Maya Tamilachi Profile - மாயா தமிழச்சி சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  மாயா தமிழச்சி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  18-Aug-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Oct-2016
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எனக்கு கவிதைகள் பிடிக்கும். பிரிவாலும் தனிமையாலும் கவர்ந்தவள்.

என் படைப்புகள்
Maya tamilachi செய்திகள்

        மருந்து 


  உன் மௌனத்தால் 
    ஏற்பட்ட காயத்திற்கு
  உன் புன்னகை  ஒன்றே
     போதும் மருந்தாக !!!

மேலும்

Maya tamilachi - sekara அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிகவும் ரசிக்கவைக்கும் வரிகள் .. 01-Feb-2017 3:51 pm
சிறந்த வரிகள் 14-Oct-2016 9:35 pm
உங்கள் கவிதை வாசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல். மனதார ரசிக்க வைப்பதாகவும் இருக்கின்றது. அருமை... 29-Sep-2016 10:33 am
அருமை தோழரே.... 09-Sep-2016 2:34 pm
Maya tamilachi - saranyasaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2016 12:05 pm

அழகிய புன்னகைக்கரங்களில் சிக்கிக்கொண்ட..,
உன் புன்முறுவல்கள்..,
புதைந்துபோனது எதனாலோ..?
விழியோரப் பார்வையில் பதிந்துவிட்ட..,
உன் நினைவுகள்..,
தொலைந்துபோனது எதனாலோ..?
யுகங்களும் நிமிடமாய் தோன்றிவிடும்..,
உன் மகிழ்வுகள்..,
மறைந்து போனது எதனாலோ..?
சந்திக்கும் நேரங்களின் கணப்பொழுதை விட..,
சிந்திக்கும் சிலமணித்துளி அதிகம்தான்..!
என்றாலும் பதில் இல்லை..,
உன் 'மௌனம்' ஒன்றைத் தவிர..!

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி. 15-Oct-2016 1:09 pm
உங்கள் கவிதை என்னை மிகவும் கவர்கிறது. மௌனம் சம்மதம் சார்ந்தது தான் சகோதரி. 14-Oct-2016 9:30 pm
நன்றி சகோதரரே!!! 14-Oct-2016 12:28 pm
மவுனத்தின் மொழி சம்மதமாக இருக்கும் தோழமையே. 10-Oct-2016 10:38 pm
Maya tamilachi - anushadevi994 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2016 6:30 pm

மாலை கருகும் நேரமெல்லாம்
வாசலை நனைத்து கோலமிடுகிறேன்...
காரணம்!!!
வண்ண கோலமிடும் சமயத்தில்
என் மன்னவனின் வருகையை எண்ணியே!!!

நான் வைக்கும் புள்ளிகள் கூட அறியும்
என் அன்பு காதலை...
இருப்பினும்!!!
என் காதலன் நீ அறியும் பொன்னால்
எந்நாளோ அதை நான் அறியேன்!!!

மேலும்

வணக்கம் தோழியே.. உங்கள் கவியின் வரிகள் மிகவும் அருமை. கடைசி இரு வரிகளின் பொருள் எனக்கு புரிகின்றது ஆனால் ஏன் அந்த வரிகளை அங்கு இட்டீர்கள் அதுதான் எனக்கு புரியவில்லை.விளக்கம் அளிக்க முடியுமா தோழி. 14-Nov-2016 1:21 am
தங்கள் கவியின் நாயகி சுழற்றிய கோலக்கம்பிக்குள் சிக்குவது புள்ளிகள் மட்டுமல்ல நிச்சயம் காதலனின் மனதும்தான் ! அழகு வாழ்த்துக்கள் ! 13-Nov-2016 6:56 pm
பாராட்டுக்கு நன்றி தோழரே!!! 21-Oct-2016 10:57 am
பாராட்டுக்கு மிக்க நன்றி தோழியே!!! 21-Oct-2016 10:56 am
Maya tamilachi - saranyasaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2016 2:26 pm

காலத்தின் புத்தகத்தில்..,
கலைந்துபோன பக்கங்கள் 'நாம்'!
நிகழ்வுகளின் பிடியில்..,
நீங்கிவிட்ட நினைவுகள் 'நாம்'!
காலமும் சேர்க்கவில்லை..,
நம் நினைவுகளுக்கு உயிரோட்டம் தரமறுத்து..!
நிகழ்வுகளும் சேர்க்கவில்லை..,
நினைவுகள் ஏனோ தொலைந்து போனதால்..!
'நான்' உன் நினைவோடு என்றறிந்த வேளை..,
'நீ' தொலைத்து விட்டாய் என் ஞாபகங்களை..!

மேலும்

நன்றி சகோதரரே! 15-Oct-2016 1:01 pm
மனதோரம் கூடு கட்டி வாழ்கிறது நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:08 am

உயிரை விலை 

கொடுத்து
வாங்குகிறோம்
மருத்துவமனையில்....

மேலும்

Maya tamilachi - AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2016 7:53 pm

"அர்ச்சனை உங்க பேருக்கா?"
"சாமி பேருக்கே பண்ணிடுங்க. எனக்குத்தான் தினமும் வீட்டிலேயே நடக்குதே "

மேலும்

எனக்கும் நடக்குது. 12-Oct-2016 10:39 pm
Maya tamilachi - AUDITOR SELVAMANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2016 10:20 pm

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்.

பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது.

பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது.

இதனைக் ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது.

நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பாத்து, நீ என்ன அழகாக இருக்கிறாய்.

உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்

மேலும்

Maya tamilachi - Gowthami Tamilarasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
மிக்க நன்றி... 13-Oct-2016 12:37 pm
மிக்க நன்றி 13-Oct-2016 12:36 pm
மிக்க நன்றி 13-Oct-2016 12:36 pm

Ulakil ulla aththanai vasanai thiraviyamum thotru pokirathu...  

Yan kanavanin viyarvai manathin mun.... 😇😇👰👸👃😊😅

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே