Mohamed Sarfan Profile - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
இடம்:  ஓட்டமாவடி-03 இலங்கை
பிறந்த தேதி :  28-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  4483
புள்ளி:  4874

என்னைப் பற்றி...

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மண்ணின் மடியில் உயிர்களை படைத்து
விண்ணின் குடையில் நிலவை சமைத்து
எழுத்தின் ஆற்றலை எனக்குள் புதைத்த
வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.

கருவின் அறையில் என்னை சுமந்தாள்
அன்பின் பள்ளியில் இன்றுவரை சுமக்கிறாள்
கண்ணீர் சிந்தினால் கண்களை எனக்காய்
தந்திடும் தாய் எனும் பாதம் தொடுகிறேன்.

வியர்வை சிந்தி உயிராய் வளர்த்தான்
மடியின் மீது என்னை சுமந்து அணைத்தான்
நிலவை கேட்டால் வானம் வாங்கித்தரும்
என் தந்தையின் உள்ளத்தை தொழுகிறேன்.

அழகான சோலை போல் சின்ன தங்கையும்
அதை காக்கும் வேலியாய் சில சொந்தமும்
கதை பேசும் மொழியாய் பல உறவின் ராகமும்
என்னை ஆளும் சிறையில்லாத விளங்குகள்.

துன்பம் என்றால் தோள் கொடுக்கும் நண்பனும்
இன்பம் வந்தால் அதை பகிரும் என் உள்ளமும்
கண்கள் வழியே சில காதல் எனும் கற்பனையும்
வண்ணம் எனும் சிலந்தி வலையின் துணை நான்

கடலுடன் தினம் மொழியில்லாமல் பேசுவேன்
நிழலுடன் உருவம் பார்த்து நிதர்சனம் கற்பேன்
மலர்களின் முகத்தின் மேல் பனித்துளிகளால்
பருக்கள் வைத்து ரசிக்கும் இளைஞனும் நான்

ஓடும் குதிரையின் வேகம் போல் நடப்பேன்
தவழும் ஆமையின் வேகம் போல் ஓடுவேன்
தோல்வி வந்தாலும் வெற்றி வந்தாலும் கண்கள்
கசக்காதமனம் நோகும் உள்ளமும் என்னுடையது.

எழுத்தின் மேல் காதல் கொண்ட தீவிரவாதி
கற்பனையோடு யுத்தம் செய்யும் காகிதக்காரன்
உணர்வுகளோடு வெற்றி பெரும் பேனாக்காரன்
காதலில் தோற்க ஆசைப்படும் மிதந்தாவாதி

தமிழ் என்றால் உயிராய் என்று கருதுகிறேன்
அதன் மடியில் இறக்கும் வரை வாழ ஆசை
சினிமா எனும் உலகில் நானும் ஒரு பாடல்
இயற்றும் வாலியாய் என்றும் வாழ்வது இலட்சியம்

கண்கள் இருப்பதற்காய் தினமும் அழுகிறேன்
உள்ளம் இருப்பதற்காய் கனவில் மிதக்கிறேன்
பேனா இருக்கிறது என்பதால் உயிரோடு பேசுகிறேன்
தமிழோடு வாழ் நாள் முடியும் வரை வாழ்ந்திடுவேன்.

குயில்கள் என் தோழர்கள் இசையின் ஆசான்கள்
மயில்கள் என் பகைவர்கள் நடனத்தின் காதலர்கள்
கிளிகள் என் கற்பனைகள் அடைக்கப்பட்ட கூண்டில்
மைனாக்கள் என் மொழிகள் தனிமை அரங்கில்.......,

சங்கமின்றி தமிழ் வாழும் இடத்தில் வாழ்ந்திடுவேன்
காலத்தால் பல போதனைகள் அறிவாய் பெற்றிடுவேன்
மரணம் என்று என்னை ஆள்கிர்தோ அன்று என் விரல்
பிடித்த பேனாவின் மீசையில் மண் ஓட்டும் என்பேன்.

தமிழும் நானும் ஒன்றாய் பிறந்த குழுந்தைகள்
நான் தவழும் போது அது என் மேல் நடக்கிறது.
நான் ஓடும் போது அதுவும் என்னுடன் இணைந்திருக்கும்
கைகளில் தமிழ் உயிரில் தமிழ் எல்லாம் தமிழ் எனக்கு

என் உயிருக்கு தமிழ் மீது அளப்பெரிய காதல்
என் உயிர் மீது என் தாய் தமிழுக்கு தினந்தினம் காதல்
என்னுடன் உலகின் வசைகள் எறியப்பட்டு உடைக்கப்படுகிறது
ஆனால் நான் மட்டும் காயங்களுடன் வாழ்க்கை வாழ்கிறேன்

என் படைப்புகள்
Mohamed Sarfan செய்திகள்
Mohamed Sarfan - rmahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 11:03 pm

பொருத்தம்!
பழையசோறு,நார்த்தங்காய் ஊறுகாய்
கம்மஞ்சோறு,கருவாட்டுக்குழம்பு,
களை எடடுத்தகளைப்பை போக்கிக்கொண்டிருந்தது,
காதல்!

மேலும்

நன்று 25-Feb-2017 10:06 am
Mohamed Sarfan - writersathyaa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2017 12:04 am

ஆதி சிவனே

யாம் கொண்ட இப்பிறப்பு
தாம் ஈன்ற பிச்சையென
தாமதமாய் யாம் உணர்ந்தோம்
ஆதி சிவனே

நீ வேறு யாம் வேறு
குடி கொண்ட பொருள் வேறு
என்று திரிந்த கூட்டம்
எம் வேரு நீ என்று
மனம் உழும்
அருள் ஏரு நீ என்று
மெய் கண்டே வேண்டி நின்றோம்
ஆதி சிவனே

அரசாட்சி புரிந்தாலும்
பரதேசியென திரிந்தாலும்
ஆடவராய் பெண்டீராய்
இரண்டுமாய்
திரிந்து முடித்து
கடைசி மூச்சடங்கி
கதி என்று சேருமிடம்
ஆதி சிவனே

ஆடிடும் வாழ்வதனில்
சேர்ந்திடும் பாவங்களை
கழுவி கரைசேர
சற்றே தலை சாய்ந்தால்
வழிந்திடும் கங்கையில்
முழுவதும் மூழ்கியே
மூர்ச்சையாகிட வழிதருவாய்
ஆதி சிவனே

கரு வழியே புவியிரங்கி
கண்ட பயன் போ

மேலும்

மிக்க நன்றி தோழரே 25-Feb-2017 12:59 pm
சிறப்பான சிந்தனை ஓவியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2017 10:06 am
Mohamed Sarfan - rskthentral அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 11:03 pm

யார் அவன்?
கேட்டவன் எவன்
அவன்

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2017 10:05 am
Mohamed Sarfan - Idhayam Vijay அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 11:25 am

ஒரு விகற்ப நேரிசை வெண்பா :

மண்ணிலிங்கு வேரூன்றும் மாந்தரது வன்கொடுமை
விண்ணில்சென் றாராயும் விஞ்ஞானம் - கண்தோன்றும்
கண்ணன் புகழ்பாடும் காதல் சுகமெழுதும்
வண்ணமில் லாஎழுது கோல்......

மேலும்

Mohamed Sarfan - rmahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 11:03 pm

வாழ்க்கை!
மாறுதல் நிறைந்தது வாழ்க்கை.
ஒருமார்க்கமாகத்தான் போகும்.
சிந்தனை-ஸ்டியரிங்கை பார்த்து திருப்ப
சீராகும் பயணம்!

மேலும்

Mohamed Sarfan - Idhayam Vijay அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 11:38 am

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

வெங்கதிர் வீழ்ந்து விரிந்திடும் வெண்கமலம்
தங்கமது தோற்றுன தங்கம் ஒளியுமிழும்
கங்கையின் வளைவோடு காற்றின் இசைதனில்
சங்கத் தமிழமுது சிந்தும் கவிப்பாடி
மங்கையிடை ஊஞ்சல் அழகு......

மேலும்

அருமை தோழா 25-Feb-2017 10:36 am
அருமை..பூமாலை ஊஞ்சலிலே..,அழகான வார்த்தை தேர்வு 25-Feb-2017 10:02 am
Mohamed Sarfan - rmahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 11:02 pm

காதலும்-காமமும்!
சங்கு சுட்டாலும் வெண்மைதரும்.
காதல் தோல்வியுற்றாலும் நட்பு பாராட்டும்.
ஆசிட்வீச்சு? காதல்செய்தவர் அல்லர்,
காமம் செய்தவர்கள்!

மேலும்

Mohamed Sarfan - Idhayam Vijay அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 11:38 am

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

வெங்கதிர் வீழ்ந்து விரிந்திடும் வெண்கமலம்
தங்கமது தோற்றுன தங்கம் ஒளியுமிழும்
கங்கையின் வளைவோடு காற்றின் இசைதனில்
சங்கத் தமிழமுது சிந்தும் கவிப்பாடி
மங்கையிடை ஊஞ்சல் அழகு......

மேலும்

அருமை தோழா 25-Feb-2017 10:36 am
அருமை..பூமாலை ஊஞ்சலிலே..,அழகான வார்த்தை தேர்வு 25-Feb-2017 10:02 am
Mohamed Sarfan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2017 8:18 am

மனதில் பதிந்த
கனவுகளை
அழிக்கின்றேன்

பூக்கள் பூக்கும்
நினைவுகளை
பறிக்கின்றேன்

கடலில் நீந்தும்
மீன்களோடு
அழுகின்றேன்

எந்தன் சுவாசம்
முகவரியின்றி
அலைகின்றது

பாலை வனத்தில்
குடிசை போட்டு
உறங்குகின்றேன்

உலகத்து நதிகள்
என் கண்ணீரை
விலை பேசியது

மனதின் வலிகள்
இன்று பூமழையாக
புவியில் விழுகிறது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Feb-2017 9:09 am
அருமைத்தோழரே 25-Feb-2017 2:02 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Feb-2017 10:55 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Feb-2017 10:55 am
Mohamed Sarfan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2017 9:41 am

ராதை மனதில்
தோன்றிய கனா
பூக்கள் வருடும்
தென்றல் உலா

ராந்தல் போல்
மின்னும் நிழலில்
கூந்தல் பூவாய்
மலரும் பருவம்

தாவணி கட்டும்
நூலாய் மனதில்
ஆசைகள் நூறு
சேமித்த இளமை

கண்கள் பேசும்
பாஷை என்ன
அவனைக் கண்டு
எனை மறந்தேன்

கன்னிக் கவிதை
எழுதும் ஆசையில்
ஆயிரம் பிழைகள்
நான் விடுகின்றேன்

நிலவின் மச்சம்
தாரகை போல
கனவின் மச்சம்
அவளின் புருவம்

சுமந்த தாயை
கட்டியணைத்து
சிறகுகளின்றி
வானில் பறக்கிறேன்

உயிர்த்த தோழி
தோள் சாய்ந்து
புராணங்கள் பல
உளறுகின்றேன்

இரவைத் திருடி
ரணம் செய்தாய்
நரம்பை வருடி
காதல் நெய்தாய்

புன்னகை செய்
மாயனின் மகனே!
பூக்களை கொடு
எந்தன

மேலும்

கனவுகள் போல் வாழ்க்கை அமைவதில்லை நினைவுகள் போல் கனவும் அமைவதில்லை வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Feb-2017 10:57 am
சிறகடித்து பறக்கும் காதல் வரிகள்...கற்பனை நாயகியின் கனவு மனம் போல நனவாகட்டும் ஸர்பான்... 22-Feb-2017 2:26 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 19-Feb-2017 8:44 am
அருமை 19-Feb-2017 7:35 am
Mohamed Sarfan - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Jan-2017 10:02 am

01.ஜல்லிக்கட்டு தடை விதிப்பில் மறைமுக அரசியல் இருக்கிறதா?

02.மதவாதம்,இனவாதம் பேச ஆட்சியாளர்கள் கையாண்ட தந்திரமா பீட்டா அமைப்பு?

03.பல அரசியல் வாதிகளின் பண்ணையில் நாளும் இறைச்சிக்காக 16000 - 17000 மாடுகள் கொல்லப்பட்டதை
வாய் பொத்தி காக்கும் அமைப்புக்கள் வெறுமெனே 30 - 50 மாடுகள் கொண்டு ஆடப்படும் ஜல்லிக்கட்டை நீக்கம் செய்தமை மரபின் மாண்பை மறைக்க கையாண்ட வழிமுறையா?

மேலும்

மறைமுகமாக மக்களை ஏமாற்றி வெளித்தோற்றத்தில் காப்பதாக வேஷம் போடுகிறது நிகழ்கால அரசியல்.அறிவுள்ள சமூகமும் அரசியலின் ஏமாற்றங்களை போராட்டம் மூலம் தட்டிக்கேட்க மறுத்து விடுகின்றது.சட்டங்கள் எல்லாம் அதிகாரம் இருப்பவர் கையில் அநீதியாக இருப்பிலும் நீதியாக மாற்றி எழுதப்படுகிறது.காலத்தை சிந்திக்கும் போது ஆயிரம் கலகங்கள் எம் முன்னே தோன்றி வளர்ச்சி அடைந்து கொண்டிருக்க அதனை கூட அறியாத நிலையில் மக்களின் வாழ்வியல் நாளும் நகர்கின்றது..விழிப்பே மக்களின் உரிமையை என்றும் காக்கும் 08-Feb-2017 9:58 am
ஜல்லிக்கட்டு தடை இதில் எவ்வித ஐயமும் இல்லை அரசியல் பெரிய அளவில் இருக்கிறது இதுவே கசப்பான உண்மை அரசியல் என்பது மக்களுக்காகத்தான் மக்களின் விருப்புக்கு மதிப்பளிக்காது அரசியலை எப்படி சொல்வது? நடைமுறையில் வர்த்தக நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்கள் தங்களின் போட்டிக்கு எதிராக இருப்பவையை இல்லமால் செய்வது தான் அவர்கள் வேலை அவர்கள் அதற்காக எந்த அளவுக்கும் போக கூடியவர்கள் பின்னணி யில் அவர்களும் இருந்து இருக்கலாம் அதனால் பெரும் தொகை பணம் அரசியல் வாதிகளுக்கு வழங்கி இருக்கலாம் 02-Feb-2017 9:32 am
கருத்தளித்தமைக்கு நன்றிகள் 31-Jan-2017 5:32 pm
ஆம் 31-Jan-2017 12:46 pm
Mohamed Sarfan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2017 1:32 pm

101.வயது முதிர்ந்த மலைக் குன்றில்
நாளாந்தம் ஆயிரம் வேர்களின் பிரசவம்

102.கடலின் அலைகள் தர்மம் செய்தும்
கரையின் தாகம் அவைகள் அறிவதில்லை

103.நீச்சல் உடையில் நடிகை மிதப்பதால்
உல்லாசப் பறவைகளும் கற்பை இழக்கிறது

104.ஏழையின் கண்கள் விலை போகிறது
இரும்மலோடு வந்தவன் இருட்டறை செல்கிறான்

105.மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
பார்த்து பாழடைந்த வீட்டுச் சுவர்கள் சாபமிடுகின்றன

106.கற்புள்ள பூக்களை முத்தமிட்ட வாடைக்காற்று
விதியின் வசத்தால் கற்பையிழந்த விலைமாதுவின்
மரணத்தை விரைவாக்கி மன்னிப்பு கேட்கிறது

107.ஏழை கண்ட கனவுகள் எல்லாம்
குருடனின் தோட்டத்தில் விதையாகிறது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Feb-2017 10:22 am
தங்கள் சிந்தையிலிருந்து உதித்திடும் கவித்துளிகள் ஒவ்வொன்றும் புதிய கோணத்தை காட்டி நிற்கிறது....அனைத்தும் அருமை....வாழ்த்துகள்! 09-Feb-2017 6:05 pm
நம்பிக்கையின் விதைகள் எனக்குள் நிச்சயமில்லை வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Feb-2017 10:06 am
ஆஹா.....என்ன அருமையான சிந்தனைகள் நண்பரே.வாழ்த்துக்கள் நிச்சயம் உச்சம் தொடுவீர் என்ற நம்பிக்கை பிறக்கிறதெனக்கு. 03-Feb-2017 12:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1701)

sundaresan6

sundaresan6

மதுரை
Tamilkuralpriya

Tamilkuralpriya

சேலம்
ASTHIIR

ASTHIIR

கொழும்பு

இவர் பின்தொடர்பவர்கள் (1706)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
Geeths

Geeths

கோவை
Kavisathish

Kavisathish

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (1725)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
udaya sun

udaya sun

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே