Shyamala Rajasekar - சுயவிவரம்

(Profile)நடுநிலையாளர்
இயற்பெயர்:  Shyamala Rajasekar
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Nov-1960
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2013
பார்த்தவர்கள்:  5907
புள்ளி:  6958

என் படைப்புகள்
Shyamala Rajasekar செய்திகள்
sankaran ayya அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2017 10:39 am

பொய்கையில் சிரிக்கிறது தாமரை
புன்னகையில் சிரிக்கிறாய் நீ
கற்பனையில் மலர்கிறேன் நான்
கவிதையில் சிரிப்பது நீதான்
மலர் இல்லை !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய ஷ்யாமளா ராஜசேகர் அன்புடன்,கவின் சாரலன் 26-Feb-2017 9:02 am
அழகு ! 25-Feb-2017 6:39 pm
மிக்க நன்றி கவிப்பிரிய கலையரசன் அன்புடன்,கவின் சாரலன் 25-Feb-2017 4:00 pm
அருமை தோழா 25-Feb-2017 1:56 pm
Shyamala Rajasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 3:57 pm

கானழித்துக் கோயிலைத்தான் கட்டவும் வேண்டுமோ ?
வானமுதம் பொய்த்திடுமே வாராமல் ! - மோனதவம்
வாய்க்குமெனில் பாலை வனத்திலுமெ ழுப்பிடலாம்
தூய்மையுளத் தோடு தொடர் .

மேலும்

Shyamala Rajasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 1:56 pm

விளம்பர ஈர்ப்பால் விதவிதமாய் உண்ண
உளம்விழைந்தால் காயத்திற்(கு) ஊறே! - அளவாய்
நியதியுடன் உண்டு நெடுங்காலம் வாழ
இயற்கை உணவே இசைவு .

மேலும்

Shyamala Rajasekar - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 12:42 am

வெண்பாக் கொத்து
`````````````````````````````````
குறள் வெண்பா
```````````````
கண்ணன் வடிவினைக் கண்ட விழிகளில்
கண்ணீர் பெருகிடும் காண்.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
````````````````````````````````
கண்ணன் குழலூதக் கன்றுடன் மாடுகளும்
பண்ணை மிகரசித்துப் பாலைச் சொரிந்தபடி
கண்மூடிக் கேட்டிடும் காண் .

நேரிசைச் சிந்தியல் வெண்பா
````````````````````````````````
கண்ணன் வரவிற்குக் காத்திருக்கும் கோபியர்
எண்ணம் முழுதும் இனித்திருப்பான் - ஒண்டொடியாள்
கண்களில் காதலைக் காண் .
இன்னிசை வெண்பா
```````````````````````
கண்ணன் குழலோசை காற்றில் மிதந்துவரப்
பண்ணினைக் கேட்டுப் பரவசத்தால் ந

மேலும்

Shyamala Rajasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 12:42 am

வெண்பாக் கொத்து
`````````````````````````````````
குறள் வெண்பா
```````````````
கண்ணன் வடிவினைக் கண்ட விழிகளில்
கண்ணீர் பெருகிடும் காண்.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
````````````````````````````````
கண்ணன் குழலூதக் கன்றுடன் மாடுகளும்
பண்ணை மிகரசித்துப் பாலைச் சொரிந்தபடி
கண்மூடிக் கேட்டிடும் காண் .

நேரிசைச் சிந்தியல் வெண்பா
````````````````````````````````
கண்ணன் வரவிற்குக் காத்திருக்கும் கோபியர்
எண்ணம் முழுதும் இனித்திருப்பான் - ஒண்டொடியாள்
கண்களில் காதலைக் காண் .
இன்னிசை வெண்பா
```````````````````````
கண்ணன் குழலோசை காற்றில் மிதந்துவரப்
பண்ணினைக் கேட்டுப் பரவசத்தால் ந

மேலும்

Tamilkuralpriya அளித்த படைப்பில் (public) Tamilkuralpriya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2017 12:23 pm

விசும்பி விழுந்த மழைத்துளியாய் ஆயிரம் துளிகள்
உன் வாசலில் - என் கண்ணீர்,

பிரிவின் துயர் தாளாமல் என் ஆவியின்
சூட்டில் அவிந்தது - என் இதயம்,

கூட்ட நெரிசலில் சிக்குண்டு திணறித்
தவிக்கும் எண்ணங்கள் - என் மனம்,

சேர்ந்திருந்த நாட்களை மீண்டும் மீண்டும்
ஓட்டிப் பார்க்கும் - என் கனவு,

பார்க்காத நொடிகளை சேர்த்து சேர்த்து
நின்றே போனது - என் கடிகாரம்,

ஓசோன் படலமாய் உன் சுவாசக் காற்றை
மட்டும் வடிகட்டும் - என் நாசி,

நீ இல்லாத நாட்கள் என் நாட்குறிப்பின்
கடைசி வரிகள் - என் மரணம்,

இறந்தாலும் சுற்றிச் சுற்றி உனைத் தேடியே
வந்து சேரும் - என் உயிர்,

உன் துயரம் கண்டு என

மேலும்

கவிதையை படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சகோதரரே 22-Feb-2017 11:18 pm
காதல் பிரிவின் வலியும் கண்ணீரும் மறையாத ஒன்று சிறந்த வரிகள் 22-Feb-2017 7:42 pm
என் கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி அம்மா 22-Feb-2017 3:20 pm
மிக அருமை மா ! 22-Feb-2017 3:11 pm
Shyamala Rajasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2017 1:10 pm

மோகனைப் புன்னகை வீசிடும் நிலவே
***முத்தொளிர் கண்களால் கதைபேசு !
தேகமும் சிலிர்த்திடத் தென்றலின் சுகத்தில்
***சில்லென நீயொரு கவியெழுது !
மேகமும் திரண்டிட மழைவரும் பொழுதில்
***மெல்லிதழ் சிவந்திடக் கனிவோடு
வேகமாய்க் கைவளைக் குலுங்கிட அணைத்து
***வீணையில் விரல்களாய் எனைமீட்டு !

மார்கழிக் குளிரினைத் தாங்கிட முடியா
***மன்னனின் நிலைதனை உணராயோ ?
போர்வையுள் இருமனம் பேசிடும் தருணம்
***பொங்கிடும் உணர்வினை அறிவாயா ?
மார்பொடு தழுவிட ஏங்குதென் இதயம்
***மங்கையே அணைத்திட மறுப்பாயா ?
பார்வையால் கொஞ்சிடும் பாவையே எனக்குப்
***பஞ்சணை சுகமதைத் தருவாயா ?

கொண்டையில் மல்லிகைப் பூச்சரம் மணக

மேலும்

Shyamala Rajasekar - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2017 1:36 pm

அன்றாடக் கடமைகளைப் பொறுப்பா யாற்றி
***அகம்புறமும் அழுக்ககற்றி விடுவாள் அன்னை !
அன்னமிட்டுப் பசியாற்றி உள்ளம் அறிந்தே
*** அரவணைக்கும் தாயுளமே கடவுள் இல்லம் !
அன்பென்ற ஆயுதத்தால் துயரைப் போக்கி
***அழிவின்றிக் காத்திடுவாள் அறிவைக் கூட்டி
அன்னைமொழிக் கீடுண்டோ அறிந்தோர் சொல்வீர்
***அகிலத்தில் நமக்கதுவே வேத மன்றோ ??

மேலும்

மிக்க நன்றி மணி ! 06-Feb-2017 4:37 pm
உண்மையான வரிகள்.நமக்காக எல்லாமாய் பரிணமிப்பவள் தாய்தானே.வாழ்த்துக்கள் அம்மா 06-Feb-2017 3:52 pm
Shyamala Rajasekar - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2017 1:23 pm

ஓடுகிற தண்ணியில ஓலஒன்னு நாஅனுப்ப
காடுவழி போறபுள்ள கையிலதான் கெடச்சிருச்சா?
பாடுகிறேன் இக்கரையில் பாட்டொனக்குக் கேக்கலையா?
தேடுகிறேன் என்னுசுரத் தென்றலேநீ போய்ச்சொல்லு !

சந்தைக்கு நான்போறேன் சம்மதமா கூடவர
அந்திசாயும் பொழுதினிலே அவசரமா திரும்பிடலாம் !
தொந்தரவா நெனைக்காதே தூக்கமில்ல வொன்நெனப்பில்
வெந்துமனம் சாகிறனே வேதனயத் தீர்ப்பாயோ?

கூடிவரும் மேகமெல்லாம் கூராப்பு போட்டிருச்சே
வாடிபுள்ள வெரசாக மழபெஞ்சா நனஞ்சிடுவ!
ஓடிவந்து மச்சான உரிமையோடக் கட்டிடடி
சோடிபோட்டுச் சுத்திடலாம் சொக்கவச்ச சுந்தரியே !

மேலும்

நல்லிசைப்பாடல் ...! 04-Feb-2017 2:38 pm
Shyamala Rajasekar - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2017 12:41 pm

தனதனன தனதனன தானத் தானத் தனனானா
தனதனன தனதனன தானத் தானத் தனனானா

குருபரனை மனமுருகி நாடித் தேடித் தொழுதாலே
***குறமகளொ டிருவருட னாடிப் பாடிப் பரிவோடே
மருவுமடி யவரிதய மேவிக் கூடிக் கனிவோடே
***மனமகிழ வகையருளு பாயக் காரத் திறலோனே
வருதுயரை வழிவிலகி யோடிப் போகச் செயும்வீரா
***வழுவகல வுதவிபுரி நேயக் காரத் திருமார்பா
அருணைமுநி புகழமுதை வாசிப் போருக் கருள்நேசா
***அறுபடையி லுறைசிவகு மாரக் கோலப் பெருமாளே .

மேலும்

முருகனை காண கண்கொள்ளா காட்சி, படைப்பும் அருமை, - மு.ரா. 03-Feb-2017 9:13 pm
Shyamala Rajasekar - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2017 6:58 pm

விண்மழையை வானவில்லும் வளைந்துவர வேற்கும்
***மேளதாள மோடுயிடி முழங்கிவர வேற்கும்!
கண்பறிக்கும் மின்னலுந்தான் கவின்கோல மாக
***கார்முகிலை வரவேற்கக் கண்சிமிட்டிப் பூக்கும்!
மண்வாசம் முந்திவந்து வரவேற்பு தந்து
***மழைவருதற் கறிகுறியை மக்களுக்குச் சொல்லும்!
வண்ணமயில் வானத்தில் மழைமேகம் கண்டு
***வனப்புடனே வரவேற்றுத் தோகைவிரித் தாடும் ...!!!

மேலும்

அருமை 01-Feb-2017 12:39 am
Shyamala Rajasekar - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2017 10:03 am

வேடிக்கை யாய்ப்பேசி வேதனைகள் தீர்ப்பதையே
வாடிக்கை யாய்க்கொண்டு வாழ்பவனே! - தேடிடினும்
உன்போலே நல்லுள்ளம் ஊருக்குள் யார்க்குமில்லை
பொன்மகனே வாழ்த்திடுவேன் பூத்து .

மேலும்

நன்றி ! 28-Jan-2017 10:27 am
நன்று 28-Jan-2017 10:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (715)

Tamilkuralpriya

Tamilkuralpriya

சேலம்
PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78
aravind 628

aravind 628

திருமுட்டம்
endrumkavithaipriyan

endrumkavithaipriyan

சென்னை
raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (718)

Geeths

Geeths

கோவை
Kavisathish

Kavisathish

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (718)

Santhosh Kumar1111

Santhosh Kumar1111

திருப்பூர் / சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான விளையாட்டுகள்

மேலே