Samuel Sathish - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Samuel Sathish
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jun-2017
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  10

என் படைப்புகள்
Samuel Sathish செய்திகள்
Samuel Sathish - எண்ணம் (public)
20-May-2018 10:56 am

*ஒரு கவிஞனிடம் பலரின் கேள்வியிது*

ஒரு கவிஞனிடம்
பலரின் கேள்வியிது..
அகரம் 
தொடங்கி தானே
படித்திருப்பான்
அவனும்... 
இருந்தும்
கவிதை எப்படி பிறக்கிறது
அவனுக்குள்..

எழுத்துக்கள்
மொய்க்கிறதோ
சிந்தனையில் இல்லை
சிந்தனை தான் 
மோப்பம் பிடிக்கிறதோ 
கவிதைகளை

பேருந்து பயணமா
இரவின் நிசப்தமா
எவை
விழிகளை
விழிக்க வைக்கிறது 
கவிதை எழுதுவதற்கு.. 

பறவைகளின் சப்தம் 
இசையாகுமா
இரைச்சலாகுமா
கவிஞனின்
செவிகளுக்கு... 

பேனாக்கள் 
மதி மயங்கி 
அடிமையாகி விடுமா 
கவிஞனின் விரல்களுக்கு.. 
தெரியவில்லை! 
கவிதை எப்படி பிறக்கிறது
அவனுக்குள்..
ஒரு கவிஞனிடம்
பலரின் கேள்வியிது! 

*நா.சதீஷ் குமார்*

மேலும்

Samuel Sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 4:46 pm

*கவிஞன்*

கவிஞனின் புத்தகமெங்கும்
கிறுக்கல்கள்! மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
நிறைந்த வாழ்க்கை!

வெள்ளை காகிதம்
ஒன்றையும்
விடமாட்டான் அதிலும்
கிறுக்கி விடுவான்
கிறுக்கன் கவிதைகளை..

எழுதுகோல்
இருந்தால் போதும்
போர்வீரன்
என்ற எண்ணம்!
வேட்டையாடி விடுவான்
எழுத்துக்களை..

இவன் எழுதிட ஏங்குகிறதா கவிதைகள் இல்லை
கவிதைகள் வர
காத்திருக்கிறானா
இவன் என்றுமே
புரியாத புதிர்தான்
காகிதத்திற்கும் பேனாவிற்கும்!

நேரம் இருந்தாலே போதும்
அதனை லாபமாக்கி
சரித்திரம் படைக்கும்
முதலீட்டாளன் இவன்
கவிஞன்!
*நா.சதீஷ் குமார்*
https://youtu.be/ZhgxEh550Mk
(Subscribe & Share)

மேலும்

Samuel Sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2017 3:28 pm

எது கவிதை?
தமிழ் பற்றால்
ஒன்றிணைத்த
எழுத்துக்களின்
தொகுப்பா..

எது கவிதை?
கடவுளின் படைப்பை
கண்டு
எழுந்திடும்
உள்ளத்தின் நெகிழ்ச்சியா..

எது கவிதை?
ஆற்றிடும் கடமைகளின்
அணிவகுப்பா..

எது கவிதை?
என்னுள் புதைந்து
கிடந்த திறமையின்
வெளிப்பாடா..

எது கவிதை?
இதயத்தை
ஆக்கிரமைத்த
காதலின் பரிசா..

செதுக்கிய சிற்பம்
பேசிடாது
என தெரிந்தும்
எப்போது பேசும்
என காத்திருக்கும்
சிற்பியாய்
எது கவிதை
என தெரியாமல்
எழுதுகிறேன்
ஓர் அழகிய கவிதையை...!

நா.சதீஷ் குமார்

மேலும்

உள்ளத்தில் விளையும் சுவாசம் போல எண்ணத்தில் பிறக்கும் குழந்தை கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 12:32 pm
Samuel Sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 6:10 pm

அனிதாவின் மூச்சுக்காற்று

"என்னவாக போகிறாய்"
அன்று ஆசிரியர்
கேட்ட கேள்விக்கு
குடும்ப சூழ்நிலை கூட
அறியா பருவமதில்
கூறிய பதிலாக
இருக்கலாம்
'மருத்துவராக போகிறேன்'
என்று..

ஏழ்மை என்னும்
இருளில் பிறந்த
இளவரசி அவள்!
பயிலும் கல்வி
ஒளிவீசி
இருள் நீக்கும்
என்ற நம்பிக்கையில்
எதிர்ப்பார்ப்புடன்
நாட்களை கடத்திருக்கலாம்
அவளின் பெற்றோர்கள்..!

தங்களை விட
நல்ல மதிப்பெண் பெற்ற
அவள்! கனவை
நனவாக்கிவிட்டால்
மருத்துவரின் தோழி
என்னும்
பெருமைக்குரியவர்களாகலாம்
என்று நினைத்திருக்கலாம்
அவளின் தோழிகள்..!

நாளை
மருத்துவராகி விட்டால்
தன்னுடைய சமுதாயத்திற்கு
இலவ

மேலும்

கவி ரசிகை அளித்த படைப்பில் (public) kirthi sree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2017 8:29 pm

நீ அழகானவள் தான்
ஆனால்
அதை
காட்டி காட்டி
என்னையும்
கவிஞன் ஆக்காதே

மேலும்

நன்றி நண்பா 19-Jul-2017 8:24 pm
அழகிய வரிகள். வாழ்த்துக்கள் தோழி 19-Jul-2017 12:49 pm
நன்றி நண்பர்களே...... 10-Apr-2017 7:29 pm
சூப்பர் குறுங் கவிதை 10-Apr-2017 12:33 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jul-2017 12:42 pm

ஒரு பார்வையை வீசி விட்டு போ !
அல்லது
ஒரு புன்னகையை வீசிவிட்டு போ !
புன்னகையோடு சேர்ந்த பார்வை ஆயினும்
சரிதான் !

எதுவும் இன்றி என்னை எளிதாக
கடந்து போய் விடாதே !

நான் தூக்கம் தொலைத்த
இரவுகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகும் !

மேலும்

ஏதோ ஒன்றை ஈர்க்கிறது பார்வையும் உங்களின் படைப்பும்.. அருமை தோழரே 19-Jul-2017 12:40 pm
நன்றி நன்றி நன்றி --நண்பரே 19-Jul-2017 9:45 am
சத்தியமான உண்மை 18-Jul-2017 8:52 pm
Samuel Sathish அளித்த படைப்பில் (public) kirthi sree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2017 10:41 am

பாரதியின் கவிதை எங்கிருந்து வந்தது

இரவில்
நிலவின்
ஒளியின் நிழலில்
வீசிடும்
தென்றல் காற்றில்
உறங்கிட மனம்
மறுத்து
கேட்ட கேள்வி
"பாரதியின் கவிதை
எங்கிருந்து வந்தததென்று..."

உறவென்று
இவ்வுலகில்
ஏதும்
இல்லாவிடினும்
நீ
அனாதையில்லை
என்று
உரிமை கொண்டாடும்
கவிதைகள் கவிஞரின்
விலைமதிப்பில்லா
சொத்துகள்!

கோபம், மகிழ்ச்சி,
காதல், காயம்
ஏக்கம் என
உணர்வுகளை
புரிந்து,
வெள்ளி கொலுசின்
மணிகளை போல
எழுத்துக்களால்
கோர்க்கப்பட்டு
வெளிக்காட்டிடும்
அழகிய கோலம்
இந்த கவிதைகள்!

சிற்பியின் செதுக்கிய
சிற்பங்கள்
பேசிடாது.
ஓவியரின்
வண்ண ஓவியங்கள்
பேசிட

மேலும்

அருமை நண்பா சூப்பர் 23-Jul-2017 7:20 pm
தேடலே வாழ்வை இனிக்க செய்கிறது... அருமை... 23-Jul-2017 5:04 pm
நன்றி தோழரே 19-Jul-2017 11:35 pm
அருமையான சிந்தனை... 19-Jul-2017 1:21 pm
Samuel Sathish - Samuel Sathish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2017 10:41 am

பாரதியின் கவிதை எங்கிருந்து வந்தது

இரவில்
நிலவின்
ஒளியின் நிழலில்
வீசிடும்
தென்றல் காற்றில்
உறங்கிட மனம்
மறுத்து
கேட்ட கேள்வி
"பாரதியின் கவிதை
எங்கிருந்து வந்தததென்று..."

உறவென்று
இவ்வுலகில்
ஏதும்
இல்லாவிடினும்
நீ
அனாதையில்லை
என்று
உரிமை கொண்டாடும்
கவிதைகள் கவிஞரின்
விலைமதிப்பில்லா
சொத்துகள்!

கோபம், மகிழ்ச்சி,
காதல், காயம்
ஏக்கம் என
உணர்வுகளை
புரிந்து,
வெள்ளி கொலுசின்
மணிகளை போல
எழுத்துக்களால்
கோர்க்கப்பட்டு
வெளிக்காட்டிடும்
அழகிய கோலம்
இந்த கவிதைகள்!

சிற்பியின் செதுக்கிய
சிற்பங்கள்
பேசிடாது.
ஓவியரின்
வண்ண ஓவியங்கள்
பேசிட

மேலும்

அருமை நண்பா சூப்பர் 23-Jul-2017 7:20 pm
தேடலே வாழ்வை இனிக்க செய்கிறது... அருமை... 23-Jul-2017 5:04 pm
நன்றி தோழரே 19-Jul-2017 11:35 pm
அருமையான சிந்தனை... 19-Jul-2017 1:21 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே