Pon Kulendiren Profile - பொன்னம்பலம் குலேந்திரன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  பொன்னம்பலம் குலேந்திரன்
இடம்:  மிசிசாகா, ஒண்டாரியோ, கனடா
பிறந்த தேதி :  25-Sep-1939
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2016
பார்த்தவர்கள்:  589
புள்ளி:  136

என்னைப் பற்றி...

பொன் குலேந்திரன் ஆகிய நான், இலங்கையில் உள்ள யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College Jaffna )கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) லை தொடர்பு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி.ஓய்வு பெற்றவன.; பத்து வயது முதற்கொண்டே எனக்கு எழுத்தில் ஆர்வம் இருந்தது. கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்;. ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளேன். பல இணையத்தளங்களுக்கும் எழுதி வருகிறேன். என் வெப் பக்கம்: Pon-Kulendiren.கமrnGenertaions – தலைமுறைகள். rnrnஇலங்கை தெயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் கதையை ஆங்கிலத்தில் Generations என்ற பெயரில் நாவலாக வெளியிட்டுள்ளேன். Notion Press.com சென்னையில் அல்லது Amazon.in யில் வாங்கலாம்.rnrnபிரிட்டிஷ் அட்சி காலத்தில், கூலிகளாக இலங்கைக்கு கங்காணிகள் மூலம் வேலைக்கு அமர்த்தபட்டவர்கள். 1963 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் ஆயிரக்கணக்கில்; இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்கள். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு இத்தொழிலாளிகள். விரைவில் தமிழில் “தலைமுறைகள்” என்ற தலைப்பில் இந்நாவல் வெளிவரும்.rn

என் படைப்புகள்
Pon Kulendiren செய்திகள்
Pon Kulendiren - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2017 8:01 am

போர்த்துகேயர் இலங்கையை 155 வருடங்கள் ஆட்சிசெய்து விட்டுச் சென்ற வார்த்தைகளான அன்னாசி. கடுதாசி ஆசுபத்திரி. அலவாங்கு. கதிரை. குசினி, துவாய் ஆகியவற்றில் அலுமாரி என்ற வார்த்தையும் அடங்கும். இதை “நிலைப்பெட்டகம்” என்பர் தூய தமிழில். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அலுமாரி என்ற வார்த்தை அதிகமாக புழக்கத்தில் உண்டு. காரணம் யாழ்ப்பாணத்தை போர்துகேயர் சுமார் 100 வருடங்கள் ஆண்டு கதோலிக்க மதத்தைப் பரப்பினர். அப்போது யாழ்ப்பாணத்தில் குடி புகுந்த வார்த்தை அலுமாரி

இந்த சிறு கதை யாழ்ப்பாணத்தில் ஒரு குடும்பத்தில் மரபு வழி வந்த அலுமாரி பற்றிய கதை. ருக்குமணியின் தந்தை காராளசிங்கம் ஒரு கறார் பேர்வழி. கோபக்காரர்.

மேலும்

Pon Kulendiren - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2017 7:25 am

உயர்ந்தோர் தாழ்ந்தோர் வாழும் அந்த நகரத்தில் குப்பைக்கு குறைவில்லை. உடைந்த பொருட்கள், பழைய சஞ்சிகைகள் . பத்திரிகைகள், கார்ட் போர்ட் மட்டைகள். பொம்மைகள் இப்படி பாவனைக்கு உதவாது என்று நிராகரிக்கப்பட்டவை நகரத்தின் ஒதுக்குபுறத்தில் தஞ்சம் அடையும் குப்பைகள் சேரும் இடம் அது. சேரிக்கு அருகாமையில் இருந்த படியால் சேரி வாழ் சிறுவர்களின் புதை பொருள் ஆராச்சிக்கு தினமும் உட்பட்ட இடம் அது. சிறுவர்களோடு பொட்டி போட்டுக் கொண்டு சொறி நாய்கள் , பறவைகளும் தமக்கு ஏதும்’ உணவு கிட்டாதா என வட்டமிடும் குப்பைக் குவியல்.

செல்வம் பதினெட்டு வயது சிறுவன். பெயருக்கு பொருத்தமான செல்வம் அவனுக்கு இல்லாவிட்ட்டாலும் சுய

மேலும்

Pon Kulendiren - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2017 6:53 am

ஒல்லாந்தர் ஆட்சியின் போது 1798 ஆம் ஆண்டு தபால் சேவை இலங்கையில் அறிமுகப்படுத்தப்ட்டு, பிரித்தானியர் 1815 இல் முழு இலங்கையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்த போது பல நகரங்களில் தபால் சேவையை விஸ்தரீத்தனர். கிராமங்களில் உப தபால் நிலையங்களும், ரயில்மூலம் யாழ்ப்பாணம், மட்டகளப்பு, கண்டி. பதுளை. மன்னார். மாத்தறை போன்ற நகரங்களுக்கு இரவில் டிரவலிங் போஸ்ட் ஒபீஸ் என்ற பெயரில் தபால் பொதிகளை அனுப்ப ஒழுங்குகள் செய்தனர். அதணல், தபால் பொதிகளை’ சுமந்து சென்ற ரயிலுக்கு மெயில் டிரையின் என்று பெயரிடப]ட்டது.

வவுனியா மாவட்டத்தில், அந்த நகரத்திலேயே பெரிய தபால் நிலையம்’ அமைந்திருந்தது. அந்த நகருக்கு அருகாமையில

மேலும்

Pon Kulendiren - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2017 7:12 am

வீட்டுக்கு வீடு வாசல் படி


சண்முகம்- பங்கஜம் தம்பதிகளுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களுக்கு பின் பிறந்தவன் மாதவன். அவனுக்கு இரு வருடங்களுக்குப் பின் தேவகி பிறந்தாள். தாயின் செல்லபிள்ளையாக மாதவன் வளர்ந்தான். காலம் சென்ற தனது தகப்பனைப் போல் அவன் தோற்றத்தில் இருந்ததால் அவனுக்குக் கேட்டதை வாங்கிக் கொடுத்தாள் பங்கஜம். மாதவன் பத்து வயதாகுமட்டும் பெரு விரலைச் சூப்பியவாறே தாயின் சேலையை பிடித்தபடி அவள் அருகே தூங்குவான். குளிப்பாட்டுவது. உணவு ஊட்டுவது, தாலாட்டு பாடி கதை சொல்லி தூங்கவைப்பது,. பாடசாலைக்கு கூட்டிப்போய் கூட்டி வருவது, இப்படி மாதவனை தன் அரவணைப்பில் வளர்த்தாள் தாய். வீட்டில் ஒருவரும் அவன

மேலும்

Pon Kulendiren - Pon Kulendiren அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2017 7:24 am

வேலி என்பது சோழர் காலத்தில் நில அளவைக்குப் பாவிக்கப்பட்ட வார்த்தையாகும். யாழ்ப்பாண குடா நாட்டில் சங்குவேலி, நீர்வேலி. திருநெல்வேலி என்று வேலியில் முடிவடையும் கிராமங்களில் பிரசித்தம் பெற்ற ஊர் அச்சுவேலி. அச்சன்வேலி அச்சு வேலியாக மருவி இருக்கலாம். அத்திமரம் அதிகம் காணப்பட்ட ஊர் ஆகையால்இடப்பெயர் வந்திருக்கலாம் என்பதும் பல இடப்பெயர் ஆய்வாளர்கள் கருத்து. யாழ். குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என்ற மூன்று பெரும் பிரிவுகளுக்கும் ' அச்சுப்போல் மைய இடத்தில் அமைந்துள்ள கிராமமாகையால் அச்சுவேலி என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது இன்னொரு சாராரின் விளக்கம் உண்டு அச்சுவேலி கிராமத்துக்கு அருகே இடை

மேலும்

Pon Kulendiren - Pon Kulendiren அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2017 4:42 am

அன்று விஞ்ஞான ஆசிரியர் தோமஸ் தொழில் நுட்பத்தைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எப்போதும் விஞ்ஞான தத்துவங்களை விளக்கும்போது ஒரு கதையைச் சொல்லி மாணவர்களுக்குவிளங்க வைப்பது அவர் வழமை. அன்று தனது கதையை ஆரம்பித்தார்
“ஸ்டுடன்ஸ் உங்களுக்கு நான் சொல்லும் கதை கற்பனைக்கதை, ஆனாலும் உங்களை அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவைக்கும். இக்கதை ஆங்கிலத்தில் ஜொனாதன் ஸ்விஃப்ட் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் சிறுவர்களுக்கான கலிவர்லில்ப்புட்; பயணங்கள் என்ற தலைப்பில் எழுதிய கதைகளில் ஒன்று”, என்று கதை எழுதிய ஆசிரியர் அறிமுகத்தோடுஆரம்பித்தார்.
“ கதையைச் சொல்லுங்கோ சேர்.; கேட்க நாங்கள் ரெடி”, ம

மேலும்

Pon Kulendiren - Pon Kulendiren அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2017 10:16 pm

காளை மாட்டின் கொம்புகளில் பணத்தை (சல்லியை) துணியில் முடிந்துக் கட்டி, அதன் பின் அக்காளையை விரட்டி, அதுமிரண்டு ஓடும் போது அடக்கி, அவ் முடிச்சை அவிழ்த்தால் அப்பணம் அடக்கிய வீரனைப் போய்ச் சேரும். இந்த வீரவிளையாட்டு தமிழர்களின் வீரத்தைப் பிரதிபலிக்கும், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மரபு வழிவந்த விளையாட்டுஎன்பதை எவரும் மறுக்கமுடியாது. திராவிட மாநிலங்களில் இவ் விளையாட்டு நடக்கிறது. மிருக வதை அடிப்படையில்அவ்வீர ;விளையாட்டுக்குச் சட்டத்தின் படி தடை உருவாகியது.

காலப்போக்கில், ஜனநாயகத்தின் புது சட்டங்களோடு மனித உரிமை மீறல்கள் ,மிருகவதை, சிறுவர், முதியோர் வதை, ராகிங் என்ற பகிடி வதை போன்றவற்றை எதிர

மேலும்

Pon Kulendiren - Pon Kulendiren அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2016 10:32 am

பெண்ணுக்கு இருப்பிடம்
அடுப்படி என்ற காலமும்
இவளின் உறவுக்கு படுக்கையடி
இந்நிலை மாறி

பாரதி கண்ட புரட்சிப் பெண்ணாய்
மண்ணுக்காக
ஈழத்து மங்கையர்
போர்க்கோளம் பூண்டபோது ஏன்

தமிழ்நாட்டுச் சினிமாவில் மட்டும்
பெண்கள்
அரை நிர்வாணமாய்
பணத்துக்காகவா காட்சிதருகிறார்கள்.?


கல்வித்திறன் இருந்தும்
முன்னேற முடியாது
முடக்கப்பட்டார்கள் ஈழத்துமங்கையர்
தரப்படுத்தல் சட்டத்தால்.


வாழத் தொழில் இல்லை
உண்ண உணவில்லை
பேசும் சுதந்திரமில்லை
திறமையைக் காட்ட வழியில்லை

இந்நிலையில் ஈழத்து மங்கையர்
உயிரையும் துட்சமெனமதித்து
உரிமையைக் காக்க
கைகளில் துவக்கு ஏந்தும் கருமபுலி நிலை.

பாலூட்

மேலும்

Pon Kulendiren - sirojan Piruntha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 12:20 am

"அய்யா உங்கள தலைமை ஆசிரியர் வரச்சொன்னார்" என்ற வார்த்தையை கேட்டு " என்ன ராஜா வழக்கம் போல பஜனையா.. நானும் இருபது வருசமா இந்த வேலைய பாக்குறன்.. மாற்றத்தையும் பாக்குறன்.. இப்பல்லாம் தமிழ் ஆசான் என்றால் இதுதான் கதி" என்று கூறிக்கொண்டே தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவர் அதிர்ந்து போனார்.

அங்கே தலமை ஆசிரியரும் அதிபரும் அமர்ந்திருந்தனர்.என்ன ஆச்சரியம்! ராஜாவை பார்த்ததும் இருவரும் எழுந்து கையை குலுக்கி வாழ்த்தினர்.ஏன் வாழ்த்துகிறார்கள் என்று புரியாது திருதிருவென்று முழித்தார் ராஜா.

உடனே எழுந்த தலமை ஆசிரியர்
"ராஜா நீங்கள் ஒவ்வொரு வருடமும் செய்து அனுப்பும் தமிழ் பாட செயற்றிட்டம் இவ்வருடம்

மேலும்

திறமைக்கும் தமிழுக்கும் கிடைத்த மணிமகுடம் 14-Nov-2016 2:43 am
Pon Kulendiren - AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2016 7:04 pm

இதுதான் பார்வை!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.
அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான்

மேலும்

அரத்தமுள்ள கதை. பேசவதை வைத்தே ஒருவரை கணிக்க முடியும் 27-Oct-2016 3:55 am
Pon Kulendiren - AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 9:33 am

ரங்கசாமி ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார்.அந்த ஊர் சற்றுப் பெரிய ஊரானதால் வியாபாரம் நல்ல முறையில் நடந்து வந்தது.அவருக்கு மாதேஷ் என்று ஒரே மகன் இருந்தான்.பள்ளி கூடத்தில் பத்தாம் வகுப்பில் படித்து வந்தான்.தன் மகனை வியாபாரத்தில் பழக்குவதற்காக ரங்கசாமி விடுமுறையின் போது கடையில் வந்து அமரச் சொல்வார்.

சில நாட்கள் யாரேனும் மாளிகைப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து தரும்படி சொன்னால் ஒரு வேலையாள் மூலம் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்.உடன் தன் மகனையும் வேலையாளுக்குக் காவலாக அனுப்புவார்.அத்துடன் பணத்தையும் வசூல் செய்து கொண்டு வரச் சொல்வார்.அப்போது தான் அவனுக்குப் பணத்தின் அருமை தெரியும் என்பது அவரின் கரு

மேலும்

மிகச் சிறப்பு சகோ 07-Jan-2017 11:24 pm
சிந்தனைக் கருத்துள்ள அறநெறி கட்டுரை படித்து பலரோடு பகிர்வோம் பாராட்டுக்கள் தொடரட்டும் . 07-Jan-2017 11:03 pm
சரிவர ஆராயாமல் ஒருவர் மேல் குற்றம் சுமத்தக் கூடாது¸ ஒரு முறை சிந்திய முத்துக்களை; பொறுக்கி எடுப்பது கடினம். 20-Sep-2016 1:25 am
Pon Kulendiren - Pon Kulendiren அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 2:34 am

எனது அடுத்த சிறுகதைக்கு எதை கருவாக வைத்து எழுதுவது என்று சிந்தித்தவாறு கடற்கரை மணலில் போய் அமர்ந்;தேன். கரையை வந்து அடிக்கடி முத்தமிட்டு சென்ற கடல் அலைகளைப் பார்த்து இரசித்தேன் . அவ்வலைகலில்; விளையாடிய சிறுகுழந்தைகள் என் கவனத்தை ஈர்த்தது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி தோன்றிய சுனாமி என்ற பெரும் அலைகளினால் எத்தனை ஆயிரம் உயிர்கள் பழியாகி இருக்கும் என்று என் மனதில் கேள்வி எழும்பியது. கடற்கரை மணலில் பிள்ளைகள் விளையாடுவது போல நண்டுகள் ஓடித் திரிந்து கோலங்கள் போட்டன. அதையும் இரசித்தேன். சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி அரவணைத்தவாறு இருந்தனர். அன்று கூட்டம் அதிகமாக இருக்கவில்லை.

“ஐயா> வீட்டில்

மேலும்

உங்கள் விமரசனத்துக்கு என் நன்றி. இது போன்ற விமர்சனங்கள் மேலும் என்னை எழுதத்டதூணடுகிறது. எனது சிறுகதைகள் பெருமு;பாலும நடநத சம்பவததை கருவாகக் கொண்டு எழுதப்பட்டவை 13-Sep-2016 4:35 am
இதே அனுபவம் எனக்கு இந்திய நாட்டில் ஏற்பட்டுள்ளது. நான் இன்னும் பழமையான தமிழ் ஆங்கில நூல்களை சேகரித்து வைத்ததால் முதுமையில் படித்து இலக்கிய இன்பம் அடைகிறேன் யாராவது தங்கள் பழைய நூல்களை கொடுத்தால் எனது நூலகத்துக்கு பயன்படுமே ! தொடர்பு கொள்ளவும் 09444286812 “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்பது போல் வாசிக்கும் அளவுக்கு கல்வி அறிவு இல்லாத வாழ்க்கை தொடரட்டும் தங்கள் வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் அடங்கிய இலக்கிய படைப்புகள் பாராட்டுக்கள் 13-Sep-2016 3:19 am
மேலும்...
கருத்துகள்
மேலே