பாரதி பறவை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாரதி பறவை
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-May-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2016
பார்த்தவர்கள்:  443
புள்ளி:  164

என்னைப் பற்றி...

மதுரையில் தோன்றிய பாமரன்

என் படைப்புகள்
பாரதி பறவை செய்திகள்
பாரதி பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 11:19 am

சூரியச் சூட்டை தவிர்க்க ,
இலைகளின் நிழலில் பதுங்கிய ஓர் கிளி,
இன்று ஊழ்வினைக் காற்று,
இலைதனை சற்று அசைத்துப் பார்க்க,

கிளியே நீ கம்பியின் நிழலுக்கு இடம்பெயர்ந்தது ஏனோ!!

மேலும்

பாரதி பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2016 4:37 pm

இதயமே !
ரூ .2000 நோட்டாய் மிளிரும் பெண்ணே!
எந்தன் காதலை மட்டும் கருப்புப்பணமாய் பதுக்கி, மோடிவித்தைக் காட்டுவது ஏனடி...!
சொல்லாமல் நீ காலம் கடத்த,
பின் செல்லாமல் போகும்டி...என் சோலைக்கிளியே!

மேலும்

நகைச்சுவையோடு இணைந்த சில அழகிய வரிகள் இன்னும் எழுதுங்கள் நண்பரே வாழ்த்துக்கள் 01-Dec-2016 4:22 pm
இதயம் இனிமை வாழ்த்துக்கள்.... 01-Dec-2016 10:50 am
பாரதி பறவை - பாரதி பறவை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2016 8:09 am

தனலெட்சிமியே...எந்தன் இதயத்தரணியே!
தனலெட்சுமியே....எந்தன் தனிமைக்கொல்லியே!

என் இதயம் எடுத்த முதல் புகைப்படம்.....நீ !
ஒப்பனையில்லாமல் எனை அழகாக்கியது ...நீ!
பொய்யினை நுட்பமாக வழங்கி கவிஞனாக்கியது ..நீ!
நான் சம்பாரித்த முதல் கண்ணீர் .....நீ!
முத்தத்தின் பேச்சை முதன்முதலாக கேட்கவைத்தது.....நீ!
கடவுளிடம், உலகத்தையே உயில் எழுதிவாங்கும் தில்லைக்கொடுத்தது...நீ!
நல்ல மனிதனாக வாழ்ந்து செல்வதற்கு ,
எரிபொருளாய் இருப்பது , தனலெட்சுமியே ! உந்தன் காதல்தான்....!!

தனலெட்சிமியே...எந்தன் இதயத்தரணியே!
தனலெட்சுமியே....எந்தன் தனிமைக்கொல்லியே!

மேலும்

நன்றி நண்பா! 30-Nov-2016 4:03 pm
அழகு அருமை 29-Nov-2016 4:19 pm
பாரதி பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2016 11:17 am

முருகன் :- டே மச்சி! ஏன்டா உங்க அப்பா பணத்தை பீரோல வைக்காம, பாட்டிலுக்குள்ள போட்டு வச்சிருக்காரு?

சூரி :- ஓ! அதுவா, அதெல்லாம் Liquid கேஷ்...அதான் அப்படி SAFETY பண்ணியிருக்கு பெருசு! !

மேலும்

பாரதி பறவை அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Oct-2016 2:24 pm

குளிபானக் கம்பெனிகளும்,
அடுக்குமாடிக் குடியிருப்புகளும்,
மீதேனும் மும்முனை போட்டியாக ,
நிலத்தடிநீரைப் பந்தாடித் தீர்க்க,
புத்தகம் சுமந்து பள்ளி செல்லும் வயதில்,
குடம் சுமந்து தண்ணி தேடி போக,
பூச்சாண்டிக்கும் கண்கள் கலங்குதடி ...தொண்டை விக்கி!!
ஆள்பவனும் , மக்களுக்கு தண்ணி காட்டுகிறான்..... டாஸ்மார்க்கின் லாபத்தில்!!

குறிப்பு:-
**********
மது மற்றும் போதை விழிப்புணர்வு பாடங்கள்,
பள்ளியில் கட்டாயமாக பாடமாக கொண்டு வரவேண்டும்...
நடக்குமா?

மேலும்

நம்பிக்கையிழைத்த வரிகளுக்கு நன்றி தோழர்களே... 29-Nov-2016 11:01 am
கண்டிப்பாக நண்பரே தங்களின் எண்ணம் நிறைவேறும் 16-Nov-2016 3:28 pm
கண்டிப்பாக இத்திருத்தம் விரைவில் வரவேண்டும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 5:15 pm
வரிகளில் உணர்வு வாழ்த்துக்கள் 26-Oct-2016 3:47 pm
பாரதி பறவை - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2016 8:09 am

தனலெட்சிமியே...எந்தன் இதயத்தரணியே!
தனலெட்சுமியே....எந்தன் தனிமைக்கொல்லியே!

என் இதயம் எடுத்த முதல் புகைப்படம்.....நீ !
ஒப்பனையில்லாமல் எனை அழகாக்கியது ...நீ!
பொய்யினை நுட்பமாக வழங்கி கவிஞனாக்கியது ..நீ!
நான் சம்பாரித்த முதல் கண்ணீர் .....நீ!
முத்தத்தின் பேச்சை முதன்முதலாக கேட்கவைத்தது.....நீ!
கடவுளிடம், உலகத்தையே உயில் எழுதிவாங்கும் தில்லைக்கொடுத்தது...நீ!
நல்ல மனிதனாக வாழ்ந்து செல்வதற்கு ,
எரிபொருளாய் இருப்பது , தனலெட்சுமியே ! உந்தன் காதல்தான்....!!

தனலெட்சிமியே...எந்தன் இதயத்தரணியே!
தனலெட்சுமியே....எந்தன் தனிமைக்கொல்லியே!

மேலும்

நன்றி நண்பா! 30-Nov-2016 4:03 pm
அழகு அருமை 29-Nov-2016 4:19 pm
பாரதி பறவை - பாரதி பறவை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2016 1:30 pm

கோலங்கள் தள்ளிவிட புள்ளிகள் போகுதம்மா....
குஞ்சு மிதித்த கோழி,சேவல் .
கோமாலியாய்ப் போகுதம்மா...

தொப்புள்கொடி பந்தத்தின் தொல்லை பொறுக்காது,
மனிதநேய மந்தை காடு நோக்கிப் போகுதம்மா..

பிள்ளைகளை நிலைக்க வைத்து,
கடன்களை கட்டிவைத்து ,
செல்வத்தை செதுக்கிவிட்டு,
காலிக் கல்லாப்பட்டிகள் கஷ்டப்பட்டு போகுதம்மா...

அறுபதை தாண்டினாலும்,
இருபதிடம் தோற்றுவிட்டு,
பூஜ்ய பூச்சியாய், புழுதியில் நடந்து போகுதம்மா...

தாலாட்டு கேட்ட காது தங்கத்தினை கட்டிக்கொள்ள,
தாய்ப்பால் குடித்த வாயும் சுயநலத்தில் ஊமையாக,
இரு கண்ணீர் துளிகளில் இதயம் மிதந்ந்து போகுதம்மா.....

மேலும்

ஆம்! வேதனை தோழா.. 26-Oct-2016 5:56 pm
கவியால் மனம் உருகி போகிறது..சுமந்த தாயும் தந்தையும் சுமக்க முடியாத பாரங்களாகி விட்டார்கள் இன்று பலருக்கு 26-Oct-2016 5:15 pm
பாரதி பறவை - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2016 6:18 pm

கண்ணீரில் கூட
கலப்படம் ...,
இன்பமும் துன்பமும் ...!

மேலும்

மிக அருமை... 26-Oct-2016 3:36 pm
நன்றி .., 26-Oct-2016 11:40 am
சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 8:28 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Oct-2016 5:29 pm

புல்லின் தரையில்
பெண்ணிலா தூக்கம்
வானின் மேகத்தில்
வெண்ணிலா ஏக்கம்

மாலை வானம்
மஞ்சள் பூசியது
உந்தன் புருவம்
கவிதை பேசியது

நீ விடுகின்ற
மூச்சுக் காற்றால்
என் கல்லறை
கருவறையாகிறது

உன் சிரிப்பில்
உடைந்த உள்ளம்
என் கண்ணீரில்
ஒட்டிக் கொண்டது

தூவும் மழையில்
குடை பிடிக்கும்
மலராய் கண்டேன்
உன் வெட்கத்தை

வெள்ளை வண்ண
பூக்களும் அழுகிறது
மகரந்தம் இறந்து
விதவையானதால்...,

தோள்கள் சுருங்கிய
வாழ்வும் ஒரு நாள்
காதலின் நினைவை
மீண்டும் பிரசவிக்கும்

தாஜ்மஹால் காதல்
அதிசயம் என்றால்
ரகசியமான நெஞ்சம்
நெய்யப்பட்ட பளிங்கல்

நிலவோடு சண்டை
செய்யு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Nov-2016 8:44 am
சில்லென்று ஒரு கவிதை ...அருமை தோழமையே ... 04-Nov-2016 11:42 pm
இறைவன் ஆசியில் நலமாக இருக்கிறேன்.. 01-Nov-2016 12:49 pm
நலம் நண்பரே..தங்கள் நலமா? 01-Nov-2016 12:42 pm
பாரதி பறவை - பாரதி பறவை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2016 11:30 am

கனவுகள் இல்லா மனிதனும்,
சக்கரம் இல்லாத வண்டியும்  ஒன்றே!
ஆகவே,
 கனவுகள்  காண்க ...
முயற்சி முதலீடு செய்....
வாய்ப்பை வேட்டையாடு...
வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்....

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் நண்பர்களே !!

மேலும்

ஜெகன் ரா தி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-Sep-2016 8:50 am

சகியே நீ

முன்னிறு கண்களால்
உயிரை பறிக்கிறாய்

உன்சிறு இதழ்களால்
மறுசுவாசம் தருகிறாய்

ஆடைமீறும் அழகால்
தீயை மூட்டுகிறாய்

இருவளை கரங்களால்
தீயும் அணைக்கிறாய்

சிற்றிடை வளைவுகளில்
சிக்க வைக்கிறாய்

காதலெனும் கணைகளால்
காமம் அழிக்கிறாய்

முதலும் நீ
முடிவும் நீ
சரிபாதி நீ
சகியே நீ

ரா தி ஜெகன்

மேலும்

அருமை, வரிகள் அனைத்தும் மிகவும் அருமை,தொடருங்கள் உங்கள் கவிகளை . 11-Sep-2016 1:09 pm
நன்றி நண்பா 08-Sep-2016 2:16 pm
உயிரின் பாதி உணர்வின் மீதி மனதின் காதல் 08-Sep-2016 10:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
வீரமணி கி

வீரமணி கி

விருத்தாசலம்
சத்தியா

சத்தியா

மலேசியா
லிமுஹம்மது அலி

லிமுஹம்மது அலி

வாலிநோக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (25)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே