யாத்ரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யாத்ரா
இடம்
பிறந்த தேதி :  24-May-1984
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Dec-2014
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  10

என் படைப்புகள்
யாத்ரா செய்திகள்
யாத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2016 1:04 pm

ரகசியக் குரலோடு அலைபேசி
சிலிர்க்கும் அற்புதம்
மீண்டும் நடக்க ஒரே முறை அழை
பிழைத்துக் கிடக்கும்
மலையாய் குவிந்து விட்ட
ஒரு முறையேனும் நீ அழைக்கும்
ரகசியம்

யாத்ரா

மேலும்

Nanru 06-Feb-2016 1:38 pm
யாத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2015 1:38 pm

எழுதாத கவிதைக்கும்
உன் பெயரே
வைப்பதில் தொடங்கியது
என் காதல்

யாத்ரா

மேலும்

அழகான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2015 9:32 pm
யாத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2015 12:51 pm

தொடுவானம் தாண்டி
ஓடிய நான் சட்டென ஒரு
துள்ளலில் பறக்கவும்
தொடங்கி விடுகிறேன்
எப்படியோ, முளைத்துக்
கொண்ட சிறகில் வாழ்க்கையின்
வண்ணம் உதிரத் தொடங்குகையில்
வானம் நீலமல்ல நீளம்
பிரபஞ்சம் திறக்கும் கதவில்
ஜன்னல்கள் முளைக்கத் தொடங்குகிறது
கவனிக்கவே முடியாத ஜன்னல் ஒன்றில்
ஒரு வளைக்கரம் விரல் அசைப்பதில்
ஒரு வெளிச்சம் தீண்டும் இறகொன்றை
உள் வாங்காமலே கடந்து விடுகிறேன்
பூமி புள்ளியாகி மறையத்
தொடங்கியிருக்கிறது

யாத்ரா

மேலும்

நல்ல கவிதை... வார்த்தைகளின் கோர்வைகள் அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 4:43 pm
எண்ணம் எழில் !! எனினும் கட்டமைப்பினில் கூடுதல் கவனம் காட்டவேண்டும் !! வாழ்த்துக்கள் !! 23-Nov-2015 1:07 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2015 12:59 pm
யாத்ரா - யாத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2015 6:36 pm

பெண் வேடம் என்பதை
நம்ப மறுத்தவர்கள்
விடியலில் காணாமல்
போயிருந்தார்கள்
நான் மட்டும் ரயிலடியில்
குதரப்பட்டு செத்துக் கிடந்தேன்
தயவு செய்து எனை
புதைக்கும் முன் எனக்கு
ஆண் ஆடை அணிவியுங்கள்

யாத்ரா

மேலும்

யாத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 2:12 pm

நதியின் தியானத்தை
கலைக்க விரும்பாத
இலை அதன் போக்கில் போய்க்
கொண்டிருந்தது
புரிந்து கொண்ட எறும்பு
இலையில் அசையாமல்
நின்றிருந்தது
புகைப்படம் எடுத்து காட்சியை
நிறுத்தி விட விரும்பாத நான்
முடிந்த வரை பார்த்து கொண்டு
மட்டும் இருந்தேன்
அது தவமாக தெரிந்திருக்கலாம்
என் பின்னால் நின்றிருந்த மரத்துக்கு.

யாத்ரா

மேலும்

யாத்ரா - யாத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 6:54 pm

கொலை
செய்யப்
பட்டவனும்
தூக்கில்
தொங்கும்
தொங்கு பாலச்
சிந்தனை..
இந்த காதல்

எதுவரை
என்பதில்
ஒன்றும் இல்லை.
வரைமுறை
இல்லாத
வரையறை
சில கொலைகள்...

மேலும்

சிறப்பு தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 1:59 am
யாத்ரா - யாத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2015 1:41 pm

ஆண்டனா இருக்கும் வீடுகளே
செழிப்பானவைகள் என்ற 80
ஒரு புரிதல்
எல்லா வீடுகளிலும்
வட்டத் தட்டுக்கள் கேபிள் ஒயர்கள்
இருக்கும் 2015- செழிப்புக்கும் பிழைப்புக்கும்
இடையிலான குழப்பம்

யாத்ரா

மேலும்

நல்ல அலசல் .. இன்னும் கொஞ்சம் நன்றாக அலசி இருக்கலாம் !! 80 என்பது 1980 களில் என்றிருக்கலாம் 05-Nov-2015 3:08 pm
யாத்ரா - யாத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2015 11:46 am

என் தாத்தாவுக்கும் என் அப்பாவுக்கும்
இருந்த தூரம் ஒரு நேர்கோடு
அது சற்று அதிகமாகி
எனக்கும் என் அப்பாவுக்கும்
ஒரு வளைவை உண்டாக்கியது
அது தீரா வளைவுகளோடு
திரும்பி திரும்பி திரும்பிக்
கொண்டேயிருக்கிறது
எனக்கும் என் மகனுக்குமான தூரமாய்

யாத்ரா

மேலும்

பார்வை பளீச்சிடுகின்றது !! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 03-Nov-2015 12:24 pm
நல்ல வரிகள் தோழமையே... 03-Nov-2015 11:58 am
KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) Pulami மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2015 2:04 am

மெல்லடித் திங்கள் தவழத்
தேய்கின்ற
பிறைத் தடங்களில்
மதுரமாய் உதிரும்
மணிப்பூக்களின் ஆரோகணம்
பால்முக மனைவலம் ….

கண்மணிக்குள் (கண்ணின் கருமணி)
தாரகைத் துணுக்குகள்
மந்தகாசப் பூவாய்
மின்னூட்ட
கற்கண்டு முத்தங்கள்
ஆலங்கட்டி பொழியக் கொஞ்சும்
உன்மத்தம் …

மழலைமொழி
குங்குமப்பூத் துருவல்கள்
வெற்றிடம் சிவக்கும்
யாரோடு மிழற்றுமோ
தாய்மொழி தத்தும் பேரின்பம் ….

வா , போ
என்பதெல்லாம்
மனமொன்றிக் கிறங்க
வயது கொண்டாடும்
உரிமைக் கனவுகளின்
மந்திரப் புளங்காகிதம் ….

பட்டுத் தழுவலில்
தாய்மணம் சுரக்கப்
பொம்மைகள் வளர்க்கும்
பிஞ்சுத் தாலாட்டு ….

பளிங்குக் குறும்

மேலும்

தஞ்சாவூர் தலையாட்டி ஆண் பொம்மை மாதிரி உள்ள பானை வயிற்றை இப்படித்தான் ஏடா கூடமா ஏதாச்சும் பண்ணி மறைக்கவேண்டி உள்ளது. ஸோ புலமி......முழு பூசணிக்காவ போட்டோலயும் மறைக்க முடியும்!! நன்றி 01-Apr-2015 4:27 pm
தங்களின் புகைப்படம் போன்றே எனது தம்பியும் திடீர் போலீஸ் ஆகிவிட்டான் சார்...( இதே படத்தில் அவன் முகமும் பொருத்தியுள்ளான்.)நன்றாக உள்ளது....தங்களின் குறும்புகளுக்கு எல்லையே இல்லை.....வருகையில் மகிழ்வு சார்...... 31-Mar-2015 9:00 pm
துரு துரு வென்றிருந்தான் தூக்கி வைத்திருந்த போதென் கரு கரு மீசையிழுத்தான் வலியும் சுகமாக அவன் சிரித்து இரு இரு பே என பயம் காட்டினான் முகம் மூடி பயந்து நான் நடிக்க சிறு உரு மழலையுமாக்கினான் எளிமையாக.....எழிலாக...... என் மனம் கவர் கோட்டோவிய மழலை அரும் தமிழ் சோலையில் உவமை மலர்களாய் 31-Mar-2015 12:57 pm
மிக்க நன்றி...... 28-Mar-2015 6:30 pm
கவிபுத்திரன் எம்பிஏ அளித்த எண்ணத்தில் (public) arunvaali மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Feb-2015 11:43 am

தோழமைகளே இந்த புகைப்படத்தை பார்த்து சுருக்கமாக நறுக்கென உங்கள் கவிதையை பதியுங்களேன்

மேலும்

சபாஷ் அருமை வள்ளுவன் இரண்டாயிரம் ஆணடுகளுக்கு முன்னே வெகுண்டுரைத்தது : இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றி யான் வாழ்த்துக்கள் சபியுல்லா. 13-Feb-2015 8:29 pm
மனசாச்சி இல்லாத மனிதர்கள் மனதில் பின்னி கொண்ட வலை இரக்க குணத்தை அறிய இறைவன் பணம் அளித்தான் ... மனமே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் . காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 12-Feb-2015 9:48 am
கொடுமைதான் தோழரே கை எந்துபவர்களுக்கு கை கொடுக்க எவருமில்லை 12-Feb-2015 9:40 am
இக்கொடுமை ஒழிய வேண்டும் 12-Feb-2015 9:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
Dr ரத்னமாலா புரூஸ்

Dr ரத்னமாலா புரூஸ்

நாகர்கோயில்
mohan4390

mohan4390

Pondicherry
T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (33)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (32)

சீனி

சீனி

மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே