KR Rajendran Profile - இராசேந்திரன் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  இராசேந்திரன்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  14-Jun-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Aug-2015
பார்த்தவர்கள்:  620
புள்ளி:  1156

என்னைப் பற்றி...

சூழ்நிலை காரணமாக எனது பள்ளிப் படிப்பு, பாதியிலேயே நின்று விட்டாலும் எனக்குள்ளிருக்கும் தமிழார்வம் மற்றும் பல வருடங்களுக்கு முன் எனக்கு, தமிழ் கற்றுத்தந்த தமிழாசிரியர் திரு.கோவிந்தராசன் அவர்கள், தமிழாசிரியை தெய்வத்திரு, நாகலட்சுமி ஆகியோர்களாலேயே இவ்வளவு தூரம் எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். மெத்தப் படித்தவர்களின் கவிதைகள் மத்தியில் நானும் தெரிகிறேன் என்பதற்குக் காரணமும் இவைதான். உயிரும் உள்ளமும் தமிழ் மணமாய் நிரம்பி இருக்கிறது. வெள்ளந்தியான விவசாய கிராமியத்தவன் என்றாலும் தமிழை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், இரசிக்கவும், கோர்வையாகவும் எழுதத் தெரியும் . நல்ல கவிதை, நல்ல கவிஞர் என்று பரிசு வாங்கும்வரை நான் எழுதுபவை எல்லாம் ”படைப்புகள்” என்றும் அதுவரை என்னை ”படைப்பாளி” என்றும் சொல்லிக் கொள்வதையே அதிகம் விரும்புபவன்

என் படைப்புகள்
KR Rajendran செய்திகள்
Geeths அளித்த எண்ணத்தில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Nov-2016 2:41 pm

எழுத்து கவிதை போட்டி : வெற்றி பெற்ற படைப்புசீதளாதேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 3000  மற்றும் ஆச்சிரியமூட்டும் சிறப்புப் பரிசு பொருள் ஒன்றும் காத்திருக்கிறது.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

தயவு செய்து வெற்றிப்பெற்ற கவிதையின் லிங்கையும் குறிப்பிடவும் 11-May-2017 12:17 pm
வாழ்த்துக்கள். .. 01-Jan-2017 8:30 am
போட்டியில் வெற்றிப்பெறுவதற்காக உருவான கவிதையில்லை...போட்டி ஒரு களம் தானே தவிர முடிவு அல்ல...இங்கு எல்லோரும் கவிஞர்களே பிழை இல்லாமல் எழுதியோர் என்னை எழுதப் பழகும் குழந்தை என எண்ணி அமைதி ஆகிவிட்டனர் என்று நினைக்கிறேன்...அவர்கள் என்னை எதிரியாகவோ அல்லது போட்டியாளர் என்றோ எண்ணுவதாக தோன்றவில்லை...நன்றி சகோதரரே உங்கள் விமர்சனத்திற்கு ஏனெனில் விமர்சனம் மட்டுமே வளர்க்கும்.,எப்படியும் என் கருத்துகளுக்கு விமர்சனம் அனுப்புவீர்கள் என்னை வளர்க்க காத்திருக்கிறேன் 06-Dec-2016 7:53 pm
பிழை பொறுக்கவும் என்று கேட்டது என் பண்பாடு...பிழையை சுட்டி காட்டுங்கள் என்று சொன்னது இயலாமை...இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...நாங்கள் மதிப்பெண்ணிற்காகவும் தகுதியான பணிக்காகவும் உருவாக்கப்பட்ட தலைமுறை முடிந்தால் தவறினை சுட்டி காட்டி ஊக்கப்படுத்துங்கள்., 06-Dec-2016 7:32 pm
KR Rajendran அளித்த படைப்பில் (public) paampaati மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Nov-2016 5:04 pm

(கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பாட்டியற்றல்.)

விளம், மா, விளம், மா, விளம், காய் வரிசை, முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனை )

வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே
--------வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும்
-----------தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள்
-----------உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
----------- நடமிடு வாய்மயிலே..!
.
..
கீரிகளில் ஒருவகை பாற்கீரி ( பால் கீரி ) சிறிது வெண்மை கலந்திருக்கும்

மேலும்

ஐயா உள்ளத்து வரும் கவி அனைத்தும் உன்னதமே, உள்ளன்போடு தமிழ் ஈர்த்தது நம்மை,ஆதலாலே நாம் நம் உரையாடல், கவி இவற்றிற்கு வடிகால் தேடுகிறோம். மரபுகளை நேசிப்போம், அன்பரே உங்கள் கவி அருமை முயலும் மயிலும் அயில் தனில் உறங்கலாம், உம் கவியில் வெளிப்படுவது ஆச்சரியம்......நன்று 06-Apr-2017 3:38 pm
மரபுவழியில் ஒரு மகிழ்வான கவி.வாழ்த்துக்கள் 08-Feb-2017 6:19 pm
மிக்க நன்றி அய்யா. நீங்கள் சொன்ன எண் வகை அதுவும் அறிவேன் அய்யா. அது அறிந்தால்தானே அய்யா ஒரு பாடல் திறம்பட இயற்ற முடியும். மேலும் இது நீங்கள் நினைத்திருப்பதைப் போல் ஓலைச் சுவடிக் காலத்துப் போட்டியல்ல அய்யா. யாப்பை செம்மைப் படுத்தும் பயிற்சி. அசைக்காக, தளைக்காக பழஞ்சொற்களை தேடியெடுத்து போடும் மெத்தப் படித்தவனும் அல்ல என்பதால் நான் காணும் காட்சிகள் .இயற்கையாகவே பாடலாக்குகிறேன். இயற்கையாக இருந்தால்தான் எங்களைப் போன்ற கடைக்கோடி மக்களின் மனதிலும் யாப்பு ஆசையை வளர்க்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. இன்றைய முகனூலில் கவிஞர் என அடைமொழியிட்டு என்று தனக்குத்தானே திருநாமம் சூட்டிக்கொண்டு பொழுதுபோக்குக்காக தமிழை எழுதுபவர்களைப் போலல்லாது அதை உயிராக நினைத்து முயல்கிறேன். திரு கன்னியப்பன் அய்யா மற்றும் உங்களைப் போன்றோரின் ஏகலைவன் நான் அவ்வளவு எளிதில் சோடை போக மாட்டேன். உடும்புப் பிடி முயற்சி. நான் பிறரைப்போல் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் இதோ நான் இயற்றிய ஒரு தாழிசை இது யாப்பு பயில ஆசைப்படும் என் போன்ற கடைக்கோடி மாணவர்களுக்காக. மோனை இயைபு எதுகையொடு முரணென அளபெடை அந்தாதி இரட்டைத் தொடையுடன் செந்தொடை கொண்டதோர் செம்மையே யாப்பு ! இதில் சீர்மோனை அமைவில் முதலடியில் ஒரூஉ மோனையும், இரண்டாம் அடியில் இணைமோனையும், மூன்றாம் அடியில் பொழிப்பு மோனையும் கொண்டு எழுதியிருக்கிறேன் அய்யா. இதில் நீங்கள் சொன்ன அந்த ”எண்” அடக்கம். ( இதே போல் எனது இன்னொரு அறுசீர்க் கழி நெடிலடி விருத்தமும் இதே நாளில் நம் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.அதையும் படித்து தாங்கள் நினைப்பதை சொன்னால் மகிழ்வேன்.) 21-Nov-2016 7:28 pm
ஒவ்வொரு அடியிலும் ஒன்றாம் ஐந்தாம் சீர் மோனையில் இயந்திருக்கவேண்டும் என்று நிபந்தனை சொல்லியிருப்பார்கள் . ஓலைச் சுவடிக் காலத்து போட்டிகள். ஆனால் யாப்புப் பயிற்சிக்கு உதவும் . எண் வகை மோனை எண் வகை எதுகைத் தொடைகள் உண்டு . எவ்வாறாயினும் உங்கள் பா இயல்பாகவும் இனிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது . வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 21-Nov-2016 5:02 pm
goldpharmacy அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Nov-2016 10:37 am

காதலர்களின்
வாக்குவாதத்தில்
வெடித்து சிதறுகின்றன
அன்பென பரிமாறிய
முத்தங்களின் எச்சங்கள் ,,,,,!

ஆதாரம்
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன் , வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள் பல ஐயா ,,,,! 16-Dec-2016 5:40 pm
தவறுக்கு மன்னிக்கவும் ,விரைவில் சந்திப்போம், ஓர் இனிய பொழுதில் .,,,, 16-Dec-2016 5:38 pm
போற்றுதற்குரிய சிந்தனைக்கேற்ற காதல் வரிகள் & பொருத்தமான வண்ண ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் 10-Dec-2016 10:52 am
விரைவில் சிந்திப்போம் ஓர் இனிய பொழுதில் ,,,,,, 21-Nov-2016 5:43 pm
முதல்பூ அளித்த படைப்பில் (public) முதல்பூ மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Nov-2016 7:58 pm

உயிரே...

உன்னை காண நித்தம்
வருகிறேன் உன்னைத்தேடி...

நான் பார்க்கும் தூரத்தில்
நீ இருந்தும்...

உன்னை அருகில் பார்க்க
என் இதயத்திற்கு ஆசை...

தினம் உன்னை நான் தொடர்வதால்
நான் காமுகன் அல்ல...

காதலை சொல்ல
துடிப்பவன் உன்னிடம்...

நீ இல்லாமல் நான் எனக்குள்
கட்டிய காதல் கோட்டை...

உன் நினைவுகளை மட்டுமே
பத்திரப்படுத்திருக்கிறேன்...

உன் இதழ்களில் இருந்து
வார்த்தைகள் வருவதில்லை...

நீ சுமந்து செல்லும் குடத்தில்
தண்ணீரும் சிந்துவதில்லை...

என்மீது காதல் இருந்தும் சொல்ல
மறுக்குதடி உன் இதழ்கள் மட்டும்...

உன் விழிகள் அல்ல...

எனக்குள் நீ இருப்பதை
அறி

மேலும்

காத்திருக்கிறேன் நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 21-Nov-2016 7:11 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 21-Nov-2016 7:10 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அண்ணா. இல்லை அண்ணா நான் வரவில்லை.ஜூன் மாதம்தான் வந்தேன். எங்கு எப்படி வாழ்ந்தாலும் சொந்த கிராமத்திற்கு ஈடாகுமா அண்ணா. 21-Nov-2016 7:09 pm
உணர்வாள் அருமையான படைப்பு 21-Nov-2016 5:07 pm
KR Rajendran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2016 5:34 pm

எழுங்கதிர் இறங்கி வந்தே
----எழிலுடன் நிலத்தில் பாய
விழும்பனித் துளியை மந்தி
-----வியப்புடன் சாய்ந்து நோக்கத்
தொழுஞ்சிற கெடுத்துத் தும்பி
----தோழமை கொண்டே ஆட
உழுநிலம் வணங்கி வந்தே
-----ஓட்டினர் உழவர் ஏரை


.


.

மேலும்

போற்றுதற்குரிய அரிய இலக்கியக் கவிதை பாராட்டுக்கள் தொடர அன்புடன் வேண்டுகிறேன் -------------------------------------------------------- படிக்க : உழவன் எனும் "சித்தன்" ======================= மண்ணிலுண்டாம் பலதொழிலதில் சிறப்பென.. அவனியின் அச்சாம் உழுதொழிலே பிரதானமாம்! உலகத்துக்கே உணவளிக்கும் உழுதொழிலே.. உழவனிடும் முதலுழைப்பே முதலான உண்மையென்றோ! உழைப்பில் விளைந்த வியர்வைப்பூக்கள் உன் பின்னால்தெரிய.. உழைப்பின் வாசம் வீசுமுன் தன்னம்பிக்கைச் செடியில்! உழவனுக்கொரு கேடென்றால், உலகமறியுமுன்னே..யெங்கள் களமும்விளைநிலமும் கம்மாக்கரையும் கலவரம்கொள்ளும்! உறவாடும்நுகத்தடியும் மாடுமெங்கள் மனதறியும் நன்றாக! உழவனின் இளைப்பாறா உழைப்புதனை வியந்துசொல்லும் ! உழவுத்தொழிலுக்கு உயிரான தண்ணீரைத் தனதாக்கி உரிமைகொண்டதொரு அணையில் வீணாகத்தேக்கியதால்... எங்கள்தேகமென்றைக்கும் சோர்வடையாது! நல்லவேளை ஆதவனும் தென்றலையுமடக்க.. இயற்கை யார்கையிலும் அகப்படவில்லையய்யா! ஓராயிரம் இன்னல்கள் வந்தாலுமெங்கள்.. உழுதொழிலொருபோதும் நில்லாது! உழவோடு உழவுக்கு உதவுகின்ற ஒவ்வொன்றும்.. வாழ்வோடுவாழ்வுக்கு வேண்டியபல வரலாறுகூறுதுமே! இணைந்து சோடியாய் இனிதே இல்லறத்தைநடத்த.. எங்கள் நுகத்தடிதானே யின்றும்பாடம் சொல்லுதுமனிதருக்கே! கீழ்மண்ணை மேல்மண்ணாக்க மேலும்கீழுமென.. எழுகின்ற ஏர்க்காலாயினு முங்கள்மனதில்... எதிர்மறை யெண்ணங்கள்மறைய நேர்மறைமேலாகுமன்றோ! கலப்பையொன்றைக் கையில் பிடித்தவுடன்! மண்ணைமட்டுமல்ல உங்கள் மனதையும்... அல்லவா சேர்த்துழுமெங்கள் உழுகலப்பை! உழுகின்ற உன்னதவேலை ஒருகணம் நின்றால்... சுற்றும்பூமிகூட சுழலமறுக்குமொரு நொடிப்பொழுது! எறுமையான எங்களினத்தின்மேல் ஏறி வருகின்ற எமனிடம்கூட.. வறுமையில் எங்கள்வாழ்க்கை முடியாதென சூளுரைப்போம்! உண்டிகொடுக்க மண்டிபோட்டிழுக்கும் எங்களை.. மடுத்தவாயெல்லாம் தாங்கும் பகடென்றானே வள்ளுவன்! சர்வ வல்லமைபொருந்தியதாலோ என்னவோ?... சர்வேஸ்வரனென்னை வாகனமாக்கிக் கொண்டாரோ! இருக்கும்வரையில் உழைத்துக் களைத்தயெங்கள் காளையினம்! மறைந்தபிறகு மறுபிறவி யிலும்மறவாது மகிழ்ச்சிதருமய்யா! ஏற்றம்கொண்டு பின்னையு முன்னையுமிறைத்த நீரெல்லாம்... களத்துமேட்டில் கச்சிதமாய்ப் பாய்ந்தாலும்... ஏற்றமிறக்கம் இல்லையம்மா எங்கள்வாழ்வில்... இறக்கமென்று வரும்போது இறைவனும் என்செயும்! ஏரோட்டுமெங்கள் சகோதரனின் வீரம்காக்க மெரினாவில்... போராடுமுங்கள் தீரம் கண்டு கடலலைகூட கரைக்குவரமறுக்கிறதே! தமிழரின் வீரமும் அறமும் எட்டுதிசையும் பட்டுத்தெரித்ததின்று தமிழ்காளையினருமை பெருமையும் அலைகடல்தாண்டியது அணைக்கமுடியாநெருப்பாய்... இட்டதெல்லாம் பயிரா பெற்றதெல்லாம் பிள்ளையாவெனக் கேட்க வானிருந்துகீழ் நோக்கிப்பொழியும் மழையை கீழிருந்து மேனோக்கும் எங்களுழவர் குடிசிறக்கவேணும். ஆயிரம் கவிகள் வந்தனர் போயினராயினுமெங்கள் ஏருக்கு வலிமைசேர்த்த ஐயன்வள்ளுவன் போல்எவரே?.. அடக்கும் மூச்சினால் அனைத்தையும் அறிந்தவரென்றும் கடவுளைக் கண்டு தெளிந்தாரை "சித்தரென" சொல்வார்கள் தன்னைத்தோண்டி தன்னையரியவைத்த பதினெண்மர்மத்தியில் மண்ணைத்தோண்டி மனிதநேயம்காட்டும் உழவனுமொரு சித்தனே. ===================================================================== படக்கவிதை போட்டிக்காக வல்லமை மின் இதழுக்கு அனுப்பட்டதன் மறுபதிவு. velayutham avudaiappan • 2 வினாடிக்கு முன் போற்றுதற்குரிய எங்கள் கிராம எங்கள் தொழிலின் பெருமை பற்றிய கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் நம் இயற்கை வேளாண்மை உழவுத் தொழில் மேலாண்மைக் கருத்துக்கள் ----------------------------------------------------------------------- கம்பன் காட்டும் மேழிச் செல்வம் :-- மண்ணவரை அமுதுTட்டி வானுலகாய் காப்பதுவும் ஏண்ணருஞ்சீர் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே' என்று நெற்றிக் கண்ணனின் திருநீலகண்டத்துடன் இணைத் துப் பேசுகின்றன். இதன்பிறகு பகடு பூட்டலின் சிறப்பு ஏர் நடத்தலின் சிறப்பு இவை பேசப்பெறுகின்றன. - உழுதல், பயிரிடல் சிறப்பு :-- உழவின் சிறப்பினை ஒருவர் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உண்டி சுருங்கிளுல் இது தானகவே தட்டுப்படும். உழவின் சிறப்பின இன்று நாம் நன்கு உணர்கின்ருேம். உணவுப் பொருள் விற்கப் பெறும் கடையின் முன் க்யூ வரிசையில் நிற்பவர்களின் காட்சியும், உணவு விடுதிகளில் அளவு உணவு உண்பவர் களின் காட்சியும் இதனே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. 'உலகெலாம் ஒலி விளங்கும் உழவர் உழும் உழவாலே என்று உழவின் சிறப்பினைத் தொகுத்துப் பேசிய கவிஞன் அதனை வகுத்தும் கூறுகின்றன். உழவர்களின் உழுதசால் வழியன்றி உலகு வழி அறியாதே' என்று படைச்சாலின் சிறப்பினைப் பாராட்டுகிருன். உழவுத்தொழிலுக்கு உறுதுணை யாக இருக்கும் மண்வெட்டி வேளாளர் கையில் இருக்கும் வரையில் இவ்வுலகிற்கு ஒரு நாளும் ஒரு குறையும் இல்லே. மெய்வரம்பும் வேதநூல் நெறிவரம்பும் இப்புவிக்கு வரம்பு அன்று என்று சமத்காரமாகக் கூறிய கவிஞன், "பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர் செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே' " 0 12-Feb-2017 2:48 am
உழவின் உன்னதம் கூறும் அறுசீர் விருத்தம் அழகு. வாழ்த்துக்கள். ***** ௫ அன்புடன், கவின் சாரலன் 21-Nov-2016 9:43 am
வாழ்க்கையில் சுற்றுச் சூழல் யதார்த்தமான நினைவுகள் சேகரிக்கிறது அதை கவிதைக்குள் மிகவும் அழகாக பயன்படுத்தி உள்ளீர்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Nov-2016 9:09 am
என்ன அழகான படைப்பு,வியக்கிறேன்!.. கண்டு.தொடருங்கள் தாங்கள் பயணத்தை இனிதே வாழ்த்துக்கள் 20-Nov-2016 6:23 pm
KR Rajendran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2016 5:04 pm

(கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பாட்டியற்றல்.)

விளம், மா, விளம், மா, விளம், காய் வரிசை, முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனை )

வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே
--------வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும்
-----------தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள்
-----------உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
----------- நடமிடு வாய்மயிலே..!
.
..
கீரிகளில் ஒருவகை பாற்கீரி ( பால் கீரி ) சிறிது வெண்மை கலந்திருக்கும்

மேலும்

ஐயா உள்ளத்து வரும் கவி அனைத்தும் உன்னதமே, உள்ளன்போடு தமிழ் ஈர்த்தது நம்மை,ஆதலாலே நாம் நம் உரையாடல், கவி இவற்றிற்கு வடிகால் தேடுகிறோம். மரபுகளை நேசிப்போம், அன்பரே உங்கள் கவி அருமை முயலும் மயிலும் அயில் தனில் உறங்கலாம், உம் கவியில் வெளிப்படுவது ஆச்சரியம்......நன்று 06-Apr-2017 3:38 pm
மரபுவழியில் ஒரு மகிழ்வான கவி.வாழ்த்துக்கள் 08-Feb-2017 6:19 pm
மிக்க நன்றி அய்யா. நீங்கள் சொன்ன எண் வகை அதுவும் அறிவேன் அய்யா. அது அறிந்தால்தானே அய்யா ஒரு பாடல் திறம்பட இயற்ற முடியும். மேலும் இது நீங்கள் நினைத்திருப்பதைப் போல் ஓலைச் சுவடிக் காலத்துப் போட்டியல்ல அய்யா. யாப்பை செம்மைப் படுத்தும் பயிற்சி. அசைக்காக, தளைக்காக பழஞ்சொற்களை தேடியெடுத்து போடும் மெத்தப் படித்தவனும் அல்ல என்பதால் நான் காணும் காட்சிகள் .இயற்கையாகவே பாடலாக்குகிறேன். இயற்கையாக இருந்தால்தான் எங்களைப் போன்ற கடைக்கோடி மக்களின் மனதிலும் யாப்பு ஆசையை வளர்க்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. இன்றைய முகனூலில் கவிஞர் என அடைமொழியிட்டு என்று தனக்குத்தானே திருநாமம் சூட்டிக்கொண்டு பொழுதுபோக்குக்காக தமிழை எழுதுபவர்களைப் போலல்லாது அதை உயிராக நினைத்து முயல்கிறேன். திரு கன்னியப்பன் அய்யா மற்றும் உங்களைப் போன்றோரின் ஏகலைவன் நான் அவ்வளவு எளிதில் சோடை போக மாட்டேன். உடும்புப் பிடி முயற்சி. நான் பிறரைப்போல் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் இதோ நான் இயற்றிய ஒரு தாழிசை இது யாப்பு பயில ஆசைப்படும் என் போன்ற கடைக்கோடி மாணவர்களுக்காக. மோனை இயைபு எதுகையொடு முரணென அளபெடை அந்தாதி இரட்டைத் தொடையுடன் செந்தொடை கொண்டதோர் செம்மையே யாப்பு ! இதில் சீர்மோனை அமைவில் முதலடியில் ஒரூஉ மோனையும், இரண்டாம் அடியில் இணைமோனையும், மூன்றாம் அடியில் பொழிப்பு மோனையும் கொண்டு எழுதியிருக்கிறேன் அய்யா. இதில் நீங்கள் சொன்ன அந்த ”எண்” அடக்கம். ( இதே போல் எனது இன்னொரு அறுசீர்க் கழி நெடிலடி விருத்தமும் இதே நாளில் நம் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.அதையும் படித்து தாங்கள் நினைப்பதை சொன்னால் மகிழ்வேன்.) 21-Nov-2016 7:28 pm
ஒவ்வொரு அடியிலும் ஒன்றாம் ஐந்தாம் சீர் மோனையில் இயந்திருக்கவேண்டும் என்று நிபந்தனை சொல்லியிருப்பார்கள் . ஓலைச் சுவடிக் காலத்து போட்டிகள். ஆனால் யாப்புப் பயிற்சிக்கு உதவும் . எண் வகை மோனை எண் வகை எதுகைத் தொடைகள் உண்டு . எவ்வாறாயினும் உங்கள் பா இயல்பாகவும் இனிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது . வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 21-Nov-2016 5:02 pm

அன்புத் தோழமைகளே...


தளம் இணைந்த சிறுகால இடைவெளியில் உங்களால் எத்தனையோ முன்னேற்றம். உங்கள் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும்  பலவற்றை பெற்று உயர்கிறேன். நான் பெற்ற முதலாவதும் முக்கியமான  விருதுமான மகாகவி தமிழன்பன் விருது - 2016  இந்த ஆண்டு. வேளாண்மை மற்றும் தமிழ் சம்பந்தமான படைப்புகளுக்கு எனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக உணர்கிறேன்.ஒரு துளிக்கவிதை புதுச்சேரி  சார்பாக  பாரம்பரியம் மிக்க சென்னை முத்தமிழ் மன்றத்தில்12-11-2016 அன்று நடைபெற்ற மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது 2016 விழாவில்  வேளாண்மை மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என்ற பிரிவில்  பல்துறை அறிஞர்களோடு நானும் பெற்றுக்கொண்ட சான்றிதழ், தங்கவர்ணத்தில் அமைந்த விருதுப் பட்டயம் மற்றும்  போர்த்தப்பட்ட பருத்தியாடைத்  தோள் துண்டு.   இந்த விருது எனக்குக் கிடைத்தது தோழமைகள் உங்கள் உற்சாகத்தால்தான். அறிஞர் பெருமக்கள் உங்கள் ஆசிகளால்தான். இதை எழுத்து தளத்துக்கும், எழுத்தின் ஒவ்வொரு தோழமைகளுக்கும்  காணிக்கையாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. நான் வளர்ந்தது, வளர்வது எல்லாமே உங்கள் வாழ்த்துகளாலும் ஆசிகளாலும் மட்டுமே. உங்கள் ஒவ்வொருவருக்கும் இருகை கூப்பி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்......இது தொடக்கமே...மேலும் பல விருதுகள் உங்கள் கைகளுக்கு காத்திருக்கின்றன.....தொடருங்கள்! 22-Nov-2016 11:37 am
நன்றி சகோதரி. உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகள்தான் என்னை உயரம் தொட வைத்திருக்கிறது. 21-Nov-2016 3:04 pm
நன்றி சகோதரி. வாழ்த்தில் வளர்கிறேன். 21-Nov-2016 3:00 pm
இது போதும் தோழரே. உங்கள் எல்லோர் மனங்களிலும் நிறைந்து, தளம் இணைந்த இந்த் ஒரு வருடத்துக்குள் இப்படி ஒரு விருதையும் பெற்றதே என் வானளாவிய உயரம்.இது போதும் தோழரே. நன்றி தோழரே. 21-Nov-2016 2:54 pm

மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு


நாள் 12.11.2016
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் , 
இராஜா அண்ணாமலை புரம்
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்)   

தமிழன்பன் _80 விருதுகள்:
சீதா ரவி (இதழியல்)
கமல்காளிதாஸ் ( வடிவமைப்பாளர்) 
Dr. கோபி ( யாழ் அரங்கம்) 
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு)
கே.ஆர் இராசேந்திரன் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்த கவிதைகள்)
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்)
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்)

என்னோடு சேர்ந்து  கவிதை, ஊடகம், ஓவியம் . இதழியல்,கல்வி என பல பிரிவுகளில் விருது வாங்க இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

இதைப் பகிர்ந்து வாழ்த்துகளையும் தந்த அகன் அய்யாவுக்கு நன்றி . குக்கிராமத்து மூலையில் இருந்தாலும்  என்னையும் அங்கீகரித்து இந்த எழுத்து தளத்தில் நான் எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ்சார்ந்த படைப்புகளுக்கு   எனக்கும் மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் ஒரு விருது. மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி  எழுத்து தளத்துக்கும்,   உங்களது மேலான கருத்துகளில்  என்னை உயரம்காண வைத்த தளத்தோழமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நன்றிகள். 


இந்தவிருதை உங்கள் அனைவருக்கும்  என் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். 

என்றும் உங்கள் ஆசிகளில்
நன்றியோடு நான்

மேலும்

நன்றி அய்யா. இன்னும் பலவற்றை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் வாழ்த்துக் கவிதை மூலம். எனக்குள் இன்னும் செழிப்பாக துளிர்விட்டிருக்கிறது அய்யா 15-Nov-2016 9:58 pm
உம் வாழ்த்துக்கு நன்றிகள் அன்புத் தம்பியே. இளையோர் பெரியோர் என எல்லோரின் மனங்களில் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மனம் மகிழ்கிறது. தலைமுறை தாண்டிய பல படைப்புகளைப் படைக்க ஒவ்வொருவரின் வாழ்த்தும் எனக்கு உறுதுணையாக இருக்கும். 04-Nov-2016 8:23 pm
அன்பு நண்பர் இராசேந்திரன்! நலம். நலமே வாழ்க நீடூழி! எழுத்து தளத்தில் தாங்கள் எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகளுக்கு ் மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் விருது பெற்ற செய்தி கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். வெற்றி புரிக்குச் செல்ல வேதனை புரத்தைத் தாண்டு என்றார் அண்ணா! நீ எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தட்டுத் தடுமாறாத திடமான நெஞ்சுரம் கட்டிக் காக்கும் தன்னம்பிக்கை கொட்டி மகிழ்ந்த ஓயாத உழைப்பு வேதனையை வெட்டித் தள்ளி சோதனையை நெட்டித் தள்ளி சாதனையை எட்டிப் பிடித்தாய் விருதை தட்டிப் பறித்தாய். மண்ணில் விதை போடுவதற்கு முன்- உன்னில் அதைப் போட்டு உருவாக்கி கண்ணில் அமை கருவிழியாய் காக்க தன்னில் அது தழைக்கும் தல விருட்சம் ! குருவிகள் நெல் அறுவடைக்கு வரும் நாளுக்காகக் காத்திருந்தன குவித்து விட்டாய் சிறப்பான விருது குன்றொக்கும் களஞ்சியம் - நானும் குருவிகளோடு இணைந்து விட்டேன் கருத்துடனே பாராட்டி மகிழ்வவற்கே.!! நண்ணுவ எல்லாம் நலமுற்றே நாளும் ஈட்டும் நற்புகழால் மெத்த நலம் பெருகி குடும்ப வாழ்க்கை மேன்மேலும் வளம் பெருகி சிறப்படைய உலகாளும் பரம்பொருளை வணங்கி நின்று உள்ளம் நிறைந்து மகிழ்ந்து வாழ்த்துகின்றேன் :! நல்வாழ்த்துக்கள்! 03-Nov-2016 6:27 pm
வாழ்த்துக்கள் அண்ணா 02-Nov-2016 9:02 pm
KR Rajendran அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Sep-2016 2:33 pm

எனக்கு இருப்பிடம் எதுவும்
தேவையில்லை.
இரசித்துச் சாப்பிட
தனியுணவு தேவையில்லை

கால் நிற்கும் இடம்தான்
என் கூடாரம்..
காய்கனிகள் மட்டும் என்
நாவூறும் உணவாகும்...

கட்டுக்காகிதம் தேவையில்லை
காற்றில் நான் கவியெழுத
கடல் அலைகள் சந்தமிடும்...
வழிந்தோடும் ஓடை நீரோசை
தவிலிசையாய் கலந்தொலிக்கும்

வண்டரித்த மூங்கிலோசை
புல்லாங்குழலிசையாய்
கவிதையின் ஊடாக
கானகத்தை ஊடுருவும்...

தொங்கும் விழுதுகளே
தோரணமாய் எனக்கிருக்க
தேவையில்லை
முகத்துதி பாடும்
பொல்லாதவர்களின்
வரவேற்பு..

பட்டாடை தேவையில்லை
பணமுடிப்பும் தேவையில்லை
இடுப்பொட்டி இருந்திடவே
அரைக்கச்சை அதுபோதும்

அதுவும் இல்லைய

மேலும்

மிக்க நன்றி 19-Sep-2016 1:37 pm
மெல்லிய தென்றல் பல்லவியாக மனதில் பயணம் செய்கிறது தலை ஆட்டும் பூக்கள் சரணத்தோடு முத்தமிடுகின்றன.. 19-Sep-2016 9:16 am
துரோணாச்சாரியார்களாக - தட்டச்சுப்பிழை மன்னியுங்கள் அய்யா 18-Sep-2016 11:02 pm
வாழ்த்துக்கு நன்றி அய்யா. உங்களைப் போன்ற தள அறிஞர்கள் பலர் துரோணராச்சாரியார்களாக இருக்கும்போது ஏகலைவன் எனக்குள் இப்படி வருவது இயற்கைதானே அய்யா. உங்கள் அனைவரின் ஆசிகளோடு இன்னும் சிறப்பாக முயற்சிக்கிறேன் நன்றி அய்யா. 18-Sep-2016 11:00 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Sep-2016 12:45 am

இனிநாளும் புதிதாக இசைபாடும் குயிலாக
***இனியேனும் மனம்மாறுவேன் !
தனியாக இருந்தாலும் தடுமாறித் தவியாமல்
***தமிழ்ச்சோலை தனில்கூடுவேன் !
கனிவோடு புகழ்கூறி கணநாதன் அருள்நாடி
***கவியோடு தினம்வாழுவேன் !
நுனிநாவில் கலைவாணி நொடியேனும் நடமாட
***நுதிபாடி ஜதிகூறுவேன் !!

மேலும்

கவியோடு தினம்வாழும் கவிக்கோவாய் இருந்திங்கே கலைநெஞ்சம் தெரியவைத்தாய் புவியோடு எரிந்தாலும் புலன்பூக்கும் மொழியென்று புரியார்க்கும் புரியவைத்தாய் ! மிகவும் அருமை தொடர வாழ்த்துகள் 18-Sep-2016 12:12 am
கவலைக்கு மருந்தாக கவிதையினால் வருடிவிட்டாய் எவருக்கும் இனிவேண்டாம் என்போன்று மனத்துயரம் துவண்டாலும் அவனருளால் துணிந்தெழுந்து பணிதொடர்வேன் தவமென்ன நான்செய்தேன்...... தங்கமகன் நீவாழி ! 15-Sep-2016 1:33 pm
மிக்க நன்றி ! 15-Sep-2016 1:16 pm
மிக்க நன்றி ! 15-Sep-2016 1:15 pm
Geeths அளித்த எண்ணத்தை (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Sep-2016 4:25 pm

பெங்களூரில் அப்பாவி தமிழ் மாணவனை தாக்கிய கன்னட வாலிபரின் பெயர், மற்றும் தொலைபேசி என் இது, முடிந்தவரை இதை பகிரவும். 


Profile name: AC Venkatesh
Mobile number : +919150144349

Organisation
Yuva Karnataka

https://www.facebook.com/Yuvakarnataka
+91 96860 28888

Address
No 2/B JP Road Girinagar 1st Phase Bangalore
560085 Bangalore     

மேலும்

அந்தக் கொடியவன் ஈனப்பிறவியாகத் தான் இருப்பான். எங்கெங்கு மூடப்பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் வன்முறையும் அநாகரிமும் வெறித்தனமும் செழித்தோங்கும். குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகளால் நாடு மொழி பண்பாடெல்லாம் சீரழிகிறது. நமது பண்பாட்டைப் பார்த்து அவர்கள் திருந்தவேண்டும். அவர்களது இன ஒற்றுமை மொழிப் பற்றைப் பார்த்து தமிழர்கள் திருந்தவேண்டும். முதலில் திருத்தப்பட வேண்டியவர்கள் கற்ற தமிழ் எட்டப்பர்களே. 18-Sep-2016 11:06 am
மிக்க நன்றி சகோதரி. 14-Sep-2016 10:27 pm
தகவலுக்கு நன்றி 14-Sep-2016 8:06 pm
KR Rajendran அளித்த எண்ணத்தை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Aug-2016 11:00 pm

அன்புத் தோழமைகளே...


உங்களுக்கு நன்றி சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் முகம் மகிழ்கிறேன்.  நேற்றோடு  நம் “எழுத்து” தளம் நுழைந்து ஒரு வருடங்கள் ஓடிவிட்டது. எங்கோ ஒரு கிராமிய மூலையில் இருந்த  நான் முதன் முதலாக எழுதியது இந்த தளத்தில்தான். இது என் தாய்வீடு. 

முதன் முதலாக இந்த தளம் நுழைந்த  நேரத்தை நெஞ்சில் நினைத்துப் பார்க்கிறேன்.  எங்கோ ஒரு மூலையில் களிமண்ணாய் இருந்த என்னை உங்கள் கருத்துகளில் செப்பனிட்டு  இந்த கிராமிய களிமண்ணுக்கு  உருவம் கொடுத்து உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு வெறும் ”நன்றி"என்ற மூன்றெழுத்து சொல் போதாது. இன்னும் அதற்கு இணையான வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் தனித் தனியான என் நன்றிகளை இதன் மூலம் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். 

ஆரம்பத்தில் நான் எழுதியவைகளையும், இப்போது நான் எழுதுபவைகளையும் பார்க்கிறேன். எனக்குள் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன்.இதற்கு முழுக்காரணம்  நம் தளப் பெரியோர்களின் வழிகாட்டலும், மற்ற சகோதர சகோதரிகளின் கருத்து உற்சாகமும்தான்.  இந்த தளம்தான் எனக்கு எழுத்து அரங்கேற்ற மேடையானது. பார்வையாளர்களாய் நீங்கள்தான் எனக்கு கருத்து எனும் கைதட்டல்கள் கொடுத்து  என்னை உயர்த்தினீர்கள், உயர்த்தி வருகிறீர்கள்.  நம் தளத்தில் எழுதுவதற்கு போட்டி இருந்தாலும், பொறாமை இல்லை. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அய்யா என்றுதான் எல்லோரையும் அழைக்கத் தோன்றுகிறது. காரணம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தன் மகனுக்கு, தன் சகோதரனுக்கு என்ன உற்சாகம் கொடுப்பார்களோ அதைவிட 100 மடங்கு உற்சாகத்தை தந்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். அதற்கு உங்களுக்கும்,எனக்கு எழுத மேடை தந்த நம் தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

உங்கள் கருத்துகளில் என்னை செதுக்கி செதுக்கி இப்போது ஓரளவு தேறிவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சாதாரண கவிதை என்பதே எனக்கு அசாதாராணமாக தெரிந்தது. இப்போது இலக்கணக் கவிதைகளை இனம் கண்டுகொண்டு எழுத முடிகிறது. இதற்காக திரு கன்னியப்பன் அய்யாவுக்கும்,  வெண்பா சாரலர் என்று அன்போடு அழைக்கும் சங்கரன் அய்யாவுக்கும் இந்த ஏகலைவனின் பணிவான வணக்கங்கள்.

கதிரவன் பெருமை-உழவின் மகிமை, உழவனதிகாரம், சுந்தரக்கோதை, தரைமீது கோலமயில்,  போன்ற வெண்பாக்களையும் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்.  

திருக்குறளை எடுத்து உழவனதிகாரம் படைத்த நான் உங்களின் உற்சாகத்தால் புதிய முயற்சியாக இராமாயணத்தை   “இராமர் நடந்த மருத நிலப்பாதை” எனும் தலைப்பில் 20 வெண்பாக்களாக படைக்க முயற்சியையும் செய்திருக்கிறேன்.   
 எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த  உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன் 

முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக்  கொண்ட   நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும்,  தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பை கூடபாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். அதற்கும் காரணம் நீங்கள்தான்.முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே அதைத் தொடர்ந்து வளர்ச்சிகளில் ஒவ்வொரு படியாக ஏறினேன். இல்லை நீங்கள்தான் ஏற்றி வைத்தீர்கள். 

 கிராமம் விட்டு வெளியே எங்கும் செல்லாத என்னையும் என் எழுத்து சென்னை வரை கொண்டு சேர்த்தது. 

தீவுத்திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில்  திரைப்படக் கவிஞர்கள். திரு அண்ணாமலை, திரு பிரியன் அவர்களின் கையால் என் கவிதை ஒன்று அரங்கேறிய நூலை பெற்றுக் கொண்ட சந்தோசம் வாழ்வில் மிகப் பெரிய தருணம்.அந்த மேடையிலும்  நான் எழுதிய கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டி சிறப்புரையாளர் சொன்ன போது என்னை உயர்த்திவிட்ட உங்களை மட்டுமே நினைத்து நெகிழ்ந்தேன்.

ஒவ்வொரு படியாய் உயர அதன் பிறகு என் தமிழ் மீது பற்று கொண்டு அமெரிக்க மின்னிதழனான “பாலசந்திரிகை” என்னை தத்தெடுத்துக் கொண்டது. மாதமிருமுறை வெளிவரும் இந்த மின்னிதழில் சிறுவர்களுக்கான பாடல் பகுதியை எனக்கு ஒதுக்கித் தந்து  நான் எழுதும் ஒவ்வொன்றையும் உற்சாகப் படுத்தி வருகிறது.

மேலும் தளம் இணைந்த இந்த ஒரு வருடத்தில் மொழிபெயர்ப்புக்காக நான் முயன்று ஓரளவு ஆங்கிலமும் கற்றுக்கொண்டேன். இப்போது ஆங்கிலத்திலும் ஓரளவு  எழுதமுடியும் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது. 
.
இதுவரை வேறு தளங்களில் கலந்துகொள்ள வழிமுறை தெரியாததால் வேறெந்த தளத்திலும் இணையாத நான் சென்ற வாரத்தில் என் எழுத்தின் உயரத்தை சுயமதிப்பீடு செய்து கொள்ள இரண்டு தளங்களில் இணைந்தேன். எழுதிய ஒவ்வொன்றுக்கும் பாராட்டுகள், பரிசுகள் என தினம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கும் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

என் தொடரும் வெற்றிகளில் ஏணிப்படியாய் இருக்கும் இத்தள உறுப்பினர்களை என் வாழ்நாளில் என்றும் மறவேன். இத்தனை பரிசுகள், பாராட்டுகள், பட்டங்கள் பெற்றாலும் என் மனதளவில் அப்போதும்.இப்போதும் எப்போதும் என்றும் எல்லோர் மீதும் அன்பும், பாசமும் கொண்ட வெள்ளந்தியான கிராமத்தவன்தான்.  உங்களின் பாசத்தில் எப்போதுமே வாழும் பயிர்தொழிலாளன் தான்.

இத்தனை சுகங்களிலும் என்னை வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது என் உடன்பிறவா அன்புத் தம்பி ( udaya sun) உதயாவின் இழப்பு. 

முகம் பார்த்திராமல் எழுத்தின் பொங்கல் சாரல்களில் இணைந்திருந்த எங்கள் பாசக்கயிறுகள் அறுபட்ட அந்த நாட்கள் மனதுக்குள் இன்னும் கண்ணீர் தருணங்களாக இருக்கிறது.

இதே போல் அம்மா என்று நான் உரிமையோடு அழைக்கும் சியாமளா அம்மாவின் மகன் இறந்த செய்தி. 

 மின்னஞ்சல்களில் எழுத்துகள் மூலம் ஆறுதல் சொல்லி இருந்தாலும் அந்த வேதனையை ஒரு சகோதரன் படும் வேதனையைப் போலவே நானும் உணர்கிறேன். மகனை இழந்த தாயால்  ஆறுதல் அடைய முடியாதுதான். இருந்தாலும் இயற்கையின் இந்த அழிக்க முடியாத  சோகங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். மகனை இழந்த இரு தாய் தந்தையர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதலை தர என் கண்ணீர் துளிகளோடு ஆண்டவனை வேண்டுகிறேன்.அவர்கள் எப்போதும் நம்மிடையே இருப்பதாய் உணர்வோம்.   

என்றும் பணிவும் நன்றியுடன்
இராசேந்திரன்.

மேலும்

நன்றி தோழரே. கிராமத்திலேயே இருந்த எனக்கு சென்னை மாநகரின் சூழ்நிலை ஒத்துவரவில்லை என்பதால் திரைப்பா கூடத்தில் இணையும் சூழ்நிலையும் இப்போதைக்கு இல்லை தோழரே.. 28-Aug-2016 4:50 pm
மனம் திறந்த மடல் உலகம் புகழும் உலகம் அனைத்தும் நம் கிராமத்து விவசாயம் , நம் உலகத்தமிழ் கவிதை ,கட்டுரை , எண்ணம் .இலக்கிய படைப்புகளை அனுப்ப வேண்டுகிறேன் தமிழ் அன்னை , பெற்றோர், கற்றோர், மற்றோர் ஆசிகள் வேண்டுகிறேன் 27-Aug-2016 5:16 am
வாழ்த்துக்கள் anna 27-Aug-2016 1:50 am
வாழ்த்துக்கள் அண்ணா... தங்கள் இலக்கிய பயணம் மேலும் வெற்றி நடைபோட என்றும் என் வாழ்த்துக்கள் .... மலரொன்று பேசிடக் கண்டேன்... மனதினை கவர்ந்ததை உணர்ந்தேன்... வானம் தொடட்டும் கவிதை சிறகுகள்... வசந்தம் பெறட்டும் வாழ்க்கை கனவுகள்... அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்.... 26-Aug-2016 2:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (131)

JAHAN RT

JAHAN RT

மதுரை
raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
prabavathibalamurugan

prabavathibalamurugan

ஈரோடு
gnanapragasam

gnanapragasam

சேலம்.

இவர் பின்தொடர்பவர்கள் (133)

Siva

Siva

Malaysia
Saleem Khan

Saleem Khan

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
Shyamala

Shyamala

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (131)

chelvamuthutamil

chelvamuthutamil

காரைக்கால்
arshad3131

arshad3131

திருநெல்வேலி
SIVAPPRAKASAM

SIVAPPRAKASAM

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே