருப்பு கட்டி வித்துப்புட்டாச்சு.

மரங்களையெல்லாம் வெட்டி வித்தாச்சு,
செயற்கை மரங்களை நட்டுவச்சாச்சு.

மலைத்தொடரெல்லாம் அறுத்தெடுத்தாச்சு
சலவை கல்லாக்கி ஏத்திமுடிச்சாச்சு.

காடுகள் அழிஞ்சு சமவெளியாச்சு
காட்டு விலங்குக்கு அடைக்கலம் போச்சு.

கடலையும் மேவ கருவிவந்தாச்சு
கடலலை சுனாமியாய் உருமாறிப்போச்சு.

பருவத்தில் பொழியா மழையும்மாச்சு
பட்டத்தில் விளையும் விதையும் போச்சு!.

காற்றில் பிராணன் இல்லாமல்ப்போச்சு
இரைப்பு நோ

மேலும்

என் மனம்கனிந்த நன்றிகள் தோழி 10-Apr-2017 11:12 pm
மெய் தவிர்த்து பொய்மை கண்டு வாழும் மக்களுக்காய் சிறந்த படைப்பு 10-Apr-2017 9:09 pm
நன்றி! நிச்சயம் நிறைய படைப்புகள் இதுபோல் பதிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறதெனக்கு 24-Mar-2017 9:19 pm
உண்மையிலேயே சிறந்ததொரு படைப்பு தோழரே.....இது போன்ற படைப்புக்களை இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 23-Mar-2017 5:15 pm
Jeyarani Sivapathasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2017 4:38 pm

நிலவின் சொர்ப்பணம்...

வாண் மதி விஞ்சும் மதிமுகம் காண
வானத்து நிலவும் வையகம் வந்தது
வனப்பில் மதியும் மயங்கி
வடித்த கவி என்னவோ?

ஆயிரம் பௌர்ணமி ஒளிசமைத்த
அவள் பூவிழி அழகில் நிலா மிரளும்
சூரிய சுடரிவள் நெற்றிச்சுட்டிக்குள்
சூனியமாய் கரைந்ததோ!
விடிவெள்ளி ஒளியெல்லாம்
அட அவள் திலகமதோ!
வானவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்ட புருவங்களோ!
வால்வெள்ளி உருகியமூக்கில் புதன்கீற்றிலொரு மூக்குத்தி!
பிறைநிலவின் குறைசெதுக்கி
நிறை கண்ட செவ்வாயோ!
விண்பூக்கள் நாவெட்டாய் பற்களில்
மின்தெறித்த புன்னகையோ...
வெண்மேகபஞ்செடுத்து செய்து வைத்த கன்னங்களோ.!
சனிவளையம் பிறையுடைத்த இருவளை
கன்னியவள் காத

மேலும்

நன்றி தோழரே.. 11-Apr-2017 12:03 pm
ஆஹா..என்ன அழகான வர்ணனை.தமிழ் தங்களிடம் விளையாடுகிறது.வாழ்த்துக்கள் தோழி 10-Apr-2017 11:11 pm
Jeyarani Sivapathasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2017 7:52 am

நியம்
மக்களை கொன்று
மக்களாட்சி நடக்கிறது
இந்துகோவில் நொருக்கி
மதவொழிப்பு நடக்கிறது
அகிம்சை காத்திட
ஆயுதம் தீட்டப்படுகிறது
மன்னிப்பு கேட்கப்படுகின்றன
உயிர்பறித்த உறவுகளிடம்
ஊரடங்கு உத்தரவில்
சமாதானக்கொடி பறக்கிறது
சுதந்திர அறிக்கையில்
சுடுவதற்கான கட்டளை
போர் முடிவு பறைசாற்றி
ஊரெலாம் இராணுவமுகாம்
உணர்வுகள் உந்தின
உள்ளங்கள் ஒதுங்கின
தவறென புரிந்தும்
தட்டிக்கேட்க இயலாமை
தப்பென அறிந்தும்
தண்டிக்க முடியாமை
வீரமூட்டிய தாய்மண்
வரம்கொடுக்க மறந்தாளே
இனவாதியல்ல நான் இதயவாதி
மதவெறியல்ல இது என் மனவெறி

மேலும்

இயலாமையின் வெளிப்பாடு வரிகளாய் வெடிக்கும் நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும் 08-Apr-2017 12:57 pm
இயலாமையை உணரும் போது தான் மனிதன் தன் உள்ளம் உடைவதை உணர்கிறான்.... உணர்வு பூர்வமான படைப்பு வாழ்த்துக்கள் தோழி.... நன்றி, தமிழ் ப்ரியா.... 03-Apr-2017 6:28 pm
அருமை தவறென புரிந்தும் தட்டிக்கேட்க இயலாமை தப்பென அறிந்தும் தண்டிக்க முடியாமை வீரமூட்டிய தாய்மண் வரம்கொடுக்க மறந்தாளே இனவாதியல்ல நான் இதயவாதி உள்ளத்தின் குமுறல் புரிகிறது சகோதரி ! அன்புடன், கவின் சாரலன் 03-Apr-2017 4:36 pm
ஆஹா !..இது வீறுகொண்டு வந்து விழுந்த வார்த்தைகள்.சிந்திக்கவேண்டிய வரிகளிது.தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள்.சுதந்திரம் பேசுமுன் நீ சுத்தமாக இரு என்கிறது இக்கவி.அருமை அழகான கட்டமைவு.நெஞ்சை நெகிழவைத்தது தங்கள் சிந்தனைகள்.நினைத்தே தொடருங்கள் தங்கள் இலக்கிய பயணத்தை .நன்றி ! 03-Apr-2017 3:06 pm
Jeyarani Sivapathasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2017 5:00 pm

அவளும் காதலும்

கதிரவன் மேனி
புதிரான புன்னகை
வெள்ளை நிறம்
கொள்ளை அழகு
அரும்பு மீசை
குறும்பு பார்வை-நான்
விரும்பும் இதயம்..
பார்த்த கணம்-உயிர் பூ
பூத்த உணர்வலை
நேச மின்சாரம்
நெஞ்சுக்குள் பாய்ந்தது கட்டியனைத்து முத்தமிட
முட்டி மோதிய மனது- வேர்களை தட்டாது இலைகளை நனைத்த சாரளாய் உயிரோடு
ஓரமாய் உறைந்தது..
அச்சம் கொண்ட
அன்பான அணங்கிவள்
மடம் உணர்த்தும்
மங்கையிவள்
நாணம் புதைத்த நல்ல நங்கையிவள்
வெட்கம் உரசும்
வெண் மனத்தவள்
பயர்ப்பு பறையும்
பசுங்கிளியிவள்
அகத்தே அத்தனையும்
அணிந்த பேதயிவள்
தடுத்தது பெண்மை-உரு
எடுத்தது வேதனை
விழி நீர் சிந்த

மேலும்

இயலாமையின் வெளிப்பாடு வரிகளாய் வெடிக்கும் நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும் 08-Apr-2017 12:58 pm
அழகு!...உணர்வுகளோடு ஒரு கவி.வாழ்த்துக்கள் 03-Apr-2017 3:09 pm
Jeyarani Sivapathasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2017 2:00 pm

Hi ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂

காதலித்து வந்தனர்


ஒரு நாள்

இருவரும்

திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
............

திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே


என்ன செய்வது
என்று சொன்னாள்


...........

அதற்கு அந்த பையன் சொன்னான்...


நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?


உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்
பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்

மேலும்

ஒரு சின்ன மாறுதலுக்காக.. 08-Apr-2017 1:04 pm
இதுலாம்..கொஞ்சம் ஓவரா தெரியல .எதோ சீரியஸ் மேட்டர்னு நான் நம்பியில படிச்சேன்.உங்களுக்கு post பன்னுனவன் மாட்டுறானோ இல்லையோ.,நீங்க யார் கைலயும் மாட்டீராதிங்க துவைச்சு புழிஞ்சுருவாங்க., அருமை 03-Apr-2017 3:24 pm
நன்றி 31-Mar-2017 5:01 pm
பிரமாதம் 29-Mar-2017 2:04 pm
Jeyarani Sivapathasundaram - Yadita அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 11:58 am

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

மேலும்

இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நட்பே... !! 15-Sep-2014 2:32 pm
அருமை 15-Sep-2014 12:35 pm
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நட்பே.. !! 13-Sep-2014 10:37 am
Jeyarani Sivapathasundaram - Jeyarani Sivapathasundaram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2017 7:41 am

காதல்...
பார்த்தவுடன் காதல் வரும்
பழகி ஈர்த்தவுடன் காதல் வரும்
ஓரவிழியழகில் ஒய்யார பேச்சழகில்
ஈர உதட்டழகில்
இமையழகில் இடுப்பழகில்
இன்னும் எப்படி எப்படியோ
காதல் வரும்...

இளமைத்தோலில் வளம்
இருக்கும் வரை
இனித்திருத்தல் காதலில்லை
தனிமை தள்ளாமை வறுமை பொழுதுகளில்
துணை நான் என்று விழி
தொட்டு துடைப்பதுதான் காதல்...

கூடிகலந்து ஒருகூட்டில் வாழ்ந்து
குழந்தை பெற்று வாடித்தளர்ந்து
ஒருவர் மற்றவரை சாடி
சண்டை பல செய்து
"உன்னை போய்த் தேடி மணந்தேன்.."என
நொந்த பின்னாலும்
நிலத்தடியில் நீரைப்போல் உள்ளன்பு
ஓடிக் கொண்டிருக்குமெனில்
அது காதல்...

நரைதிரண்டு உடல் வரண்டு
விழியிரண்டில் ஒளிமற

மேலும்

Jeyarani Sivapathasundaram - Jeyarani Sivapathasundaram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2017 10:20 am

ஜல்லிக்கட்டு...
ஏறுதழுவுதலை கூறுபோட நீ யார்?
தாறுமாறாய் பண்பாட்டை பேசாதே
வீறுகொண்டு விழித்தெழுந்தால்
சாறு பிழிந்த நாளங்கள் காண்பாய்

சாதுவாய் சஞ்சரிப்பதால்
சரித்திரம் உடைக்க எண்ணாதே
மிரண்டால் மீட்சி காணாய்
வரட்சி சுரந்து வழியக் காண்பாய்

காளை வீரங்கண்டறியா
கோழையே- சீண்டிப் பார்க்காதே
கீழைக் குணம்விரட்டு அல்லேல்
நாளைய உதயம் நரகந்தொடும்

மனதை கொன்று கூடவே
மனிதமும் கொன்றவர்களே
வதை என்று வர்ணிக்காதே
சிதையிட்டு ஊண் உண்பவனே- நீ
கதை பேசுகின்றாயா
பதைபதைத்து மிரளோம்
உதை கொடுத்து காப்போம்

குதிரை ஓட்டமொரு குற்றமில்லை- உயிர்
குடித்து ஊண் தின்னலும் குற்றமில்லை
மண்பேணும் காளை

மேலும்

இயலாமையின் வெளிப்பாடு வரிகளாய் வெடிக்கும் நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும் 08-Apr-2017 1:08 pm
அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்.. 03-Apr-2017 6:13 pm
உணர்ச்சிவேகத்தில் ஒரு தமிழச்சியின் வார்த்தைகள்.தலைவணங்குகிறேன் தன்மான தமிழனாய்!.. 03-Apr-2017 3:35 pm
மேலும்...
கருத்துகள்
மேலே