PANIMALAR Profile - பாத்திமா மலர் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பாத்திமா மலர்
இடம்:  அண்ணா நகர் , chennai
பிறந்த தேதி :  07-Oct-1950
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2014
பார்த்தவர்கள்:  1700
புள்ளி:  1815

என் படைப்புகள்
PANIMALAR செய்திகள்
PANIMALAR - sankaran ayya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2017 9:31 am

நீல நிறம் விரிந்த வானுக்கு நீல நிறம்
வெள்ளை நிறம் அதில் தவழும் நிலவு வெள்ளை நிறம்
பொன்னிறம் புதிதாய் உதயமாகும் ஆதவனுக்குப் பொன்னிறம்
உன் காதல் நெஞ்சிற்கு என்ன நிறம் ? வானவில்லின் ஏழு நிறம் !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப் பிரிய பனிமலர் அன்புடன்,கவின் சாரலன் 28-Jun-2017 8:54 am
அழகிய வர்ணனை வாழ்த்துக்கள் கவின் 27-Jun-2017 9:43 pm
அருமை பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாமா ----என்று கண்ணதாசன் பாடுவார். மிக்க நன்றி கவிப் பிரிய மணி அன்புடன்,கவின் சாரலன் 27-Jun-2017 9:11 pm
பொன்னிறமும் கொண்டு பெண்ணொன்று வரின் மண்ணில் மனிதனுக்கு மின்னுமே இருளிலும். 27-Jun-2017 7:28 pm
PANIMALAR - V MUTHUPANDI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2017 6:20 pm

உனக்காக காத்திருப்பேன்
நிமிடங்கள் எனக்கு
வீணாய் போவதில்லை !

மரங்கள் ,செடிகள்
கொடிகள் ,மலர்கள்
பறவைகள் ,வண்டுகள்

உன்னைப்போலவே அவைகளிலும்
சில அழகுகள் ஒளிந்து கிடப்பதை
ரசிப்பதில் நிமிடங்கள் எளிதாய்
கடந்து விடுகிறது !

மேலும்

ரசிப்பதில் அழகு 27-Jun-2017 8:19 pm
PANIMALAR - Mohamed Sarfan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 8:37 am

25/06/2017 அன்று இலங்கையிலுள்ள பிராதன பத்திரிகைகளில் ஒன்றான தினகரனின் வெளிவந்த என்னுடைய இரண்டாவது கதை


வானுக்கும் மண்ணுக்கும் நடுவே வாண வேடிக்கைகள் பூக்கள் போல் பூத்துக் குலுங்கி இரவினை அலங்கரித்துக் கொண்டிருந்தன. வடக்குப்புற வாடைக் காற்றிலும் கிழக்கு கச்சான் காற்றிலும் நாசிக்குள் நுழைந்து நாவினில் எச்சூற வைத்துக் கொண்டேயிருந்தது பலகார வாசனை.

ஒற்றையடிப் பாதையிலும் சனநெரிசல் குவிந்து ஊரே குதுகலமாக நாளைய பொழுதை வரவேற்க ஒத்திகை பார்த்துக் கொண்டது. பொய்கையிலுள்ள மீன்களைப் போலே சிறார்களின் ஆனந்த எதிர் நீச்சலை யாராலும் தடை போட முடியாத காலத்தின் நிர்ப்பந்தம். இளையோர்களின் மனதில் நாளைய களியாட்

மேலும்

உணர்வுப்பூர்வமான படைப்பு .. நேர்த்தி... 27-Jun-2017 8:22 am
இறைவனை நாம் மனதளவில் எந்தளவு ஆழமாக நேசிக்கின்றோமோ அந்தளவு அவனும் அடியார்களை நேசிக்கின்றான். நாம் அவனை மனதால் வேய்கின்ற போதிலும் தாயைவிட பன்மடங்கு கருணையுள்ள இரட்சகன் தன்னுடைய படைப்புகளை ஒரு போதும் கைவிடுவதில்லை என்ற வசனமும்----- ராந்தல் பிறை ---இறை அமுதம் தங்கள் படைப்பைப் படித்தேன் அன்புள்ளம் கொண்ட நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தங்கள் படைப்பை பகிர்ந்தேன் ரமலான் வாழ்த்துக்கள் 26-Jun-2017 6:06 pm
sarfan ஒரு சிறுகதை எழுத்தாளர் என்பதை இந்த கதை மூலம் அறிந்தேன் நல்ல கருத்தூலம் ,விரும்பு மீறாத நடை இன்னும் எழுதுங்கள் நண்பரே என் மனமார்ந்த ஈத் வாழ்த்துக்கள் 26-Jun-2017 2:50 pm
அருமை நல்ல கதை படித்த திருப்த்தி, வாழ்த்துக்கள் sarfan 26-Jun-2017 12:13 pm
PANIMALAR - vanmathi g அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2017 8:03 pm

தூரம் அது நீளம் ---- இருந்தால் என்ன ?

என் இதயம் அதில் இருக்குது
உன் பிம்பங்கள்

காதல் கதை பேச தினம்
காத்துதான் இருக்குது என் கைபேசிகள்

தொல்லையாய் தினம்
தொடர்ந்துதான் வருவேன் கைபேசி செய்திகளாய் .....................

மின்னூட்டல் மொத்தமாய் ஏற்றி வைக்கிறேன்
மொத்தமாய் உன்னிடம் பேசி தீர்க்க ........

என் உள் உணர்வு உன்னை நினைக்க
உடனே ஒலிக்குது உன்பெயரோடு கைபேசியும் ...........

அரைமணிநேரம்
அரை நிமிடமாய்
மாறுது
அவன் மட்டும் என்னோடு
பேசுகையில் ............

மேலும்

உங்களின் கருத்துக்கு நன்றி ............................ 26-Jun-2017 12:01 pm
உண்மைக் காதல் எங்கிருந்தாலும் வாழ்க 26-Jun-2017 11:56 am
அருமையான சிந்தனை... 26-Jun-2017 11:29 am
ha ha ha .......... நன்றி ........... 26-Jun-2017 10:42 am
PANIMALAR - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 8:58 pm

சின்ன சிரிப்பினால்
செல்வமும் திரண்டு வரும்,
செம்பவள வாய் திறந்து
செப்பினால் சொந்தங்கள்
சொர்க்கமே கண்டுவரும்,
கள்ளமற்ற வெள்ளைமனம்
கண்டுணர
கொடுத்து வைத்தோம் பூவுலகில்

ஆராரோ ஆரிவரோ
தெரிந்தெடுத்த முத்துக்களாம்
முத்தான முத்தல்லவோ முதல் பேரன்
இன்பச் சிரிப்பினிலே இளைய செல்ல பேரன்
இருவருக்கும்
இதயமெல்லாம் பூரிக்கும் எங்கள்
அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
happy birthday borth of you
அப்பம்மா அப்பப்பா மாமி மாமிமார் குடும்பம்

மேலும்

நன்றி வேலாயுதம் வாழ்த்துக்கள் 30-May-2017 10:19 am
நான் உங்கள் பேரனைக் காண ஆவல். ! தாலாட்டுப் பாடல் என் தாயின் தாலாட்டை நினைவு படித்துவிட்டது தொடரட்டும் தங்கள் தாலாட்டுப் பாடல்கள் உங்கள் பேரனுக்கும் & எழுத்து தள குடும்பத்தினருக்கும் .! நன்றி . 29-May-2017 11:26 pm
நன்றி தோழமையே 17-Apr-2017 10:16 pm
முத்தான வாழ்த்தும் தாலாட்டும். வாழ்த்துக்கள் தோழமையே. 14-Apr-2017 11:02 pm
PANIMALAR - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2017 10:43 pm

போராட்டம் அல்ல
உயிரோட்டம்உள்ள
பிஞ்சு மனங்களின்
உன்னத எண்ணங்கள்
பெற்றெடுத்த உள்ளங்களும்
பேருவகை கொண்டு
பெரியோரும் சிறியோரும்
பெருமையுடன் கூடி
அகிம்சா முறையில்
ஆர்ப்பாட்டம் இன்றி
அன்பும் அக்கறையும் கொண்ட
மாணவர்களின் இளஞர்களின
நெறி தவறாபண்பும்ஓற்றுமையும்
பெருமைக்கும் போற்றுதற்கும் உரியதே
அவர்களே நாட்டின் முதுகெலும்பாம்
அதனால் நாளும் நமதே நாடும் நமதே

மேலும்

நன்றி குமரிப்பையன் 27-Mar-2017 11:44 am
நன்றி மொகமது sarfan 27-Mar-2017 11:44 am
வளமான செழுமைகள் வாழ்க்கையில் நிலைத்திடல் என்பதே உண்மையான சுதந்திரம் 26-Mar-2017 10:49 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 1:53 pm
PANIMALAR - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2017 1:21 pm

தமிழ் எமது மூச்சு
தாகம் எமது பேச்சு
வேகம் எமது வீச்சு

எங்கும்தமிழன் வசம்
எளிமை அவன் வேஷம்
ஏறு கொண்டவன் வாசம்

பொய்யாத் தமிழன் உலகம்
மெய்யெ அவனது திலகம்
நில்லா அவன் முன் கலகம்

பாய்வது அவனும் அல்ல
பதுங்குவது அவனும் அல்ல
வீழ்வது அவனும் அல்ல

நெருங்குவது அவனிடத்தில் நீயாக
பொசுங்குவது அவனிடத்தில் நீயாக
நெருப்படா அவன் நெருப்படா

மேலும்

நன்றி mokamed 29-Jan-2017 12:18 pm
வீரியமான வரிகள் 29-Jan-2017 11:25 am
நன்றி நன்றி 27-Jan-2017 9:07 pm
சொல்லாடல் அருமை 26-Jan-2017 8:03 pm
PANIMALAR - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2016 11:04 pm

நிலவே நின் அழகில்
நித்தம் நித்தம் நாங்கள்
நிசப்தத்தில் நிம்மதியில்

நிலவெனும் ஒளியால்
நிறைகின்ற உலகில்
நிரப்புகின்றாய் தண்ணொளியை

நீ சிந்தும் வெளிச்சமெல்லாம்
நிம்மதியைத் தந்து செல்லும்
நிலவே நீ வள்ளலன்றோ

நினைப் போற்றும் நெஞ்சமெல்லாம்
நீயாவாய் தாலாட்டும் தாயாவாய்
நிலவே வெண்ணிலவே தண்ணொளியே

நினைப் பாடும் பாடலினால்
நிதம் தூங்கும் எம் பிள்ளை
நீயாக தாயாக நிதம் வருவாய்

நிலவே நீயன்றோ வரமன்றோ
நின் வரவே கொடையன்றோ
நில்லாது நில்லாது நின்னொளியே

மேலும்

நன்றி கவின் வாழ்த்துக்கள் 05-Dec-2016 11:41 am
நினைப் போற்றும் நெஞ்சமெல்லாம் நீயாவாய் தாலாட்டும் தாயாவாய் நிலவே வெண்ணிலவே தண்ணொளியே ------அழகிய வரிகள் நிலவைப் போற்றும் இனிய கவிதை . அன்புடன்,கவின் சாரலன் 05-Dec-2016 9:55 am
நிலவைப் பற்றி கவி புனையாக் கவிஞர்களே உலகில் இல்லை. அந்தப் பட்டியலில் நீங்களும் இணைந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் தோழமையே. 04-Dec-2016 9:45 pm
நன்றி குமரிப்பையன் 18-Nov-2016 6:46 pm
PANIMALAR - PANIMALAR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2016 10:15 am

அன்பும் அருளும்
பொழிந்திடும் நாள்
ஆண்டவன் ஆசீர்
அழித்திடும் நாள்
அணைத்திடும் கரங்கள்
மகிழ்ந்திடும் நாள்
மகளே மணிமுடி அணிந்து
மகிழ்ந்திடும் உன்னை
மார்புடன் தழுவி
மகிழ்ன்றோம் நாம்
ஆசையாய் உன்னை
ஆரத் தழுவி முத்தங்கள் பல
தந்து தான் தன்னையே
தாங்கிட தாயே எங்கள் செல்வமே
நீயே எங்கள் முத்தான முத்தல்லவோ
பாசத்துடன் உன்னை பார்த்து பார்த்து
என்கண்களில் இன்று
ஆனந்தமாய் கண்ணீர் நிரம்புகின்றது
இன்று போல் எந்நாளும்
செல்வ சீரோடும் சிறப்போடும்
செல்வமே நீ வாழ வாழ்த்துகிறோம்
அம்மம்மா அம்மப்பா சித்திமார் மாமா மாமி மச்சான்கள்
god bless you
29,5,16 first

மேலும்

நன்றி மொகமத் சர்பான் 29-May-2016 8:40 pm
நன்றி தோழமையே 29-May-2016 8:39 pm
நற்கருணை திருவிழா வாழ்த்து சிறப்பான் படைப்பு தோழமையே. நானும் வாழ்த்துகிறேன். 29-May-2016 7:33 pm
அன்பான வரிகள் என்னுடைய வாழ்த்துக்களும் 29-May-2016 5:46 pm
PANIMALAR - PANIMALAR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2016 12:51 pm

பூமொட்டுள் மகரந்தம்
பூவையின் கூந்தலுக்காய்
பூத்திட முனைகிறது

ஆலாய்ப் பறந்து வண்டு
அமிர்தம் எனும் தேனை
அருந்தத் துடிக்கிறது

செழிப்புடன் மொட்டாகி
செவ்விதழால் ரோஜாவாய்
செடியிலோர் வண்ணமாய் ரோஜா

ரோஜாவோ வண்ணமயம்
ராஜாத்தி சூட எண்ணம்
ராஜ்ஜியமோ அதன் அழகில்

மயங்குது கிறங்குது மனங்கள்
மன்மதச் சிவப்பில் மங்கையர் மனம்
மலரா இது மதுவா/

முட்செடியில் ரோஜாவாய்
முற்றத்தில் மலரும் இது
முத்தம் பல பெற்றிடும்

கள்ளுண்டு கனிவுண்டு
கன்னிகளைக் கவர்ந்து வரும்
கொள்ளை தரும் அழகாலே

ரோஜா ஒரு ராஜாத்தி
ரோந்து வரும் மனங்களில்
ராணி என வீற்றிருப்பாள்

மேலும்

சரவணா அளித்த எண்ணத்தை (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2015 2:38 pm

தமிழ் கூறும்  நல்லுலகிற்கு  வணக்கம். நம் தளத்தில் சென்ற வாரம் முதல் நண்பர் ஜின்னா அவர்களால் துவங்கப்பட்டு  நண்பர்கள் பலரின் பங்களிப்பில் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கும் கஜல் கவிதைத் தொடரான காட்சிப் பிழைகளை நாம் அனைவரும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரின் ஆளுமை, வீச்சு, படைப்பாளிகளின் ஆக்கப் பூர்வமான பங்களிப்பு, அழகியல் இன்னபிற விடயங்களையும் கடந்து வாசிப்புப் பழக்கம் குறைந்து போயிருந்ததைப் போல ஒரு தோற்றப்பிழையோடு  இருந்த இத்தளத்தில் மீண்டும் புது ரத்தம் பாய்ச்சியதைப் போல காட்சிப்பிழையில் பதியப்படும் ஒவ்வொரு கவிதைகளும் சராசரியாக 200 பார்வைகளுக்கு மேல் கடந்து உலாவந்து கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றி நண்பர்களின் பங்களிப்பாலும் வாசிப்பினாலும் மட்டுமே சாத்தியப்பட்டது. அனைவருக்கும் நன்றி. 
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தளத்தில் பதியப்படும் காட்சிப் பிழைகள் நம் தமிழ் கூறும் நல்லுலகின் பெருமகனார்  மகாகவி திரு. ஈரோடு. தமிழன்பன் அவர்களாலும் வாசிக்கப் பெற்று அவர்கள் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. கஜல் கவிதைகளின் ஒவ்வொரு மூலக்கூறுகளையும் விளக்கி நம் படைப்பாளி நண்பர்களையும் வாழ்த்தியனுப்பிய வாழ்த்துச் செய்தி... இதோ.. அனைவரின் பார்வைக்காக..... 


https://www.youtube.com/watch?v=1SDtsl-Zg2w&feature=youtu.be

மேலும்

" அப்படி முணுமுணுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கடந்த வருடங்களில் அது நடக்கவில்லை என்றுதானே அர்த்தம். " _ ஆமாப்பு...நெசந்தேன்...அப்படி நடந்துப்போனது திட்டமிடாததன் விளைவே. " மேலும். எங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. " _கேட்கவில்லை . எழுதியேவிட்டார்கள் . அவர்கள் சரியே. எனது நோக்கம் ஆளுமைகள் முன்னிலையில் ஓர் அறிமுகம் மட்டுமே என்றிருந்தது _ இரண்டு முறையும். " அவர்கள் எழுதிய கவிதையைப் பற்றி உங்களைப் போன்ற ஆளுமைகள் இரண்டொரு வரிகள் பேசும்பொழுது எங்களைப் போன்றோருக்கு அது ஒரு ஊக்கமாகவோ அல்லது புதிய உத்வேகத்தையோ அளிக்கக் கூடும். " இதைச் செய்யவே இப்போது திட்டம். இதன் தொடக்கமே நீ பதிந்த யூ டியூப் . அறையில் தொடங்கியதை அம்பலத்தில் அரங்கேற்றுவோம் அப்பு. முரண் படுதல் தவறல்ல _ ரோசாவின் அழகு அதன் முட்கள் பலாவின் ருசி ..தேனடை.....தாழம்பூ.. 22-Dec-2015 1:39 pm
ஆமாம் சார்.... எல்லோரும் கொண்டாடுவோம்.... மூத்தோர் வழிநின்று..... நன்றி சார் 21-Dec-2015 2:48 pm
சரவணா..ஒரு போட்ட ஒரு பதில் கருத்து எனக்கு மிகவும் பிடித்தது. "எல்லோரும் கொண்டாடுவோம்... பாட்டுதான் நியாபகத்துக்கு வருது அப்பா..... நன்றி... வாழ்த்துக்கும் வாய்ப்பளித்தமைக்கும்" . நண்பர் ஜின்னா அவர்களின் சீரிய முயற்சியில் தளத்துக்கு ஒரு புது ரத்தத்தை பாய்ச்சியது என்னும் கூற்றுக்கு கஜல் தொடரில் எழுதும் நண்பர்கள் புது உத்வேகத்தோடு எழுதுவதும் அதை அகன் ஐயா போன்ற மூத்தவர்கள் முன்னின்று ஒவ்வொரு கவிதைக்கும் வழிநடத்துதல் கருத்தும் இடுவது சான்று. நண்பர் ஜின்னாவின் இந்த அரிய முயற்சியை அனைவரும் வாழ்த்துகிறோம், வணங்குகிறேன் எல்லோரும் கொண்டாடுவோம்..இந்த கஜல் தொடரின் வெற்றிப் பயணத்தை.. 21-Dec-2015 12:47 pm
முதல் முறையாக உங்களிடம் இருந்து ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன். பயிலரங்கம்.. விழா .. புத்தக வெளியீடு எல்லாம் சிறந்ததே. முதல் தலைமுறையின் ஆக்கப் பூர்வமான சிந்தனை வளங்களை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அது எங்களுக்குக் கிடைத்த வரமாகவே கருதுகிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் இரண்டாவதாகச் சொன்ன விஷயம்தான் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது . "விளுது ....விளுது...காதுலே விளுது....நாள் முச்சூடும் எங்களைப்பத்தி மட்டுமே பேசணும் ...சரியா. ?? " அப்படி முணுமுணுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கடந்த வருடங்களில் அது நடக்கவில்லை என்றுதானே அர்த்தம். மேலும். எங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அவர்கள் எழுதிய கவிதையைப் பற்றி உங்களைப் போன்ற ஆளுமைகள் இரண்டொரு வரிகள் பேசும்பொழுது எங்களைப் போன்றோருக்கு அது ஒரு ஊக்கமாகவோ அல்லது புதிய உத்வேகத்தையோ அளிக்கக் கூடும். விருது பெறுபவர்களும் ஒரு மாதிரியான வகையில் விழா நாயகர்களே என்பது உங்களுக்குத் தெரியாததில்லை. அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும்போது அந்த அங்கீகாரத்திற்கான மூல காரணத்தையும் அறிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. 21-Dec-2015 11:32 am
Murali TN அளித்த எண்ணத்தை (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-Oct-2015 7:40 pm

படத்தை கிளிக் செய்யவும்.....

குரூப் போட்டோவில்   உள்ளவர்களின் பெயர்களை பதிவு செய்ய முயற்சித்துள்ளேன்.... 

திரு வேளாங்கண்ணி, திரு பொள்ளாச்சி அபி  அவர்கள் கூறிய திருத்தத்துடன் படம் மீள் பதிவாகியுள்ளது 

1.  தவறுகள் உள்ளதெனில் தெரிவிக்கவும்   
2. வரிசை எண் 3,15,  23,  பெயர்கள் நினைவுக்கு வரவில்லை... அறிந்தவர்கள் தெரிவிக்கவும்   
3.  பகுதியாக மறைந்திருப்பவர்கள் பெயரையும் குறிப்பிடவும்.... சேர்த்துவிடலாம்..
4. வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.....
நன்றி 
முரளி

மேலும்

நன்றி சார்! 27-Oct-2015 12:24 pm
எண் 15 அசோக்குமார்.... நம் எழுத்து தள தோழர்தான்.... 27-Oct-2015 12:03 pm
எண் 3 அய்யா...! 22-Oct-2015 11:42 am
நன்றி நீங்கள் கொடுத்த இலக்கங்களின் படி எல்லோரையும் தெரிந்து கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி 21-Oct-2015 8:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

V MUTHUPANDI

V MUTHUPANDI

மதுரை
priyaram

priyaram

கிருட்டினகிரி
JINNA

JINNA

கடலூர் - பெங்களூர்
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

திருப்பூர் / சென்னை
vinayaka

vinayaka

தர்மபுரி, தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

vinayaka

vinayaka

தர்மபுரி, தமிழ் நாடு
priyaram

priyaram

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (22)

நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
asmani

asmani

திருநெல்வேலி

பிரபலமான விளையாட்டுகள்

மேலே