N.valarmathi. - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  N.valarmathi.
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Mar-2011
பார்த்தவர்கள்:  2336
புள்ளி:  977

என் படைப்புகள்
N.valarmathi. செய்திகள்
sankaran ayya அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2016 10:16 am

உறவுகள் அர்த்தமுள்ளவை
உள்ளங்கள் சத்தியமானால் !
போலிப் புன்னகையும்
உணர்வுகள் புனையும் ஒப்பனை வேடமும்
இதய மேடையின் நாடகமானால்
உறவுகள் அர்த்தமற்றுப் போகும்
மனம் மணல் விரிந்த பாலை ஆகும் !

-----கவின் சாரலன்

மேலும்

சிறப்பான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய வளர்மதி அன்புடன்,கவின் சாரலன் 06-Nov-2016 10:14 pm
ரொம்ப ரொம்ப சரியா சொன்னீர்கள் உணர்வுகளில் ஒப்பனையும் இதயத்தை நாடகமேடையாகவும் மாற்றி வாழ்கிறார்கள், இது தெரிந்ததும் உறவுகள் சிதறுகிறது. நன்றாக இல்லாததை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.. பிரியமுடன் மதி.... 06-Nov-2016 9:23 pm
மிகவும் உண்மை மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 06-Nov-2016 3:07 pm
மிக்க நன்றி கவிப்பிரிய மு.ரா அன்புடன், சாரலன் 06-Nov-2016 3:05 pm
sankaran ayya அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2016 8:48 am

தென்றல் வரக் காத்திருந்தேன் பிரிய சகி
------வந்து தொட்டுத் தொட்டுத் தழுவிச் செல்லுதடி !
தேன்மலர்கள் சிரிக்கக் காத்திருந்தேன் பிரிய சகி
------தோட்டமெல்லாம் பூத்துக் குலுங்குதடி
இன்னும் வரவில்லையே நீ என் பிரிய சகி
------காய்ச்சலா தலைவலியா எஸ்எம் எஸ்ஸில் சொல்லிவிடடி !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய வளர்மதி அன்புடன்,கவின் சாரலன் 06-Nov-2016 10:13 pm
காதலிக்காக காத்திருப்பது சுகம்தான் தவிப்பு வரும்வரை.. அழகான கவிதை.. பிரியமுடன் மதி... 06-Nov-2016 9:04 pm
உண்மை மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 06-Nov-2016 9:16 am
அன்பான காதலின் விசாரிப்பு இன்று இரு வார்த்தைகளில் முடிகிறது..பொக்கிஷமான நினைவுகள் சுமந்த கடிதங்கள் ellam இன்று illai enpathe varuththam tharukirathu 06-Nov-2016 9:03 am
sankaran ayya அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2016 9:10 am

மாலை மயங்கி ஆதவனும் மறு வீடு செல்கிறானடி
மாலை நிலாவும் இரவின் கவிதை எழுதத் துவங்கிவிட்டதடி
இன்னும் வரவில்லையே நீ என் பிரிய சகி
செல்லில் சார்ஜ் இல்லையா ?அஞ்சலில் இரண்டு வரி இல்லை ஒருவரி போதுமடி !

-----கவின் சாரலன்

மேலும்

அழகு மனமுவந்த பாராட்டு மிக்க நன்றி கவிப்பிரிய வளர்மதி அன்புடன்,கவின் சாரலன் 06-Nov-2016 10:19 pm
நீ எழுதும் ஒரு வரியில் நான் ஓராயிரம் கவிதை எழுதுவேன்! என் பிரியசகியே விரைவாக என் பிரியா சகியாகிவிடு...! காதல் கவிதை கவினின் கைகளில் குழைந்து குழைந்து தவழ்கிறதே, மிகவும் அருமை... பிரியமுடன் மதி... 06-Nov-2016 8:58 pm
ஆஹா அருமையான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 06-Nov-2016 9:18 am
கையளவு உள்ளத்தின் உணர்வுகளை கைக்குள் அடங்கும் அலைபேசி வெளிப்படுத்துகிறது 06-Nov-2016 9:12 am
sankaran ayya அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Nov-2016 10:08 am

காதலி
கண்ணில் காட்டியதை
உள்ளத்தில் ஒளிப்பவள்
உள்ளத்தில் உள்ளதை
மௌனப் புன்னகையில் மறைப்பவள் !

-----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய வளர்மதி அன்புடன்,கவின் சாரலன் 01-Nov-2016 10:36 pm
உண்மை உண்மை பிரியமுடன் மதி... 01-Nov-2016 10:08 pm
மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 01-Nov-2016 3:02 pm
வாழ்க்கையின் அதிகாரத்தில் முழுமை பெற்ற தேயாத நிலா மனதின் வீட்டில் கதைவடைக்கும் பெண்ணிலா 01-Nov-2016 12:49 pm
N.valarmathi. - N.valarmathi. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2011 1:20 pm


வெள்ளை நிலாவை
முத்தமிட்டுச் சென்றன மேகங்கள்!
பணித்துளியோடு
உறவாடிக் கொண்டிருந்தன மலர்கள்!
தென்றலின்
தீண்டலில் சிலிர்த்துக்கொடிருந்தன மரங்கள்!
அன்பே.............
நீ என் பக்கத்தில் இருந்திருந்தால்
இயற்கையை வென்றிருப்போம் நாம் இருவரும்!!!!
நீ இல்லாத இந்த இரவு
நீண்டு கொண்டிருப்பது ஏனடி......... ?

மேலும்

அருமை குறுகிய வரிகளில் யதார்த்தமான எண்ணங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 10:06 am
நீங்கள் இயற்கையை வெல்ல வாழ்த்துகிறேன் போற்றுதற்குரிய கவிதைநயம் . பாராட்டுக்கள் தொடரட்டும் தமிழ் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் நன்றி .. . . 06-Jun-2016 12:45 am
பிரிவால் 06-Jun-2016 12:19 am
ஹரிஹரன் சொல்ல வார்த்தைகளே இல்லை, பிரியமுடன் மதி... 01-Nov-2011 1:57 pm
N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 9:19 am

நீரோடையின் சலசலப்பில்
நமது கலகலப்பான பேச்சுக்கள்
எத்துனை சுகம்!

சந்தோசமான குயிலோசையின் நடுவில்
சருகுகளின் சத்தத்தோடு துள்ளி விளையாடியதை
மறக்க முடியவில்லை நட்பே!

மயிலின் மகிழ்ந்த அகவளில்
கிடைத்த தோகையினால்
கிச்சி கிச்சி மூட்டிய தருணம் இன்பத்தின் எல்லை!

மலைமீது சிரித்தது அருவியோசை
மனதில் இழையோடியது நீ இல்லா தனிமை
தினம் தினம் மங்கலமான விடியல் என்றாலும்
என் நட்பே நீ இல்லாதது ஒரு சின்ன சோகம்தான்....!

மேலும்

16.02.15 ல் தோழி படைத்த படைப்பு 17.02.16 ல் என் பார்வையில் படுகிறது...! நினைவுகளின் சங்கமத்தில் இடைவெளித் தனிமை கூட இனிமையான கவிதைதான் என உணர்த்திய இப்படைப்பு மதியை குளிர்விக்கும் மதியின் வெளிச்சம் - இனிமை 17-Feb-2016 10:51 pm
N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 12:05 am

சகியே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
சந்ததிகளோடு சந்தோசமாய் வாழ்ந்திருப்போம்!

மகனே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மகத்தான வாழ்கையை வாழ்ந்திருப்போம்!

மருமகளே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மரு மகளாக வானவில்லை ரசித்திருப்போம்!

நானும் கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
நலமுடன் நல்லதொரு வாழ்கையை வாழ்ந்திருப்போம்!

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கிடக்கும் நெஞ்சத்தில்
நிறைந்து கிடப்பது சகிப்புத்தன்மை மட்டுமே.......!

மேலும்

N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 12:48 pm

மடிப்பு களையாத சட்டைக்குள்
என்னவளின் களையாத நினைவுகள்
அப்படியே ஆனந்தமாய் இருந்தன!

அது ஒரு நிலாக்காலமா ?
கனாக்காலமா? வசந்தகாலமா ?
அது ஒரு இனிமையான காலம்!

தலைநிறைய பூவோடு
தாவணியில் அவளைப் பார்த்தேன்
தடுக்கி விழுந்தது என் இதயம்!

சிநேகமாய் எனைப் பார்த்துச் சிரிப்பாள்
என்னுள் காதல் வாசம் வீசும்
ஆனாலும் சிறு புன்னகையை மட்டுமே காட்டுவேன்!

அவள் முகம் பார்க்கவே
அவளின் இல்லத்திற்கே செல்வேன்
அவளின் அண்ணன் என் நண்பன்!

அதனால்த்தானோ என்னவோ
என் காதலை அவளிடம்
சொல்லாமல் இருந்துவிட்டேன்!

அவள் எதேட்சையாக எனைத் தொட்டாள்
அவள் ஸ்பரிசம் பட்ட சட்டையை
அப்படியே இன்னும் எ

மேலும்

ம்........ சொல்லலாமே..... வேற ஒரு கவிதையில் சொல்கிறேனே சரியா? படித்ததற்கு ரொம்ப நன்றி.... பிரியமுடன் மதி..... 15-Jan-2014 4:52 pm
இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் . கவிதை அருமை . 14-Jan-2014 6:56 pm
அது அவர் சுவாசம் உள்ளவரையாம்..... 10-Jan-2014 7:18 pm
எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பார் இந்த விரும்பினர். 10-Jan-2014 7:04 pm
N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2013 10:49 am

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க....
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க.....
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க....
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க.....

ஜனமும் பூமியில் புதியது இல்லை....
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை...
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை...
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை....

பாசம் உலாவிய கண்களும் எங்கே....
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே....
தேசம் அளாவிய கால்களும் எங்கே....
தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே.....

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக....
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க....
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக....
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க....

மேலும்

ரொம்ப நன்றி பானு, பிழையை சுட்டிக் காட்டியதற்கும் ரொம்ப நன்றி.. பிரியமுடன் மதி.... 30-Dec-2013 4:25 pm
பார்வைக்கு பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் ..... பாய்ந்து து (ளா) லாவிய கைகளும் எங்கே.... 29-Dec-2013 7:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (124)

விக்கிரமவாசன் வாசன்

விக்கிரமவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
munafar

munafar

PAMBAN (now chennai for studying)
theena

theena

மதுரை
thegathas

thegathas

இலங்கை (மட்டக்களப்பு )

இவர் பின்தொடர்பவர்கள் (124)

இவரை பின்தொடர்பவர்கள் (125)

மேலே