Raymond Pius - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Raymond Pius
இடம்:  Germany
பிறந்த தேதி :  30-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2013
பார்த்தவர்கள்:  790
புள்ளி:  498

என்னைப் பற்றி...

சென்னையில் பிறந்து, மேல் படிப்புக்காக தற்போது ஜெர்மனி வந்திருக்கிறேன்...
மாளாத காதல் தமிழ் மீது..
பொங்கு தமிழின் சங்க சத்தம்
நித்தம் கேட்டு வளர்ந்த பெருமை உண்டு எனக்கு

என் படைப்புகள்
Raymond Pius செய்திகள்
Raymond Pius - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2017 11:59 am

சொல்லி எழுவாய்

ஆதவனே

இனி உன் விடியல்

கடற்கரையிலிருந்தே

இனி

நீ உதிக்கும் திசை

நாங்கள் இருக்கும் திசையே


காளைகளை காக்க

கோழைகள் மறந்திட

வேலைகளை துச்சமாக்கி

அறமே மூச்சாகி

இளைய சோலைகள்

கடல் நீரில் 

பூத்துக் கிடப்பதை

வந்து பார் ஆதவனே


எங்கள் அடையாளத்தை

அழிக்க நினைத்தவன்

அடையாளமே இல்லாமல்

போகப் போவதை

நின்று பார் ஆதவனே


ஆர்பரிக்கும் கடலும்

அச்சம் கொண்டு

அடங்கி

படுத்துக் கிடப்பதை

பதுங்கி நின்று

பார் ஆதவனே


வீறு கொண்ட

இளைய சமூகத்தின்

இந்த சூடு போதும்

புரட்சிப் பூக்கள்

எங்கும் பூக்கும்

இனி நீ

ஒதுங்கிப் போ

மேலும்

Raymond Pius - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 5:42 pm

நினைவுகளின் கிளையில்தினம்
--ஏங்குகின்ற கிளி - இது
கனவுகளுக் காகவே
--தூங்குகின்ற கிளி

ஆசைகளின் முகடுகளில்
--அலைபாயுங் கிளி - இது
அச்சத்தின் பள்ளங்களில்
---நிலைசாயுங் கிளி

எல்லையற்ற பெருவெளியை
--ஏகிவரும் கிளி - பின்
இல்லாத இருளடையும்
--இனம்புரியா கிளி

பொல்லாமை கண்டுதினம்
--பதைக்கின்ற கிளி - இது
சொல்லாத கதைகள்பல
--சுமந்திருக்கும் கிளி

பாவங்களை ரகசியமாய்ப்
--பொத்தியழும் கிளி - இது
பலவண்ண முகம்காட்டி
--பரிகசிக்கும் கிளி

நெஞ்சத்தின் மேற்புறத்தில்
--துஞ்சுகின்ற கிளி - இது
நாளைய கவலைகளில்
--அஞ்சுகின்ற கிளி

நொடிக்கு நொடி நிதம்
--நிறம் மாறும் கிள

மேலும்

ரசிப்பிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 04-May-2016 3:39 pm
இது கனவுகளுக் காகவே --தூங்குகின்ற கிளி ... ரசித்தேன் .. நல்ல வரிகள் 04-May-2016 4:16 am
மனதை கிளியாக்கி சிறகடிக்கவைத்திருக்கிறார். வாசகனையும் சிறகடிக்கவைக்கிறது.நல்லதொரு பாடல் வாழ்த்துக்கள் 27-Mar-2016 10:34 am
நன்றி. நன்றிகள் அண்ணா. மகிழ்ச்சி 26-Mar-2016 6:28 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2016 12:29 pm

நெருப்பு புரவி
--------------------------


நெருப்புப் பழங்களை
தின்றுச் செரித்ததுப்போல
நாடி நரம்பு
தசை புத்தியெல்லாம்
குரோதம் பற்றி எரிந்தது
என் நம்பிக்கைச் சிற்பங்களை
துரோகிகள் வெட்டியெரித்த சமயத்தில்..!

உண்டு திளைத்த
கனியின் மீதங்களாய்
சிவந்துக் கிடந்தது
முன்னாள் காதலியின்
செந்நிற வெப்ப இதழ்கள்
ஞாபகச் சாத்தான் அறையில்
அவளை கொஞ்சகொஞ்சமாய்
பிணமாக்கி எரித்த ரணநாழிகையில்..!

இனியென் வாழ்க்கையில்
கதை திரைக்கதையெல்லாம்
எவரும் எழுதிடக்கூடாது
என் தலையெழுத்தை
நானே எழுதிட வேண்டும்
என் உயிரை
நானே இயக்கிட வேண்டும்
வரும் மரணத்திலும்
நான் என்னை எரித்து
நானே அதை சுவைத்திட வேண

மேலும்

அக்னிக் சிறகுகள் திக்கெட்டும் பறக்கட்டும் போற்றுதற்குரிய அனல் பறக்கும் கவிதை கற்பனை பொருத்தமான ஓவியம் பாராட்டுக்கள் 25-Nov-2016 4:20 pm
நன்றி இனிய தோழனே. 14-May-2016 8:37 pm
மிக்க நன்றி அன்பு அம்மா. 14-May-2016 8:37 pm
சரியான புரிதலுக்கு நன்றிஅன்பு கவிஞரே. 14-May-2016 8:36 pm
Raymond Pius - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2016 8:48 pm

அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை
தாழ்பாள் உடைத்து மீட்ட
பக்கத்து வீட்டு இளைஞன்..

பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில்
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..

குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின்
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..

காலை நடை சென்று
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில்
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..

கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில்
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில்
வயிற்றுவலியா

மேலும்

நல்ல சிந்தனை 04-May-2016 4:03 am
மிக்க நன்றி நண்பரே ! 02-May-2016 10:58 am
மிக்க நன்றி நண்பரே ! 02-May-2016 10:58 am
எப்படிங்க...வாழ்க்கையின் நகர்வில் நேரும் ஒவ்வொரு காட்சியும் ஏதோ ஒன்றை மனதில் உணர்த்திக் கொண்ட தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:43 pm
Raymond Pius - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2016 12:47 pm

வான் கதவுடைத்து
அலறிக் கொண்டு
தன்னை கொளுத்தியவனை தேடி
அங்கும் இங்கும்
அலைகிறது சூரியன்

பண்ணையார் கடந்த
பஞ்சமர்கள் வீதியாய்
அன்று
சூரியன் இருந்த கடற்கரை
எட்டிப் பார்க்க
யாரும் துணியவில்லை

வெயில் சுட்ட மணலில்
சூரியன் மிதித்து
பிரார்த்தனை செய்கிறார்கள்
சுண்டல் விற்கும் சிறார்கள்
வறுமை தீர அல்ல
சுண்டல் தீர

பொருத்திருந்த கடல்
ஆர்த்து எழுந்து
ஆதவனை விழுங்கியது
இராவணனை விழுங்கிய
இலங்கை போல்

விடுவிக்கப்பட்ட சீதை போல்
சிறு நண்டுகள்
கடல் குளித்தன

கரை இருந்த போதும்
கடல் மத்தமாகவே
இருந்தோம் என
கற்பு சொல்ல

ஒரு காலத்தில்
கடல் போல் வீட்டில் வாழ்ந்த
மீன் அவர்
குரு

மேலும்

எல்லாம் காலத்தால் விளைந்த கலகங்கள் தான் 02-Apr-2016 5:34 pm
Raymond Pius - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2016 7:15 pm

தூங்கா வானமே
தூரம் போகாதே
தாங்காமல் போகுமட்டும்
மழை தராமல் செல்லாதே

புல்லாங்குழலே
ஏதும் சொல்லாமல் மீளாதே
இல்லா அனலை அள்ளி
என் மேல் வீசாதே
என் வீதியில்
உன் கால் தடங்கள்
இல்லாமல் போகாதே

பூவே
தயக்கம் கொள்ளாதே
தேன்
சிந்தாமல் போகாதே
தினம் காய்ந்தாலும்
நிலவோ
கரையை தாண்டாதே

சட்டென
பனித்துளியும் ஏனோ
தீக் குளியல் கொள்ளுதே
குளிர் காற்றும் கூட
வெயிலாய் என்னை சுடுதே

வண்ணத் தென்றலே
நெருங்கி வா
உன் விழியால்
என் உயிரை நீ
அள்ளிச் செல்ல வா

நீ மௌனம் கலைத்தால்
என் பூமி வாழுமே
உன் மொழி
என்னை ஆளுமே
வான் வெளியில் பூக்களை
அது விதைத்துப் போகுமே

நேரம் நீளுதே
தாகம் தழும்ப

மேலும்

Raymond Pius - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2015 5:17 pm

இந்த குளம்
இந்துக்களின் குளமா
கேள்வியுடன் பூத்தது
அந்த குளத்தில் தாமரை

மேலும்

வித்தியாசம்.... யோசிக்க வைக்கும் படைப்பு.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 19-Aug-2015 12:15 am
Raymond Pius - Raymond Pius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2015 5:54 pm

மாதவி
என்ற பெயர்
இருப்பதாலேயே
மாதம் தவறாமல்
பதம் பார்க்க
வந்து போகிறார்கள்

தேய்த்துப் பார்த்தவர்கள்
வாங்க மறுக்கிறார்கள்
வெறும் அங்கம் தானே
தங்கம் இல்லையே
வீட்டுக்கு கொண்டு போக

பெயரை விட்டு
என்னை
பெயர்க்க முடியாவண்ணம்
என்னை
பெற்றவள்
பெற்று தந்து விட்டால்
விற்று
விட்டு
போய்விட்டால்

விட்டுப் போக மறுக்கும்
வந்தவன் எல்லாம்
கோவலன் தான்
ஆனால்
கண்ணகியை மட்டும்
காணோம்

ஒருமுறை
மீண்டும் எரிந்தால்
ஒவ்வொரு முறையும்
நான் எரியாமல்
மீண்டு விடுவேன்

என்னைப் பாட்டில்
வைப்பதாய்
பக்கத்து தெரு
இளங்கோ வந்தான்

இரவோடு இரவாக
அவனும்
படு

மேலும்

மிக்க நன்றி உங்கள் ரசனைக்கு .... நன்றி எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு ..திருத்தம் செய்து விட்டேன் 31-May-2015 5:45 am
அடி தூள்... பட்டாசாய் வெடித்து விட்டது வார்த்தைகள்... மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... பிறந்துவிடுவாலோ = பிறந்துவிடுவாளோ? 31-May-2015 4:52 am
Raymond Pius - Raymond Pius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2015 4:05 pm

வான் குளத்தில்
வறட்சி
வானம் தாண்டி
மண் குளத்தில்
குதித்தது நிலவு

குதித்த நிலவு
குடித்தது
குளித்தது
குளத்துக்குள் குடியேறியது

கொஞ்சத்தில்
சட்டென கொட்டியது
வான் கொட்டாரம் இருக்கும்
வட்டாரத்திலிருந்து
வாராது போல் வந்த
மா மழை

குள குடிசைக்குள்
நீட்டிப் படுத்த நிலவுக்கு
காட்சி அதிர்ச்சி

தண்ணீர் வறண்ட
வானில்
மழை திரண்டது எப்படி
மூண்டது சந்தேகம்

சந்தேகத்தின் பந்தியில்
ஆரவாரத்துடன்
ஓர் அறிவிப்பு

எல்லை தாண்டியவர்கள்
எல்லை திரும்பலாம்
இனி
இல்லை எனும்
நிலை இல்லை
எல்லாம் மீட்டுத் தரப்படும்
என
மீட்க முடியாத பேச்சை
காட்டியது
கொள்

மேலும்

மிக்க நன்றி 29-May-2015 12:25 pm
அருமை ! 29-May-2015 7:12 am
மிக்க நன்றி 29-May-2015 4:03 am
மிக்க நன்றி அண்ணா ..வெகு நாட்களுக்கு பின் கை குலுக்குகிறோம்..மகிழ்ச்சி ..எப்படி இருக்கீங்க? 29-May-2015 4:02 am
Raymond Pius அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Jun-2014 4:21 am

கவனம் தப்பினால்
தப்பி ஓடுவது யார்?
கைகோர்த்து
பயம் சேர்த்து நடக்கும்
காதலர்கள்

எரிந்து கொண்டே இருக்கும்
சூரியனுக்கு
எண்ணெய் ஊற்றும்
பணக்காரன் யார்?

யுகம் தோறும்
நைட் ஷிப்ட்
அலுத்துக் கொள்ளாதா நிலவு?

நின்று கொண்டே இருப்பதால்
மூட்டு வலி வராதா மரங்களுக்கு?
வலித்தால் யாரிடம் போகும்
எப்போது இவை தூங்கும்?
பசித்தால் யாரை கேட்கும்?

ஆயிரம் பேருக்கு போய் சொல்லி
கல்யாணம் நடத்தி
களைத்து விட்டதாம் அலைபேசி

காட்டில் பாட்டுக் கச்சேரி
குயிலுக்கு
குரலுக்கு மிளகும் வெண்ணையும்
ஒண்ணாக்கி தருவது யார்?

புத்தகம் முழுவதும்
குட்டி போட்டு வைத்திருக்கும்
மயில் இறகுக்

மேலும்

மிக்க நன்றி 04-Jul-2015 5:07 pm
நண்பரே!! உண்மையில் கவியில் பல படிப்பினைகள் சொல்லப்படுகிறது அனைத்தும் அருமை 04-Jul-2015 12:42 am
ஹா ஹா ஹா ....நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்களுக்கு....பகிர்ந்தமைக்கும் நன்றி அண்ணா ... 28-Jun-2014 6:31 pm
தம்பி .....செத்துட்டேன்..............செம அசத்தல்...........வாழ்த்துகள்.... 28-Jun-2014 11:21 am
Raymond Pius - Raymond Pius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2015 2:53 am

அற்பம்
அசாத்தியம்
ஆணவம்
ஆதிக்கம்
ஆவேசம்
ஆபத்து
அத்தனையும் அன்று அங்கு

வாள்களுக்கு வாய் முளைத்து
வெறியூறி
மனிதர்களை விழுங்கும்
வயிறு கொண்டு காத்திருந்தது

போரை தூர் வாரி
போர்க் களம் வாங்கினார்கள்
கொஞ்சத்தில்
மனிதர்கள் விதைக்கப்படுவார்கள்

அடித்து விழும் மழையாய்
வெடிக்கப் போகுது
யுத்த மேகம்

யுத்த ரதத்தில்
மரணம் ஊர்வலமாய்

தன் மரணத்தை
தானே திருடும்
தருணம் அன்று

துவக்கையின்
குண்டுக் குழந்தைகளுக்கு
அன்று மரண விளையாட்டு

உக்கிரத்தை காட்ட
உச்சகட்ட ஏற்பாடுகள்
காலாவிதியாகாத
காலனின் படையாய்
கருக்குளத்தில் தங்கி வராதவர்களின்
அருவருப்பான

மேலும்

மிக்க நன்றி சாரலனின் பாராட்டு சாரல்களுக்கு 18-Jun-2015 8:31 pm
இருவரும் யுத்தம் இல்லா பூமி நோக்கி பயணமானார்கள் -----BRAVO ! அருமை சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் ரேமான்ட் அன்புடன், கவின் சாரலன் 18-Jun-2015 8:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (172)

thiru

thiru

paramakudi
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (173)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி

இவரை பின்தொடர்பவர்கள் (173)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
Vanadhee

Vanadhee

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே