Rajagopal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajagopal
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jun-2017
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  5

என் படைப்புகள்
Rajagopal செய்திகள்
Rajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2017 11:28 am

சிலரது வாழ்வு செம்மைப் பட்டது
“”பலமுறை”” கண்ட மரணம் தந்தது

நம்பிப் பழகியவர் நயவஞ்சகரானதால்
விரும்பிப் பழகியவர் விரோதியானதால்

அன்புடைவர் அகன்று சென்றால்
ஆசைக்குறிவர் பாசம் முறித்தால்

மோசம் செய்யும் எண்ணத்துடனே
நேசக்கரம் நீட்டி மோசம் செய்ததால்

சேர்த்த செல்வம் சிதைந்து போனதால்
பார்த்த வேலை பறிக்கப்பட்டதால்

உணவின்றி வாடியபோதும் இல்லாத
உடல் வலியால் துடித்தபோதும் இல்லாத

தளராத மனத்தை இவை தாக்கியதால்
உணராத மரணத்தை பலமுறை உணர்ந்தேன்.

சிலரது வாழ்வு செம்மைப் பட்டது
பலமுறை கண்ட மரணம் தந்தது

மேலும்

Rajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2017 11:26 am

அவ்வை சொன்னார் - கோடி கொடுத்து உறவைப்பேணு
எவ்வகையிலும் ஏற்புடையதில்லை இன்று
மகளோடு மகனோடு - அவர்கள் நேரம் பொறுத்து
மனதார பேசும் காலம் கிட்டாது போச்சு
இனியும் அவ்வை ஏற்புடையதில்லை - காரணம் உரைப்பேன்
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்கிறார்
மதிப்புள்ளோரை சந்திப்பதே பெரும் கடினமானபின்
மதியாதாரே மேலாகப் போனார் - போனால்--பேசுகின்றார்
"மூத்தோர் சொல் அமிர்தம்" என்பது
நீர்த்த வாக்கியமாக கறைந்துவிட்டது
"பெரியோரை துணைக்கொள்" என்பது
அறியாமல் சொன்ன சொல்லாய்ப் போயிற்று.
அவ்வையே நீ சொன்னவை செல்லாததாக்கும் காலமிது
செம்மை மறந்த மனிதர்கள் வாழும் காலமிது ....
""நீர்த்த"" பொருள் -- செறிவு குன்றிய

மேலும்

Rajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2017 11:18 am

கடும் காட்டில் வாழும் சில விலங்கினங்களை
கொடும் மிருகம்களென்று பட்டியலிட்டாய்

கொலை செய்து உணவை பெறும் தன்மையால் என்றால்
இவனை ஏன் அதில் சேர்க்காமல் விட்டாய்

அறிவில் உயர்ந்தவனை அவை தாக்குவதால்
புவியில் அவற்றை கொடிய மிருகமாக ஆக்கினாயோ

பின்னர்---காக்கப்படவேண்டிய மிருகம் ஆனது ஏன்
தன்னைத்தாக்கும் -- மனிதனைத் தாக்கும் -- விலங்கு

காக்கப்படவேண்டியது மிருகமா - ""யாரிடமிருந்து""
மாய்க்கும் மனிதன் - காக்கும் கடவுள் ஆனானோ
ஏய்க்கும் மனிதனைவிட- தாக்கும் விலங்கே மேலன்றோ

மேலும்

Rajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2017 11:16 am

அடுக்கு - மாடிக் கட்டிடத்தில் பத்தாம் மாடியில்
சொக்குப்பொடி மாதே! சுகவாழ்வு வாழ்ந்தாலும்,
அடுக்கு-மாடி??(இது அடுக்குமா) நீ கொண்ட நெஞ்சம் குறை எண்ணம்
இடுக்கண் தரும் சொல்லாலே என்னை சிதைக்காதே
கவிதைக்கு பொய் அழகு என்ற வரி
கதைக்கு உதவாது போனதிங்கே
தையலால் பற்றி ஒரு கவிதை நான் புனைய
பொய்யாக சில பழியுரைகள் வடிவமைத்தேன்
மெய்யாக அவைகளை நம்பி - காரிகையாள்
கை-யுரம் கொண்டு நையப்புடைத்துவிட்டாள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே