Suresh Chidambaram Profile - சுரேஷ் சிதம்பரம் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ் சிதம்பரம்
இடம்:  பென்னகோணம், பெரம்பலூர் மா
பிறந்த தேதி :  23-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2017
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  40

என்னைப் பற்றி...

கிறுக்கல்களும், கிழித்தல்களும் தொடர்வதால் வார்த்தைகள் வசப்படாவிடினும் எண்ணங்களை இறக்கி வைக்கும் முயற்சி..

என் படைப்புகள்
Suresh Chidambaram செய்திகள்
Suresh Chidambaram - sajitha94 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2017 12:21 pm

தோழா!
இதை ஆண் வாய்மொழியில் நட்பாகவும் பெண் வாய்மொழியில் சந்தேகத்துடன் ஏறிடும் சமூகமே

உனக்குத் தெரியுமா!
எங்கள் உரையாடலில் காதல் இல்லை என்று
எங்கள் எதேச்சையான தொடுதலில் காமம் இல்லையென்று

எங்கள் நட்பின் வேர் நீ அறிவாயா
என் முன்னால் என்னை சீண்டி தூற்றி
என் பின்னால் என்னை எவரேனும் தூற்ற நேர்ந்தால் "அவள் என் தோழி"
என சட்டை பிடிக்கும் தருணத்தில் என் விழியோரம் எட்டிப்பார்க்கும் கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுவாய்?
இத்தனை கர்வத்துடன் நட்பு வளர்த்தும் பெண்ணவள் திருமணத்தின் பின் நட்பில் இழையோடும் பிரிவுக்கு நானே காரணம் என மார்தட்டி பெருமை கொள்...
முதலில் காதலையும் க

மேலும்

முதலில் காதலையும் காமத்தையும் பற்றித் தெளிந்து வா.. எங்கள் நட்பை அப்போது தான் பகுத்தறிவாய்.. செம்ம அடி.. வாழ்த்துகள்.. 26-May-2017 10:36 pm
Suresh Chidambaram - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2017 10:40 am

கண்மணியே .. . . .

உனைப்ப்ரியும்
தருணங்களில்
புலரியின் சிவப்பில்
இரைதேட
பிரியா விடை கேட்டுக்
கெஞ்சும் . .
தாய்ப்பறவையாய் . . . . .

நீ உதிர்த்த வார்த்தைகள்
எனைச்சுற்றி முளைத்த
வார்த்தை வனத்தினுள்
இன்னும் இளம்மொட்டாய்
முதிராமல் .. . .

ஈரத்தலையோடு
பாவாடைக் குடையாக்கி
நீ சுற்றித் தெறித்த
நீர்த்துளிகள்
மழைநின்ற
மாலைநேரத்து
மரநிழலாய்
மனதோரம் . . .

தொண்டை முட்டிய
வெள்ளத்திலும்
காலடி மண்ணை
பிடிதளராது
தலைநிமிர நிற்கும்
மரமாய்
உன்பிடிவாதம் . . .

உன் முதல்
கிறுக்கலை
பச்சை குத்தி
உலகின் சிறந்த
ஓவியமாய்
இன்றும் காண்கிறேன்
என் கை நடுவே . . .

உன் பிஞ்சுக

மேலும்

Dear brother suresh chidambaram thangal vimarsanangal ku mikka நன்றி 26-May-2017 6:50 pm
உண்மைய சொல்லிடுங்க.. கலாதேவிக்கும் உமாதேவிக்கும் என்ன ஒப்பந்தம்? இருந்தாலும் அந்தம்மாவுக்கு இவ்வளவு வஞ்சனை இருக்க கூடாது.. காலாரசனை மொத்தமாய் தங்களுக்கே கொடுத்து விடுவதா என்ன?? 26-May-2017 5:52 pm
Suresh Chidambaram - velayutham avudaiappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2017 3:46 pm

நட்புக்களே & குடும்ப உறவுகளே..

அமரர் ஜெயலலிதா தன் இறப்பினில் இரண்டு மிகப்பெரிய உண்மையை விட்டுச் சென்றிருக்கிறார் நமக்காக.

என்ன தெரியுமா அது...?
(1)ஆரோக்கியம் இல்லாவிட்டால் நாட்டுக்கே ராஜாவானாலும் எமனிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.எனவே
உடல் நலம் பேனுவோம்,
வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வோம்,
தினம் தினம் உடல் பயிற்சி,உடல் எடை மேலாண்மை என ஆரோக்கியமான வாழ்விற்கு ஆச்சாரம் இடுவோம்.

(2)எவ்வளவு பணமிருந்தாலும்,
எத்துணை பெரிய பதவியில் இருந்தாலும்...

பிள்ளைகளே.. பெற்றோர்களே.. மருமகள்களே.. மாமியார்களே.. அண்ணன் தம்பிகளே.. அக்கா தங்கைகளே.. அத்தை மாமாக்களே.. சித்தி சித்தப்பாக்களே.. த

மேலும்

ஆஹா ஒரு வித்தியாசமான கோணம் . ஞாதிகள் என்று சொல்லுவார்கள் . இவர்கள் வெறும் உறவினர்கள் அல்ல .குலம் கோத்திரம் வழியிலான ஒரே குடும்பத்தினர் . வாழ்வில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாவிட்டாலும் , சாவில் கட்டாயம் ஞாதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. தென் புலம் சென்றவருக்கு செய்யும் பத்து நாள் கிரியை நாட்களில் இந்த ஞாதிகள் தங்கள் இல்லங்களில் எந்த சுப நிகழ்ச்சிகளையும் கொண்டாடுவதில்லை . ஜெ யின் சாவின் சோகத்தைவிட சாவிற்கு பின் அவரைச் சுற்றியிருந்த வெற்றிடம் இன்னும் சோகமானது. எங்கே சென்றனர் இந்த ஞாதிகள் ? கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் எத்தனையோ பேர் அவர் உடலை சூழ்ந்து நின்றனர் . உண்மையாக ஒரு சொட்டுக் கண்ணீர் விடப்பட்டதா ? சாவில் ஜெ ஏன் மிகவும் தனிமைப் படுத்தப்பட்டார் ? "உண்மையான அன்பின் கண்ணீர் ஒரு சொட்டுக் கூட இவர் உடலின் மேல் விழவில்லை"----உங்கள் கூற்று உண்மை ----அன்புடன்,கவின் சாரலன் 26-May-2017 6:42 pm
உடல் நலத்தோடு உறவு நலம் பேனுவதற்கு நல்ல பாடம்.. 26-May-2017 5:19 pm
Suresh Chidambaram - BabyPapa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2017 2:51 pm

அன்று அவன் எப்பவும் போல வந்து அம்மாவிடம் நலம் விசாரித்தான். அம்மாவும் எப்பவும் போல் உண்மையான அன்புடன் பொய் சொன்னாள் "நல்ல இருக்கேன் டா!, கார்முகில் என்ன பன்றான்" என்று தன் பேரனை விசாரித்தாள். வார்த்தை வராத சிறுபிள்ளையை போல் ஹ்ம்ம் கொட்டினான் முகிலன். கிட்ட தட்ட அவன் வீட்டை விட்டு தனி குடித்தனம் சென்று 6 வருடம் ஓடி விட்டது. அந்த ஆறு வருடங்களில் முகிலன் அன்னையை காண வந்த எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அதெல்லாம் மனதில் கொள்ளாத மீனாட்சி மகனுக்கு சுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள். நாவில் சுவை படும் முன்பே நாசியில் அதன் வாசனை முகர்ந்து அமிர்தம் உண்ட மகிழ்ச்சி அடைந்தான். அன்னைக்கு தெரிய

மேலும்

நிதர்சனமான உண்மை.. அருமை ..வாழ்த்துகள் 26-May-2017 5:01 pm
Suresh Chidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 10:44 pm

அண்ணன்- சிறுகுறிப்பு :


° தாயின் மடியை நமக்குத் தாரை வார்ப்பவன்.

° தாய்பாலும் நமக்கு தீங்கிழைத்து விடுமோ என்ற பயத்தால் தான் முதலில் பரிசோதித்து, பின் நமக்குத் தருபவன்.

° நமக்கு சட்டை கொடுப்பதற்காகவே -
தான் வளர்பவன்.

° தம்பியும், தங்கையுமே கொஞ்சப்படுவதை பார்க்கும் போதெல்லாம் தம்பி/தங்கச்சி பாவம்ம்ல்ல ப்பா என்பதையே தாலாட்டாகக் கேட்பவன்.

° காக்கா கடி முதல் கண்ணடிக்குறது வரை அத்தனையும் கற்பிப்பவன்.

° வளர்ந்து வேலைக்குப்போய் குடும்பத்தின் இரண்டாம் தந்தையாய் மாறுபவன்.

° வீட்டின் அடுத்த தலைமுறைக்கு அன்னையை கொண்டு வருபவன்.

° தங்கை மகளுக்கு தாய்மாமன் சீர் செய்ய தவங்கிடப்

மேலும்

அண்ணா:--- எனக்கு என் ஆருயிர் நண்பர் அரசியல் அறிஞர் அண்ணா தான் ! 1967-மதுரை தமுக்கம் கலை அரங்கில் வெற்றி விழா:-- அறிஞரோடு கலந்து கொண்ட நிகழ்வுகள் மறக்க முடியுமா? மலரும் நினைவுகள் அன்புத் தம்பிக்கு அண்ணனின் ஆசிகள் வாழ்க வளர்க நம் அண்ணன் தம்பி உறவு 27-May-2017 4:04 am
அய்யா இது தங்களைப் போன்ற மூத்த அண்ணன்களுக்கு சமர்ப்பனமாகவே தம்பிகள் எழுதியது.. தம்பியை அண்ணனாக்கிய அண்ணா நன்றி நன்றி .. 26-May-2017 4:18 pm
எனக்கு உடன்பிறந்த அண்ணன் இல்லையே !. நான்தான் மூத்த ஆன் பிள்ளை தங்கள் அண்ணன் பாசமலர்க் கவிதை வரிகள் இதயத்தைத் தொட்டது அண்ணா நீ வாழ்க வளமுடன் உன் தம்பிக்காக ! 26-May-2017 3:16 pm
Suresh Chidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 1:12 pm

தாம்பரம் பேருந்து நிலையம், எதிரில் இருந்த சர்ச் ஒலிபெருக்கியில் ஒரு கிருத்துவப் பாடலின் ரிங்டோனைத் தொடர்ந்து, டிங்ங்ங்ங்...டிங்ங்ங்ங் என பதினொரு முறை மணியடித்து, நேரம் இரவு பதினொரு மணி என்று அறிவிப்புடன் ஒரு வசனத்தை அந்த பெண்மணி சொல்லி முடித்து எப்படியும் ஒரு முப்பது விநாடிகள் கடந்திருக்கலாம் என நினைத்தபடி , என் செல்ஃபோனைப் பார்க்க., நான் யூகித்தது சரிதான். மணி 11:33 p.m என காட்டியது. சரி.. வெய்ட் பன்னுனது போதும் அவங்க சரியா இன்னும் ரெண்டு மணி நேரத்துல மேல் மருவத்தூர் வந்து இறங்கிடுவாங்க.. திருச்சிலருந்து பெரியப்பா பெரியம்மா மருவத்தூர் வர்ராங்க.. எனக்கு நைட் சிப்ட் டா. நீ போயி இந்தப் பணத்த குட

மேலும்

Suresh Chidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 8:17 pm

ஜவுளிகடை பைகளோடு இரு அழகிகள் பேருந்தில் ஏற..
நம்மாள் : (அந்த அழகிகளைப்பார்த்த படி) கன்டக்டர் , ஜவுளிக்கடை அங்க , இங்க னு எங்க போனாலும் தள்ளுபடிங்குறாங்க, ஆஃபர் னு சொல்றாங்க. நீங்க பஸ் டிக்கெட்ல எதும் ஆஃபர் குடுத்தா என்னவாம்?
கன்டக்டர் : அட உங்களுக்கு இல்லாததா தம்பி, 2000 ரூவாய்க்கு மேல டிக்கெட் வாங்குங்க.. ஆஃபர் போட்டு தர்ரேன்..
(இப்படி அசிங்கப்பட்டதுக்கு தும்பை பூவுல தூக்கு மாட்டிக்கலாம் -மைன்ட் வாய்ஸ்ல சந்தானம்).

மேலும்

Suresh Chidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2017 4:26 pm

வாழ்க்கையில்
தோற்று தற்கொலைக்கு
முயற்சித்தேன் .,

தற்கொலை முயற்சியில்
தோற்று -இப்போது
வாழ்கைக்கு முயற்சிக்கிறேன்..

மேலும்

கருத்திற்கு நன்றி அய்யா., தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நான் கோழை இல்லை. இது நண்பன் ஒருவனின் அனுபவம்., காரணமும் பெருசா ஒன்னுமில்ல.. செலவுக்கு காசு குடுக்கலனு அவங்க அம்மாகிட்ட கோவிச்சுகிட்டு தற்கொலைனு தூக்கு போடப் போயி கயிறு அறுந்து கைய ஒடிச்சிக்கிட்டான். இப்ப சிங்கப்பூர்ல நல்ல வேலை, சந்தோசமா இருக்கான். அத நெனைச்சாலே சிரிப்புதான். அத நெனைச்சி விளையாட்டா எழுதுனது தான் இது.. தங்களின் நேரத்தை வாசிப்புக்கும், கருத்துரைக்கும் செலவிட்டதற்கு நன்றி அய்யா 25-May-2017 1:39 pm
தற்கொலை முயற்சி:-- ஏன் இந்த கோழைத்தனம்? உயிரை மாய்த்துக் கொண்டால், பிரச்சினை தீர்ந்து விடுமா? 1. மனநல மருத்துவரை ஆலோசித்து, மருந்துகள் மூலம் தற்கொலை எண்ணங்களை கட்டுப்படுத்தலாம். 2. குழந்தையில் இருந்தே தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். 3. அடிப்படை குணாதிசயத்தை மாற்றுதல். 4. மன தைரியத்தை அதிகப்படுத்துதல். 5. தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் இருத்தல். 25-May-2017 1:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

velayutham avudaiappan

KADAYANALLUR
Vaasu Sena

Vaasu Sena

புதுக்கோட்டை
Sureshraja J

Sureshraja J

சென்னை
Suruthi S

Suruthi S

பூமி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே