Razeen Profile - ரசீன் இக்பால் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  ரசீன் இக்பால்
இடம்:  குளச்சல் (நாகர்கோவில்)
பிறந்த தேதி :  11-Jun-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2015
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  45

என்னைப் பற்றி...

அண்டத்தின் அதிபதியாம் ஏக நாயனின் திருப்பெயரால்..

வண்டமிழை எந்தன் வாய்மொழியாக்கி அழகுபார்த்த வல்லவனின் புகழ் போற்றி!

முக்கடலும் மும்மதமும் முத்தமிடும்
பெட்டகமாம் கன்னியாகுமரி மாவட்டம்,
அரபிக்கடலின் அழகுசொட்டும் குளச்சலில்
இஸ்லாமியனாய்ப் பிறந்தவன்...

வான்மறையின் வாக்குகளை
மாநபியின் வார்த்தைகளை
வள்ளுவரின் பொற்குறளை
வாழ்வியலாய்ப் போற்றுபவன்..

நல்லததுவே நினைப்பவன்
பணிவோடு பழகுபவன்
எம்மைப்பற்றி மேலுமறிய
நட்பாகிப் பாருங்களேன்!

-ரசீன் இக்பால்

என் படைப்புகள்
Razeen செய்திகள்
Razeen - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 6:25 pm

இனியதாம் எந்தன் உலகம்
இயற்கையின் கைவசத்தில்...

காலை விழித்ததும் கண்ணெதிரே
கதிர்பாய்ச்சிடும் செங்கதிரோன்...

மனமயக்கும் மாலைவேளையதில் இரவை
இயக்கவரும் வெண்மதியாள்...

மண்ணினின்று விண்சென்று மாரியாக
மாறிவரும் கார்முகில்...

வெண்ணிலவை முற்றுகையிட்டு யாமும்
அழகுதானெனும் விண்மீன்கள்...

கண்குளிர கணம்கணம் கரைவந்து
கவர்ந்திழுக்கும் அலைதிரை..

புவிசுற்ற வழிசெய்து கம்பீரத்
தோற்றமளிக்கும் நெடுமலைகள்...

மக்களுக்கும் மாக்களுக்கும் பயனளிக்கும்
கிளைவழிக் காடுகள்...

வீழ்ந்தாலும் நல்லோசை எழுப்பி
களிப்பூட்டும் நீரருவிகள்...

மாசுபடுத்தும் மாந்தனுக்கு மாசுநீக்கி
சுவாசமளிக்கும் மரங

மேலும்

sankaran ayya அளித்த கேள்வியில் (public) J K Balaji மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2017 9:48 am

சிலர் மலர் ரசிப்பார்
சிலர் மலர் பறிப்பார்
சிலர் மலர் பிழிந்து அத்தர் ஆக்குவார்...

மலர் ரசித்தவன்
கவிஞன், கவிதையாக்கினேன் என்றான் !
மலர் பறித்தவள்
மங்கை ,கூந்தலில் சூடி அழகு செய்தேன் என்றாள் !
மலர் பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, மலருக்கு மறுபிறவி தந்தேன் என்றான் .

இதில் யார் உயர்ந்தவர் நீங்கள் சொல்லுங்கள் ?

-----கவின் சாரலன்

மேலும்

ஆம் மலரரைத் தீண்டாமல் ரசித்தவன் --கவிஞன் மிக்க நன்றி கவிப்பிரிய விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:33 pm
சபாஷ் அருமையான காரண விளக்கம் . ஆனால் கவிஞனை பொறுத்தமட்டில் இது எப்படி நியாயமாகும் ? கவிஞன் மலரை தொடவில்லை பறிக்கவில்லை தன் உபயோகத்திற்காக எடுத்துச் செல்லவில்லை . தன் கவித்துவ வரிகளில் மலரின் அழகே கவிஞன் உயர்த்திக் காட்டுகிறான் .மலர் மலர்ந்து சிரித்து வாடி உதிர்ந்து மடிந்து போகிறது. கவிஞனின் வரிகளில் காலம் கடந்து வாழ்கிறது. சொல்லப்போனால் கவிஞன்தான் கவித்துவத்தால் புனர் ஜென்மம் தருகிறான் Wordsworth ன் DAFFODILS படித்துப் பாருங்கள் . மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஜே கே . அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:31 pm
மலரை தீண்டாமல் ரசித்தவனே 13-Jan-2017 8:27 pm
எந்த ஒரு பொருளாயினும்,செயலாயினும் பிறர் தேவைக்கு பயன்படுத்தும் போது உயர்ந்தவர் ஆகிறார்... இங்கு மூவரும் தன் தேவைக்கு பயன்படுத்தியதால் யாரும் உயர்ந்தவர் இல்லை என்பதே என் கருத்து... மனமார்ந்த நன்றிகள்...! 13-Jan-2017 5:30 pm
Razeen - Prakash K Murugan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2016 11:29 am

கோவனம்
கட்டிய கோடீஸ்வரன்...!!!!!

குருவிகட்டும் கூட்டைபோல
குடிசைவீட்டுக்காரன்...!!!

மாட்டு
வண்டியின் சொந்தக்காரன்...!!!

மம்பட்டியின் தோழன்...!!!

மண்புழுவின் நண்பன்...!!!

வெட்டுகிளியின் எதிரி...!!!

எலியின் எமன்...!!!

யார் அவன்...???

படைகண்டு நடுங்கும்
பாம்பை தினம் சந்திப்பவன்...!!!

தன்
தாகத்திலும்
தளறாது
தண்ணீர்
பாய்ச்சு பவன்...!!!

தனக்கு
உணவில்லா விட்டாலும்
பயிர்க்கு உரமிடு பவன்...!!!

சிறுவிதையை
மரமாக்கு பவன்...!!!

அதற்குதன்
வியர்வையை
உரமாக்கு பவன்...!!!

வருடம் வருடம்
தவம் புரிபவன்
தன்
வரத்திற்கு அல்ல
மழை வரவி

மேலும்

அருமை சகோதரரே! 06-Jan-2017 10:51 pm
அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர் உண்மையை நண்பரே 02-Jan-2017 10:38 pm
உண்மையின் உணர்வு . 25-Dec-2016 12:02 pm
பசுமையை கொலை செய்யும் நவீனம் எனும் ஆயுதத்தை தெளிவு எனும் போராட்டம் தான் வெற்றி கொள்ளும் 24-Dec-2016 12:40 am
Razeen - AnbudanMiththiran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2016 7:50 pm

" நாத்து நட்டு பல நாட்களாகிவிட்டதே.
மேகம் மேகமாக திரண்டு வருகிறதே தவிர மழை மட்டும் பொழியவே மாட்டேங்கிறதே!. ", என்று விவசாயம் செய்யும் எனது அம்மாவின் கூக்குரல்
காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...

புராதனங்களிலும், இலக்கியங்களிலும் கற்றறிந்தேன் வருணன் வந்து மழை பொழிவானென...
அப்படியெனில், அந்த வருணன் மடிந்துவிட்டானோ? என்ற சந்தேகம் மனதில் தோன்ற, மாரிக்காக மாறி மாறி வானம் பார்க்கிறேன்...
மழையை இன்னும் காணவில்லையே...

முல்லைக்கு தேர் தந்த அந்த பாரி, மாரிக்கிணையானவன் என்று கற்றேனே...
அந்தப் பாரி மரிந்தது போல, மாரியும் மரித்துவிட்டதோ??...

பதில் தாராயோ கருமேகமே??...
மழை பொழியாயோ மழைமேகமே

மேலும்

அருமை... விவசாயம் செழிக்க வேண்டுவோம் மழைக்காக!! 06-Jan-2017 10:49 pm
Razeen - Razeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2017 8:52 pm

நேற்று மலர்ந்த மலர்
அதை இன்று காணவில்லை
அதுவே மனிதவாழ்வும்...

இன்று உதிர்ந்திட்ட மலரதுவே
நாளை மீண்டும் மலராது
அதுவே மனிதவாழ்வும்...

தலைநிமிர்த்தி நின்றிடும் சிலநொடிகள்
இதழ்சுருங்கி உதிர்ந்திடும் ஒருநொடியில்
அதுவே மனிதவாழ்வும்...

மணம்வீசி மனமயக்கும் மலர்வாசம்
உதிர்ந்தபின் அதுவோ மண்வசம்
அதுவே மனிதவாழ்வும்...

-ரசீன் இக்பால்

மேலும்

நன்றி தோழமையே! 05-Jan-2017 5:22 pm
உண்மைதான்..நேர்த்தியான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jan-2017 10:57 am
Razeen - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2017 8:52 pm

நேற்று மலர்ந்த மலர்
அதை இன்று காணவில்லை
அதுவே மனிதவாழ்வும்...

இன்று உதிர்ந்திட்ட மலரதுவே
நாளை மீண்டும் மலராது
அதுவே மனிதவாழ்வும்...

தலைநிமிர்த்தி நின்றிடும் சிலநொடிகள்
இதழ்சுருங்கி உதிர்ந்திடும் ஒருநொடியில்
அதுவே மனிதவாழ்வும்...

மணம்வீசி மனமயக்கும் மலர்வாசம்
உதிர்ந்தபின் அதுவோ மண்வசம்
அதுவே மனிதவாழ்வும்...

-ரசீன் இக்பால்

மேலும்

நன்றி தோழமையே! 05-Jan-2017 5:22 pm
உண்மைதான்..நேர்த்தியான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jan-2017 10:57 am
Razeen - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Jan-2017 2:55 pm

இன்றைய காலச்சூழலில் இன்ஜினியரிங் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதே! இனிவரும் காலங்களில் இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கலாம்? இன்ஜினியரிங் குறித்து யோசிக்கலாமா?

மேலும்

பணத்தின் ஆசை இந்த பொறியியல் படிப்பை கட்டாயம் படித்தால் பட்டினத்தில் வேலை என்று மனிதனின் பண மோகம் இப்பொது அதன் போகம் என்ன விளையும் ஒன்றும் இல்லா நிலையினை உருவாக்கியது 03-Jan-2017 10:51 pm
பொறியியல் ஓர் மாய வலை அது என்றும் மாறா வலை.. தரமான பொறியில் பட்டதாரிக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும். தன்னை அந்த தரத்துக்கு உயர்த்திக்கொள்ள முடியும் .அத்தகுதி தமக்கு இயல்பிலே உள்ளது என யார் உண்மையில் உணர்கிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும். அதை உணர வைக்கத்தான் நுழைவுத்தேர்வு என்று ஒன்று இருந்தது... அரசியல் ஆதாயத்திற்காக அதை தடை செய்து பணம் பாய்கிறார்கள் பாதகர்கள்.. இவர்கள் போதைக்கு மாணவர்கள் ஊருகாய்..? எதிர் காலத்தில் இளைஞர்கள் தங்கள் திறமைகளை கொண்டே பணத்தை ஈட்ட முயல வேண்டும். படிப்பை முன்னிருத்தி அல்ல.. கல்வி அதுவும் இக்காலத்தில் கல்வி.. நவீனமான..நாகரீகமற்ற இந்த உலகத்தில் கூச்சம் பயம் இவைகளை எப்படி கடந்து செல்வது என்பதனை தான் கற்றுத் தருகிறது.பணத்தை சம்பாதிக்க தனிமனிதனின் உள்வளதிறமையே உதவும். ஆனால் ஓர் தனிமனிதனாக எப்படி நாகரீகமாக வாழ வேண்டும் என்று நம் முன்னோர்களின் வாழ்வே பாடமாக அமையும். 02-Jan-2017 11:04 pm
Razeen - Razeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2016 3:51 pm

அரபிக்கடலின் அழகை ரசித்தபடி
அமைதி காத்தவனாய் அமர்ந்திருந்தேன்
அன்றொரு மாலை வேளையில்...


அன்னநடையிட்டு வந்தமர்ந்தாள் பெண்ணொருத்தி
வண்ணப்பட்டுடுத்து வந்தென் சின்ன
மனத்தை வென்றிட்டாள் அப்பேரழகி...


கண்ணைக் கவர்ந் திழுத்திடும்
அவள் பேரழகை வர்ணிக்க
வார்த்தைகள் கோடியாயினும் வசப்படாதே..!


மாந்தளிர் மேனியில் ஆபரணம் பூட்டி
அருவிக் கூந்தலதில் மல்லிப்பூ சூட்டி
கருவிழியோரம் கண்மையும் தீட்டி...


முழுமதி முகமதில் புன்னகைக் காட்டி
முன்வந் தமர்ந்தாள் இளம் சீமாட்டி
முடிவெடுத்திட்டேன் அவள்தான் என் மணவாட்டி..!


கடற்கரை மணலில் அவள் பாதம்
அதுவோ புனிதத் திருக்கோலம்
மணம் வீசிடுமே அம்ம

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே! 30-Dec-2016 2:39 pm
மிக்க நன்றி தோழரே! 30-Dec-2016 2:38 pm
அருமை நண்பரே .அழகான வர்ணனை வாழ்த்துக்கள் 30-Dec-2016 10:13 am
அழகான தோரணம் காட்டும் பூஞ்சிலை பெண் 30-Dec-2016 9:25 am
Razeen - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2016 3:51 pm

அரபிக்கடலின் அழகை ரசித்தபடி
அமைதி காத்தவனாய் அமர்ந்திருந்தேன்
அன்றொரு மாலை வேளையில்...


அன்னநடையிட்டு வந்தமர்ந்தாள் பெண்ணொருத்தி
வண்ணப்பட்டுடுத்து வந்தென் சின்ன
மனத்தை வென்றிட்டாள் அப்பேரழகி...


கண்ணைக் கவர்ந் திழுத்திடும்
அவள் பேரழகை வர்ணிக்க
வார்த்தைகள் கோடியாயினும் வசப்படாதே..!


மாந்தளிர் மேனியில் ஆபரணம் பூட்டி
அருவிக் கூந்தலதில் மல்லிப்பூ சூட்டி
கருவிழியோரம் கண்மையும் தீட்டி...


முழுமதி முகமதில் புன்னகைக் காட்டி
முன்வந் தமர்ந்தாள் இளம் சீமாட்டி
முடிவெடுத்திட்டேன் அவள்தான் என் மணவாட்டி..!


கடற்கரை மணலில் அவள் பாதம்
அதுவோ புனிதத் திருக்கோலம்
மணம் வீசிடுமே அம்ம

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே! 30-Dec-2016 2:39 pm
மிக்க நன்றி தோழரே! 30-Dec-2016 2:38 pm
அருமை நண்பரே .அழகான வர்ணனை வாழ்த்துக்கள் 30-Dec-2016 10:13 am
அழகான தோரணம் காட்டும் பூஞ்சிலை பெண் 30-Dec-2016 9:25 am
Razeen - Soundarya Duraisamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2016 2:58 pm

மரணதண்டனை தீர்ப்பளித்தேன் !!!
அக்குற்றத்திற்கு குற்றமாய்
என் இறுதி நாளும் இந்நாளோ??
- இப்படிக்கு நுனியிழந்த பேனா!!!

மேலும்

Razeen - shenbaga jagtheesan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2016 7:03 am

பறவை வந்தமர்ந்து சென்ற
பாசம் போகவில்லை-
கையசைக்கும் மரக்கிளை...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 23-Dec-2016 7:25 pm
தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 23-Dec-2016 7:25 pm
அருமை ஐயா.. 22-Dec-2016 9:44 pm
மன்னிக்கவும் கடலலை தவறாக கடலை என்று தட்டச்சு ஆகி விட்டது 22-Dec-2016 11:36 am
Razeen - rsrajan123 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2016 9:55 am

உலகின் ஜனத்தொகை...
இரண்டாம் இடத்தில்
இந்தியா..
இளைஞர்களின்
எண்ணிக்கையிலோ
முதலிடத்தில்...

ஆட்சிகளின் மாற்றத்தில்
அவரவரிடம் இருக்கிற
பணத்தை கையாளும்
விஷயத்திலும்
வரிகள் விதிப்பதிலும்
மட்டுமே எப்போதும்
வருகிறது மாற்றம்...

தனி நபர் வருமானம்
உயர வரவில்லை
இன்னும் மாற்றம்...

வேலை இல்லாதவனுக்கு
வேலை கிடைத்திட
உயர்வாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

சிறந்த கல்வியில்
தேர்ந்த மாணவர்கள்
வெளிநாட்டு நிறுவனங்களில்
பணியில் சேர்வதில்
பாங்காய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

விவசாய விளைநிலங்களில்
விளைபொருள் உற்பத்தியில்
உயர்வாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

தொழில்கள் புதிதாய்

மேலும்

விடிய வேண்டிய பொழுதுகள் இன்னும் இருளாகவே இருக்கிறது 20-Dec-2016 10:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

sabivst

sabivst

பூவிருந்தவல்லி , சென்னை .
aravind 628

aravind 628

திருமுட்டம்
gangaimani

gangaimani

மதுரை
Nivedha S

Nivedha S

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (27)

Eluthu

Eluthu

கோயம்புத்தூர்
சகி

சகி

தமிழ்நாடு
gangaimani

gangaimani

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (25)

Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
JAHAN RT

JAHAN RT

மதுரை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே