ரேவதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ரேவதி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Oct-2016
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  10

என் படைப்புகள்
ரேவதி செய்திகள்
ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 7:05 pm

கதிரவனின் முதல் கதிர் அவன் ஊடுருவிய மழை துளி நானொ

என் உலகில் வானமே இல்லை எல்லாம் வானவில் தான்

ஏழு வண்ணங்களையும் அறிமுகம் செய்தாய் நம் நட்பு தொடங்கிய ஏழு வாரத்தில்

எட்டாவது வாரம் விடைபெற்று நான் செல்ல நாம் கை குலுக்கிய அக்கணமே வானவில்லும் வண்ணங்களும் உன் கையோடு போனதே

இங்கோ என் வான மகள் கண் மை பூசி கண்மூடி அழுகிறாள்

இம்முறை ஏழு ஜென்மங்களிலும் உன் நட்பு தொடர இறைவனை வேண்டி
கடலில் கலப்பேன்... ஆவியாகி மேகம் சேர்ந்து மழையாய் நான் பொழிகையில்

மீண்டும் என் மேல் நீ பட வேண்டும் ..முதல் கதிரே...!!!

மேலும்

ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 4:10 pm

எழுதிட முடியுமோ நம் நட்பை ஒரிரு வரிகளில்

நம் உரையாடலை நினைத்து பார்க்கையில் என் இதழோரம் பூத்த புன்னகை சொன்ன நம் நட்பை

பிரிவென்று சொல்லும் முன்னே எட்டிப் பார்த்த என் கண்ணீர் சொன்ன நம் நட்பை

ஏனோ என் பேனாவிற்கு எழுத தெரியவில்லை

மௌனத்தில் சொன்னாலும் உரக்க கேட்கும் நம் நட்பை எழுதிட முடியுமோ ஓரிரு வரிகளில்!!

மேலும்

ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2017 10:30 pm

உன் நட்பெனும் சூரியனின் முதல் கதிர் பட்டு மலர்ந்த தாமரை நானொ!

நீ அளித்த கடகத்தை என் கைகளில் மட்டுமல்ல நம் இருவரின் நட்பையும் இணைத்தே கட்டினேன்

என் வாழ்வை நூல் என்று கொண்டால் அதில்

பிரத்தியேக நட்பென்ற தலைப்பில் சேர்ந்த புதிய பக்கங்கள் நீ,
மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.

மேலும்

ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2017 12:08 am

கடவுள் படைத்த காயத்ரி மந்திரம் அவளோ

வெளிப்படையான பேச்சிலும் வெகுளிச் சிரிப்பிலும் மந்திரம் வீசுவாள்

நட்பையும் மயங்க வைத்த குறும்புக்காரி அவள்

மயங்கி தான் விழுகிறேன் இவள் நட்பின் மந்திரத்தில்

மேலும்

ரேவதி - ரேவதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2016 10:19 pm

எழில் தேசத்தில் அவள் ராஜ்ஜியம் தான்

மூன்று எழுத்தில் சுருங்கிய அழகிற்கு விரிவாக்கம் தந்தவள்

அவள் அழகுக்கு உவமை தேட வைத்தவள்
அழகுக்கே உவமையாய் வந்தவள்

அழகியல் பாடத்தை அகிலத்திற்கு கற்பித்தவள்

அவள் அழகை வர்ணிக்கவே மொழிகள் யாவும் பிறந்தனவோ!

அழகயே மயக்கிய அழகின் அரசியே,
என் கவிதையின் அர்த்தத்தில் உன்னைக் காண்கிறேன்
என் கவிதையின் அர்த்தத்தை உன்னில் காண்கிறேன்.!

மேலும்

அருமை 16-Nov-2016 2:41 pm
அழகான நன்றி 09-Oct-2016 2:44 pm
அழகோ அழகு 09-Oct-2016 12:57 pm
ரேவதி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

உலகிலேயே அழகான பெண் உங்கள் வீட்டின் அருகில் இருந்தால்

அவள் அழகைப் பற்றி கவிதை சமர்ப்பிக்கவும்
காதல் கவிதையாகவும் இருக்கலாம்
அழகைப் பற்றி வர்ணனையாகும் இருக்கலாம்

மேலும்

நன்றி 23-Dec-2016 9:30 pm
முதல் பரிசு ௨: விளங்காத புதிரா நீ வெய்யோனின் கதிரா எழுதியவர் : ஷர்மிளா நாள் : 8-Oct-16, 11:06 am தேன்மொழியோ கனிமொழியோ உன் பெயர் தீம் சுவையோ தெள்ளமுதோ உன் மொழி ! மெல்லிசை கண்டு மெலிந்த நெஞ்சத்தை வன்சொல் கொண்டு வதைப்பாயோ வான் தொடும் அழகில் மாய்ந்தவர் கணக்கில் என்னையும் இன்று சேர்ப்பாயோ ! ராமபாணமாய் (வில்) வளையும் உன் புருவம் - அதில் சோமபானமாய் சொக்கும் என் உருவம்! கார்குழலும் கருவிழியும் இருட்டுக்குச் சொந்தமடி -உன் பார்வை மட்டும் எனை வெட்டும் மின்னலடி! நிமிர்ந்த நடையும் நேர்த்தியான பார்வையும் பாரதியில் பாதியா நீ! மானத்தின் புதல்வியே - நீ நாணத்தில் மட்டும் ஊனமோ! வானத்து தேவதையோ - நீ தரையிறங்கிய வான்மதியோ! மண்ணிலுள்ள அழகையெல்லாம் வென்றுவிட்ட மன்னவற்கும் விளங்காத புதிரா - நீ வெய்யோனின் கதிரா?! 16-Nov-2016 2:48 pm
அழகின் தலைப்பு அவள் அழகின் தலைப்பு அவள் எழில் தேசத்தில் அவள் ராஜ்ஜியம் தான் மூன்று எழுத்தில் சுருங்கிய அழகிற்கு விரிவாக்கம் தந்தவள் அவள் அழகுக்கு உவமை தேட வைத்தவள் அழகுக்கே உவமையாய் வந்தவள் அழகியல் பாடத்தை அகிலத்திற்கு கற்பித்தவள் அவள் அழகை வர்ணிக்கவே மொழிகள் யாவும் பிறந்தனவோ! அழகயே மயக்கிய அழகின் அரசியே, என் கவிதையின் அர்த்தத்தில் உன்னைக் காண்கிறேன் என் கவிதையின் அர்த்தத்தை உன்னில் காண்கிறேன்.! 16-Nov-2016 2:46 pm
முதல் பரிசு பெட்ரா கவிதை : அழகின் தலைப்பு அவள் எழுதியவர் : ரேவதி நாள் : 8-Oct-16, 10:19 pm 16-Nov-2016 2:45 pm
ரேவதி - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2016 10:19 pm

எழில் தேசத்தில் அவள் ராஜ்ஜியம் தான்

மூன்று எழுத்தில் சுருங்கிய அழகிற்கு விரிவாக்கம் தந்தவள்

அவள் அழகுக்கு உவமை தேட வைத்தவள்
அழகுக்கே உவமையாய் வந்தவள்

அழகியல் பாடத்தை அகிலத்திற்கு கற்பித்தவள்

அவள் அழகை வர்ணிக்கவே மொழிகள் யாவும் பிறந்தனவோ!

அழகயே மயக்கிய அழகின் அரசியே,
என் கவிதையின் அர்த்தத்தில் உன்னைக் காண்கிறேன்
என் கவிதையின் அர்த்தத்தை உன்னில் காண்கிறேன்.!

மேலும்

அருமை 16-Nov-2016 2:41 pm
அழகான நன்றி 09-Oct-2016 2:44 pm
அழகோ அழகு 09-Oct-2016 12:57 pm
மேலும்...
கருத்துகள்
மேலே