Kannan Siva Profile - சிவா சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  படுக்கபத்து,தூத்துக்குடி
பிறந்த தேதி :  23-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2016
பார்த்தவர்கள்:  295
புள்ளி:  145

என்னைப் பற்றி...

வாழ்வில் எந்த நிலைக்கு போனாலும்....rnஇருந்த நிலையை என்றும் மறக்க மாட்டேன்.....

என் படைப்புகள்
Kannan Siva செய்திகள்
Kannan Siva - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-May-2017 6:57 pm

சில நேரங்களில் சில நேரங்களில்
சிலர் கேட்கும் விடைகள் தெரியாத கேள்விகளுக்கு நம் மவுனமே விடையாக காரணம் என்ன...

உங்களுக்கு இவ்வாறு ஏதேனும் அனுபவம் இருப்பின் பகிரவும் தோழமைகளே!

மேலும்

தெரியாததை தெரியாதுன்னு சொல்லாதெரிந்தவர்கள், தெரியும் சொல்ல முடியாது என்ற மமதையில் இருப்பதாய் காட்டிக்கொள்ளும் சமாளிப்பு. 21-May-2017 10:00 am
அனுபவம் இருக்கானா கேட்கிறீங்க..? நல்லா கேட்டீங்க சுவாமி..! திருமணம் முடித்தவர்கள் வாழ்க்கை எதுல ஓடுதுணு நினக்கிறீங்க... அம்மமணி சொல்லறது தப்பா இருந்தாலும் வாயைமூடி சிலநேரம் காதையும் மௌனம் ஆக்கணும்... இது என்அனுபவம்..! 21-May-2017 1:28 am
எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் . அறிவியல் இலக்கியம் தத்துவம் என்று எத்தனையோ விதமான கேள்விகள் . எல்லோருக்கும் எல்லா விடையும் தெரியுமா என்ன ? விடை தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கூச்சமின்றி கேட்க வேண்டும் . மவுனமாயிருந்தால் கௌரவப் பிரச்சினை பார்க்கிறீர்கள் . அல்லது you are suffering from inferiority complex ! இதை உடைத்தெறிய வேண்டும். அறிவு தேடலில் மான அவமானப் பிரச்சினை இருக்கக் கூடாது. பிரணவத்திற்கு பொருள் தெரிந்து கொள்ள தந்தை மகனிடமே உபதேசம் பெற்ற கதையெல்லாம் நாம் அறிவோம் . நற் கேள்வி அன்புடன்,கவின் சாரலன் 20-May-2017 9:20 pm
கேள்வி நம் மனம் புண்படும்படி இருந்தால் பதில் சொல்லத் தேவை இல்லை. நம் பதிலால் பிறர் மனம் புண்படும் என்றாலும் பதில் சொல்லத் தேவை இல்லை. 20-May-2017 5:52 pm
Kannan Siva - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2017 5:35 pm

அன்பு மகனுக்கு . . .

அன்பு மகனே....
ஈறைந்து மாத
நிர்பந்தமா...?
கருவறையில்
உன்வாசம் !

செக்கென உணர்வற்று
உன்னை நடுநிறுத்தி
உலகை உனக்குள்ளே
புதைத்திழுத்தேன்
என்மூச்சை. . . .

கடுக்கும் இடுப்போடு
நோவும் கால்மறந்து
கங்காரெனக் கொண்டேனே
உன்னை என்னோடு . . .

கண்டதை நீ உண்டாலும்
காக்காய் கடிகொடுக்க
கண்ணிரண்டும்
கலங்கிநிற்க....
பெற்ற மகன்தானே
பெருமிதமாய்
மனம் தேற்றும் . . .

உன்
கல்வி கட்டணமாய்
கண்டோரின் கையேந்தி
காலமதை கடத்தி வைத்தேன்
கால்தொட்டும் சிலநேரம் . .

உழைப்புக்கு விடிவொன்று
உன்னாலே வருமென்று
காட்டாதா நாள்காட்டி என
பொறுமையின் ஆணிவேரை
நட்டுவைத்தேன்

மேலும்

சமுதாயத்தை பக்கம் பக்கமாய் புரட்டிப் பார்க்கிறது உங்கள் கவிதைகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2017 4:46 pm
Very very thanks Saki avarkalae 21-May-2017 8:43 pm
வலிக்கொண்ட உணர்வுகள் ..... தாயின் வலிகள் இறுதிவரை கண்ணீருடன் ...... 20-May-2017 9:16 pm
நன்றி சகோதரரே! 19-May-2017 7:08 pm
Kannan Siva - Kannan Siva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2017 9:28 pm

திருமதி.பாரத செல்வி

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வார்கள்
குருவாக தோன்றி பிதாவாக வளர்ந்து மாதாவாக விடை பெறும்…
பாரத செல்வி அம்மாவிற்கு
உங்களுக்கு தெரிந்த மொழிகளில்
எனக்கு தெரிந்த வழிகளில்
கிறுக்கிய ஓவியங்கள் இவை!!!

பாரதி கண்ட புதுமைப்பெண் என்பதா?
பாரதியை ஈன்று எடுத்த கவிதாயினி என்பதா?
பாரதத்தை காக்கும் தேவி நீ என்பதா? இல்லை
பார் எங்கும் ஒலிக்கும் பாரதசெல்வி நீ என்பதா?

அன்று! மொழிகளால் அதட்டல் செய்தவர்
இன்று! விழிகளால் கைதட்டல் பெறுகிறார்
அன்று! கனிவுடன் கல்வியை தந்தவர்
இன்று! கண்ணீரில் முழ்கடித்து செல்கிறார்....

எமனை மிஞ்சும் வீரம்
கடவுளை எச்சரிக்கும் கோபம்
குழந்த

மேலும்

மிக்க நன்றி தோழமையே 18-Apr-2017 6:09 am
மிக்க நன்றி ஐயா 18-Apr-2017 6:08 am
ஆளுமை திறனும் அனுபவமும் அறிவாற் றலும் செயல் திறனும் கொண்ட தங்கள் திருமதி.பாரத செல்விஆசிரியைக்கு பணிநிறைவு வாழ்த்துக்கள் 18-Apr-2017 3:08 am
அழகிய மடல்...பாராட்டும் வாழ்த்துக்கள்... 17-Apr-2017 10:31 pm
Kannan Siva - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2017 9:28 pm

திருமதி.பாரத செல்வி

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வார்கள்
குருவாக தோன்றி பிதாவாக வளர்ந்து மாதாவாக விடை பெறும்…
பாரத செல்வி அம்மாவிற்கு
உங்களுக்கு தெரிந்த மொழிகளில்
எனக்கு தெரிந்த வழிகளில்
கிறுக்கிய ஓவியங்கள் இவை!!!

பாரதி கண்ட புதுமைப்பெண் என்பதா?
பாரதியை ஈன்று எடுத்த கவிதாயினி என்பதா?
பாரதத்தை காக்கும் தேவி நீ என்பதா? இல்லை
பார் எங்கும் ஒலிக்கும் பாரதசெல்வி நீ என்பதா?

அன்று! மொழிகளால் அதட்டல் செய்தவர்
இன்று! விழிகளால் கைதட்டல் பெறுகிறார்
அன்று! கனிவுடன் கல்வியை தந்தவர்
இன்று! கண்ணீரில் முழ்கடித்து செல்கிறார்....

எமனை மிஞ்சும் வீரம்
கடவுளை எச்சரிக்கும் கோபம்
குழந்த

மேலும்

மிக்க நன்றி தோழமையே 18-Apr-2017 6:09 am
மிக்க நன்றி ஐயா 18-Apr-2017 6:08 am
ஆளுமை திறனும் அனுபவமும் அறிவாற் றலும் செயல் திறனும் கொண்ட தங்கள் திருமதி.பாரத செல்விஆசிரியைக்கு பணிநிறைவு வாழ்த்துக்கள் 18-Apr-2017 3:08 am
அழகிய மடல்...பாராட்டும் வாழ்த்துக்கள்... 17-Apr-2017 10:31 pm
Sureshraja J அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Apr-2017 12:19 pm

கோபம் வந்தது
காதலியை இழந்தேன்
கோபம் வந்தது
பெற்றோரை இழந்தேன்
கோபம் வந்தது
வேலையை இழந்தேன்
கோபம் வந்தது
பொறுமையை இழந்தேன்
கோபம் வந்தது
நிம்மதியை இழந்தேன்
கோபம் வந்தது
நற்பெயரை இழந்தேன்
கோபம் வந்தது
உணவை இழந்தேன்
கோபம் வந்தது
மதியை இழந்தேன்
கோபம் வந்தது
பொருளை இழந்தேன்
கோபம் வந்தது
சொத்தை இழந்தேன்
கோபம் வந்தது
நற்பெயரை இழந்தேன்
கோபம் வந்தது
மனைவியை இழந்தேன்
கோபம் வந்தது
பிள்ளைகளை இழந்தேன்
கோபம் வந்தது
நண்பர்களை இழந்தேன்
கோபம் வந்தது
வாழ்க்கையையே இழந்தேன்

மேலும்

உண்மைதான். ஆறாத சினம் முதலில் நம்மை அழித்து விட்டு தான் மறுவேலைப் பார்க்கும்... 13-Apr-2017 8:26 am
உண்மை தோழா . தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே 07-Apr-2017 10:15 am
உண்மைதான்..மனிதனின் எண்ணங்கள் எல்லாம் அழகானது ஆனால் அந்த அழகை கூட அழுக்காக்கி விடுகிறது கோபம் 07-Apr-2017 1:54 am
ஆம் நண்பரே ... கோபத்தை குறையுங்கள் ... ஹா ஹா ஹா 06-Apr-2017 2:00 pm
Kannan Siva - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 1:10 pm

மகிழ்வு வதியும் பெட்டகம்
மனங்கள் இணைந்த ஒன்றியம்
பேதமை இல்லா பொன்னகம்
காணவில்லை இதுபோல் மண்ணகம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

வாழ்த்துக்கு நன்றி 06-Apr-2017 1:40 pm
அருமை சகோ 06-Apr-2017 1:20 pm
Kannan Siva - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Aug-2016 8:18 am

சிறிது நாட்களாகவே!!!
என் கவிதை அனைத்தும்
காமத்தையே! பெரிதாய் புகழ் பாட
செய்கிறது

இதனால் என்கவிதைகளை
என் நட்பின் வட்டம்
விமர்சித்து வருகின்றன

உலக நடைமுறை வாழ்க்கையில்
பெரியது

காமமா? காதலா?

மேலும்

காதலில்லா காமமும் தவறே.... காமமில்லா காதலும் தவறே... உடல் இல்லா உயிர் போன்றது காதல் ...இதை ஆவி , ஆத்மா எனவும், உயிர் இல்லா உடல் போன்றது காமம் இதை பிணம் எனவும் சொல்லலாம்... இரண்டும் இணையா இல்லற வாழ்க்கை இனிப்பதில்லை ... எந்நாளும் ... 01-Sep-2016 12:11 pm
பெரியது சிறியது என்று எதுவும் இல்லை. காதல் காமம் இரண்டும் இயல்பாக எழும் உணர்வுகள். சொல்லப் போனால் இரண்டும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். காமம் என்பது மறைநிலை, காதல் என்பது தெரிநிலை; அவ்வளவுதான். உணர்ச்சிகள் யாவும் இயற்கையானவை. நல்லவை கேட்டவை என்று தரம் பிரிக்க முடியாதவை. காமம் அருவருப்பானதும் அன்று, காதல் தெய்விகமானதும் அன்று. வெளிப்படுத்தும் மாந்தரைக் கொண்டே இவை போன்ற உணர்ச்சிகளின் தரம் நம்மால் குறிக்கப்படுகிறது. 21-Aug-2016 12:31 pm
ரசித்தமைக்கு என் நன்றிகள் 16-Aug-2016 5:33 pm
பருவடிக்கேற்ப காதல் மற்றும் காமம் வாழ்க்கையில் நடக்கும். பெற்றோர் உறவினர் வாலிப பருவத்தில் தந் பிள்ளை காதலில் மூழ்கக்கூடாது என கவலைப்படுவர் . அதே பெற்றோர் தனக்கு ஒரு பேரன் வேண்டும் உடனே என அவசரப்படுவர் . இதுவே உலக நியதி . 15-Aug-2016 6:03 pm
முதல்பூ அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jun-2016 7:49 pm

என்னவளே...

நான் இதுவரை ஓவியம்
தீட்டியதில்லை உனக்கும் தெரியும்...

எதோ முயற்சித்தேன்
உன்னை வரைந்துவிட...

என் ஓவியத்திற்கு
தொடக்கமும் தெரியவில்லை...

ஓவியத்திற்கு
முடிவும் தெரியவில்லை...

எந்த ஓவியனின் கைகளையும்
நம்பி இருக்க நான் விரும்பவில்லை...

நீயும் விரும்பமாட்டாய்
எப்போதும்...

உன் மனதின் எண்ணம்
எனக்கு தெரியுமடி...

என் உள்ளம்
உனக்கு புரியாதா...

என் உணர்வுகளை வண்ணம்கொண்டு
தீட்ட முயற்சித்தேன்...

எந்த வண்ணம் கொண்டு
உன்னை தீட்டுவது...

உன் விரல் தொட்டு
காட்டிவிட்டு செல்லடி...

என் இதயத்தில்.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அண்ணா. 06-Jun-2016 7:34 pm
அவளே சிறந்த ஓவியம்தானே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழமையே. 06-Jun-2016 7:33 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அண்ணா. 06-Jun-2016 7:33 pm
சுவாசத்தின் உணர்வுகள் காகிதத்தில், வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 06-Jun-2016 7:33 pm
Kannan Siva - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 4:59 pm

கவித்தாய் பெற்றவரே! உம்மைப்
போற்ற நினைக்கையில் கவித்தாயே!
என் தலைமுடியை வருடிச் செல்கிறாள்..

தென்தமிழகமே! கொஞ்சம்
தலைசாய்ந்து கொள்! உந்தன் பெருமை இன்று
உதிரப்போகிறது மீண்டும் மலர்வதற்கு..

கண்டிப்போடும் நீயே! தாயாய்
அறிவுரையோடும் நீயே! ஆசானாய்
தோளோடும் நீயே! தோழனாய்
என் எழுத்தோடும் நீயே! கவிஞனாய்
வாழ்கிறாய்

கண்டிப்பாய் நீ கற்று தந்ததும்
கனிவாய் நீ விட்டு தந்ததும்
கண்ணோடு கரைகிறது கானல் நீராய் இன்று

சில நேரம் ஆசானாய்
பல நேரம் நண்பனாய்
நொடி பொழுதும் கனவாய்
நீ உரையாடிய அந்த நாட்கள்

பாலையில் சோலையாய் உம்மைக் கண்டேன்
எங்கள் இன்னல்கள் யாவும் கரைந்தது இன்று!
எங்கள் வழித

மேலும்

குரு வணக்கம் தத்துவ மலர் பாராட்டுகள் . . குருகுல வாழ்வின் கருத்துக்கள் .நன்றி .c 31-Mar-2016 4:41 pm
கவலை என்ற ஒற்றை வார்த்த அர்த்தமற்று போனது உங்கள் அகராதியில் காலமும் ஒருநாள் கடந்து தான் போகும் உங்கள் நினைவலைகளை நெஞ்சில் சுமந்தப்படி அருமை நண்பா 31-Mar-2016 9:45 am
Kannan Siva - Mohamed Sarfan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 5:39 pm

அழியாத காயம்
மருந்தில்லாத வியாதி
நீர்
அருந்தியும் தீராத தாகம்
இரு மனதின் சுவாசத்தில்
வாழும் ஜீவன் காதல்

என்னவளுக்கு பெயர்
வைக்க
கடவுள் எழுதினானா?
பூக்களின் அகராதியை;
அவள்
அவ்வளவு அழகில்லை
அவளை
விடயழகு யாருமில்லை

கன்னி
நடந்தால் மண்ணிலுள்ள
எறும்புக்குக் கூட வலிக்காது
புன்னகை
முத்துக்களை சிந்தினால்
பூக்களும் ரசிகனாகும்
இதழ் விரிக்காமல் பேசும்
அவள் பாஷை
காட்டு மூங்கில் புல்லாங்குழலின்
மெல்லிசைக்கு ராகமாக கேட்கும்.

அழகாய் பிறந்த
மலர்களெல்லாம் நினைத்ததாம்!
மருதாணி இலையாக பிறந்து
உதிர்ந்திருந்தால்
அவள் ரேகைகளில்
மருதாணி பூவாய் பூத்திருக்கலாம்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Mar-2016 6:46 am
அற்புதமான இதயம் நண்பர் 23-Mar-2016 8:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 1:15 pm
ஆஹா அழகிய வரிகள் நண்பரே ....!! 22-Mar-2016 11:51 am
Mohamed Sarfan அளித்த படைப்பை (public) vviji மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Mar-2016 10:52 am

தேசத்து கவிஞர்களும் என்னை கோபித்தனர்
உன்னைப் போல் பேரழகியை காதலிப்பதால்
என்னவள் இமை பட்டாம்பூச்சிகள் கனவில்
எனக்குள் பறந்திட உனக்குள் தொலைகிறேன்.
***
பருவத்து ஆசைகளை புருவத்தில் பருக்களாக்கினேன்
தினந்தினம் கிள்ளிப்பார்ப்பாய் மெதுவாய் வலித்திட,
முத்துப்பற்கள் விலக புன்னகை செய்யும் செங்கமலம்
போன்ற உன்னிதழில் என் ஆயுளை ரேகையாக்குகிறேன்
***
குழந்தை பார்வையில் காமம் செத்து மடிந்தது
என் நெஞ்சுக்குள் நினைவை புதைத்து தாலாட்டு பாடுகிறேன்
ஆயிரம் தாரகைகள் மின்னிடும் உன் பார்வைகள்
இரவின் பரிதவிப்பாக கனவில் சேலை மாற்றுகிறது.
***
நயாகரா நீர்விழ்ச்சி அருகில் ஒரு குடிசை

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Mar-2016 11:36 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Mar-2016 11:36 pm
காதலின் பொருள் உணர்ந்த கவிதை - அருமை 24-Mar-2016 2:33 pm
காதலின் உணர்வுகளை கற்பனை தொட்டியில் போட்டு தாலாட்டும் கவிதை நண்பரே ... 24-Mar-2016 10:22 am
Kannan Siva - Mohamed Sarfan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 6:01 pm

விண்ணின்
தாகத்திற்கு
முகிலின் கண்ணீர்
மாந்தன் வாழும்
மண்ணில் சங்கமம்

அலைகள் கூட
பாவப்பட்டதோ?
மழையின்
தாகப் பசியை
இளைப்பாறிப் பார்க்க,

விரலின் எழுத்துக்கள்
காகிதத்தின் மச்சம்
ஜாதகம் சகுனம் என்பன
பழமையின் மிச்சம்

சிகரமான உள்ளத்தில்
பொறாமை உச்சம்
கருவால் வந்தவனும்
வெட்டியாளனுக்கு எச்சம்

தரையை
மிதித்தவனும்
நிலத்தினுள் தான்
தூங்க வேண்டும்
தேரில் வந்தவனும் நாளை
கால் வழி கட்டிலில் தான்

பூஞ்சோலை
குயில்களின்
காதலி மலர்கள்;
பறித்து சூடுகிறாள்
நடமாடும் பூங்கோதை

கண்களின் கண்ணீர்
சுயரூபம் இல்லை
உடம்பின் உதிரத்தில் தன்
பெயர் எழுதப்பட்டி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Mar-2016 11:20 pm
அருமை கடைசி பத்தியை சரிபார்க்கவும் 27-Mar-2016 7:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:30 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

JAHAN RT

JAHAN RT

மதுரை
Sureshraja J

Sureshraja J

சென்னை
aruuon

aruuon

இலங்கை
Vishanithi R

Vishanithi R

தூத்துக்குடி
Giri Bharathi

Giri Bharathi

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (37)

velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (37)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
Thanjai Guna

Thanjai Guna

தஞ்சாவூர்
மேலே