செல்வமணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வமணி
இடம்:  காரைக்கால்
பிறந்த தேதி :  22-Aug-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jan-2015
பார்த்தவர்கள்:  367
புள்ளி:  615

என்னைப் பற்றி...

கவிதை பைத்தியம்

என் படைப்புகள்
செல்வமணி செய்திகள்
கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2016 4:07 pm

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்

செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB  விரலியும் பரிசாக வழங்கப்படும்.

செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும்..... தொடரட்டும் போட்டிகள் 09-Sep-2016 8:52 pm
அழகிய ஓவியங்கள், பாராட்டுக்கள். 03-Sep-2016 9:03 am
நன்றி 21-Aug-2016 10:12 am
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களும்..... கவிதை போட்டி முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது...? 11-Aug-2016 10:03 am
செல்வமணி - இதயம் விஜய் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2016 4:47 pm

தோகை
விரித்து நீ பறந்தாய்...
என் மனதை
கவர்ந்து நீ சென்றாய்...
மயிலே
நான் மையல் கொண்டது
எதனாலே?......

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே .... 07-Aug-2016 5:06 pm
அழகு ! 07-Aug-2016 1:54 am
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் நண்பரே .... 17-Jul-2016 9:13 am
செல்விபிரியங்கா சண்முகம் அளித்த எண்ணத்தை (public) Anbumani Selvam மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Jul-2016 7:33 pm

அன்புள்ள தோழர்களே..

        எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...
        உங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...
        விருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....
        உங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....
        உலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...
             -சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )

மேலும்

எனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும். 16-Aug-2016 2:25 am
உங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 15-Aug-2016 11:31 am
தங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ... 15-Aug-2016 6:02 am
தங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm
செல்வமணி - சீர்காழி சபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2016 11:29 pm

இனிய இரவு வணக்கம்!

மேலும்

செல்வமணி - சு நவீன் நிவாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2016 10:50 pm               தடை அதை உடை

காளையை அடக்கும் ஜல்லிக்கட்டுக்கு வந்த தடைக்கு அடங்கினோம் ...
காளையை மடக்கும் சில பணமுதலைகளின் தந்திரத்தில் வீழ்ந்தோம் ...
காளைகள் எங்களுக்கு.. பெற்ற பிள்ளை
அவன் மேல் உள்ள அன்பிற்கில்லை எல்லை..

மகனிற்கு மதுவூட்டம் பழக்கம் ..எந்த தந்தையிடம் நீ கண்டாய்.??
போலி ஆவணங்களை செய்து .. நீதிமன்ற வழக்கில் நீ வென்றாய்...!
மாட்டின் செயற்கை கருவூட்டலுக்கு காப்புரிமை நீ கொண்டாய்...!
நாட்டின் இயற்கை வளத்தை அடியோடு நீ அழித்தாய்..!

அறியாமையில் மிதக்கும் அன்பு உறவுகளே ...!
தெரியாமல் ஜல்லிக்கட்டு பற்றி குறை கூவும் மரபுகளே..!

நரிகள் ஆடும் வேட்டைக்கு ...ஆக கூடாது இரை..
இது இல்லை ...மாட்டை துன்புறுத்தும் கரை..
இது இனப்பெருக்கத்திற்கு மாட்டை தேர்ந்தெடுக்கும் அறிவியல் முறை..!

காளைகள் இருக்க ஒரே காரணம் ஜல்லிக்கட்டு ..
ஜல்லிக்கட்டு ஒழிந்தால்  அழியும் வீர காளை..
காளை ஒழிந்தால்...அழியும் பசுமாடு நாளை..
பாலுக்கு எங்கே செல்வாய்..இரண்டு வேலை ..?
கையேந்தி நில்லடா ...நீயோ ஏழை..!

                          

அறியாமையில் மிதக்கும் அன்பு உறவுகளே ...!
தெரியாமல் ஜல்லிக்கட்டு பற்றி குறை கூவும் மரபுகளே..!

நரிகள் ஆடும் வேட்டைக்கு ...ஆக கூடாது இரை..
இது இல்லை ...மாட்டை 

இழக்க கூடாது நம் அடையாளம் ...!
தமிழும், நாகரிகமும் நம் அடையாளம்..

 தமிழன்டா...!

                                         
                                                                                -                                      -நவீன்  நிவாஸ்

மேலும்

செல்வமணி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2016 3:45 pm

உன் தூரம் கூட
எனக்கு இன்று
சந்தோஷத்தை
தருகிறது

ஆம்

நீ நின்று கொண்டிருக்கிறாய்
நான் உன்
காலடியில்
வீழ்ந்து கிடக்கிறேன்

இன்னும்
கொஞ்ச நேரத்தில்
என்னை தொட்டு தூக்குவாய்
என்ற மகிழ்ச்சியில்...


கண்மூடுகிறேன்...

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 7:17 am
நன்றி தமிழே ... 21-Jun-2017 7:17 am
நன்றி தமிழே ... 21-Jun-2017 7:17 am
அன்பினை சுமக்கும் பதிவு ! வாழ்த்துக்கள் நட்பே ! 15-May-2016 2:58 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) goldpharmacy மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-May-2016 9:00 pm

ஒரு நிறத்தில்
என்னை வைத்து
வேறொரு நிறமாக
பிரிந்து போனீர்கள்.

ஒரு மதக்காரனாக
என்னை பார்த்து
வேறொரு மதவாதியாக
பிரிந்துப் போனீர்கள்.

ஒரு ஜாதிக்காரனாக
என்னை மாற்றி
வேறொரு ஜாதிக்காரனாக
பிரிந்து போனீர்கள்.

ஒரு கட்சிக்காரனாக
என்னை எண்ணி
வேறொரு கட்சிக்காரனாய்
பிரிந்து போனீர்கள்.

ஒரு முறையாவது
ஒரு தோழனாக
எனை எண்ணி
ஒரு தோழனாக
என்னை விட்டு
பிரிந்துப் போங்கள்.

ஒரு மனிதனாக பிறந்து
சில மனிதர்களிடம்
பழகிய நிம்மதியோடு
கல்லறையில் தூங்குவேன்
அல்லது
மின்மயானத்தில் எரிவேன்.
**

-இரா.சந்தோஷ் குமார்.

மேலும்

மனிதன் மனம் ஏங்குகிறது , அவன் கேட்பது நினைப்பது எல்லாம் உண்மை அன்பை உறவை பாசத்தை , எவரும் புரிந்து கொள்வதில்லை ,வாழ்த்துக்கள் சந்தோஷ், நினைவுகள் ஒரு தொடர்கதை, 16-May-2016 4:43 pm
ரசிக்க வைத்த வரிகள் ,,,,,,,,, ஒரு மனிதனாக பிறந்து சில மனிதர்களிடம் பழகிய நிம்மதியோடு கல்லறையில் தூங்குவேன் அல்லது மின்மயானத்தில் எரிவேன்,,,,,,,,,,,,,, மானுட வர்க்கத்தின் ஆசை அது தான் ,,,ஆனால் யார் தான் அதன் சொல் கேட்கிறார்கள் ,,, யாவும் கடந்து போகும் என்றே கடந்து செல்கின்றனர் ,,,,,,,, ஆறறிவு ஐந்தறிவோடு தான் போட்டி போட்டு திரிகின்றது ,,,,,,, படைப்பு அருமை ,, வாழ்த்துகள் சகோ ,,,, 16-May-2016 4:38 pm
ஆம். நன்றி நண்பா 16-May-2016 4:15 pm
நன்றி தங்கையே 16-May-2016 4:15 pm
இராசேந்திரன் அளித்த எண்ணத்தில் (public) sankaran ayya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-May-2016 10:09 am

அன்புள்ள தமிழறிஞர்களுக்கும், கருத்துகளில் தோள் கொடுத்து என்னை உயர்த்திவரும் தளத்தோழமைகளுக்கும்  வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதில் பல கோடி, பல கோடி மனம் நிறைந்த சந்தோசம்.

எங்கோ ஒரு மூலையில் களிமண்ணாய் இருந்த என்னை உங்கள் கருத்துகளில் செப்பனிட்டு  இந்த கிராமிய களிமண்ணுக்கு  உருவம் கொடுத்து உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு வெறும் ”நன்றி"என்ற மூன்றெழுத்து சொல் போதாது. இன்னும் அதற்கு இணையான வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் நான் எழுதியவைகளையும், இப்போது நான் எழுதுபவைகளையும் பார்க்கிறேன். எனக்குள் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன்.இதற்கு முழுக்காரணம் பெரியோர்களின் வழிகாட்டலும், மற்ற சகோதர சகோதரிகளின் கருத்து உற்சாகமும்தான்.  இந்த தளம்தான் எனக்கு எழுத்து அரங்கேற்ற மேடையானது. பார்வையாளர்களாய் நீங்கள்தான் எனக்கு கருத்து எனும் கைதட்டல்கள் கொடுத்து  என்னை உயர்த்தி வருகிறீர்கள்.  நம் தளத்தில் எழுதுவதற்கு போட்டி இருந்தாலும், பொறாமை இல்லை. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அய்யா என்றுதான் எல்லோரையும் அழைக்கத் தோன்றுகிறது. காரணம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தன் மகனுக்கு, தன் சகோதரனுக்கு என்ன உற்சாகம் கொடுப்பார்களோ அதைவிட 100 மடங்கு உற்சாகத்தை தந்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். அதற்கு உங்களுக்கும்,எனக்கு எழுத மேடை தந்த நம் தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

உங்கள் கருத்துகளில் என்னை செதுக்கி செதுக்கி இப்போது ஓரளவு தேறிவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சாதாரண கவிதை என்பதே எனக்கு அசாதாராணமாக தெரிந்தது. இப்போது இலக்கணக் கவிதைகளை இனம் கண்டுகொண்டு எழுத முடிகிறது.

கதிரவன் பெருமை-உழவின் மகிமை, உழவனதிகாரம், சுந்தரக்கோதை, தரைமீது கோலமயில்,  போன்ற வெண்பாக்களையும் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்.

முன்பு திருக்குறளை எடுத்து உழவனதிகாரம் படைத்த நான் இப்போது எனக்குள் புதிய முயற்சியாக  இராமாயணத்தை எடுத்துக்கொண்டு  “இராமர் நடந்த மருத நிலப்பாதை” எனும் தலைப்பில் 20 வெண்பாக்களை படைக்க முயற்சி செய்திருக்கிறேன். அதன் வெள்ளோட்டமாக ஒரு வெண்பாதான் இராமரின் பாதை” எனும் பஃறொடை வெண்பா. 

இதை கவிதை பகுதியிலும் பதிவிட்டுள்ளேன்.  இங்கே இதிலிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி இன்னும் மேம்படுத்த வழிகாட்டுங்கள்.

இதோ அந்த வெண்பாவும் அதற்கான படமும் விளக்கமும்


                              
                             நாளது போன மழையின் சிலிர்ப்பில்
                             துளிர்த்த சிறுமலர்ப் பாதையில் ஏகி
                             குறிஞ்சி நிலந்தனை மூவரும் தாண்ட
                             திடும்திடும் மேளம் ஒலிக்குது நீரருவி 
                             நீர்தரங் கோசை சலசலக்கும் ஆறு 
                             வளைந்த சிறுதுளை மூங்கில்கள் வாழ்த்தொலி
                             இன்னிசை ஆகுதே காண்...!


"இராமர், சீதாப்பிராட்டி, இலட்சுமணர் ஆகிய மூவரும் , ஒரு நாளுக்கு முன் பெய்த மழைச் சாரலில் துளிர்த்த  மலைப் பூக்கள் பாதையாக இருக்கின்ற மலையும் , மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை விட்டு,  மருத நிலத்துக்கு புறப்பட ஆரம்பிக்கின்றனர். அப்போது வண்டுகள் துளைத்த  மூங்கில்களிலிருந்து வரும் மெல்லிய காற்றோசை குழலோசையாக, திடும் திடும் என ஒலிக்கும் அருவியோசை மத்தள ஓசையாக, சல சல என ஓடும் ஆற்றின் ஓசை ஜலதரங்கம் வாசிக்க அவர்கள் மூவரும் புறப்படுவதற்கு வாழ்த்தொலி வழங்குவதைப் பாருங்கள்"என்ற பொருளில் எழுதியிருக்கிறேன்.


இதில் தாங்கள் காணும் குறை, நிறைகளை கருத்தாக்கி இன்னும் இந்த சொல்லோவியம் அழகு மிளிர வழிகாட்டுங்கள். மேலும்

நன்றி அய்யா. இதுபோன்ற வாழ்த்துகள் இன்னும் உந்துசக்தியாக இருக்கும். இப்படி ஒரு நிலைக்கு வருவேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. நான்தானா இப்படி எழுதுகிறேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் உங்களைப் போன்றோரின் ஆசிகள் எனக்கு கிடைத்திருக்கிறது.முயற்சியோடு தொடர்வேன். 14-May-2016 9:43 pm
எழில்வனம் ஈதென காட்டிட மைதிலி காகுத் தனும்இளை யோனும் கவின்மானும் மெல்லத் தொடர்ந்த னரே ப ஃ றொடை நன்று வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 14-May-2016 7:58 pm
நன்றி தோழமையே . முழுக்க முழுக்க வெண்பாவில் எழுதவேண்டும் என்பதால் மாதங்கள் பல ஆனாலும் கடினமாக முயற்சி செய்து முடிப்பேன். 14-May-2016 4:50 pm
வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் 13-May-2016 9:23 pm
chelvamuthutamil - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
04-May-2016 7:35 am

Oviyam -4

மேலும்

மிக்க நன்றி கவித்தோழரே ! 07-May-2016 6:11 am
ஓவியப்போட்டி அருமை தமிழ் 04-May-2016 11:45 pm
நன்றி சர்பான் ! 04-May-2016 6:16 pm
chelvamuthutamil - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
03-May-2016 7:03 pm

ஓவியம் -3

மேலும்

என்ன யோசனை இந்த ஓவியத்திற்கு ,யாரை மனம் நொந்து யாருக்கு என்ன / அருமை வாழ்த்துக்கள் செல்வமுத்துமணி 05-May-2016 8:53 am
படைத்தவரை வாழ்த்துகிறேன். 04-May-2016 11:47 pm
எதையோ சிந்திக்கும் பாவை 04-May-2016 12:28 am
chelvamuthutamil - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
03-May-2016 6:59 pm

ஓவியம் -2

மேலும்

நன்றி சர்பான் உன் வருகைக்கும் , கருத்துகளுக்கும் !!! 04-May-2016 7:33 am
மிகவும் அழகாக இருக்கிறது வெற்றி பெற வாழ்த்துக்கள் 04-May-2016 12:26 am
chelvamuthutamil - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
03-May-2016 6:56 pm

ஓவியம் -1

மேலும்

அடடா அழகான காட்சி ஓவியம் 04-May-2016 12:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (420)

ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (427)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (422)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விஷ்ணு பிரதீப்

விஷ்ணு பிரதீப்

திருமங்கலம்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே