இராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இராஜ்குமார்
இடம்:  திரு ஆப்பனூர்
பிறந்த தேதி :  19-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  554
புள்ளி:  45

என்னைப் பற்றி...

புதிய வானத்தின் பழைய பறவை நான்

என் படைப்புகள்
இராஜ்குமார் செய்திகள்
இராஜ்குமார் - Rakshana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 7:54 pm

பாலியல் பலாத்காரங்கள் புரியும்
பராக்கிரமர்கள் கொண்ட நாடென
பாரினில் நம் பெயர் பதித்துள்ளோம்
மறுக்கப்பட்ட நியாயமும், மந்தப்பட்ட நீதியும்
மலிந்த இந்நாட்டில்
செய்திகள் முடிந்தவுடன்
செத்துவிடுகிறார்கள் ஆயிரமாயிரம் அமானத்கள்
மகாத்மாவையே மரணிக்கச் செய்தவனைக்கூட
அவரது திறந்த மார்பே
சுடுவதற்குக் காரணம் என
வாதிடும் திறமைமிகு
வழக்கறிஞர் மலிந்த இந்நாட்டில்
இன்னும் எத்தனையெத்தனை பெண்களுக்கு
புதிது புதிதாய் பெயரிடப்போகிறோம் !

மேலும்

பாலியல் வன்முறை செய்தவனுக்கு பாவமன்னிப்பு கொடுத்துவிட்டு பெண்கள் நாட்டின் கண்களென்று பெருமை பேசும் நாடு இது வாழ்த்துக்கள் 16-Aug-2017 10:47 pm
இராஜ்குமார் - சந்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 8:04 pm

நீ எங்கோ இருக்கிறாய்
என எண்ணும் போதெல்லாம்
என்னுள் பூத்து எழுகின்றாய்
ஓராயிரம் கவிதைகளாக

மேலும்

அருமை 16-Aug-2017 10:44 pm
இராஜ்குமார் - சுரேஷ் காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 8:04 pm

புதிய நண்பன்
வேண்டும் என்று
நினைக்கும் போதெல்லாம் ,
புதிதாய் புத்தகம் ஒன்றை
வாங்குகிறேன்.....

மேலும்

உண்மைதான்....ஆனால் அந்த தலைவர்களை தருவதே அந்த புத்தகங்கள் தான், சிலர் காகிதத்தில் படிக்கின்றனர்,சிலர் வாழ்க்கையை படிக்கின்றனர்... வருகைக்கு நன்றி நண்பரே ..... 16-Aug-2017 11:44 pm
பல தலைவர்கள் தங்கள் நண்பர்களாக புத்தகங்களேயே வைத்திருந்தனர் வாழ்த்துக்கள் 16-Aug-2017 10:42 pm
உண்மைதான்....நண்பரே....வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.... 16-Aug-2017 9:35 pm
இன்றைய சூழலில் புத்தகம்தான் நல்ல நண்பன் . புத்த (அ)கத்தில் குரோதம் இருக்கலாம் . புத்தகத்துள் அது இல்லை . வாழ்க 16-Aug-2017 8:18 pm
இராஜ்குமார் - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 8:12 pm

மனிதனே!
இந்த உலகத்தை நீ அறிவாயா?
அதன் தந்திரத்தைதான் உணர்வாயா?

இது ஒரு விசித்திரமான சொர்க்கம்
அதில் வாழ்வது அவ்வளவும் சிரமம்

என் அனுபவத்தால் கண்டறிந்த உலகத்தை கவிதையாய்
பதிவு செய்கிறேன்...
உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!

இது தான் உலகம்!!!

யாரும் உனக்கு தராவிட்டாலும் உன்னிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்கும் உலகம் இது!!!

ஒருமுறை தவறு செய்துவிட்டால் ஒவ்வொரு முறையும் உன்னை குற்றவாளியாய் பார்க்கும்
உலகம் இது!!!

உனக்கு நீ உண்மையாய் இருக்கும் பட்சத்தில் உன்னை பொய்யாகவே பார்க்கும் உலகம் இது!!!

அடுத்தவன் காலைவாரிவிட்டு முன்ன

மேலும்

நன்றி!!! 17-Aug-2017 6:10 pm
"பிடித்திருக்கு என்று ஒரு ஆண் சொல்ல உரிமை உண்டு அதுவே பிடிக்கவில்லை என்று பெண் சொன்னால் ஏற்றுக்கொள்ளாத உலகம் இது!!!" அருமையான வரிகள் 👌👌 புறப்பார்வை நன்றாக உள்ளது.....☺👍 17-Aug-2017 5:00 pm
நன்றி!!! 16-Aug-2017 10:42 pm
அருமையான படைப்பு அருமை 16-Aug-2017 10:40 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 7:30 pm

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

ஆற்றினில் மண் இல்லை
காட்டினில் மரம் இல்லை
வளரும் இந்தியாவில்
வளங்கள் எதுவுமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மருத்துவமனையில் மருத்துவரில்லை
மதுக்கடைக்கோ பஞ்சமில்லை
மயானங்கள் நிறைந்தாலும்
மக்கள் மீது அக்கரையில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

சாதி பெயரில் பள்ளிக்கூடம்
சமத்துவத்திற்க்கு இறப்பிடம்
வீதிதோறும் கலவரம்
விதியே மாற்ற யாருமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மதத்திற்கு மதம் கட்சி அமைத்து
மனிதநேயத்தை தோன்றி புதைத்து
மக்கள் மத்தியில் குண்டு வைத்து
மாண்டு போனவர் கொ

மேலும்

இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2017 4:45 am

வாழும் தெய்வமே-உன்
வாழ்நாள் கடனாளி நானே...
நாளும் உனை நினைத்து
நான் பாடும் தேசிய கீதமிது...

உன்மையான தியாகத்தின்
உருவம் என்றால் நீயம்மா...
உள்மனதிலும் ஊஞ்சல்கட்டி
உயிருள்ளவரை சுமப்பாயே...

ஆயிரம் உறவு வந்தாலும்
அகரம் என்றும் நீயம்மா...
ஆதவன் நிலவு மறைந்தாலும்
அந்த வானம் போல இருப்பாயே...

கவலை எனக்கிருந்தால்
கண்ணீர் உனக்கு வரும்...
புன்னகை எனக்கு வந்தால்
புத்துணர்ச்சி பெற்றிடுவாய்...

என் பசி தீர்ந்தால்
உன் பாதி வயிறு நிரம்பிவிடும்...
என் ருசி எதுவென்று
உன் நாக்கு மட்டும் நன்கு அறியும்...

பேரழகும் எனக்கில்லை...
பேரறிவும் எனக்கில்லை...
ஊரு கண்ணு படுமேனு
உச்சந்தலையை

மேலும்

மிக்க நன்றி நண்பா 14-Aug-2017 11:09 am
அருமை 14-Aug-2017 9:44 am
தங்கள் வருகையாலும் வளமான கருத்தினாலும் மனம் மகிழ்ந்தேன் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா 13-Aug-2017 11:10 am
கடவுளுக்கே ஒரு இன்னல் என்றால் அவனும் முதலில் சொல்லும் வார்த்தை அம்மா... என்ற வார்த்தையே... உந்தன் வரிகளில் உள்ளம் உருகினேன். அருமை...நண்பா. 13-Aug-2017 8:21 am
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2017 3:01 pm

தவமிருந்தவர்களுக்கு
கிடைத்த சாபம்

"காதல் தோல்வி"

மேலும்

அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்.... 10-Aug-2017 9:44 am
நானும் ஏற்றுக் கொள்கிறேன் நண்பா! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 9:12 pm
Nice 08-Aug-2017 3:13 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2017 6:24 am

ஆணவ நிலவே
ஆணவ நிலவே
அழிவது நீதானே- ஓடி
ஒழிவது நீதானே.

நீ வந்தா என்ன...
போனா என்ன...
எனக்கென்ன கவல-நீ
கணக்குல வரல...

விட்டு சென்றவளே
விரட்டி பிடிக்க- என்
வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல..!

தோற்ற காதலை
தோன்டி எடுக்க- என்
இதயம் ஒன்றும் கல்லறை அல்ல..!

உளி பட்ட கல்லில்
உருவம் தெரியும்
வலி பெற்ற காதலால்
வாழ்க்கையே அறிந்தேன்..!

அலையில்லா கடலிலும்
அழகு தெரியும்
நிலையில்லா காதலால்
நிரந்தரம் அறிந்தேன்..!

நிலவில்லா இரவில்
நித்திரை வராதா..?
மலரில்லா செடிகள்
மண்ணிலே வாழாதா..?

பாலைவன நாட்டில்
பனிமழை போல
வாடிய வாழ்க்கையிலும்
வசந்தங்கள் பொழ

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா 10-Aug-2017 4:22 pm
வசந்தங்கள் வழியட்டும்... காதல் தோல்வி எனக்கில்லை...அருமை.. 10-Aug-2017 9:35 am
நீ வந்தா என்ன... போனா என்ன... எனக்கென்ன கவல-நீ கணக்குல வரல... கணக்கில் வேண்டாம்,கவலைகள் இல்லை.. உங்கள் வரிகளில் என் கணக்குகளையும் கழித்து விட்டேன் சகோ..வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள்.....!!! 10-Aug-2017 12:29 am
மிக்க நன்றி நண்பா 08-Aug-2017 1:42 pm
இராஜ்குமார் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 8:31 pm

கதிரவன் கைபட்ட காலை நேரத்தில்
கன்னட காவேரி கரையோரத்தில்
கடக்கும் கலியுக தூரத்தை
கண் திறந்து கனவு கண்டேன்
கனவில் ஆறும் வந்தது
கண்ணில் நீரும் வந்தது...
ஆம்
ஆறு அடி வளர்ந்து என்னபயன்
ஆறு அறிவு பெற்று என்னபயன்
ஆறின் குணம் அனு அளவும்
வரவில்லையே எனக்கு,.!
ஓய்வது சமுத்திரம் என்றாலும்
ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு
சாய்வது சமாதி என்றாலும்
சாகும் வரை சாதனை படைப்பது யாரு..?

மேலும்

மிக அருமை நட்பே வாழ்த்துக்கள் 26-Jul-2017 3:25 pm
மிக்க நன்றி சகோதரி 25-Jul-2017 1:37 pm
ஓய்வது சமுத்திரம் என்றாலும் ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு அழகிய வரிகள்... 24-Jul-2017 2:45 pm
மேலும்...
கருத்துகள்
மேலே