ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Sep-2015
பார்த்தவர்கள்:  933
புள்ளி:  148

என்னைப் பற்றி...

மனதின் எண்ணங்களை எழுத்து வடிவில் மக்களுடன் பேச விரும்பும் ஒரு சாதாரண எழுத்தாளர்..

மனதிற் தோன்றும் எண்ணங்கள் எழுத்து வடிவம் பெரும் பொழுதுதான் அதற்கு உயிர் ஓட்டம் வருகிறது..... எனவேதான், ஒரு எழுத்தாளனை படைப்பாளி என சான்றோர் அழைத்தனர்...

அபிநயம் மாறுவதில்லை, ராகங்களும் , தாளங்களும் மாறுவதில்லை .. மாற்றங்களைக் கொடுப்பவை உயிர் ஓவியங்களே...

இந்த வகையில் நான் எழுதுவதில் பெருமைப்படுகிறேன்...இன்னும், இன்னும் எழுதவேண்டும் என்ற ஊன்றுதல் என்னை ஆட்கொண்டுள்ளது... ஏதோ எழுதினோம் அதை ஒரு பக்கம் விட்டு விட்டு அடுத்த வேலை பார்க்கப்போகும் படைப்பாளி அல்ல நான்... நான், எழுதுவதெல்லாம் நடை முறையைச் சார்ந்ததே...

உலகம், வேகமாய் சுற்றிக்கொண்டும், அதில் வாழும் மனிதர்களும் வேகமாய் சுழன்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், எனது எழுத்துக்கள் அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி இருப்பதால்தான் எளிய நடையில் உள்ளன...

கதைகள் கேட்பதும் , படிப்பதும் எனக்கு பிடித்த ஒன்று... கதை எழுதுவதோ என் சுவாசம்...

பெரும்பாலான கதாசிரியர்கள் கற்பனைப் பாத்திரங்கள் படைப்பர், சிலர் உண்மை சம்பவங்களை படைப்புகளாய் தருவர்.... நான், சற்று வேறுபட்டு உண்மை கலந்த கற்பனை பாத்திரங்கள் தர முற்பட்டுள்ளேன்... என் கதைகளில் உண்மையும் இருக்கும், கற்பனையும் இருக்கும்... என்றுமே கலவைக்கு மவுசு அதிகம் தான்...

தற்பொழுது , நான் வடிப்பது அனைத்தும் குடும்பச் சித்திரங்களே... கதாப் பாத்திரங்கள் யாவும் குடும்ப சூழலை பின்னிப் பிணைநதுதான் இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு மன அழுத்தங்கள் , அதை போராடி ஜெயிக்கும் மனிதர்கள் பற்றியே....

வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் எல்லோரும் எதிர் நீச்சல் போட்டுத்தான் முன்னேற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே...
போராட்டம், போராட்டம் வாழ்க்கையே ஒரு போராட்டம்,, இருப்பினும் அதில் நீந்தி முன் வந்து உயர்ந்து நிற்கும் பொழுது தோன்றும் இன்பம் அலாதி..... இதன் பின்னணியில் தான் என் கதைகள் அமைந்துள்ளன.....

எளிய நடையில் இருக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.... ஆண்களும் சரி, பெண்களும் சரி படித்து இன்புறவும், மேலும் மேலும் படிக்க ஆவல் தூண்டும் வகையிலும் சித்தரித்துள்ளேன்..

இருப்பினும், நான் பெண் என்பதால் , பெரும்பாலும் பெண்களை சுற்றி நடப்பவை கொஞ்சம் கூடுதலாய் சேர்த்துள்ளேன்....

கவிதைகள், தேன் துளிகள், கட்டுரைகள் படைக்கும் நான், கதைகள் எழுதும் பொழுது மட்டும் சற்று உணர்ச்சி வசப்பட்டு விடுவேன்.... அந்தக் கதையில் என் மனம் லயித்து விடும்.... முடிவு என்றுமே சுபமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை விருப்பம்.... நீங்களே படித்துப் பாருங்களேன்.....

நான் பெண் என்பதாலோ என்னமோ, பெரும்பாலும் பெண்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி கட்டுரைகள் எழுதவேண்டும் என்கிற எண்ணமும், தாகமும் பல நாட்களாக என்னை தாக்கி இன்று புத்தக வடிவு பெற்றுள்ளன.....

கவிதைகள், சிறு கதைகள். தேன்துளிகள் எழுதிய நான், கட்டுரைகளும் படைக்க ஊக்குவித்தது நான் சந்தித்த பலவிதமான பெண்கள்தான்...

நாம் என்ன செய்கிறோம், நம்மால் முடியுமா? குடும்பத்தில் நமது பங்கு என்ன என்கிற பெண்களின் கேள்விகளுக்கு விடைதான் இக்கட்டுரைகள்...

என் படைப்புகள்
ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி செய்திகள்
ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 4:33 pm

"புவனா! என்ன சொல்றதுன்னே தெரியலே...... இதைப் பத்தி பேசக்கூடாதுன்னு நினைத்தேன்... ஆனால் யாரிடமாவது பேசினால் மனம் கொஞ்சம் லேசாகும்னு தோணுது.... அம்மாகிட்ட பேசமுடியாத பல விஷயங்களை உன்கிட்ட பேசி இருக்கேன்.... வா காபி சாப்டுண்டே பேசலாம்" புவனா கை பிடித்து கூட்டிப் போனாள் சுமிதா...

" சரி வா.... " இருவரும் கான்டீன் பக்கம் சென்றனர்.... அங்கு கூட்டம் அதிகம் இல்லை... இவர்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்...

"சொல்லு சுமிதா... என்ன? " குழப்பத்துடன் இருந்த புவனா கேட்க....

" எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 மாசம்தான் ஆறது....சந்தோஷமாத்தான் இருக்கோம்.... நேத்திக்கு அவர் வாக்கிங் போயிருந்தப்போ மெசேஜ் வந்தது அவரு

மேலும்

அருமை அம்மா.. 03-Jul-2017 8:15 pm
ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 4:29 pm

"லக்ஷணா,,,! என்ன இது? எதுக்கு இப்படி எல்லாம் பேசறே? நீ டென்ஷன் ஆகக்கூடாது... ரிலாக்ஸாக இருக்க சொல்லிருக்கா... நீ இப்படி உணர்ச்சி வசப்பட்டு இருந்தால் எப்படி? " கார்த்திக் மிகவும் நிதானமாகப் பேசினான்...

" கார்த்திக்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு... ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நியூஸ்.... நீங்களே பார்க்கறீங்க.... சின்ன சின்ன பொம்பள பசங்களைக் கூட. சே... என்ன இது? கேவலமான மனுஷங்க...? எப்படி இந்த புத்தி அந்த ஆண்களுக்கு? பொம்பளைங்க என்ன விளையாட்டு பொருளா? " திரும்பவும் உணர்ச்சி வசப்படவே கார்த்திக் " ஏய்.. இனிமேல் நீ இந்த நியூஸ் சேனல் அண்ட் தேவையில்லாத ஆப்ஸ பார்த்தியான எனக்கு கோபம் வரும்... நல்ல லைட் மியூச

மேலும்

தீபாவளி 2016 வெளியீடு...





மேலும்

தகவலுக்கு நன்றி ஓவியம் அருமை போற்றுதற்குரிய படைப்பு 01-Nov-2016 1:40 am

மூன்று நூல்கள் வெளியீடு ..26.6.16

தலைமை... பிரபல திரைப்பட  பாடகி ஸ்ரீமதி. வாணி ஜெயராம் ...
சிறப்பு விருந்தினர்... டாக்டர் நித்யா ராமமூர்த்தி மலர் மருத்துவமனை..

மேலும்

ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2016 9:26 pm

குஞ்சுக்கு ரெக்கை முளைத்து விட்டது என் பறக்கலாம்
ஆனால், தாயை கீழே தள்ளி விட்டு போவதில்லை....
நீ மேஜர் ஆகி விட்டாய் என்பதால் துணையை நீ தேர்ந்தெடுக்கலாம்
ஆனால், பெற்றோருக்கு துரோகம் செய்யாதே...
=================================================

மேலும்

புதுமைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய நூல்கள் நன்றி 01-Nov-2016 1:47 am
நண்பரே.... தங்களின் அணைத்து கருத்துக்களுக்கும் நன்றி.... தவறாமல் என் எழுத்துக்களுக்கு ஊக்கு விக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தங்களின் மனதின் வெளிப்பாடு என்னை மீண்டும் மீண்டும் எழுத உதவுகின்றன.... மீண்டும் நன்றி... 10-Apr-2016 5:24 pm
காலத்துக்கு ஏற்ற வரிகள் ஆனால் மாறி நடக்கும் செயலே மண்ணில் ஏராளம் 10-Apr-2016 5:17 pm
ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி - ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2016 11:40 am

சொப்பனம் காண்பதுவும் ஒரு கலை...
அதில் வாழும் வாழ்க்கைக்கு
ஈடு இணை இல்லை....
அடுத்து வரும் சொப்பனத்தை ரசியுங்கள்....
========================================

மேலும்

தோழரே... நன்றி... வாழ்க்கை சொப்பனத்தில் முடிவதில்லை சில நல்ல சொப்பனங்களையும் ரசிக்கலாம் என்பதுதான் எனது எண்ணம்... 10-Apr-2016 4:57 pm
ஆனால் ரசித்துக் கொண்ட இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லை 10-Apr-2016 4:50 pm
நித்யஸ்ரீ சரவணன் அளித்த படைப்பில் (public) muraiyer69 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2016 11:17 pm

வேண்டுபவர்களுக்கு கிடைப்பதில்லை
நிறம்பி வழிகின்றது
- அனாதை இல்லம்

அடித்தாலும் அணைத்தாலும்
அரவணைக்கும் தாய்
- நிலமகள்

உருவாகும் முன்னே
உருகுலைக்கப் படுகின்றது
- கருக் கலைப்பு

கேட்டாலும் கேட்காவிட்டாலும்
கொடுத்தால் தான் மதிப்பு
- வரதட்சணை

முத்துக்கள் உதிர்கின்றன
அள்ள முடியவில்லை
- மழலையின் சிரிப்பு

இருள் சூழ்ந்தாலும்
கண்கள் மூடுவதில்லை
- நட்சத்திரம்

கவிதையாய் உலாவுகிறது
காவியமாய் வாழ்கிறது
- காதல்

தேய்ந்தே ஓய்ந்தாலும்
தன்னம்பிக்கையுடன் மீண்டும் வளர்வேன்
- நிலா

அள்ளி அள்ளி பருகினாலும்
என்றும் குறைந்துவிடுவதில்லை
- தாய் அன்பு

இணையாக செல்கிறோம்
இறுதி வர

மேலும்

மிக்க நன்றி ஐயா...! 25-Jun-2016 2:49 pm
மிக்க நன்றி ஐயா..! 25-Jun-2016 2:49 pm
இயற்கை வாழ்க்கை நெறிக் கருத்துக்கள் பாராட்டுக்கள் 21-Jun-2016 12:00 pm
மிக மிக அருமை நித்யா 21-Jun-2016 7:55 am
நித்யஸ்ரீ சரவணன் அளித்த படைப்பில் (public) nithyasree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Mar-2016 11:10 pm

என்னங்க....

என்ன...?

'இங்க பாருங்களேன்.. நான் வரைஞ்சது இந்த ஓவியம் எப்படி இருக்குனு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்' கணவனின் பாராட்டை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள், கல்யாணி.

அவன் கண்களைக் கூட உயர்த்தாமல் 'ஆமா... இப்ப வரைஞ்சு கிளிச்சு என்ன பண்ண போற.. போ... போயி அடுப்படில ஏதாவது வேலை இருந்தா போய் பாரு... போ...' என்று முகத்தில் அடித்தாற் போல் கூறிய கணவன் சேகரை வெறித்துப் பார்த்தாள்.

தான் வரைந்த சிறு ஓவியத்தையே நன்றாக இருக்கிறது இன்னும் நல்லா நிறைய ஓவியங்கள் வரையனும் என்று உற்சாகப் படுத்திய தந்தையின் நினைவு கண் முன்னே வந்து சென்றது.

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி....! 10-Apr-2016 9:51 pm
அற்புதம்..... மனம் நிறைந்தது.... பெண்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்... இது கட்டாயம் எங்கும் பரவ வேண்டிய ஒரு சிறப்பான கருத்து... இதை நான் வரவிருக்கும் புத்தகத்தில் எழுதி உள்ளேன்... தெள்ளத் தெளிவாய் எழுதி உள்ளீர்கள்... மேலும் மேலும் எழுதுங்கள்.... வாழ்த்துக்கள் ... 10-Apr-2016 12:04 pm
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...! 31-Mar-2016 4:26 pm
கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...! 31-Mar-2016 4:25 pm
ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Jan-2016 3:46 pm

எனது சிறு கதைகள் புத்தகமாக வெளிவர உள்ளன.... எவரேனும் ஓவியர் என் கதைகளுக்கு வரைய முடியுமா? தயவு செய்து தெரிவிக்கவும்..


மேலும்

நான் எழுதி வெளியிட்ட புத்தகம் எளிய நடையில் தமிழ் பாடல்கள் ... அதிலிருந்து ஒரு தத்துவம்/ வாழ்கை பாடல் இங்கே சமர்பிக்கப்பட்டுள்ளது....


தேடல் என்பது இல்லையெனில்
உழைக்கும் எண்ணம் இருக்காது

ஊடல் என்பது இல்லையென்றால்
கூடலுக்கும் அவசியம் ஏது

பத்தோடு பதினொன்றாய் நீ இருந்தால்
பின் நோக்கி சென்றிடுவாய் உண்மையில்

போரிடு போரிடு வாழ்கையின்
உச்சி நிலைக்கு ஓடிடு....


திருமதி மைதிலி ராம்ஜி

மேலும்

தங்கள் படைப்புகள் படித்தோம் பலரோடு பகிர்ந்து கொண்டோம். தங்கள் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள். உச்சி நிலை அடைவது உறுதி. நன்றி 24-Jan-2016 4:06 am
நல்லா இருக்கு 05-Oct-2015 2:24 pm

நான் எழுதி வெளியிட்ட புத்தகம் எளிய நடையில் தமிழ் பாடல்கள் .. அதிலிருந்து ஒரு தத்துவ பாடல் இங்கே சமர்பிக்க பட்டுள்ளது...


சத்தமில்லாமல் அழுது நீ
கண்ணீரை வீணடிக்காதே

காதுபட பேசும் மனிதரை கண்டு
நீ அஞ்சிவிடதே

சட்டென்று கோபப்பட்டு எதையும்
நிறுத்தி விடாதே

வீணாய் போன இந்த மக்களுக்காக
உன் வாழ்வை துளைத்து விடாதே


பொங்கி ஏழு... உன் உள்ளே இருக்கும்
குமுறலை வெளிக் கொண்டுவா .....

விடியல் பிறக்கும் நிச்சயம்......


திருமதி மைதிலி ராம

மேலும்

மிகவும் நன்று.... கட்டாயம் படிக்கவேண்டுகிறேன்.... நன்றிகள்.. தங்கள் தற்பொழுது எங்கு உள்ளீர்கள்? 11-Feb-2016 9:53 am
தங்கள் புத்தகங்கள் அனைத்தும் இந்தியா வந்ததும் வாங்கி படிக்க விரும்புகிறோம். பாராட்டுக்கள். படைப்புகள் தொடரட்டும். 10-Feb-2016 10:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மீரா

மீரா

வேலூர்
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (23)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (24)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே