பெருவை பார்த்தசாரதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பெருவை பார்த்தசாரதி
இடம்:  கலைஞர் நகர், சென்னை-78
பிறந்த தேதி :  12-Dec-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2016
பார்த்தவர்கள்:  254
புள்ளி:  179

என்னைப் பற்றி...

பொதுத்துறை நிறுவனத்தில் முதுநிலை கண்காளிப்பாளர்
இணையத்தில் கதை , கட்டுரை, கவிதை போன்றவற்றை வெளியிடுகிறேன்.
தஞ்சை ஓவியம், புடைப்புச் சித்திரம், சிலைகளில் கற்கள் பதிப்பது போன்ற இதர நற்பொழுதுபோக்குக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்.
நண்பர்களின் அழைப்பின் மூலம் வாழ்க்கைக் கல்வி பற்றி சிறுவர் பள்ளி, நூலகங்களில் சிற்றுரையும் ஆற்றி வருகிறேன்.

என் படைப்புகள்
பெருவை பார்த்தசாரதி செய்திகள்

சிந்தனை செய்மனமே..24
A way of life
and way of highways..!
 
வாழ்க்கைப் பிரயாணமும்
(life) நெடுஞ்சாலைப் பிரயாணமும் (Highways)..
மனதைத் தவிர மற்ற
எல்லாவற்றையும் கட்டிப்போட்டுவிடலாம். எந்த ஒரு செயலையும் நேர்மறை எண்ணத்தோடு பார்த்தாலோ
அல்லது செய்தாலோ அது நன்மையில் மட்டுமே முடியும் என்பது நிச்சயமான உண்மைதான்.உதாரணமாக, நாம் ஒரு
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காரில் பிரயாணம் செல்கையில், பயணம் செய்கின்ற பாதைகள்
நெடுஞ்சாலையாக (National High Ways) இருந்தால் எளிதில் எட்ட வேண்டிய இலக்கை அடைந்து
விடுகிறோம். போகின்ற தூரம் முழுவதும் இதேபோல இருந்தால் நன்றாக இருக்குமே என மனம் நினைப்பது
உண்டு.இதையேதான், வாழ்க்கைப் பிரயாணத்தின்
போதும் எதிர்பார்க்கிறோம். பிறரது கோபம், பொறாமை, தடைகள் இவைகளைக் கடந்து, வெற்றி என்கிற
இலக்கை அடைந்தபிறகு, கடந்து வந்த கரடு முரடான  பாதைகளை நினைத்துப் பார்த்தால், அது நெடுஞ்சாலை
(High Ways) போலவே தோன்றும்.நெடுஞ்சாலையில் கஷ்டமில்லாமல்
கார் ஓட்டுவது போலவே வாழ்க்கைப் பிரயாணமும் (way of life) மேடு பள்ளமில்லாமல் சென்றால்
நன்றாக இருக்குமே என எண்ணுவதும் மனித இயல்புதான்.

மேலும்

பெருவை பார்த்தசாரதி - பெருவை பார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2017 6:33 pm

தினமணி கவிதைமணியின் தலைப்பு:: நிழலாடும் நினைவு..

நன்றி..தினமணி கவிதைமணி வெளியீடு::10-07-2017

===================
நிழலாடும் நினைவு..!
===================


வாழ்க்கையெது இன்னதென்று வகுத்துச் சொல்ல
வாழ்வோடு நிழலாகவரும் நினைவுகள் வழியாகும்.!

நிலையிலா வாழ்வினில் நிழலாடும் நினைவலைகள்
நிம்மதிதரும்.! நினைவுப் பாதையில் ஒவ்வொன்றாக.!

முன்னிட்ட விதைகள் பன்னெடுங்காலம் கழிந்து
பின்னெடிய மரங்களாகி சுவாசம்தரு மிக்காலம்.!

பனங் காயிரண்டில் சிறிதாய்ச்சகடை கட்டியதை
பாங் காயுருட்டிப் பலமைல்கடந்த பாலபருவம்..!

கழுதைவாலில் பனைமட்டை கட்டி யோடவிட்டு
பொழுதைப் பகலில் வீணேகழித்த வாலிபக்குறும்பு

மேலும்

அழகிய வண்ண ஓவியம் 21-Jul-2017 9:04 pm
ருத்தமான அழகிய வண்ண ஓவியம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 21-Jul-2017 9:04 pm
நன்றி உதசகி, பொதுவாக கதைகளை விரும்பிப் படிப்பதுபோல், யாரும் கவிதையை அவ்வளவாகப் படிக்கமாட்டார்கள், ஏனென்றால் அதில் இடம்பெறும் வரிகளில் பொதிந்துள்ள அர்த்தத்தைப் புரிந்து கொள்வது கடினம். கவிதை வரிகளை ரசித்துப் படிக்கும் பழக்கம் வந்து விட்டால், நமக்குள்ளேயும் கவிதை வரிகள் தோன்றிவிடும்.. தாங்களைப் போல, ரசித்துப் படித்த வரிகளைச் சொல்லி பதில் எழுதுபவர் அரிது..மிக்க நன்றி அன்பரே 21-Jul-2017 5:10 pm
"இதயரணங்களால் துன்புறுமிந்தக் கிழப் பருவத்திற்கு உதயமாகும் நிழல்போன்ற நினைவுகளே மருந்தாகும்.! "....நிதர்சனமான வரிகள்....அருமையான படைப்பு தோழரே....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 21-Jul-2017 3:47 pm

வல்லமை இதழ் தந்த படத்துக்கு..

நான் தந்த தலைப்பும், எழுதிய கவிதையும்
=======================================
உழைப்பே எங்கள் உடன்பிறப்பு..!
=======================================

அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!

கருப்பு

மேலும்

பெருவை பார்த்தசாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2017 3:15 pm

வல்லமை இதழ் தந்த படத்துக்கு..

நான் தந்த தலைப்பும், எழுதிய கவிதையும்
=======================================
உழைப்பே எங்கள் உடன்பிறப்பு..!
=======================================

அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!

கருப்பு

மேலும்


சிந்தனை செய்மனமே..23
பறவைகளும் (free
birds) கவலைகளும் (worries)
பறவைகளைச் (birds)
சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அது ஓரிடத்தில் நிலையாக உட்காருவதில்லை, இங்கும்
அங்கும் பறந்த படியே இருக்கிறது. சுதந்திரமாக எங்கும் கவலையின்றிப் பறப்பதற்கு அவைகளுக்கு
இறைவன் அருளியிருக்கிறான். தனது கூட்டைக் கட்டுவதற்கு மட்டும் நிலையாக ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கிறது.
கவலைகள், துயரம்,
மனவழுத்தம், பதற்றம்,  மிகுஉணர்ச்சி இவையெல்லாமே(worries)ஒரே அர்த்தத்தைத் தரக்கூடியதாக இருப்பினும், ஒரு விதத்தில், இவை அனைத்துமே
பறவைகள் போல சுதந்திரமாக, மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றியே எந்நேரமும் பறந்து கொண்டேயிருக்கின்றன..
மனதில் எழும் தேவையற்றஎண்ணப் பறவைகளை,
மனதைச் சுற்றிப் பறக்கவிடாமலும்,
நம் மனதுக்குள் நிலையாக குடிபுகாமலும் பார்த்துக் கொண்டால், அது மனதுக்கும் உடலுக்கும்
இதமளிக்கும், வாழ்க்கை எளிதாகும்.


மேலும்


சிந்தனை செய்மனமே..23
பறவைகளும் (free
birds) கவலைகளும் (worries)
பறவைகளைச் (birds)
சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அது ஓரிடத்தில் நிலையாக உட்காருவதில்லை, இங்கும்
அங்கும் பறந்த படியே இருக்கிறது. சுதந்திரமாக எங்கும் கவலையின்றிப் பறப்பதற்கு அவைகளுக்கு
இறைவன் அருளியிருக்கிறான். தனது கூட்டைக் கட்டுவதற்கு மட்டும் நிலையாக ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கிறது.
கவலைகள், துயரம்,
மனவழுத்தம், பதற்றம்,  மிகுஉணர்ச்சி இவையெல்லாமே(worries)ஒரே அர்த்தத்தைத் தரக்கூடியதாக இருப்பினும், ஒரு விதத்தில், இவை அனைத்துமே
பறவைகள் போல சுதந்திரமாக, மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றியே எந்நேரமும் பறந்து கொண்டேயிருக்கின்றன..
மனதில் எழும் தேவையற்றஎண்ணப் பறவைகளை,
மனதைச் சுற்றிப் பறக்கவிடாமலும்,
நம் மனதுக்குள் நிலையாக குடிபுகாமலும் பார்த்துக் கொண்டால், அது மனதுக்கும் உடலுக்கும்
இதமளிக்கும், வாழ்க்கை எளிதாகும்.


மேலும்
சிந்தனை செய்மனமே..22
முயற்சியும் (effort) மழைத்துளியும்
(raindrop)
எந்த ஒரு நிகழ்ச்சியையும் நம் வாழ்க்கையோடு
ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் புதைந்திருக்கும் உண்மைகளை நாம் உணரமுடியும்.மழைத்துளி என்பது உருவத்திலும் அளவிலும்
மிக மிகச் சிறியது, உள்ளங்கையில் ஏந்திப் பார்த்தால் ஒரு முத்து அளவே இருக்கும். ஆனால்,
தொடர்ந்து மழைத்துளிகள் விழும்போது பெருமழையாகி பெருவெள்ளத்தைத் தருகிறது.முயற்சி என்பதும் ஒருவகையில் மழைத்துளி
போலாகும்.. தொடர்ந்து மழைத்துளிபோல, சிறிய அளவில் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும்
ஒன்று கூடும்போது, பெருவெள்ளம்போல் அது சாதனையாகிவிடுகிறது.உங்கள் வாழ்க்கையிலும், ஏதாவதொரு சாதனை
புரிந்தீர்ப்பீர்கள் அல்லவா.! சாதனைக்குப் பின்னால் நீங்கள் எடுத்த மழைத்துளி போன்ற
முயற்சிகளை இப்போது சிந்தித்துப் பார்க்கலாமே..?. உங்கள்
எண்ணங்கள் பெருக்கெடுத்தோடும்.
மேலும்
சிந்தனை செய்மனமே..22
முயற்சியும் (effort) மழைத்துளியும்
(raindrop)
எந்த ஒரு நிகழ்ச்சியையும் நம் வாழ்க்கையோடு
ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் புதைந்திருக்கும் உண்மைகளை நாம் உணரமுடியும்.மழைத்துளி என்பது உருவத்திலும் அளவிலும்
மிக மிகச் சிறியது, உள்ளங்கையில் ஏந்திப் பார்த்தால் ஒரு முத்து அளவே இருக்கும். ஆனால்,
தொடர்ந்து மழைத்துளிகள் விழும்போது பெருமழையாகி பெருவெள்ளத்தைத் தருகிறது.முயற்சி என்பதும் ஒருவகையில் மழைத்துளி
போலாகும்.. தொடர்ந்து மழைத்துளிபோல, சிறிய அளவில் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும்
ஒன்று கூடும்போது, பெருவெள்ளம்போல் அது சாதனையாகிவிடுகிறது.உங்கள் வாழ்க்கையிலும், ஏதாவதொரு சாதனை
புரிந்தீர்ப்பீர்கள் அல்லவா.! சாதனைக்குப் பின்னால் நீங்கள் எடுத்த மழைத்துளி போன்ற
முயற்சிகளை இப்போது சிந்தித்துப் பார்க்கலாமே..?. உங்கள்
எண்ணங்கள் பெருக்கெடுத்தோடும்.
மேலும்

பெருவை பார்த்தசாரதி - பெருவை பார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2017 7:19 pm

பூம் பூம் மாட்டுக்காரன்.......மங்களேஸ்வரி மங்களமா அருள்வா.!
============================================================

கற்பனைவளத்தோடு கல்லிலே கலைவண்ணம் காட்டி
—கல்லையும் பேசச்சிரிக்க வைத்தான் தம்கைத்திறத்தால்!
வாழும்கலையறிந்து கலாசார வழியறிந்து வகையாய்
—வாயில்லா ஜீவனையும் பேசவைத்தான் தன்சைகையால்!

அரிய பழந்தமிழ்க் கலையாய் பூம்பூம் மாடுண்டு!
—அருகிவரும் கலையாக ஆனதுவு மெங்கள்கலையே!
அலங்கார ஆடையுடன் ஆரூடம் சொல்லும்ஜீவன்!
—அருங்கலை வளர்க்கும் மாட்டை வாங்கவிற்கமுடியாது!

மக்களப்பெத்த மவராசி!..புள்ளயப்பெத்த புண்ணியவதி!
—மங்களேஸ்வரி வந்துருக்கா! மங்களமாவுன வாழ்த்துவா!
பாட்டுடன் இதுப

மேலும்

சிந்தனை மிகும் கருத்துப் பதிவுக்கு நன்றி..திரு ஸர்பான்.. மேலும், இந்தக் கவிதையில், உண்மையில் அந்த பூம்பூம் மாடு வைத்துப் பிழைப்பை நடத்தும் அரிய மனிதர்களின், வாழ்க்கையில் எவ்வளவு போராட்டங்கள்.. இன்றும் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு சலுகைகள் தர மறுக்கிறது. குடும்ப அட்டை கூட இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.. இவர்களது வாழ்க்கை அனுபவங்களை, ஒரு சிலர் இணையத்தில் பேட்டி எடுத்து எழுதியிருக்கின்றனர், முடிந்தால் ஒரு முறை படித்துப் பார்க்கவும், மிகவும் வேதனையான விஷயம்.. எனது பால்ய வயதில், பூம்பூம் மாட்டுடன் ஒருவர் எங்கள் தெருவில் வருவதை நாங்கள் மிகவும் ரசித்ததை இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.. 15-Jul-2017 6:10 pm
நாகரீகம் மரபுகளை குழி தோண்டி புதைத்து விட்டு அதன் மேல் தான் அத்திவாரங்கள் போடுகின்றது 15-Jul-2017 9:37 am
பெருவை பார்த்தசாரதி - பெருவை பார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2017 11:21 am

கல்வீச்சு..!
==========சிறார்கள் பயிலும் பள்ளி யினருகேதான்

-----சிற்றறிவை மழுங்கச் செய்யும் மதுக்கடையாம்

சீறியெழும் சேலைகட்டிய மாந்தர்க ளங்கே

-----சிறு கூட்டமாய் வெகுண்டெழுந்து ஓடியதைச்

சின்னா பின்ன மாக்கினர் சாராயக்கடையெலாம்

-----சரக்குகள் எல்லாம் சட்டென உடைகிறது

சடுதியில் கல்வீச்சால் அழிந்தது மதுபாட்டிலெலாம்.!இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டமதை

-----எதிர்த்து இறக்கைகட்டிக் குதித்தனர் களத்தில்பலர்

அரசாங்கத் துக்தெதிராக போர்க்கொடி யேந்தி

-----அருகருகே அமைதியாய்ச் சென்றதொரு கூட்டம்

இருவேறு கும்பலாலெழுந்த பெருஞ் சர்ச்சையால்

-----ஒருவருக் கொருவர்

மேலும்

சிந்தனை மிகும் கருத்துப் பதிவுக்கு நன்றி..திரு ஸர்பான் 15-Jul-2017 6:04 pm
போராட்டம் இன்றி இனி அணுவளவும் உரிமையை வெல்ல முடியாத அவலம் மண்ணில் தோன்றி விட்டது 15-Jul-2017 9:38 am
பெருவை பார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-May-2017 2:23 pm

வறட்சி மாநிலம்
================


மண் வெளியில் தண்ணீரின்றித் தவிக்கையில்
***விண்வெளியில் தண்ணீர் தேடும் விந்தையாம்
நிலத்திலே நீர்த்துளி ஏதுமில்லா நேரம்தனில்..
***நிலவிலினிலே ஆராய்ச்சி செய்தென்ன பயன்..?

தாயிழந்த குழந்தை மிரண்டு விழிப்பதுபோல..
***வாய்பிளந்தஏரி நீருக்காக நீலவானம் நோக்குமோ.!
திட்டமுடன் ஆறுகுளம் ஏரிமடு வயலென..
***பட்டாபோட்டு விற்றதால் வந்தது நீர்வறட்சி..!

இரத்தம் சுண்டி உதட்டில்வரும் வெடிப்புபோல
***ஈரம்வற்றிய நிலமும் வெடித்து பிளக்குதுபாரடா..!
பொக்கையும் பிளவுமாய்க் காணும் ஏரிகளங்கே..
***கொக்கையும் காணொம் மீனையும் காணொம்..!

தன்னிலத்தோடு தரிசு நிலத்தையும் வளைப்

மேலும்

சிந்தனை மிகும் கருத்துப் பதிவுக்கு நன்றி..திரு ஸர்பான் 15-Jul-2017 6:03 pm
சட்டென்று எனது பழய படைப்புகளுக்கு, சிரமம் பாராது, தொடர்ந்து பதிலளித்து வரும் அன்பின் கவிஞர் திரு கவின் சாரலன் அளிக்கும் ஊக்கத்திற்கு, நான் கடமைப் பட்டிருக்கிறேன்.. நன்றி அய்யா.. 15-Jul-2017 6:03 pm
மண் வெளியில் தண்ணீரின்றித் தவிக்கையில் ***விண்வெளியில் தண்ணீர் தேடும் விந்தையாம் நிலத்திலே நீர்த்துளி ஏதுமில்லா நேரம்தனில்.. ***நிலவிலினிலே ஆராய்ச்சி செய்தென்ன பயன்..? -----என் பயன் ? குளங்களைப் பராமரிக்கும் குடிமராமத்து திட்டமது.. ***உளமுடன் செயல்பட்டால் வளமுடனுண்டு வாழ்வு ----உண்மை 15-Jul-2017 2:44 pm
கதிரவனின் வெம்மையால் வறண்ட சமூகத்தைக் காட்டிலும் அரசியல் கொள்ளையால் அழிந்த சமூகங்கள் தான் ஏராளம் 15-Jul-2017 9:40 am

சிந்தனை செய்மனமே..21
blueprint and begger
2722 அடி உயரமுள்ள புர்ஜ் கலிஃபா என்ற
கட்டிடம் துபாயில் இருக்கிறது. இக்கட்டிடம், சுமார் நான்கு வருடகாலம் வெறும் செயல்திட்ட (blueprint)
அளவில் மட்டும்தான் இருந்தது என்றால் நம்பமுடியுமா.?. இப்போது இது உலகிலேயே
மிக உயரமான கட்டிடம் என்ற பெருமைக்குறியது.
இன்றைக்கு மன்னர் என்று சொல்லக்கூடியவர்கள்
ஒருகாலகட்டத்தில் ஆண்டியாகக் (begger) கூட இருந்திருக்கலாம்...என்பதை வரலாற்றில் படித்திருக்கிறோம்..அல்லவா.?
தற்போதுள்ள அரசியலில் இவ்வித காட்சிகளை நம் தலைமுறையிலே கூட காணமுடியும்.
இவ்விரண்டு உதாரணங்களைப் போல, இன்றைக்கு
நாம் எங்கிருக்கிறோம், எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, வருங்காலத்தில்
தனது உயர்ந்த லட்சியத்தையும், குறிக்கோளையும் ஒருவன் தன்விடாமுயற்சியினால் அடையும்போதுதான்
அவனுக்குப் பெருமையும் அந்தஸ்தும் வந்து சேருகிறது.


இதுதான் வாழ்க்கை சொல்லும் பாடம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (49)

Padmamaganvetri

Padmamaganvetri

Ramanathapuram
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி
சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (51)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே