ராஜா ஐயர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜா ஐயர்
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Oct-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  5

என்னைப் பற்றி...

எண்ணங்கள் நல்லா இருக்கும் வரை வாழ்வேன்!

என் படைப்புகள்
ராஜா ஐயர் செய்திகள்
ராஜா ஐயர் - எண்ணம் (public)
20-Jun-2017 10:33 am

ஏலே பித்துக்குளி - ஜனாதிபதி!

'ஏன்டா, இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு, தலீத் சமூகத்திலேந்து அறிவிக்கப்பட்ட' கோவிந்து 'நல்ல choice தானே?'

"நமது நாட்டை உடைத்து சுவிஸ் பாங்கில் கும்மாளம் போடும் சுயநலவாதிகட்க்குஅவரை பிடிக்காது!

தலீத்தாக இருந்தாலும்
ஒதுக்கப்பட்ட தலீத்தாகிவிடுவார்!
அப்பேர்ப்பட்ட அப்துல்கலாமையே
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக்காமல், ஒரு கொள்ளைக்காரி
ப்ரதீபா படேலை ஜனாதிபதியாக்கினார்கள்!

நாம் அறிவை
அடகுவைத்து விட்டோம்!
உண்மையை
மறந்து சுயநலத்திற்காகவே
வாழ்நாள் எல்லாம்
வாழ்கின்றோம்!
கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது!
மிருகங்கள்
மனித வடிவிலே!

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்உலகம் உன்னிடம் மயங்கும் - நிலைஉயரும்போது பணிவு கொண்டால்உயிர்கள் உன்னை வணங்கும்உண்மை என்பது அன்பாகும்- பெரும்பணிவு என்பது பண்பாகும் -

இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)
ஆசை, கோபம், களவு கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம்அன்பு, நன்றி, கருணை கொண்டவன்மனித வடிவில் தெய்வம் - இதில்மிருகம் என்பது கள்ளமனம் - உயர்தெய்வம் என்பது பிள்ளைமனம் - இந்தஆறு கட்டளை அறிந்த மனதுஆண்டவன் வாழும் வெள்ளைமனம்! (ஆறு)"

பாவம் கக்கன் என்றொருவர் இருந்தார் ! 

மாதமொருமுறை என் தந்தையை பார்க்க மேலூரிலிருந்து பஸ்ஸில் வருவார்! நான் ஜட்க்காவில் பஸ்ஸ்டாண்டில் சென்று மதுரை பஸ்ஸில் ஏற்றிவிடுவேன்! 

உத்தமர்களை உதரித்தள்ளிய 

நாடு இது! 
புரிஞ்சதோடா பித்துக்குளி?"

மேலும்

ராஜா ஐயர் - எண்ணம் (public)
06-Jun-2017 12:07 pm

'ஏன்டா அழறே? '

"பாசமலர் பார்த்தேன்?
கண்ணீர் தானாக
வந்துவிட்டது!
ஆரூர்தாஸின்
தமிழும்
சிவாஜி சாவித்திரியின்
நடிப்பும் எவனையும்
உருக்கிவிடும்!
ஆரூர்தாஸ் ஓர் யோகி!
20 வயதிலேயே
தேவர் மூலம்
அறிமுகமாகி
அடக்கமாக உயர்ந்து
சாவித்திரி பீம்சிங், ஜெமினி மூலம்சிவாஜியைசந்திக்கிறார் 1959ல்!

சிவாஜி ஜெமினியை
பார்த்து
'என்னடா
சின்னப்பையனை கூட்டிண்டு வந்து
கதாசிரியர்ங்கறே? '
என்றார்!
உணர்ச்சிவசப்பட்ட
ஆரூர்தாஸ்

"மடல் பெரிது தாழைமகிழ் இனிது கந்தம்

உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்! "
என்றார்!
திகைத்துப்போன
சிவாஜி
' பாசமலருக்கு '
கதாசிரியராக்குகிறார்!
அப்பறமென்ன? 
சிவாஜி பீம்சிங் ஆரூர்தாஸ்
கொடிகட்டி பறந்த
நாட்களை
மறக்க முடியாத
நாட்கள்!
MGR க்கும்
பல கதைகள்
எழுதி, ஒரு vice ம் இல்லாததால்

'சந்யாசி'என்றபட்டத்தையும்பெற்றார்! 

ஓர் அற்புதமான
இந்த ஜேசுதாஸ்
திருவாரூரை
அடை மொழியாகக்கொண்ட ஆரூர்தாஸ்?
புரிஞ்சதோடா பித்துக்குளி?"

 

மேலும்

ராஜா ஐயர் - எண்ணம் (public)
20-May-2017 9:01 am

ஏலே பித்துக்குளி!


'ஏன்டா கொஞ்சநாளா உளரலை காணோம்? '


"மதுரை நண்பர்கள்
பொற்றாமரைலே என்னுடைய
' குரல்களை'
போடனுமாம்!
அதனாலே
130 திருக்குரல்
எழுதிண்டிருக்கேன்! "
' அடி சக்கை?
எங்கே இரண்டு
குரலை எடுத்து விடு
கேட்கலாம்! '


"எப்பதவி வகித்தாலும் சாவில்லை :இப்பிறப்பில்,
கொடநாட்டு டிரைவர் தவிர்த்து! '
' காலத்தால் பெற்ற தங்கம், மானமின்றி,
கூவத்தூர்
முதல் கூடவே வரும்! `
'கொலை எல்லாம் கொலையல்ல:அப்பல்லோவில்,
தில்லையின் அடிச்சுவடில்லா தாண்டவம்! `
எப்படிடா பித்துக்குளி? "


'பாத்துப்போ?
அடுத்தது
உன்பேர்தான்
தில்லையின்
டயரியிலே? '


மேலும்

ராஜா ஐயர் - எண்ணம் (public)
13-Apr-2017 8:54 pm

ஏலே பித்துக்குளி - புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
'ஏன்டா, இந்த வருஷ ஏவிளம்பி பஞ்சாங்கம் என்ன சொல்றது? '
"நான் சொலறதை விட 
நம்ம 
மாதம்பட்டி 
மார்த்தாண்ட 
நம்பூதிரி என்ன 
சொல்றார்ங்கிறதை 
கேட்டுக்கோ :
' வரும் 14.04.2017  வெள்ளிக்கிழமை  முன்னிரவு 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் "ஏவிளம்பி" வருடம் பிறக்கின்றது.

விஷு புண்ணிய காலம் (மருத்து நீா் வைத்து நீராடும் நேரம்) 13.04.2017 இரவு 8.48 முதல் 14.04.2017 மாலை 4.48 வரை.
(இது உனக்கு இல்லை?) 
அன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது.
(கோபாலபுரம் கவனிக்க?) 
விஷேச நேரம் 
*14.04.2017 (வெள்ளி)
 நள்ளிரவு 12.09 - 12.31
*15.04.2017 (சனி)
 பகல் 10.38 - 11.38
*17.04.2017 (திங்கள்) 
காலை 9.52 - 11.51 வரை.... 
(தண்ணீரை தவிர்) 
இவ்வருட  ஆதாய பலன்
ராசி.                வரவு.     செலவு.          பலன்
மேஷம்.         மோஷம்
ரிஷபம்.            சுகம்
மிதுனம். மிக்கவனம்! 
கடகம்.         செமசுகம்
சிங்கம்.       பலலாபம்
கன்னி.  கருத்தோடு கன்னியம்? 
துலாம்.  எங்கும் சுகம்
விருச்சிகம்.சிரிப்பகம் 
தனுசு.   ஓட்டைகை ? 
மகரம்.         சிகரம்! 
கும்பம்.        ரம்பம்! 
மீனம்.          நழுவும்! 
என்னடா 
முழிக்கறே 
பித்துக்குளி? 
மஞ்ச துண்ட 
போட்டுண்டு 
ஒரு வருடமாவது 
13லிருந்து 14வரை,
தண்ணி அடிக்காம 
இருடா, பித்துக்குளி?"

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே