அசோக் விஜி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அசோக் விஜி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-May-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  4

என் படைப்புகள்
அசோக் விஜி செய்திகள்
அசோக் விஜி - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2016 9:09 pm

சிறகுகளில்
சிலுவை அறைந்த
பறவை இது

ரசாயன வாடையில் தன்
ரசமிழந்த
காற்று இது

உதிக்கும் சூரியனோடு
சிரிக்கும் மலர்களோடு
இனிக்கும் நிலவோடு
இருக்க நேரமில்லை

அலாரங்களோடு
அலுத்துப் போன
வாழ்வு இது

அன்று
விடியலை எண்ணி
கண் அயர்ந்தேன்
இன்று
விடியாதே என
தவம் கிடக்கிறேன்

ரசனை அழிந்து போனது
ரசிக்க மறந்து
போனது
கவிதை கூட
தொலைவாய் ஓடி
போனது

மனதினுள் குமுறும்
எரிமலையில்
மெல்ல சாகிறது
எனது சுயம்
இனி இதுதான்
நிரந்தரமா
ஏனோ பெரும் பயம்

கடந்து போன
பேருந்தில்
இதுவும் கடந்து போகும்
என வசனம்

மேலும்

எனக்கு சுட தெரியாது தோழரே 14-Apr-2016 6:53 pm
பல இடங்கள்ள சுட்ட மாதிரி இருக்கே..! சபாஷ், சரியான கலவை! 11-Apr-2016 5:55 pm
நன்றி நட்பே 01-Mar-2016 9:31 am
அருமை..! 29-Feb-2016 5:00 pm
அசோக் விஜி - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2015 11:20 pm

"மெல்லிய கனவுச் சரிகைகளால் பூவேலைப்பாடு செய்யப்பட்டது என் உறக்கம் "

“My sleep had been
Embroidered with
Dim dreams” (John Keets)

உலக மகாகவிகளில் ஒருவரான அழகுக் கவிஞன் ஜான் கீட்ஸின் உறக்கத்தைப் படிக்கும்போதே கண்கள் கிறங்கி இமைக்கதவுகள் மூடத் தவிக்கும் கனவுச் சரிகைகள் பின்ன.

“போனதெலாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானும் ஓர் கனவோ -இந்த
ஞாலமும் பொய்தானோ? (பாரதி)

தேசீயக் கனவுகள் கண்ட பாரதியின் ஆன்மீகக் கனவுகளோ மந்திர இழைகளால் பின்னப்பட்டவை ..

கனவுகள்..யாவை? கனவு என்பதே ஒரு கனவோ?

“சொப்னங்ஙளே நிங்ஙள்
சொர்க்க குமாரிகளல்லோ ..
நிங்ஙளிப் பூமியில் இல்லா

மேலும்

ரொம்ப தேங்க்ஸ் ..தொடருங்கள் ..// 12-Apr-2016 9:10 am
மிக்க நன்றி ..தோழரே.. இனிய புரிதலுக்கும். ஆதரவுக்கும். மேலாக, இத்தொடர் நூல் தொடர் என்பதால் மூன்று நூல்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் என் சொந்த செலவில் seidhu sariyaa தமிழ் அறிஞர்கள் / பல்கலை கழகங்களில் பார்வைக்கு எடுத்துச்செல்வேன் , சென்ற வருடம் வெளியான இத்தொடர் போன்ற " இவர்களால் சிலிர்க்கும் இயற்கை' நூல் ஓர் அடர்வனமாக விரிவதாக பலரும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். முன்னோடிக் கவிஞர்கள். சிற்பி, இன்குலாப் , மேத்தா , வைரமுத்து போன்றோர். இத்தனைக்கும் கன்னடம் சார்ந்த மொழி பேசுபவன். தமிழ் நீரோட்டமாக பேசத்தேரியாதவன். கட்டிடப் பொறியாளன். தமிழின் மேல் வெறித்தனமான காதலில் நல்ல கவிதைகளை காலப்பெட்டமாக தொகுத்துத் தர வந்தால் பல பேர் இதை புரிந்து கொள்வதில்லை. தெரிந்த பல பேர் தளத்தில் ஆதரிப்பதும் இல்லை. அதனால் நான் கவலை கொள்வதும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே. மீண்டும் நன்றி. 11-Apr-2016 11:21 pm
பத்து வரி சிறுகதைய 20 வரிகளாக மடக்கி கவிதைன்னுட்டு பிரசுரம் செஞ்சிக்கிற கவிஞர்கள் மாதிரி செய்யாம , நல்ல கவிதைகள எழுதிட்டு , வெளிய தெரியாம இருக்கறவங்கள இத மாரி தொடர்கள் மூலம்...... என்று படிக்க வேண்டுகிறேன் 11-Apr-2016 10:32 pm
என்ன பெரிய பாவம் செய்து விட்டீர்கள் அப்படி..? இதில் வளர்ச்சி எங்கே கெடுது..நல்லாதானே நெறைய பேர்கள் உருவாகறாங்க..அல்லது வெளியில் தெரியிறாங்க.. அங்க இங்க ஆழ புடிச்சி ஆனந்த விகடன் போல பத்திரிகையில பத்து வரி சிறுகதைய 20 வரி மடக்கி பிரசுரம் செஞ்சிக்கிற கவிஞர்கள் மாதிரி வெளிய தெரியாம இருக்கறவங்கள இத மாரி தொடர்கள் மூலம் நீங்க வெளியே கொண்டு வரது தப்பா..?ஒண்ணுமே புரியலப்பா ..ராமா..ராமா..! 11-Apr-2016 10:26 pm
அசோக் விஜி - பவித்ரன்1 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 8:14 pm

இணைந்துவிட்டோம் என்பதற்காகவே தொடர்கிறது
பெரும்பாலானோரின் வாழ்க்கை

மேலும்

இது போன்ற கவிதைகளை ஆரம்பத்தில் தவிர்க்கலாம். நாமெல்லாம் பெரிய கவிஞர் ஆன பிறகுதான் இதுபோன்று எழுதினாலும் கவிதை என்று கொண்டாடுவார்கள். எனது முதல் கைவிதையை வாசிக்க உங்களை அழைக்கிறேன். 21-May-2015 7:09 pm
அசோக் விஜி - பவித்ரன்1 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2015 2:19 pm

காடு......
மண்ணின் ஆடை
மலையின் கூந்தல்
நதியின் பிறப்பிடம்
மக்களிடமிருந்து தப்பித்த
மாக்களின் மறைவிடம்
நிலமகளின் பச்சைப் பட்டாடை
அருவிக் குழந்தைகள் தவழ்ந்து
நடை பயிலும் மைதானம்
மர மாமுனிகள் ஒற்றை காலில் தவம் இருக்கும்
தவச்சாலை !!!

மேலும்

அருமை. தொடருங்கள். 26-May-2015 5:16 pm
இன்னும் இன்னும் கொஞ்சம். வளர்க கவிதை! 21-May-2015 7:05 pm
காடு இக் கவியின் கருப பொருளும் கூட அழகு 21-May-2015 2:31 pm
நல்ல கவி வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 21-May-2015 2:28 pm
அசோக் விஜி - பவித்ரன்1 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 8:21 pm

மார்பில் சாய்ந்து அவள் சொன்னாள்
நமக்கு குழந்தை வேண்டாம் என்று .
அது சரி....
எந்த குழந்தை தான் இன்னொரு குழந்தையின் வரவை விரும்பும் !!!!!

மேலும்

கடைசியில் கேள்விக்குறி இட்டிருக்கலமோ? அருமை. 21-May-2015 7:07 pm
அசோக் விஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2015 5:44 pm

பூவின்றி வீடு வந்த என்னிடம்
என்னவள் கடிந்தாள்
பூக்களை பார்க்கும் போது கூடவா
என் ஞாபகம் வரவில்லையென்று
உன்னைப் பார்க்கையில் தானடி
எனக்கு பூக்களின் ஞாபகம் வருகிறது !!!!!

மேலும்

பூக்களைக்கொண்டு வசந்த படைப்புகள் தர துவங்கியிருக்கிறீர்கள்.. இனி கவிதைக்கு பொற்காலம்தான் ..உங்களால் வாழ்த்துக்கள் 11-Apr-2016 7:53 pm
அசோக் விஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2015 5:40 pm

என்ன வேண்டும் என்று
என்னவளிடம் கேட்டேன்
எப்பொழுதும் நன் அவளுடனே
இருக்க வேண்டும் என்றாள்
அது இயலாது என்பதை
புரிந்து மறுகணமே
என் நினைவுகளே போதுமென்றால்
இது தான் புரிதல் என்பதோ

மேலும்

அசோக் விஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2015 3:31 pm

மரம் தரும் நிழல்
உனக்கு
உன் நிழல்?

மேலும்

மரம் தருமா ...........? இதை கவிதையாக அந்த நடைக்கு கொண்டு வர முயலுங்கள் நட்பே ......... விண்ணப்பம் தான் 22-May-2015 4:14 pm
அசோக் விஜி - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2015 12:48 pm

தனிமை கொண்ட வெண்நிலவும்..
மாத மொருநாள் விடுப்பெடுத்து..
அமாவாசை கொண்டாட
தனிமை கொண்ட நான்மட்டும்..
விடுப்பின்றித் தவிக்கின்றேன் -உன்
நினைவுகளைச் சுமந்து கொண்டு...

(காதல் . நட்பு . பணம் மூன்றுக்கும் பொருத்தி பொருள் பெறலாம் நட்புகளே )

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நட்பே 20-May-2015 7:45 pm
நல்ல படைப்பு தோழரே! 20-May-2015 3:31 pm
தங்களின் ஊக்கம் என் வரிகளில் புதுத்தொடக்கம் தந்ததால் வருகையில் மகிழ்சி தோழமையே. 18-May-2015 12:24 pm
அழகு 17-May-2015 3:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே