Murali TN Profile - முரளி சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  முரளி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  01-Jun-1951
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2014
பார்த்தவர்கள்:  979
புள்ளி:  1924

என்னைப் பற்றி...

என் எழுத்துக்கள் என்னைச் சுற்றியே, என் பார்வைகளில் பட்டதும், என் எண்ணச் சுழற்சியில் மலர்ந்ததும், அதீத கற்பனையும், மேல் புச்சும் அற்றதாகவே இருக்கும்...
For those who can spare time please visit my blog space muralitn.wordpress.com

என் படைப்புகள்
Murali TN செய்திகள்
Murali TN - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 8:28 am

கா கா எனும் காக்கா
கீ கீ எனும் கிளி
கூ கூ எனும் குயில்
லொள் லொள் எனும் நாய்
மியாவ் மியாவ் எனும் பூனை
சில உறுமல்களுடன் வன விலங்குகள்
ஒன்றுமே சொல்லாமல்
காரியம் நடாத்தும் பல உயிரினங்கள்
இவைகளுக் கிடையே
பல வேறு மொழிகளில்
பல் ஆயிரம் சொற்களுடன்
அலப்பறையும் மானுடம்

இதில் கவிதைகள் வேறு.....

---- முரளி

மேலும்

Murali TN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 9:55 am

கவிதைகள் ஏன்
அப்படி இப்படி என
வரை முறை கொண்டு
வார்த்தை வலை
வீச்சில் சிக்குண்டு
வாசிப்பவனையும்
துச்சமாய்க் கொண்டு
வாரும் முடிவில்
ஏதோ வித்தியாசம் உண்டு
என திறன் விளக்கக்
கட்டுமானம் தாண்டி
எளிதாய் அது அதுவாய்
மலர் விரிதலாய்
மழலைச் சிரிப்பாய்
இருப்பாய் இனிப்பாய்
பா
---- முரளி

மேலும்

Murali TN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 9:54 am

ஏதாவது சொல்லலாம்
சொல்லாமலும் இருக்கலாம்
இருக்கிறோம் என்பது தெரிய
தெரிவிக்கலாம் ஏதேனும்
ஏதேனும் இன்றி அமைதியாய்
அமைதிக்கறிகுறியாய் ஒரு புன்னகை
புன்னகை பூத்திட ஒரு பரவசம்
பரவசம் உதிக்க ஒரு அவசரம்
அவசரத்தில் ஏதோ சொல்ல
சொல்ல வருவதை அடக்க நாடகம்
நாடகமாய் நாட்கள் கடக்க
கடக்கும்முன் சொல் ஏதாவது....!!
--- முரளி

மேலும்

Murali TN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 9:45 am

கால்சராய் முட்டி தாண்டிடா
பாலகப் பருவம்
அத்வைதம் புகன்ற மகான்
அவதரித்த நிலம்
'காலடி' தழுவிச் செல்லும்
பாரதப் புழையின் ஈரம்

நாற்பது படிகள் மேலும்
நானிறங்கி வரவே என்
காலடி ஒற்றிய குளிர்நீர்

அகண்ட நதி நடுவே
பொன்னிற மணல் திட்டு
நடந்தே செல்லலாம் நக
இடுக்கில் மீன் முட்டு
மணல் திட்டிற்கப்பால் ஆழமதில்
சலனமில்லாத் தோணி ஒன்று
சலசலப்பும் ஏதுமின்றி சில
சத்தமில்லா மரங்களும் கரை
நெடுகக் காவலிருக்க

கும்மாளமிட்ட குளிரலையும்
கூழாங்கல் வழவழப்பும்
கையெடுத்த மணல் குறுகுறுப்பும்
கால்நகம் முட்டிய மீனும் இன்றும்
கனவுகள் பல கலைத்தாலும்
கனவுகளிலா நதிகள்..?
விழித்திரு...!
---- முரளி

மேலும்

Murali TN - நாகூர் கவி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2016 12:17 pm

நலமா...?

மேலும்

நம்பிக்கையான வரிகளுக்கு நன்றி - மு.ரா. 19-Oct-2016 6:44 am
வாழ்த்துக்கள், தொடருங்கள். 12-Oct-2016 6:51 am
ஆஹா... விழுவதும் அழுகுதான்.. கவியே வருக.. விழுக.. எழுக.! இல்லையில்லை. எழுதுக..!! 11-Oct-2016 3:59 pm
நலம்! நமலமறிய ஆவல்....! 11-Oct-2016 8:12 am
Murali TN - Murali TN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2016 6:46 am

ஆகஸ்ட் 24, 2016

இந்திய விஞ்ஞானிகள் அளவில்லா மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினர்.. ஆம், நம் பூமியைப் போல் ஒரு கிரகம் உண்டு என்று அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் அறிந்ததை இன்று அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிப் படுத்திய நாள். துல்லியமான இலக்கையும் அறிந்தாகி விட்டது..

இஸ்ரோவின் இரகசிய ஆராய்ச்சியில் தூரத்தில் உள்ள கிரகங்களுக்குச் செல்லும் விண்கலம் தயாரிப்பதில் வெகுவாக முன்னேற்றம் அடைந்து கிட்டத்தட்ட தயார் நிலையில் இருப்பதில் கூடுதல் சந்தோஷம்… இதுபோன்ற தூரப் பயணத்தைத் தாங்கும் திறன் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள மக்களுக்கு அதிகம் உள்ளது என்பதும் அவர்கள் ஆராய்ச்சியில் அறிந்தது. சமீபத்தில் ஆப்ரிக்கா சென்ற இந்த

மேலும்

நன்றி! 20-Sep-2016 7:43 am
பிரமித்தேன்..மிகவும் ஆழமான கதைக்கரு..,விண்வெளி ஆய்வில் தொடங்கி புதிய யுகம் ஒன்று புதிதாக முளைக்கும் வரை கதையின் ஓட்டம் எங்கோ அழைத்துச் செல்கிறது..சுஜாதா அவர்களின் ஒரு மன தத்துவ அடிப்படையிலான நாவல் ஒன்று வாசித்தேன்..பெயர் சரியாக ஞாபகம் இல்லை..அந்த கதையின் விதம் தன்மை மொழி நடை உயிரோட்டம் என்று எல்லாம் எப்படி இருந்ததோ அதே போல் உங்கள் கதையும் மனதில் ஏதோ சொல்ல முடியாத அளவுக்கு பிரமிப்பை தந்தது.. 19-Sep-2016 10:41 pm
நன்றி... நான் ஏற்கனவே சொல்லியிருப்பேன்... பாலசந்திரிகாவில் தொடர்ந்து எழுதும் திரு கேயென்னார்...எனது பள்ளித் தோழர்.. (6 முதல் 11 வரை) 19-Sep-2016 10:49 am
தங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா.இன்னும் பாலசந்திரிகை பார்க்கவில்லை. பிடிஎப் மென்பொருளில் பிரச்சனை.புதிதாக நிறுவிய பின்தான் பார்க்கமுடியுமாம். நாளை பார்ப்பேன். ஆம் அய்யா. பாலசந்திரிகை என்னை தத்தெடுத்து சிறுவர் பாடல்கள் பகுதியை ஒதுக்கியிருக்கிறது. எல்லாம் நம் தளத்தோழர்கள் மற்றும் உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிகள், மேதின தளப்போட்டியில் பரிசு அறிவிப்பு வரவில்லையே அய்யா. இரண்டாம் கட்ட தேர்வுகள்தான் அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததை பார்த்தேன். ஒருவேளை இறுதி கட்டமாக வாக்கெடுப்புக்கு விடப்படுமோ என நினைக்கிறேன். 18-Sep-2016 10:37 pm
Murali TN - Geeths அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2016 9:24 am

எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : இரண்டாம் தேர்வு பட்டியல்

 • உழவர்- உழவர் வாழ்க்கை நிலை (க.அர.இராசேந்திரன்) 
 • நீர் இன்றி அமையாது உலகு - போட்டி கவிதை (கவியரசன்)  
 • வலியோடு வெற்றி (கணேசன் நா)
 • உழைப்பே உயர்வு (தங்கதுரை) 
 • நீரின்றி அமையாது உலகு (செ.கிரி பாரதி.)
 • உழைப்பே உயர்வு-பாரதிதாசனுக்கு பாமரனின் வாழ்த்து (க.அர.இராசேந்திரன்)
 • நீரின்றி அமையாது உலகு (க.அர.இராசேந்திரன்)
 • புதியதோர் உலகம் செய்வோம் (க.அர.இராசேந்திரன்)
 • குழந்தை தொழிலாளர் (charlie kirubakaran)
 • உழவு  (த.சிங்காரவேல் என்கிற கவிமணி)
 • குழந்தைத் தொழிலாளி - மே தின எழுத்துக் கவிதைப் போட்டி (விவேக்பாரதி)
 • புதியதோர் உலகம் செய்வோம் - கவிதை போட்டி (கவியரசன்)
 • குழந்தைத் தொழிலாளர் (சு.அய்யப்பன்)

நன்றி,
இப்படிக்கு 
எழுத்து.காம்

மேலும்

வாழ்த்துக்கள்! 18-Sep-2016 9:08 am
அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 15-Sep-2016 3:41 pm
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ! 15-Sep-2016 12:48 am
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 14-Sep-2016 5:09 pm
Murali TN - varun19 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2016 7:52 pm

முகமது பின் துக்ளக் - திரைப்படம் எனக்கு ரொம்ப நாட்களாகவே முகமது பின் துக்ளக் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இந்த வாரம் தான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிட்டியது. சிறுவயதில் அப்பாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தைப் பார்த்ததாக ஞாபகம்; அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இன்று பார்க்கும் பொழுது தான் முழுப்படமும் புரிந்ததாகத் தோன்றுகிறது.இத்திரைப்படம் பன்முக திறமை கொண்ட நடிகர், பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர் திரு. சோ ராமசாமி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் 1971ம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இன்றுடன் 45 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆண்டுதோறும் எத்தனையோ திரைப்படங்கள் வந்து சென்றாலும், அவற்றுள் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் நிற்கிறது. அத்தகைய திரைப்படங்களுள் சோ அவர்களின் முகமது பின் துக்ளக் திரைப்படம் நிச்சயம் இருக்கும்.  

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கும்படியாக இருப்பதுதான் இப்படத்தின் தொடர் வெற்றியாக நான் உணர்கிறேன். சுல்தானாக வரும் சோ அவர்களின் அரசியல் நையாண்டி, கிண்டல், கேலி  பட‌ம் முழுவதும் பயணிக்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம் அதில் வரும் வசனங்கள். முதலில் நகைச்சுவைப் படமாகத் தோன்றினாலும், அதில் கூறப்பட்டிருக்கும் அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி நிற்பதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. 


நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான அரசியல், தேசிய மொழி பற்றிய குழப்பம், தேர்தல், அரசியல்வாதிகளின் தவறான போக்கு, மக்களின் முட்டாள்தனம், வரி விதிப்பு, வேலை வாய்ப்பின்மை (unemployment), லஞ்சம் (bribe)  போன்றவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். 

சோ அவர்களின் நடை, உடை, பாவனை போன்றவை அனைத்தும் பாராட்டத்தக்கது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் வசனங்களும் நம்மை வியப்பில்  ஆழ்த்துகிறது. மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நாடித் துடிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். அதிகாரத் தோரணையில் யார் பேசினாலும் மக்கள் அடங்கிப் போய் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நேர்த்தியாகக் காட்டியுள்ளார்.
படத்தில் வரும் முக்கியக் காட்சிகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, வாசகர்களுக்கு எளிமையாக்கும் விதத்தில் இங்கு காணொளியாக இணைத்துள்ளேன்.
வரி விதிப்பைப் பற்றியும், அதை ஏன் தடுத்து நிறுத்த முடியாது என்பது பற்றியது:  
நாட்டின் முன்னேற்றம், சரித்திரங்கள் சொல்வது, மாணவர்களும் அரசியலும், இந்தி தேசிய மொழியாவது பற்றியது:

(போலி) அரசியல்வாதிகளின் பொதறிவு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்,  அவர்களின் போலி சமூக அக்கறை,  தகுதியில்லாதவன் தலைவனாகிப்  பதவிக்கு வருவது, அடுக்கு மொழிப் பேச்சுக்கள், ஓட்டு கேட்கும் முறை, மக்களின் முட்டாள்தனம்: 

சர்வாதிகாரத்திற்கும் குடியாட்சிக்குமுள்ள வேறுபாடு:


மொழிப் பிரச்சனை (தேசிய மொழி பற்றிய குழப்பம்), பாராளுமன்றத்தின் நிலை:  

கலவரத்தைத் தடுத்து நிறுத்தவதற்கு எடுக்கப்படும் தற்காலிக முடிவுகள் (நிரந்தரத் தீர்வுகள் என்றும் கிடையாது):

லஞ்ச ஒழிப்பு, மக்களின் அறியாமை, உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்:

தலைவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்:


செக்ஸ் கல்வி, வயோதிகத்திலும் ஆசை:

இப்படி சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், அரசியல்வாதிகளின் தவறுகளையும், மக்களின் முட்டாள்தனத்தையும் அழகாகவும், சுவாரசியமாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
படம் வெளிவந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், இன்னும் அதே நிலை தான் தொடர்கிறது. முகமது பின் துக்ளக் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். 

மேலும்

உண்மை பதிவு தோழமையே.! 16-Aug-2016 9:37 am
Murali TN - Murali TN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2016 11:12 am

உதிரும் பூவுக்குத் தாய்மடி தரையோ...
உணர்தல் தளரும் கைப்பிடி வரையோ?

எடுத்துத் தொடுக்க தலைமீது சூடவோ...
மறுத்து விட்டால் கால்மிதி படவோ?

வடித்த சோற்றுக்குப் பானையும் உறவோ...
நடித்த நாடகத்தில் யாரெவர் உறவோ?
----- முரளி

மேலும்

நன்றி ! 02-Aug-2016 5:14 pm
போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் . படைத்து விட்ட உறவுகளை காட்டிலும் உள்ளமும் உணர்வுகளும் புரிந்து கொண்ட உறவே மேலானது 02-Aug-2016 4:41 pm
நன்றி! 02-Aug-2016 4:34 pm
மிக சிறந்த தெளிவுரை முரளி சார் 02-Aug-2016 2:16 pm
Murali TN - Santhosh Kumar1111 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2016 7:45 am

நினைவு மீட்டல்
ஒரு வருடத்திற்கு முன்பு, 
இதே தேதியில் ’எழுத்து’ தளத்தில் நானெழுதிய கவிதை. 


  புறக்கணிப்பு விடுதி
 புறக்கணிப்பு விடுதி - சந்தோஷ்
நிறமற்ற கோப்பையொன்றில்
சிவப்புநிறத் திரவம்
ஊற்றப்பட்டிருந்தது.
(ரெட் ஒயின் எனவும்
பெயரிட்டுக்கொள்ளவும் )
அதிலென் தனிமையினை
நனைத்துக்கொண்டிருந்தப்போது
ரவிவர்மன் ஒவியத்திலுள்ள
அந்தப் பேரழகி
என் பின்னங்கழுத்தினை
இறுக இறுகப்பிடித்து
அவளின் மார்பகபிரதேசத்தில்
ஒடவிட்டுக்கொண்டிருந்தாள்.

இருவிதமான போதைகளுக்கு
மத்தியில்
தெளிவில்லாமல்
தெளிவாகி ஓடியதெனது
ஆசைப்புரவியினை
நடுநிசி நாய்கள்
வழ் வள் என குரைத்து
திசைத்திருப்பிவிட
ஓவிய பேரழகி மீண்டும்
சுவற்றுப்படமாகி
ஏமாற்றிவிட்டாள்.
.
எரிச்சல் மேலோங்கி
என் ஆழ்மனப் பேராசைகள்
குமுறிய பேரலையென
ஆவேச சிகரெட் ஒன்றினை எரித்து
தானாகவே அமைதியாக அணைந்தது.

வடகிழக்குத் தென்றலொன்று
என் தனிமைச் சாளரத்தை
முட்டி மோதி
தட்டிக் கத்தியது.

அட......என்ன இது மாயை?
இந்த நினைவுப் பேய்களின்
தொந்தரவு தாளமுடியவில்லையென
மீண்டுமொரு
நிறமற்ற கோப்பையில்
நிறமுள்ள மதுவை
ஊற்றி நிரப்பி
இதழில் கவ்வி கவ்வி
இரவை போதையாக்கி
விடியலில் தெளிவுற்றப்போதுதான்
எனக்குத் தெளிந்தது
நேற்று....
நான் யாருமற்ற
புறக்கணிப்பு விடுதியில்
தனிமைத்தனலில்
ஏக்கத்தின் கோப்பைக்குள்
சாம்பலாகினேன் என.......!


**

-இரா.சந்தோஷ் குமார்  

மேலும்

Murali TN - Kiruthika ranganathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2016 12:28 pm

குரோதத்தின் கண் குடிபுகா வண்ணம்

காமத்தின் கண் கட்டுறா வண்ணம்

பாசத்தின் கண் பற்றாகா வண்ணம்

நேசத்தின் கண் நெகிழா வண்ணம்

ஆசையின் கண் அசைவுறா வண்ணம்

இச்சையின் கண் இசைந்திடா வண்ணம்

ஈசனின் கண் மாத்திரம் அடியேன் சிந்தை

ஈடுபட சித்தம் கொள்ள வேண்டுமே
தில்லைஅம்பல நடராஜா

*** கருவுண்டு இசையுண்டு
வசையுண்டு வெகுண்டு
துவண்டு மருண்டு
ஆசை அறுபட்டு
பின் சிவன்வசம் சரன்புகுவதே
மானுட நியதி .

சிற்றம்பலம்

மேலும்

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே ! 14-Jun-2016 1:29 pm
நன்றி நட்பே ! 14-Jun-2016 1:27 pm
தங்களது கூற்று மிகவும் உண்மை தோழரே ! படைப்பை பதிவு செய்வதில் எழும் அதீத ஆர்வத்தில் பல சொற்களை சரிவர அச்சடிக்கவும் அதில் உள்ள பிழைகளை கவனிக்கவும் தவறிவிடுகிறேன்.. 14-Jun-2016 1:26 pm
நன்றி சகோதரா 14-Jun-2016 1:21 pm
Murali TN - Murali TN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2016 8:36 am

சிறந்த கட்டுரைகள் பல  தரும் திரு Joseph  Julius  அவர்களின் படைப்புகளை தவராது படிப்பவர்கள் பலர் உண்டு....   


இவ்வாறு கட்டுரைகள் உளது  என அறியாத பலரும்  உண்டு என்றும் எண்ணுகிறேன்.   அவரது கட்டுரைகள் 'நன்கு சிந்தித்து, ஆராய்ந்து, சிரத்தையுடன் எழுதப்படுபவை....'   

அவரது சமீபத்திய கட்டுரைத் தொடர் காண சொடுக்குக கீழே!

தலைப்பு:  திருக்குறளும் திருமந்திரமும்  

அன்புடன்
முரளி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (97)

Sujay Raghu

Sujay Raghu

திருப்பூர்
athinada

athinada

punduloya srilanka
seyonyazhvaendhan

seyonyazhvaendhan

திருச்சி
PUTHIYAKODANGI

PUTHIYAKODANGI

யாதும் ஊரே யாவரும் கேளீா்

இவர் பின்தொடர்பவர்கள் (99)

velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
பிரான்சிஸ் சேவியர்

பிரான்சிஸ் சேவியர்

கோயம்பத்தூர்
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (102)

Ranjith raju

Ranjith raju

குடந்தை
Brawin Sheeja

Brawin Sheeja

கன்னியாகுமரி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான விளையாட்டுகள்

மேலே