தம்பு - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  தம்பு
இடம்:  ஐக்கிய இராச்சியம்.
பிறந்த தேதி :  17-Jul-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jan-2012
பார்த்தவர்கள்:  20947
புள்ளி:  2909

என்னைப் பற்றி...

வணக்கம் ,

பிறந்த மண்ணில் சுவாசிக்க முடியாமல் அந்நிய தேசத்தில் அகதியென அடைக்கலம் கொண்ட சாதாரண ஒருவன் நான்.உயிரை கையில் பிடித்தபடி அலைந்த ஒரு சில சகாப்த கால வாழ்வில் சிறு புன்னகையை தந்தவை எழுத்தில் நான் எழுதியதை கவியென வாழ்த்திய உள்ளங்களின் உள்ளம்தான்.

நன்றி.

ஒருசில புத்தகங்களின் ஈர்ப்பினால் எழுத்தும் உயிர் மூச்சே என்றுணர்ந்து என்னால் என்ன எழுத முடியுமோ அதை இங்கே எழுதிட இந்த தளத்தில் விழுந்து பத்தாண்டுகள் ஆகிறது.ஆரம்பத்தில் எழுதிட ஏதோ கொஞ்சம் நேரம் கிடைத்தது.கால ஓட்டத்தில் கண்மூட நேரமின்றி பணிக்குள் திணித்துக்கொண்ட காரணத்தால் வலிகளையும் வரிகளையும் இங்கே விசிறிவிட சிறு இடைவெளியும் என் கண்முன்னே இல்லாமல் போனது . வந்துபோனவர்கள் கூட வலிதந்து என்னை திசைமாற்றி போனதும் உண்டு.இதுவல்ல வாழ்வு என்று சொல்லி கரம்கொடுத்த கனிவான உள்ளங்களும் என் கண்ணில் உண்டு.எதுவானாலும் பதில் சொல்ல என் கண்ணில் நீரும் உண்டு.அழுவது ஆணுக்கு அழகில்லை என்று சொல்லி அமிழ்ந்து போக நான் ஒன்றும் பாறாங்கல் அல்ல. பாசமும் பரிவும் ஒன்றுசேர பிரசவிக்கப்பட்ட சிறு குழந்தை.சோகம்,கோபம்,காதல்,நடப்பு,வேடிக்கைப் பேச்சு என்று எல்லாம் எனக்குள்ளும் உண்டு. மொழியின் வாசம் வாங்கி என் உயிருக்கு சுவாசம் கொடுக்கும் ஒரு சிறு விருப்பம் மட்டுமே.

என் படைப்புகள்
தம்பு செய்திகள்
தம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2024 3:45 am

சேர்ந்து வாழ்ந்து
பத்தாண்டுகள்
இன்றோடு......சேராமல்
சேதாரமாய்
நின்று
உயிரை கொல்லும்
நினைவுகள்
இன்னும்
பல்லாண்டு
போனாலும்
மறவாது.......!!

மரணிக்கும்
கணத்தில்
பிரசவிக்கும்
சிசு போல.......மகிழ்ச்சி
ஒரு
பக்கம்...... துக்கம் மறு
பக்கம்
என்று
ஓடி மறைந்து
போன
கோடி
நினைவுகள்
கூடி..... என்னை
கொல்கிறது .......!!

சொல்லாத
துன்பங்கள்
தொடர்கதையாய்
என்
நினைவேட்டில்.......சொல்லித்
தீருமா
சொல்ல
வந்த
வேதனைகள்......!!

என்
வேதனைகளை
புரிந்தவள்
பிரிந்ததன்
விளைவு...... இப்படியான
பதிவு .....!!!

மேலும்

தம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2024 11:47 pm

காய்ந்த வயிறு
கஞ்சியைத்தான்
தேடும்
கடவுளை
அல்ல..... என்று
ஓரு பேராசிரியர்
பேசிய வார்த்தை
என்னை சிலிர்க்க வாய்த்த
ஒரு பேச்சாய் என்
மூச்சை
நிறுத்தி நகர்த்தியது.

உண்மையின்
தரிசனத்தை
ஒரு உவமை கலந்து
கூறியது கூரிய
வாளின் கூர்மை போல
என்னை
வெட்டிச் சாய்த்தது.....!!

இங்கே என்ன
உண்மை
என்பதை விட...... கஞ்சிக்கு
கையேந்தும்
கையறுநிலையில் மக்களை
விட்டு..... வெறும்
பொய் வாக்குறுதிகளை உயிரோடு
இருக்கும்போதே
வாய்க்கரிசி
போடும்
வார்த்தையால மேடைப்பேச்சின்
நிஜங்களை உணராத
மக்கள் அவர்களின்
வாழ்வின் பிறப்பின்
பயனை
பூர்த்தி செய்யாமலே
போய்ச்சேர்ந்து விடுகிறார்கள்.....!!

மேலும்

தம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2024 2:20 pm

தேர்தல் அரசியலில்
தேவையற்ற
விஷயங்கள்
தான்
தெருவில்
நடக்குது..... நடக்கவேண்டிய
விஷயங்கள்
மூடிய
அறைக்குள்
முடங்கிக்
கிடக்குது......!!

ஒரு கட்சியின்
சின்னம்
பறிக்கப்படவில்லை
மாறாக
அபகரித்து
அண்டை
மாநில
திருடர்களுக்கு
நம்
நிலத்தை
அபகரிக்க..... அழிக்க
அளிக்கப்பட
அன்பளிப்பு......!!

வளர்த்தவன்
எவனோ.....அதை
அதை
கறியாக்கி
விருந்துவைத்து
விருந்தோம்புவது
யாரோ என்பதுபோல
இங்கே
நடந்த
அநீதி......பகல்
திருட்டு ......!!
ஜனநாய நாட்டில்
பண
பினாமிகளின்
சுனாமியில்
சிக்குண்ட
சாதாரண
ஒரு...... மனிதனாக
சக
தோழர்களோடு
நீதிக்காக
நெடுந்தூரம்
சென்று.....தீர்வுக்

மேலும்

தம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2024 9:11 pm

எழுதாத
வலிகள்
ஏராளம்
என்னுள்......ஒளிந்து
இருந்தாலும்
விழி
தரும்
விழிநீரும்
வேதனையின்
உச்சமும்.....வெளியுலக அச்சமும்
என்னை
என்
கண்ணை
மூடிக்கொண்டு
உலகம்
இருட்டு என்று
திருட்டு மொழி பேச
வைக்கிறது.......

இங்கே
வசை
பாட
வரிசையில்
ஆயிரம் பேர்
உண்டு..... வாழ்த்துச்சொல்ல
சிதறிய
சில்லறைகளாய்
ஒருசிலரே
உண்டு.....!!

எல்லோரும்
மாண்டுவிடுவோம்
என்று
தெரிந்தும்
அசராத
கூட்டம்
இலாப
நஷ்டம் பார்க்குது
மூச்சுக்காற்றில்......!!

விண்ணுக்கு
ராக்கெட்
ஏவும்
உலகில்......
இன்னொரு
உடம்பில்
பில்லி சூனியம்
ஏவுவது
என்று
ஊரை
ஊமை ஆக்குகிறது......!!!

இங்கே
அல்

மேலும்

தம்பு - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2024 9:49 pm

சோதிடர்:
தம்பி உங்க பரம்பரைக்கே சோசியம் பாக்கறது எங்க குடும்பம். உன்னோட கொள்ளுத் தாத்தாவை நான் சின்ன வயிசிலே பாத்திருக்கிறேன்.‌ உன் தாத்தா பேரு வரதராஜன்.‌அவரோட கொள்ளுப் பேரனுக்கு அவரு பேரையே வைக்கணும்னு சொன்னாரு. உங்க அப்பனுக்கும் அது தெரியும். நீ இப்ப எங்கிட்டே வந்திருக்கிற. நல்ல செய்தியா இருக்கும்னு நினைக்கிறேன்.
@@@@@@@
ஆமாங்க சோசியர் ஐயா. என்‌ மனைவிக்கு இன்னிக்கு விடியல் காலை குழந்தை பிறந்திருக்கு.
@@@@@
சந்தோசம் தம்பி. உந் தாத்தா 'வரதராஜன்' ஐயா பேரை வச்சிடலாம்.
@@@##
நல்லதுங்க‌ ஐயா.‌ ஆனால் பிறந்தது இரட்டை ஆண் குழந்தைகள். ஒரு பையன் 'வரதராஜன்'. இன்னொரு பையனுக்கு?
@@#####
அது ஒ

மேலும்

வணக்கம்.‌ சிரிப்புக்கு ஏற்ற பெயர் வராதராஜன். நல்ல கருத்து. நன்றி ஐயா. 02-Mar-2024 6:12 pm
வணக்கம் .....!! நான் ஒரு பெயர் வைக்கலாம் என்று யோசிச்சேன். ஒருவர் வரதராஜன் மற்றவர் வராதராஜன் என்று. சிறு சிரிப்புக்காக கூறினேன். நன்றி வணக்கம் 02-Mar-2024 2:55 pm
தம்பு - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2023 3:16 pm

மிதக்கும் சென்னை - வெள்ளம் காண்பித்த உள்ளங்கள் ----!!

உன்னையும்
என்னையும்
உடன்பிறப்பாக
எண்ண வைத்த தருணங்கள்
இவை.....!!

வெள்ளம் வந்துதான்
சில
உள்ளங்களை
உனக்கும்
எனக்கும்
காண்பித்து
போனது.......!!

வருஷா வருஷம்
பருவமழை
வருவது...... இயல்பு
அதுபோல
அரசியல்
வாய்கள்
வாய்க்கால் சரி.....வாய்த்தவர்கள்
சரியில்லை
என்று
வாதாடிப்
போனது......!!

அரச
இயந்திரம்
முடங்கியே
போனது...... உதவும்
கரங்களாய்
மனிதாபிமானம்
தடைகளை
வென்றது......!!

தனது
பாதையை
பணமாக்கிய
ஆட்சியாளர்களின்
காலத்தில்
முதலையும்
பாம்பும்
என்
வீடு தேடிவருவது
தவறில்லையே......!!

கோ

மேலும்

வணக்கம்....!! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வாழ்க தமிழ்..... வாழியவே.......!! 15-Dec-2023 11:32 am
தம்பி தம்புவிற்கு ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக் குறள் வெண்பா தமிழர் வெகுளி அகத்தியனின் வார்த்தை துமியும்பொய் யில்லை உணர் இப்படித்தான் என்றும் தமிழர் வாழ்வர் 15-Dec-2023 8:26 am
yathvika komu அளித்த படைப்பில் (public) Radja Radjane மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2012 2:01 pm

அம்மா !
ஆயிரம் ஆயிரம்
விட்டில் பூச்சியாலும்
அணைக்க முடியாத
அன்பின் மெழுகுவர்த்தி நீ !

காலை காப்பியில்
தொடங்கி
இரவு போர்வை போர்த்துவது வரை
எத்தனை எத்தனை
பணிவிடைகள்
செய்வாய் நீ !

நான் காலையில்
கிளம்பும் போது
உன் பரபரப்பு
பம்பரத்தை போட்டிக்கு அழைக்கும் !

வேண்ணும்மா...............
சொன்னால் போதும் ,
எனக்காய்
பாற்கடலை கூட
பரந்தாமனிடம் கடனாய் கேட்பாய்!

பசிகிதுமா ......,
சொல்லி முடிப்பதற்குள்
பல வகைகளை
பத்து நிமிஷத்தில்
பரிமறுவாய்!

காய்சல் வந்து
நான் படுத்தால்..............!
கஞ்சி கூட உப்பு கரிக்கும்
உன் கண்ணீர் பட்டு !

அம்மா ...,

மேலும்

இணையில்லா அன்பு…… வரிக்கு வரி தாயன்பு…..அதை மிஞ்சிட தரணியில் வேறேதும் உண்டோ….?????? மிக அருமையான வரவு….. இன்னும் வர வாழ்த்துகிறேன்…..!! 10-Oct-2021 2:31 am
தாய்க்கு ஈடிணை யாருமில்லை! என் கண்கண்ட தெய்வம் அம்மாதான். அவளை மிஞ்சிய கடவுள் ஒன்று உண்டென்றால் அவை பொய்தான். 09-Jul-2016 4:36 pm
ஆஹா அருமை தாய் என்றால் முத்திரையுடன் வருகிறது கவிதை . வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் உங்கள் கவிதையை . நற் கவிஞர்கள் பார்வை சொடுக்கு பற்றி கவலைப்படக் கூடாது. முத்திரைக் கவிதைகள் எந்தக் கதிரிலும் எந்த நிலவிலும் எந்த இரவிலும் பிரகாசிக்கும் .அவை சுயம் பிரகாசிகள் .இது முத்திரைக் கவிதை என் கருத்துக் கணையாழி உங்களுக்கு உரித்தாகுக . வாழ்த்துக்கள் யாத்விகா கோமு அன்புடன்,கவின் சாரலன் 10-May-2015 7:01 pm
"அம்மா" கவிதை அருமை,! 04-Jun-2013 4:03 pm
தம்பு - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2021 10:45 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

சினம் கொண்ட வார்த்தைகள் சிந்திக்க வைத்தது. மனித மனங்கள் மரத்துப்போனது மனிதன் என்பதை மறந்துபோனது. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.....!! 24-May-2021 4:35 am
தம்பு - Ravisrm அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 4:22 pm

பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்

ராதாராஜன் கூறியிருக்கும் வார்த்தை தமிழர்களையும் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது

இன்று மெரினாவில் கூடும் அன்பும் பண்பும் நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் மிக்க ஒரு எழுச்சி சக்தியை இவ்வாறு கூறும் இவர்

நாளை தன் அமைப்பிற்கு ( பீட்டா ) எற்படும் சிக்கலுக்காக நியாயம் கேட்டு அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஒன்றுக்கு கூடி ஆர்ப்பாட்டம் செய்தால் அப்போது அவர்களும் இத்தகைய சொல்லிற்கு ஏற்றவர்களா இருப்பார்கள் என்று ராதா அவர்களே கூறுவது போல் உள்ளது


ஆகையால் ஒட்டு மொத்த இந்தியர்களை இழிவுப் படுத்தி பேசியதற

மேலும்

கடமைகள் செய்ய யாரும் இங்கே இல்லை காசுக்கு விலை பேசப்படுகின்றன என்ன செய்வது 21-Jun-2017 8:55 am
பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுத்தார்களா? தமிழா நீ எதையும் மறந்து விடுவாய் ! அவளை மன்னித்து விட்டாயா ? 12-Jun-2017 9:20 am
இவர் நிச்சயமாக பதில் கூறியே ஆகவேண்டும். பெண் என்றாலும் பேசுகின்ற வார்த்தைகளில் சிரிதேனும் உயர்ந்த எண்ணம் வேண்டும். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். 24-Jan-2017 5:54 pm
அந்நியன் கூட இவ்வளவு அசிங்கமாக பேசியிருக்க மாட்டான்.இந்தப் பெண்மணி மட்டும் நாட்டுக்குள் வீட்டுக்குள் இருந்து இப்படிப் பேசுகிறதே. என் கோப வரிகள் இங்கே தணிக்கை செய்யப்படுகிறது. என் சக மனிதனின் நாகரீகம் கருதி.இதைச் சொல்லித்தான் அவர்களும் கூட்டம் சேர்க்கிறார்களா என்று மறுகேள்வி கேட்டுச் சொல்லுங்கள் நாம் அவர்களை வீட்டுச் சிறையில் அடைப்போம். வயதின் முதிர்ச்சி வார்த்தையில் இல்லை.... வாயில்லா ஜீவன் வாய்க்குள் புரியாணி ஆவதை ஆதரிக்கும் கூட்டம்......வளர்த்த பிள்ளையை வருடி அணைத்து வருடம் ஒருமுறை கொண்டாடும் எங்க வீட்டு விழாவில்.....தடை சொல்ல பீட்டா யாருடா? மகளிர் அமைப்பு மாதர் அமைப்பு இவை எல்லாம் இவற்றைக் கண்டுகொள்வதில்லை போலும்...... கவிஞனும் கதாநாயகனும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரியும் போல......?????????? நன்றி.(தவறேதும் இருந்தால் தணிக்கை செய்து விடுங்கள்) 23-Jan-2017 2:20 am
தம்பு - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 10:51 am

மனமே மனமே
இந்த
மௌனமேன்
உனக்கு....?
உன் மௌனங்கள்
கலைத்திடு.....என்
உயிரில்
சந்தோசம்
கலந்திடு......!

பார்வையால்
தாக்கிப்
போகிறாய்.....
வாழும் காலத்தை
வீணாக்கிப்
போகிறாய்.....
காலங்கள்
கனியுமென்று
நம் காலங்கள்
தொலைகிறதே......!

உன்னில் காமம்
வைச்சு
சுற்றவில்லை....
சாதி மதம்
பார்க்கவில்லை.....
அந்தஸ்து
அந்தப் பக்கம்
போகவே
இல்லை.....சாதாரண
வாழ்க்கையை
சந்தோஷமாய்
உன்னோடு
வாழ......உன்
வாழ்க்கையை
கேட்கிறேன்......
காதலுடன்......!

உன்னோடு
மலர்ந்த
காதல்......
உன்னைச்
சேர்ந்தால்
மட்டுமே
வாசம்
வீசும்.....இல்லையேல்
கருகி விழுந்து
மரத்தடியில்
சருகாகும்.

மேலும்

தம்பு - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2014 5:05 am

என் உலகம்
உன் கருவில்....நலம்
தானே
என்னவளே.....?

இவன் மனமும்
பிள்ளை மனம்.....பிள்ளையின்
நினைவுகளில்
மூழ்கி......!!

இப்போதே
ஊஞ்சல்
கட்டி
ஆடுதடி.....கோடி
சந்தோசம்
கூடுதடி......!!

மழலைச்
சிரிப்புக்கள்
மனசில்
இப்போதே
இடம்
கேட்டு....அடம்
பிடிக்குதடி......!!

மருத்துவங்கள்
என்ன
செய்தாலும்....மனம்
நிறைந்த....மகிழ்ச்சி
மனம்
திறந்த
பேச்சில் உண்டாகுமே.....!!

மேலும்

உங்கள் மனம் திறந்த கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி. 09-Dec-2014 2:40 am
உண்மைதான் ... உங்கள் இறுதி வரிகள் தம்பு . நன்று 08-Dec-2014 7:20 am
நன்றி... 08-Dec-2014 1:56 am
அழகு ..... 07-Dec-2014 11:01 pm
தம்பு - ஜின்னா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2014 12:39 pm

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதையில் என் கவிதைக்கு இரண்டாம் பரிசு வந்துள்ளது.

o என் கவிதையை வாசித்து வாழ்த்திய, கருத்து வழங்கிய எல்லா தள தோழமைகளுக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

o வாய்ப்பளித்த தம்பு தோழருக்கும், போட்டி நடத்திய அனைத்து தள தோழமைகளுக்கும், எழுத்து குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:
எனது பரிசு தொகையை தமிழ் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு / தளத்தின் சேவைகளுக்கு அளித்து விடுகிறேன். தயவு செய்து இந்த அன்பளிப்பை என (...)

மேலும்

மிக்க நன்றி தோழரே.... 17-Sep-2014 1:34 am
தங்களின் படைப்பு வெகு அருமை தோழா பரிசு பெற்றமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 16-Sep-2014 8:41 pm
ஐயா தம்பு , நானும் அப்படியேதான் . இன்னும் அதே நிலையில்தான் உள்ளேன். மற்றவர்கள் மலை என்றால்நான் சிறு கல்லே . மற்றவர்கள் கடல் என்றால் நான் ஒரு ஓடையே. 04-Sep-2014 7:27 am
இங்கே நான் ஒரு கவிதை ரசிகனாக மட்டுமே அறிமுகமாகி......ஏதோ கொஞ்சம் எழுதிக் கொண்டேன் கவிதை என்று. அவ்வளவு புலமை இல்லை.ஆனால் இங்கே பல தோழர்களின் பதிவுகளில் பளிச்சிடும் கவிநயம்......என்னைப் பயமின்றி கவிதைப் போட்டி வைக்க வைத்தது.அதில் கொஞ்சம் வெற்றியும் அடைந்தேன். ஆர்வமுடன் கவிதந்த என் சக தோழன் தோழிகளுக்கு என் நன்றிகள். என்னைப் பொறுத்தவரை நான்கு விடயங்களை கணக்கெடுத்து தேர்வு செய்தேன். மன நிறைவு கொண்டேன். என்றும் நட்புடன் Thampu 04-Sep-2014 3:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (271)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (271)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (272)

pankokarun

pankokarun

திருச்சி
மு முருக பூபதி

மு முருக பூபதி

Perundurai erode district
user photo

sethuramalingam u

vickramasingapuram

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே