கௌதமன் நீல்ராஜ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கௌதமன் நீல்ராஜ்
இடம்:  பெரம்பலூர்
பிறந்த தேதி :  01-Apr-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2014
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  258

என்னைப் பற்றி...

எந்தவொரு கடவுளுக்கும் படிஅமர்ந்து மடியேந்தி வணங்குபவன் அல்ல... எந்தவொரு அரசியல்வாதிக்கும் சுயம்மறந்து அறம்துறந்து கொடிபிடிப்பவன் அல்ல... எந்தவொரு நடிகனுக்கும் கைதட்டி விசிலடித்து தலைவன் என போற்றுபவன் அல்ல... " ஓரிடம்நில்லா ஓடைநீரில் ஓய்வின்றிப் பயணிக்கும் ஒற்றைத்துடுப்பில்லா ஓடம் நான்"

என் படைப்புகள்
கௌதமன் நீல்ராஜ் செய்திகள்
கௌதமன் நீல்ராஜ் - கௌதமன் நீல்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2017 8:02 pm

சமீபகாலமாய் சங்கேதகுறியீடு சமூகத்தில் சட்டமாக்கப்பட
சககிரஹங்களுக்கும் சவாலாகிப்போனதாய்
சபையில்கூறிய சன்மார்க்கநெறி சரிதானா...?

சனீஸ்வரனின் சம்பளமே சர்குணனுக்கு சந்தேகத்திற்குள்ளானதால்
சர்ச்சைகள் சங்கமித்து சமீபகாலமாய் சக்தியுடன் சங்கரனும் சண்டையிட...

சந்திரனின் சலுகைகளுடன் சம சதவீதம் சரியல்லவென
சண்முகனும் சளைக்காது சந்தர்பத்தில் சன்னமாகசொல்ல...

சரசரவென சருகுகளிடையே சபிக்கப்பட்ட சர்பம் சலனம்நிறைந்த சங்கொலிகேட்க
சத்தியம்தொலைத்து சபதம்கலைத்து சட்டென சடுதியில் சவமாகிப்போனதே...!

மேலும்

நிச்சயமாக சகோ... நன்றி... 11-Aug-2017 8:24 am
உலகை சிந்தித்தால் ஒவ்வொரு மனிதனும் குற்றவாளி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Aug-2017 9:39 pm
கௌதமன் நீல்ராஜ் - கௌதமன் நீல்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2017 11:31 pm

நட்புக்களுக்கு வணக்கம்...

நம்வீட்டு மழலையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நம்மொழியில் வாழ்த்திடவே சில வரிகளை வடித்திருக்கிறேன். சிலகால சிந்தனைதான் எனினும் பல இன்னல்களைத் தாண்டியே படைத்திருக்கிறேன்.

பிடித்தவர்கள் எவராயினும் பகிர்வதில் பெருமைகொள்வேன். நகலெடுத்து நகர்த்திட வேண்டாம் நாணப்போவது நான் மட்டுமல்ல, நம் தமிழன்னையும்தான்...

நன்றி...

வாழி நீயும் வாழி நெடுக வாய்ப்பு நல்கி வாழி
தோளில் சுமந்த தோழன் வார்த்தை தோற்றிடாது வாழி...

காட்டில் இல்லை காலதேவன் ஏட்டில் கண்டு வாழி இனிய
கூட்டில் முல்லை குடியமர்ந்து குலம்சிறக்க வாழி...

காளி சூலம் காக்குமானால் பாரில் இல்லை பாரி நீயும்

மேலும்

நன்றி சகோ... 11-Aug-2017 9:56 am
வாழ்த்துக்கள் அழகானது மனதை விட்டு அகலாதவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 9:53 am
மிக்க நன்றி தோழரே... 11-Aug-2017 8:23 am
அன்பு வாழ்த்து சொன்ன நண்பர் இன்பமாக வாழி இன்று போல இன்பம் கண்டு என்றும் வாழி வாழி ! 11-Aug-2017 4:32 am
கௌதமன் நீல்ராஜ் - கௌதமன் நீல்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2017 9:02 pm

எமைஈன்ற நாள்முதலே துணைநின்ற தமிழே
எண்ணிலடங்கா அன்னிய மொழிகளுக்கு எழுத்தாணி கொடுத்த தாயே...!

வள்ளுவன் வடித்த எழுத்தோலையே
வாகைசூடி இப்பேருலகை வலம்வரும் குமரித் தாயே...!

கற்றுத் தெளிந்த காப்பிய நாயகியே
கணக்கிலடங்கா காவியங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டவளே...!

நாவினில் நல்லுறவாடும் நற்கனியே
நாளும் திகட்டாத நாடுபோற்றும் நற்றமிழே...!

கொடிமுல்லை இடையமர்ந்து விடிவெள்ளி மடியமர்ந்து
நொடிமுள்ளை கடைமுனையில் படியளந்த காரிகையே...!

செம்மொழி நீமொழிய வெண்தாமரை விரிந்திடுமே
பண்மொழிக்கு பாதைகாட்டிய அருந்தமிழ் நறுமுகையே...!

இடுபொருள் உரமேற இயன்றவரை இசைந்திடுவாய்
மடுதிரண்ட வெள்ளமாய் மனம்மயக்க அசைந்திடுவாய்...

மேலும்

நன்றி சகோ... 25-Jul-2017 8:44 pm
தமிழைக் காப்பது தமிழனின் கடமை 21-Jul-2017 11:01 am
கௌதமன் நீல்ராஜ் - கௌதமன் நீல்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2017 1:24 am

காதல் ஆட்கொண்ட கதவுகளெல்லாம் இருள்கலைய இணைபிரியும் வேளை
சாதல் துறந்த தேவாரமும் மாநகர்வீதியில் இசைக்கும் அதிகாலை...

சொல்லிசை ஜதிகேட்டு சொக்கனும் சொக்கித் துயில
மெல்லிசை துதிகேட்டு மெல்லிடையாளும் அசைந்து எழ...

விடிவெள்ளியாய் விரைந்துவந்து பால்வெளியை அவளும் ஒளிர்வூட்ட
கடிவாள கட்டுப்பாட்டை கார்பரியாய் நானும் கலைத்துவிட...

கழுகு களைப்பாற விழுது இசைபாட
அழுது சளைக்காமல் தொழுது இடர்கலைய...

எருதும் அசைபோடும் கருது விருந்தாக
எருக்கும் வசைபாடும் மருந்தும் கரும்பாக...

கொடிமுல்லை மடல்விரிய கொம்புத்தேன் சுவையேற
மடிதன்னில் மயங்கினாள் மன்மதன் வீசிய மாயவலையில்...

கள்ததும்பும் வில்புருவம் விலக்காமல் விளக்

மேலும்

உன்மைதான் சகோ... 25-Jul-2017 8:43 pm
பல காதல்கள் இன்று காமத்தின் முகமூடியில் உலாவினாலும் சில காதல் உண்மையாக சுவாசித்துக் கொண்டிருக்கிறது 25-Jul-2017 5:22 pm

தேடல்தொடங்கிய நாள்முதல் ஓடத்துவங்கிவிட்டேன்

கூடலுக்காக இல்லை எனினும் நீ என் ஆடலுக்காக வாயென்றாள்...

ஆடலரசி அவள் அழகில் அயர்ந்துப்போய் மடிக்கிடந்தால்
வாடல் எனக்கு வாடிக்கையாகிவிடுமே என்பதனால் வஞ்சிக்கொடியை  வஞ்சிக்கிறேன்... 

மேலும்

அவள் என்றுமே என்னவள்தான்

அவசியம் அவள்யாரென தெரிந்துகொள்ள என்கனவுலகம் வா ...

மேலும்

ஏர்பிடிக்க ஆட்கள் இல்லை இந்தஅவனியில்

ஏற்றம்மட்டும் எப்படிவரும் நம்கழனியில்... 

மேலும்

நிறைகுடம் தளும்புகிறது

நிலநடுக்கத்தின் தாக்கத்தால்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை
பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
தேவி சு

தேவி சு

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (21)

தம்பு

தம்பு

UnitedKingdom
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (21)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே