Arunvendhan Profile - அருண்வேந்தன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்வேந்தன்
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  30-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Apr-2015
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  41

என் படைப்புகள்
arunvendhan செய்திகள்
arunvendhan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 8:04 pm

வீறுகொண்டு வா காளையா
வீட்டைவிட்டு வா காளையா..
வீதிசென்று நாம் போராடினோம்
விதியை மீறியினி விளையாடுவோம்..
உனக்கென எதற்கு கட்டுப்பாடு
உதறிவிட்டு வந்து விளையாடு
சதிச்சூழ்ந்த பூமிதானிது
மதிக்கொண்டு மாற்றும் நேரமிது...

வனங்களில் ஏதடா காளை
வெள்ளையனுக்கெல்லாம் இங்கென்ன வேலை..
பரிவோடு வரும் பாம்பு நல்லதல்ல
அடித்தாலும் அன்னையவள் தீங்கல்ல..
எங்கள் பிள்ளைப் போலடா நீ
எவன் பேச்சிற்கும் அடங்காதே இனி(நீ)..
வீறுகொண்டு வா காளையா
சீறிப்பாய்ந்து வா காளையா...!
-அருண்வேந்தன்

மேலும்

arunvendhan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 1:39 pm

நெடிலாகிய பார்வையில்
குறிலாகிப் போகிறேன்...
மடிமீது சாயவே
மதியிழந்து தவழ்கிறேன்...
ஒருநிமிடம் தானடி
உடல்மெலியப் போகுதா...
சாய்ந்துறங்கும் காட்சியை
சங்கமேதும் சபித்ததா...
பிழையேதும் இல்லையே
பிறகென்னப் பறக்கிறாய்...!?
-அருண்வேந்தன்

மேலும்

arunvendhan - arunvendhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2016 12:41 pm

ஆணிப்பொன் நிலவே
ஆரா என்னமுதே...
தேயும் பிறையொளியின்
மங்கா மாச்சுடரே...
மயிலும் மதியிழக்கும்
துயிலும் விழி மறக்கும்
மானே நீ கடந்தால்
மஞ்சம் சிறகடிக்கும்
புரவியும் திசை மறக்கும்...!
நௌவி நின் வடிவில்
மௌவலும் விழையும்
இந்த யௌவனம் பொருள்கொள்ளும்...!
-அருண்வேந்தன்

மேலும்

மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 3:49 pm
கவிகளில் படர்ந்த அழகிய தமிழ் மகள் அற்புதம்! வாழ்த்துக்கள் தோழமையே! 05-Aug-2016 3:42 pm
மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 2:33 pm
இனிமையான வரிகளில் தமிழ் மகள் சிலிர்த்திட்டாள். வாழ்த்துக்கள் ..... 05-Aug-2016 2:09 pm
arunvendhan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2016 12:41 pm

ஆணிப்பொன் நிலவே
ஆரா என்னமுதே...
தேயும் பிறையொளியின்
மங்கா மாச்சுடரே...
மயிலும் மதியிழக்கும்
துயிலும் விழி மறக்கும்
மானே நீ கடந்தால்
மஞ்சம் சிறகடிக்கும்
புரவியும் திசை மறக்கும்...!
நௌவி நின் வடிவில்
மௌவலும் விழையும்
இந்த யௌவனம் பொருள்கொள்ளும்...!
-அருண்வேந்தன்

மேலும்

மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 3:49 pm
கவிகளில் படர்ந்த அழகிய தமிழ் மகள் அற்புதம்! வாழ்த்துக்கள் தோழமையே! 05-Aug-2016 3:42 pm
மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 2:33 pm
இனிமையான வரிகளில் தமிழ் மகள் சிலிர்த்திட்டாள். வாழ்த்துக்கள் ..... 05-Aug-2016 2:09 pm
arunvendhan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 3:08 pm

காவிரி தடுத்து
முல்லை மறித்து
விளைநிலமும் பறித்து
கெயில் என்பாய்
மீத்தேன் என்பாய்
வளர்ச்சி என்பாய்
உண்டு வாழ என்ன என்றால்
பணத்தை நீட்டி இழப்பென்று கொடுப்பாய்...

நீதி இழந்து
அரசும் மதியிழந்து
உழவனின் உயிரழித்து
உலகமயம் என்பாய்
வணிக உலகமென்பாய்
ஒத்திசைந்து வாழு என்பாய்
இயற்கையை அழிக்க மறுப்பேனென்றால்
தேசத்துரோகி பட்டம் கொடுப்பாய்...

ஒற்றுமை இழந்து
விழிப்பு இழந்து
வளர்ச்சி மாயையில் தவழ்ந்தனால்
அணு உலை பதித்தாய்
காற்றாடி நிறுத்தினாய்
மின்சாரம் என்றாய்
மீறி எதிர்ப்பேனென்றால்
வழக்கை பதித்து வாழ்வை அழிப்பாய்...

இன்னும் எதனை அழித்து வாழு என்பாய்
இயற்கையை அழித்து எதில் இ

மேலும்

arunvendhan - arunvendhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2015 11:15 am

அழல் பிறக்கும் திருநாளில்
அகல் விளக்கின் மிதவொளியில்
ஆடலழகனின் புகழ்பாட
அண்ணாமலையானில் தஞ்சமடைய
விளக்கிட்டு தொழுதிடுவோம்
வினைகள் தீர்ந்து மகிழ்ந்திடுவோம்..

இனிய கார்த்திகை விளக்கீடு திருநாள் நல்வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி நண்பரே 26-Nov-2015 2:58 pm
நன்று... இன்பம் பொங்கட்டும் இப்போது போல எப்போதும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:51 am
நன்றி நண்பரே 25-Nov-2015 2:14 pm
மாவிளக்கு கோளத்தில் தீபங்கள் மலர்கள் பூத்து இன்பம் வீச என் கார்த்திகை திரு நாள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 1:14 pm
arunvendhan அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2015 5:24 pm

குடிசை வீட்டில்..
மண் தரையில்..
விறகு அடுப்பில்..
மண்ச்சட்டி சமையலில்..
வாழையிலைச் சோற்றில்..
கிணற்று நீச்சலில்..
கயிற்று கட்டிலில்..
தென்னமர காற்றில்..
பனைமர நுங்கில்..
வரப்பு வயலில்..
ஊர்த் திருவிழாவில்..

இருக்கும் சுகமும் மகிழ்வும்
வேறெங்கும் இருந்து விடப்போவதில்லை...!

வாழும் சொர்க்கத்தை
தொலைத்து விட்டு
இறந்த பின்பு அதில்
வாழத் தொழுகின்றோம்...!
-அருண்வேந்தன்

மேலும்

நன்றி 03-Nov-2015 11:10 am
அருமை .... 13-Sep-2015 5:08 pm
நன்றி தோழி 03-Sep-2015 5:00 pm
நன்றி தோழி 03-Sep-2015 4:59 pm
arunvendhan - arunvendhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2015 8:05 am

தங்களின் அரசியல் வாழ்வாதாரத்திற்காக
இதை கையிலெடுத்துள்ளது
ஒரு கூட்டம்...

மது ஆலைகளை வைத்துக் கொண்டு
வேறு வழியின்றி மதுவை எதிர்க்குது ஒரு கூட்டம்...

விற்றவனை விட்டுவிட்டு தடுப்பவனை
தொறத்தி அடிக்குது ஒரு கூட்டம்...

எவ்வளவு எதிர்த்தாலும் தடைவிதிக்காமல்
விற்றுப் பிழைக்குது
ஒரு கூட்டம்...

கேடு எனத் தெரிந்தும்
குடித்து குடித்து அழியுது
ஒரு கூட்டம்...

இந்த கூட்டத்திற்காக
பேருயிரை இழந்து தவிக்குது
ஒரு கூட்டம்...!

எது எப்படியோ மது விலக்கை
நோக்கி தமிழகம்...

மேலும்

நன்றி நண்பா.. நிச்சயம் அழியும் நம்புவோம் 04-Aug-2015 2:43 pm
நல்ல படைப்பு நண்பரே!! மது ஒரு நாள் நிச்சயம் அழியும் இறைவனின் நாட்டம் இருந்தால் 04-Aug-2015 11:46 am
arunvendhan - arunvendhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 5:55 pm

மேகங்கள் சூழ்ந்தாலும்
பிறை அழகாலே எனை ஆளும்
வானழகி நீ...

கதிரவன் பால் மலர்ந்தாலும்
என் கழனியிலே தவழ்ந்தாடும்
பேரழகி நீ...

ஒருநாள் தான் என்றாலும்
மனம் முழுதும் ஆட்கொள்ளும்
மாதவி நீ...

இதுபோதும் என்றாலும்
இன்றியமையாமல் எனைக் கொல்லும்
அழகாட்கொல்லி நீ...!

மேலும்

நன்றி நண்பா 08-Apr-2015 12:31 pm
அழகாட்கொல்லி நீ... மிக ரசித்தேன் 08-Apr-2015 5:14 am
ஓடும் மேகத்தை பார்த்து கொண்டே , ஆடும் மரங்களை ரசித்து கொண்டே , வீசும் காற்றை உணர்ந்து கொண்டே , பாடும் குருவிகளின் இசையை கேட்டு கொண்டே , அமைதியான கிராமத்தில் , புவித்தாய் மடியில் , இயற்கையோடு , எழுத்தாணி முனையில் நீ . தொடரட்டும் உன் கற்பனை வாழ்த்துக்கள் நண்பா !!! 07-Apr-2015 9:45 am
இனிமையான ஒரு படைப்பு.....வாழ்த்துக்கள் 06-Apr-2015 11:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

KR Rajendran

KR Rajendran

கோவை
manimegalaimani

manimegalaimani

தமிழ்நாடு
AnnesRaj

AnnesRaj

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

manimegalaimani

manimegalaimani

தமிழ்நாடு
AnnesRaj

AnnesRaj

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
மேலே