Tamilkuralpriya Profile - தமிழ் ப்ரியா சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் ப்ரியா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  24-Sep-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2016
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  26

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கிறேன், என் எல்லாமும் தமிழோடு பயணிப்பதால்.....
இன்பமோ துன்பமோ என் மொழியோடு உரையாடி துயரங்கள் மறக்கிறேன்.....
வாழ கற்றுக் கொடுத்தவள் தாய், நான் வாழும் நொடிகளுக்கு காரணம் என் தாய் மொழி...

என் படைப்புகள்
Tamilkuralpriya செய்திகள்
Tamilkuralpriya - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2017 12:22 am

ஒரு நீண்ட எண்ணத்தெளிவிற்கு பின் புதுமையான முடிவறியாத ஒரு கதைத்தளத்தில் குதிருத்திருக்கிறேன்...
என் எழுத்து முயற்சியின் ஒரு படைப்பு எழுத்து அன்பவர்களது கவனத்திற்காக பகிர்கிறேன். நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து எழுதும் எண்ணம் இருக்கிறது. ஏதேனும் குற்றம் குறை இருப்பின் தயக்கம் இன்றி கூறுவீர்கள் என்ற ஆசையில் என் படைப்பு இதோ,,

கரையைத் தேடும் மீன்கள் - கரை-1:


"காதல் இனிக்க வைக்கும் நினைவுகள் நிறைந்தது, திகட்ட திகட்ட என் வாழ்வை சுவைத்த நாட்களை எண்ணி பார்க்கையில் என் இதயம் ஒரு நொடிக்கு ஓராயிரம் முறை துடிக்கிறது. வசந்தங்கள் நிறைந்த அந்த நாட்கள் இனி திரும்ப வருமா என ஏங்கி காத்திருக்கிறேன்.

மேலும்

Sureshraja J அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2017 7:38 pm

என்ன சிந்தனை?
நிலவின் ஒளி இவள் மீது பட்டதால்
இவள் வெண்மையாக மாறினாளா
அல்லது
இவள் நாணம் கொண்டு பார்ப்பதால்
நிலவு வெண்மை ஆனதா?

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி 29-Mar-2017 8:27 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே 29-Mar-2017 8:26 am
பெண்ணின் நானத்தோடு தீண்டிய பார்வை பட்டால் நிலவும் செவ்வண்ணமாக அல்லவா ஆகும்.... 28-Mar-2017 11:53 pm
புதிரின் மேல் புதிரை அடுக்குகிறாள் பெண் 28-Mar-2017 11:50 pm
Sureshraja J அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2017 9:45 pm

படித்த படிப்புக்கு வேலையில்லை
தொன்னூறு சதவீதவும் வீணாய்ப்போகுமே
வேலை கிடைக்கும் வரை காத்திருக்கவா
கடன் பெற்ற தகப்பனும்
சொந்தத்துக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் பதில் சொல்லாத தெரியாத அன்னைக்கும்
சூப்பர் மார்க்கெட்டில் கடையிலேயே மாதம் 12000 சம்பளம் தருவானே
போக வேண்டியதுதானே சொல்லும் தங்கையும்
கல்யாணத்திற்கு காத்துக் கிடைக்கும் தமக்கையும்
கல்யாண வயதில் வேளைக்கு செல்லும் தமக்கையும்
it வேளைக்கு செல்லும் தங்கைக்கும்
எப்படி தெரியும்
ராப் பகலாய் படித்த பட்டப்படிப்பை தூக்கி எறியவா
அல்லது
பண்ணதை சம்பாதிக்க பிபிஓ வேளையாவது சேரவா ?

நானா உங்களை பணம் கெட்டி இன்ஜினியரிங் படிக்கச்

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி . உங்கள் ஆதங்கம்முற்றிலும் உண்மையானது . பல கிராமங்களில் இன்ஜினீரிங் கட்டயப்படுத்தி படிக்கச் சொல்லி மார்க் எடுக்கச் சொல்கிறார்கள் . ஆனால் மதிப்பெண் மட்டும் படிப்புக்கு போதாது . ஆங்கில ஆற்றலை வராக வேண்டும் . பொது மேடையில் பேச வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் அவர்கள் 29-Mar-2017 8:24 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே 29-Mar-2017 8:22 am
நிதர்சனம் உரைத்தீர், ஆனால் கடைசி வரிகள் எம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. ஏன் எனில் நான் என் சகோதரன் இன்ஜினியரிங் படிப்பிற்கான கட்டணம் கட்டுவதில் என் பங்கும் இருக்கிறது. ஏன் வீட்டில் இன்ஜினியரிங் படிக்க சொன்னால், இல்லை இதில் கட்டணம் அதிகம் என்னால் படிக்க முடியாது நான் வேறு துறை படிப்பை தேர்வு செய்து படிக்கிறேன் என கூறி இருக்கலாமே. அப்போது என்ன வாயில் கொலுக்கட்டையா வைத்திருந்தார்கள். நன்றி, தமிழ் ப்ரியா... 28-Mar-2017 11:44 pm
உண்மைதான்..நாட்டில் இன்று பலரின் ஆற்றல் வெறும் பட்டத்திற்குள் முடங்கிக் கிடக்கிறது 28-Mar-2017 11:36 pm
Tamilkuralpriya - athinada அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2017 3:51 pm

புதிதாய் வேய்ந்த கூரை
மழைக்காலம் ஓய்வெடுக்கின்றன
பாத்திரங்கள்.

மேலும்

நன்றி 29-Mar-2017 1:41 am
மிக அருமை ஐயா 28-Mar-2017 4:03 pm
நன்றி 27-Mar-2017 2:20 am
நன்றி 27-Mar-2017 2:20 am
Shagira Banu அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Mar-2017 10:36 am

ரோஜா மொட்டு போன்ற மழலை அவளிடமிருந்து அதன் தாயிடம் செல்ல மறுக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்

குடும்பத்தில் குட்டி குழந்தை போல் கலாட்டா செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்

பெண் என்றிருந்தால் இவள் போல் வாழ வேண்டும் என்று பலர் கூறும்போது-அவள் தேவதை ஆகிறாள்

யாருமில்லா சமயம் தொலைக்காட்சியில் வரும் நடனங்களை முயற்சிக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்

மெல்லியதாக பாடல் பாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்

கவலைகளை தன்னுள் அடக்கி புன்னகைக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்

ஆண்களிடம் தன்னிலை தவறாமல் பழகும்போது-அவள் தேவதை ஆகிறாள்

தோழியின் கஷ்டத்தில் தன் தோள் கொடுத்து உத

மேலும்

நன்றிகள் பல 28-Mar-2017 4:18 pm
அழகு தேவதைகள் பெண்கள்... வாழ்த்துக்கள்... நன்றி, தமிழ் ப்ரியா... 28-Mar-2017 3:54 pm
பெண்மை மலர்ந்து பூலோகம் மணக்கிறது இதைப் புரிந்திடாது பல அரக்க மனம் அவளை வதைக்கிறது. அருமை கவி... வாழ்த்துக்கள் தோழமையே... 28-Mar-2017 12:03 pm
உண்மைதான்..ஒரு பெண்ணின் மகிமைக்கு இந்த உலகமே அடிமையாக அவள் காலடியில் கிடக்க வேண்டும் ஆனால் இன்றைய காலப்பகுதியில் உலகமும் பெண்ணை அரக்கனாகவே வளம் வருகிறது 28-Mar-2017 11:57 am
Tamilkuralpriya - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 4:29 pm

இதயத்திற்குள் தீ வைத்து விட்டாய் :

உயிருக்குள் உனை வைத்து என்
வேர்வரை நாடிகளில் நரம்புகளில்
உதிரத்தோடு உன் நினைவையும் சேர்த்து
பாய்ச்சி நான் வாழ இதுவரை உதவியது உன் காதல் மட்டும் தான்.

உண்மையில் காதலின் தலைவிதி இன்று நம் வாழ்விலும் சுழன்றாட காண்கிறேன்.
புரிதல் அற்ற பிரிதல் ஒரு வேதனை என்றால்,
புரிதலிலும் இந்த பிரிதல் அதைவிட வேதனை.

விதியின் நதியில் ஓடமாகி களித்து விளையாடி திளைத்திருந்த வேலை
காலத்தின் வெள்ளமாக வந்த சுழலில் நாம்
சுழன்று சுழன்று ஆற்றோடு போனோமே எதனால்.

ஒதுங்கி நின்ற நிகழ்கால கரைகளில்
நாம் தரைத்தட்டி நின்ற படகாய்,
உடலெங்கும் குத்தூசி இன்றி வேதனையில் வழ

மேலும்

எரிந்தாலும் சாம்பலாவதில்லை, கருத்திற்கு நன்றி சகோதரரே, நன்றி, தமிழ் ப்ரியா... 27-Mar-2017 2:52 pm
காதலரின் துடிக்கும் வார்த்தைகள் அருமை ! இதயம் எரிகிறது காதல் என்னும் நெய்யில் 27-Mar-2017 2:28 pm
Tamilkuralpriya - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 11:24 am

ஞாயிறு - துயில் களைந்தும் எழ மனமில்லை :

வாரத்தின் முதல் நாள் என்று அவசரம் ஒருபக்கம்,
என்றும்போல இல்லாமல் இன்றாவது விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மறுபக்கம்.
சூரியன் வந்து குறுக்கில் மிதித்து எழுப்பாத குறை,
சூழீரென்று முதுகில் உரைத்த சூடு
பட்டென எழுப்பி விட்டது.
முதல் நாளே அருமையிலும் அருமை
என்றும் இல்லாமல் இன்று ஐந்து நாழிகை கூடுதல் தாமதம்.
ஒவ்வொரு நாளும் போர்களம் போல
வேலையின் தீவிரமோ அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரம் போல
எடுக்கவும் முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை.
வண்டி வண்டியாய் வசை வாங்கி பள்ளிக்கு போனபோதே ஒழுங்காய் படித்திருக்கலாம்.
போனதை எண்ணி புழு

மேலும்

பாவம் அவருக்கு என்ன கவலையோ தெரியவில்லை ஐயா, ஒரு வேலை தூங்கி எழுந்ததும் நேரே அலுவலகம் போக போகிறாரோ என்னவோ.... நன்றி, தமிழ் ப்ரியா.... 24-Mar-2017 4:18 pm
இப்பிடி கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு மலை அடிவாரத்துல தூங்கினா I T கம்பெனி என்ன ஆவுது ? H 1 B வீசா இல்லைன்னு சொல்லிப் பூட்டாங்களா ? சுழல் சேரை எடுத்துக்கிட்டு மலை அடிவாரத்துல வந்து போனால் போகட்டும் போடான்னு நிம்மதியாய் தூங்குகிறாரா ? அன்புடன்,கவின் சாரலன் 24-Mar-2017 4:05 pm
வாழ்த்திற்கு நன்றி தோழி உதயசகி 24-Mar-2017 3:22 pm
தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே 24-Mar-2017 3:19 pm
Tamilkuralpriya - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 1:41 pm

என் இதய அலையோடு ஓயாத வரிகள் :
கவி வரிகள் - 2:

சேராத காதல் என்று எதுவும் இல்லை
உனைச் சேரும் நாள் ஏனோ இன்னும் கூடவில்லை
பகல் இரவுகள் பல பொழுதுகள் பார்த்து காத்து கிடக்கிறேன்
உன் விரல் பிடித்து இறுதி வரை தொடர,
இங்கே கடல்,
அங்கே நதி ,
இணைந்திட நடை போடுதே!
அங்கே வெயில்,
இங்கே நிழல்,
விழுந்திட இடம் தேடுதே!
தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .

ஆயிரம் உறவுகள் வாழ்வில்,
அண்ணன் என்ற சொந்தம் அது தந்தையின் சாயல்.
வேண்டியதை வேண்டாமலே தரும் இதயம்,
எல்லோருக்கும் வாய்க்காத வரம்.
ஓர் நாள் உனை பிரிய நேருமே அன்றோடு எனை மறந்து விடாதே.
அண்ணே போய் வரவா அழகே போய் வரவா
மண்ணே போய் வரவ

மேலும்

இதற்கு முன் சமர்ப்பித்த கவிதையில் பிடித்த பாடல்களின் பல்லவியை சேர்ந்திருந்தேன். இரண்டாம் படைப்பில் சரணத்தை கோர்த்திருக்குறேன்... நன்றி, தமிழ் ப்ரியா... 23-Mar-2017 11:59 am
ஆம் சகோதரரே, கவிதை போட்டிக்காக பிடித்த பாடல் வரிகளோடு சேர்த்து எழுதி எழுதியிருக்கிறேன். 23-Mar-2017 11:55 am
கவிதைக்குள் இடை இடையே சில பாடல் வரிகள் மறைந்திருக்கிறது உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன் வெயில் வரும்போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்.. அலைபாயுதே திரைப்படத்தில் உள்ள சிநேகிதனே சிநேகிதனே என்ற பாடலின் சரணத்திலுள்ளவை இவைகள் 23-Mar-2017 11:48 am
அழகு! 22-Mar-2017 2:55 pm
Tamilkuralpriya - sankaran ayya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2017 10:18 am

மரக்கிளையில்
சில குயில்கள் கூவாமல்...
சன்னாலோரத்தில்
சிட்டுக் குருவிகள் வானில் பறக்காமல்....
அப்பால் தோட்டத்தில் பார்
மலராமல்
பூக்களும் காத்திருக்கின்றன
ப்ளீஸ்
துயில் கலைந்து ஒரு முறை
வந்து பாராய் தோழி !

----அன்புடன்,கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய தமிழ் ப்ரியா அன்புடன்,கவின் சாரலன் 22-Mar-2017 4:35 pm
எனது கற்பனையை வேறொரு கோணத்தில் பார்க்கிறீர்கள் . மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 22-Mar-2017 4:34 pm
அழகு கவி அருமை ஐயா.. நன்றி, தமிழ் ப்ரியா... 22-Mar-2017 11:43 am
அவளது உறக்கத்திலும் கனவெனும் மலர்கள் பூத்துக் கொண்டிருப்பதால் இடையில் விழி திறக்க மாட்டாள் அதுவும் காதலின் தியாகம் தானே! 22-Mar-2017 10:26 am
Tamilkuralpriya - Tamilkuralpriya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2017 12:08 am

சூரியனில் நனைந்தாலும் வெண்ணிலவு சுடுவதில்லை,
அலை வந்து அடித்தாலும் கரையோ சத்தமிடுவதில்லை,
சுழலாக வந்தாலும் காற்றோடு மரங்கள் கோபம் கொண்டதில்லை,
வெள்ளம் தொட்ட ஆற்றோடு கடல் ஊடல் கொண்டதில்லை,
பெண்ணே உன் கனலாய் தகக்கும் விழிகள் என்னைமட்டும் சுடுவதேன்.
இயற்கைக்கும் பெண்மை உண்டு ஆனால்
உன் பெண்மையில் இன்னும் மென்மை வராதது ஏனோ?..
முறைக்கும் விழிகளோடு நீ கடக்கும் போது
செதில் செதிலாய் என் இதயம் சிதறித்தான் போனது,
பிழையறியேன் பெண்ணே ஆயினும் என் காதலில் குறையும் இல்லையடி.
விடியும் வரை யோசித்திடு நாளை உன் எதிரில் நிற்பேன் காதல் காரனாய்,
ஏற்றுக்கொண்டால் சாகும் வரை உன் துணை நான் நிற்பேன் க

மேலும்

நேற்று பகிர்ந்த புதிய படைப்பு ஆண்களுக்கான காதல் வார்த்தைகள் என்று நினைக்கிறேன் 10-Jan-2017 11:05 am
ஆண்களை பற்றி காதல் வார்த்தை உண்டா சகோதரி... 09-Jan-2017 11:08 pm
மேலும்...
கருத்துகள்
மேலே